""டேய்.. மாப்ள இங்க பார்ரா பேப்பர.. மறுபடியும் வட நாட்டுல குண்டு வெடிச்சிருக்கு.".
"வச்சது யாராம். முஸ்லிம்கள் தானே?"
"ஆமாண்டா.. முஸ்லிம்கள் தான் வச்சதுன்னு உடனே நம்ம நாட்டு போலிசு கண்டுபிடிச்சிருச்சி.."
"ஏதாவது ஒரு இ-மெயில் வந்துருக்குமே?"
"அதே தாண்டா.. ஏதோ ஒரு முஸ்லிம் அமைப்பு பேரிலே இ-மெயில் அனுப்பப்பட்டிருக்கு. அதிலே நாங்கள் தான்டா வச்சோமுன்னு எழுதியிருக்காம்."
"அப்படியா! யாரையாவது அரெஸ்ட் பண்ணியிருக்காங்களா? இல்லையா?"
"உடனே நம்ம போலிசு துப்பறிஞ்சு நாலஞ்சு தாடி வச்ச ஆட்கள அரெஸ்ட் பண்ணிட்டாங்க...எல்லா பத்திரிகையிலும்.. அதிலும் தினமலரிலே மொத பக்கத்துல வந்துருக்கு.
சில வருடங்கள் கழித்து... டொய்..டொடாய்ங். (காலம் உருளுகிறது)
காலமும் காட்சியும் மாறி விட்டது. கர்கரேயின் புலனாய்வின் மூலம் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு "நிஜ" குற்றவாளிகள் அமுக்கப்படுகின்றனர். அதிலே ஒரு பெண் துறவியும் அடங்குவார். அவர் குற்றவாளியாக இருக்க முடியாது என்று அத்வானி தேசபக்தி தலைக்கேறி தலை தெறிக்க ஓடி வக்காலத்து வாங்குகிறார். இதே போல முஸ்லிம்களை அரெஸ்ட் செய்த போது அவர்கள் அப்பாவிகள் என்று வக்காலத்து வாங்கியவர்களின் தேசபக்தி சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அத்வானிக்கு சந்தேகிக்கப்படவில்லை. ஏன்?
இந்த செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் ஒரு மூலையில் கட்டம் கட்டப்படாமல் வந்து போனது. பல குண்டு வெடிப்புகளிலும் தாங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். ஸை சார்ந்த ஒரு தீவிர பிரச்சாரகரே போலிஸ் கஸ்டடியில் வாக்கு மூலம் கொடுத்த போதும், அந்த செய்தியை சட்டை செய்யவில்லை ஊடகங்கள். குறிப்பாக தினமலர், செய்தி வெளியிடாமலே ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீதுள்ள கரிசனத்தைக் காட்டியது.
ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத இயக்கம் உற்பத்தி செய்தவர்கள் தான் "தினமலரில் தங்களது அஜென்டாவை நிறைவேற்றி வருகின்றனர். எனும்போது அவர்களால் எப்படி ரத்த வெறி அமைப்பான சுயம் சேவக்கை எதிர்க்க முடியும். இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் விசாரணையை மீண்டும் தோண்டியெடுத்து மறு விசாரணை செய்தால், ஆர்.எஸ்.எஸ். என்ற வேதம் ஓதும் சாத்தானின் சுயரூபம் தெரியவரும். பூனைக்கு மணி கட்டுவது யார்?.
இவர்கள் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்ற மத வெறியர்களை உற்பத்தி செய்து சாதுக்களைப் போல் பல்வேறு துறைகளில் ஊடுறுவ விட்டுள்ளனர். அவர்களின் நெட்வொர்க் என்பது அல்காயிதா வின் நெட்வொர்க்கை விட அபாயகரமானது. அதை வெளியில் கசிய விடாமல் ஊடகங்கள், மற்றும் காவல், நீதி, உளவு, போன்ற துறைகளில் உள்ள ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகள் தடுத்தும் பாதுகாத்தும் வருகின்றனர். அவர்கள் நடத்தும் பள்ளிகளும்,கல்லூரிகளும் தான், துவேசத்தையும், மதவெறியையும், முஸ்லிம் வெறுப்பையும் மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைக்கின்றன. இதிலிருந்து வெளிவரும் மாணவர்கள் மத வெறியராக இல்லாமல் இருந்தால் தான் வியப்பு. முஸ்லிம் வெறுப்பும், இந்துத்துவம் என்ற இந்தியாவிற்கு பொருந்தாத வறட்டு தத்துவமும் இந்த "டவுசர் பாண்டிகளின்" நாடி நரம்புகளிலும் சிந்தையிலும் விதைக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்ட உற்பத்தி பொருளாக வெளி வந்து தன் கடமையை ஆற்றுகின்றனர்கள். முடிவாக.. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார்கள் என்னும் விஷம் இந்தியாவின் ரத்த நாளங்களில் கலந்து விட்ட ஒன்று. அதனை தனியே பிரித்து எடுக்க யாராலும் முடியாது. இதை செய்ய அவர்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக "உழைத்துள்ளனர்". ஆனால் இந்த பயங்கரவாதத்தை எதிர்க்க எந்த அரசும் ஒரு துரும்பை கூட கிள்ளி எறியவில்லை. எறியவும் முடியாது. இது தான் நிதர்சனம். ஆர்.எஸ்.எஸ். நிச்சமாக ஒரு மனித விரோத இயக்கமே.
தொடர்புடைய பதிவுகள்: http://www.sinthikkavum.net/2011/01/blog-post_1868.html
மறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்!
சங்பரிவாரின் அம்பலமாகும் சூழ்ச்சிகள்!
இந்துத்துவ தீவிரவாதத்தை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வது ஏன்?
அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் "ஆர்.எஸ்.எஸ்". ஸுக்கு பங்குண்டா?
தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது!
ஹிந்துத்துவப் பயங்கரவாதத்தின் முதல் பலி!
ஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்!
ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!
2 comments:
காவி பயங்கரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும்.
"டவுசர் பாண்டிகள்" 75 ஆண்டுகளுக்கும் மேலாக "உழைத்துள்ளனர்" நம்நாட்டை அழிப்பதற்காக. இது எப்போது ஆட்சியாளர்களுக்கும் நீத்தித்துறைக்கும் புரியும்? அங்கும் தானே இவர்கள் அமர்ந்துள்ளனர்?
பொதுமக்கள்(அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக இன்னும் நம்புகிறேன்)இவற்றை உணர்ந்தால் இவர்களை இனம்கண்டு தனிமைப்படுத்தி நம் நாட்டை காப்பாற்றலாம்.
அசிமானந்தாவின் வாக்குமூலத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் அனைத்தும் தங்கள் நடுநிலை முகமூடிகளை பிய்த்தெறிந்து காவி முகத்தை தெளிவாக காட்டிவிட்ட இந்நிலையில் நம்மைப்போன்றவர்கள்தான் இந்த செய்தியினை பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பிக்க வேண்டும்.
//சொல்ல மறைத்த நிஜம்...//-இறைநாடினால்... பின்னூட்டவாதியில் விரைவில்.
சகோதரர் ஆஷிக், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment