Thursday, January 5, 2012

காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்!



புது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்திய தேசத்தில் தேசபக்தியை மொத்தமாக ஏகபோக உரிமை கொண்டாடி வரும் சங்பரிவார அமைப்புகள் சும்மா இருப்பார்களா?  இந்த நிகழ்வை வைத்து கலவர விதையை தூவி முஸ்லிம்களை அறுவடை செய்ய மானாவாரியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

சங்பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் குதியாய் குதித்தன. கடையடைப்புக்கு பஜ்ரங் தள், வி.எச்.பி, போன்ற "உணர்ச்சிவயப்பட்ட தேசபக்தி" அமைப்புகள் அழைப்புகள் விடுத்தன. காவி பயங்கரவாதத்தின் அரசியல் உருவம் பா.ஜ.க. ஒரு படி மேலே போய், கொடி ஏற்றப்பட்ட இடத்தை கழுவி சுத்தம் செய்ததாம். (பாக்.கிலிருந்து வரும் சிந்து நதி நீரை எப்படி சுத்தம் செய்வார்கள்???)

அதன் பின், போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். நம்பித்தான் ஆகவேண்டும் விசாரணை செய்தவர்கள், மத அபிமானத்தை விடுத்து மனிதாபிமானத்தோடு விசாரித்ததில், இந்த செயலை செய்தவர்கள் ராமசேனா என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் மாணவர் பிரிவை சார்ந்த தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் கொடியை ஏற்றி பழியை முஸ்லிம்களின் மேல் சுமத்தி கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம்.இதே இயக்கம் தான் , கலவரத்தை தூண்டுவதற்கு "ரேட்" பேசி காசு வாங்கிய இயக்கம் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

காந்தியை கொன்ற கோட்ஸே என்ற ஆர்.எஸ்.எஸ். அபிமானியின் கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தது. காந்தியை  கொன்றது ஒரு முஸ்லிம் தான் என்று இந்திய முஸ்லிம்களின் மேல் பழியை போடுவதே நோக்கம். இன்றைக்கும் அந்த வழிமுறை தொடர்கிறது. கோட்ஸெவின் நீட்சியாக..

இந்த நிகழ்வை ஊடகங்கள் பரபரப்பாக்கவில்லை. ஏனென்றால் காவி தீவிரவாத்திற்கு மீடியாவில் டி.ஆர்.பி. ரேட்டிங் இல்லையாம்.

இதை மட்டும் முஸ்லிம்கள் செய்திருந்தால்...???? ( உங்கள் கற்பனைகள் வரவேற்கப்படுகின்றன)


Source: http://www.bbc.co.uk/news/world-asia-india-16424473


இது தொடர்பான பிற பதிவுகள்:

ராமசேனாவின் செயற்கை மதக்கலவரங்கள்! தெஹல்கா அம்பலம்.