Thursday, July 29, 2010

சங்பரிவாரின் அம்பலமாகும் சூழ்ச்சிகள்!


ஜுலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுடில்லியில் உள்ள "ஹெட்லைன்ஸ் டுடே" என்ற தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தின் எதிரில் சங்பரிவாரைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். சில நிமிடங்களில் பல ஆயிரம் தாதாக்கள் இணைந்ததைத் தொடர்ந்து ஆவேசமாக தாக்குதல் தொடங்கியது. முரட்டுத்தனமாக அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்புக் காவலர்கள் தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தனர்.


இத்தகைய சூழ்நிலையை எதிர்பாத்திருந்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் காவல்துறைக்கும் முறையாக அறிவித்திருந்தனர். இப்படி பெருமளவில் தாக்குதல் நடத்த முயல்வார்கள் என எதிர்பார்க்காததால் காவல்துறையினரும் குறைந்தளவிலேயே வந்திருந்தனர். கலவரக்காரர்கள் அலுவலகம் அமைந்திருந்த தெருவில் ஏற்படுத்திய களேபரத்தின் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் அரண்டு,மிரண்டு ஓடவேண்டியதாயிற்று. பாதுகாப்பு துறையினர் லிப்ட்களை இயங்கவிடாமல் செய்துவிட்டதாலும்,காவல்துறையினர் தடுத்ததாலும் நான்காவது மாடியிலிருந்த தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தினுள் கலவரக்காரர்களால் நுழைய இயலவில்லை. இருப்பினும் முகப்பு அலுவலத்தின் கண்ணாடிக் கதவுகளை அடித்து நொறுக்கினர்.15 நிமிடத்திற்கு மேல் நடைப்பெற்ற இந்த அநாகரிகமான தாக்குதலுக்குப் பின் டெல்லி காவல்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு என்ன காரணம்?காவிக்கூட்டத்திற்கும் அதன் தீவிரவாத அமைப்புகளுக்குமிடையே உள்ள கள்ள தொடர்பினை அந்தத் தொலைக்காட்சி சேனல் வெளிப்படுத்தியது. நாட்டின் உத்தமபுத்திரர்களாக, சாமியார்களாக கபட நாடகமாடிய கயவர்களின் போலி வேஷத்தைக் கலைத்து உண்மையை உலகிற்கு அறிவித்தது.


தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலையில் துவங்கி,தென்காசியில் வெள்ளோட்டம் பார்த்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வழியாக மலேகான் சென்று அஜ்மீரை அடைந்த, இந்து தீவிரவாத அமைப்புகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்த நல்ல காரியத்தை செய்ததே தொலைக்காட்சி நிறுவனம் செய்த பாவம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பினைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டியது தான் அது செய்த குற்றம்.


காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிளவு படுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை எட்டிப்பிடிக்க விழையும் எத்தர்களின் இரகசியக் கூட்டம். அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமார் பங்கேற்றுள்ள விடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. நியாய உணர்வு படைத்த பெருமக்களை இச்செய்திகள் அதிரவைத்துள்ளன. ஏனென்றால் இந்தரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். ஸின் சாதாரண தொண்டரல்ல;அதன் மூத்த தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர்.கஷ்மீரின் அமர்னாத் யாத்திரைக்கு இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நடைப்பெற்ற வன்செயல்களில் திரைமறைவு இயக்குநராக இருந்தவர் இவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் மத்திய செயற்குழுவில் முக்கிய உறுப்பினர். 2006ம் ஆண்டு வரை "சம்பார்க் பிரச்சாரக்".


முஸ்லிம்கள் கூடக்கூடிய இடங்களில் குண்டு வைத்து குழப்பம் விளைவிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்கான வெடிமருந்துப்பொருட்களைச் சேகரிக்கும் முறைகள் பற்றியும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பரப்பப்பட்டக் காட்சிகள் இந்தரேஷ் குமாருக்கும் சங்பரிவாரின் தீவிரவாத அமைப்பிற்குமுள்ள இணக்கத்தை உறுதி செய்துள்ளது.


நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க. வை தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் ஆற்றல் படைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.


திடுக்கிட வைக்கும் மற்றொரு வெளிப்பாடு என்னவென்றால், பா.ஜ.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இக்கூட்டத்தில் பங்கேற்றதும் இக்கொலைக்காரக் கும்பலைச் சேர்ந்த டெல்லி மருத்துவர் ஒருவர் 2006ம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடைப்பெற்ற, விழா ஒன்றிற்கு வருகை தந்த இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அவர்களைக் கொலை செய்ய முயன்றதுமாகும். சரியான சந்தர்ப்பம் கிடைக்காதக் காரணத்தால், அது முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ள செய்தி ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ளது.


அதுமட்டுமல்ல, புனேயைச் சேர்ந்த இரசாயனத்துறைப் பேராசிரியர் ஒருவர் சங்பரிவார் அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளித்ததும், டெல்லியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஆர்.பி.சிங் என்பவர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்த ஆயுதங்கள் வாங்கியதும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் தங்களுக்கு இந்திய திருநாட்டின் அரசியல்சாசனத்தில் நம்பிக்கை இல்லை என்று கூடிப்பேசி விவாதித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன
நாட்டின் பல பகுதிகளிலும் நடந்து வரும் நிகழ்வுகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிச்சயமாகத் தீவிரவாத அமைப்பு தான் என்பதையும், அது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு தேசவிரோத இயக்கமே என்பதையும் நிரூபித்து வருகின்றன. இந்நிலையில் அந்த அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என ஏன் பிரகடனப்படுத்தவில்லை?. அதைத் தடை செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?


இந்த ஒளி,ஒலிப்பதிவுகள் அடங்கிய இரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தன?.

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரகியா தாக்கூருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயானந்த பாண்டே பயன்படுத்திய "லாப்டாப்" கருவியிலிருந்து இவை எடுக்கப்பட்டுள்ளன. தடயவியல் வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்ட இப்பதிவுகள் நீதிமன்றத்தில் சாட்சிகளாக சமர்பிக்கப்பட உள்ளன. இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த செய்தியாளர் அஸ்கிஷ் கேத்தன். அவர் இச்செய்திகளை வெளியிடக் கூடாது என பல அதிகார மையங்களிலிருந்து பயமுறுத்தல்கள் வந்ததாகக் கூறுகிறார். அனைத்தையும் மீறி துணிவுடன் செயல்பட்ட அவருக்கு நம் பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்க வேண்டும்.


இதேபோன்று கோலாப்பூரில் "ஜி" தொலைக்காட்சி நிலையத்தை வன்செயல் கும்பலொன்று தாக்கியுள்ளது. காரணம் கர்நாடகா ரக்ஷனா வேதிகா இயக்கத்தின் தலைவர் செய்யது மன்சூர் அவர்கள் அங்கு வந்திருந்ததே காரணம்.


சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்தே தீரும். என்பது அருள்மறையின் அறிவுரை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். போலி சாமியார்களின் வேஷம் கலைந்து வருவதைப் போல், போலி காவிகளின் வேஷமும் விரைவில் கலைந்தே தீரும்.

இந்துத்துவ பயங்கரவாதமும் அதனை மறைக்கும் இந்திய ஊடகங்களும்,அரசியல், நீதித்துறை, காவல்துறை போன்றவை இவர்களுக்கு பல்லக்கு தூக்குவதையும், இதனால் ஒரு சமூகம் குற்றவாளியென தனிமைப்பட்ட்டு நிற்க வைத்திருப்பதையும் இந்துத்துவத்தின் பயங்கரவாத நிஜ முகம் உங்களுக்கு முழுவதுமாக தெரிய... இங்கே அழுத்தி காணலாம்.
மேலும் அறிய ...

Tuesday, July 27, 2010

சாகும் போது கடவுளைக் கண்டேன்!!

இறைவனைக் காணாத வரையில் அவன் இருப்பை நம்பப்போவதில்லை. என்றேன்.

அவன் படைத்தவைகள் சாட்சியாக இருக்க ஏன் படைத்தவனை நம்ப மறுக்கிறாய். என்றான்.

அவன் தான் படைத்தான் என்பதற்கு என்ன சாட்சி. என்றேன்.

அவன் படைக்கவில்லை என்பதற்கு உன்னிடமுள்ளதா அத்தாட்சி. என்றான்.

அத்தாட்சி உள்ளது; அது தான் விஞ்ஞானம். என்றேன்.

விஞ்ஞானமா அப்படியென்றால்.. என்றான்.

மதவாதி நீ; உனக்கு விஞ்ஞானம் புரியாது. என்றேன்.

விளக்கு விளங்கிக்கொள்வேன். என்றான்.

எதையும் ப‌குத்து அறிவ‌து தான் விஞ்ஞான‌ம். என்றேன்.

அப்ப‌டியா.. ப‌குத்து அறிந்தால் இறைவ‌னை காணலாமா?.. என்றான்.

இல்லாத‌வ‌ற்றை எப்ப‌டி காண‌ முடியும்?. என்றேன்.

அய்யோ.. அங்கே பார் புகை மூட்ட‌ம், தீ ப‌ர‌வுகிற‌து என‌ நின‌க்கிறேன். வா.. ஓடி விட‌லாம். என்றான்.

இல்லை.. தீயை பார்க்காத‌வ‌ரையில் அது தீ என்று நான் ந‌ம்ப‌ப்போவ‌தில்லை. என்றேன்.

ஒன்றைப் பார்த்து தான் ந‌ம்ப‌ வேண்டுமென்றால், அத‌ற்கு ஐந்த‌றிவு வில‌ங்கு போதுமே..மூட‌னே.. ஒன்றிலிருந்து ஒன்றை விள‌ங்குவ‌தே ப‌குத்த‌றிவு. வா.. ஓடி விட‌லாம். என்றான்.

அவ‌ன் ஓடி விட்டான். நான் திட‌மாக‌ நின்றேன். அட‌.. வ‌ந்த‌து தீ பிழ‌ம்பு தான். க‌ருகிக்கொண்டே ந‌ம்பினேன். "இறைவ‌ன் இருக்கிறான் என்று".

உதயம்.

Sunday, July 25, 2010

இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்!!

இந்து தீவிரவாதம் - வெளிவரும் உண்மைகள்

“இந்து தீவிரவாதம்” என்பது இன்று நாடு முழுவதும் மெல்ல பரவிவரும் உண்மை. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஏழு சம்பவங்கள் இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டது என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விளக்கமான கட்டுரை ஒன்றினை, ஜூலை 19 2010 தேதியிட்ட அவுட்லுக் ஆங்கில வார இதழ் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.


2007 அக்டோபர் 11 அன்று அஜ்மீரில் க்வாஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் படிதர் என்ற மூன்று பேரை இராஜஸ்தான் காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. இதில் தேவேந்திர குப்தா ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன். இவன் வாங்கிய செல்பேசியையும் அதன் சிம் கார்டையும் பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம்(2010) ஏப்ரல் 30ஆம் தேதி இந்த மூவரும் கைது செய்யப்படும் வரை, இந்த குண்டுவெடிப்பு, ஜிகாதி தீவிரவாதிகளின் செயல் என்று வழக்கை விசாரித்துவந்த காவல்துறையும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்துவந்தன.
முஸ்லிம்களின் புனிதத்தளமான தர்காவில் ஜிகாதி அமைப்பினர் குண்டு வைப்பார்களா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் இந்தியாவில் இத்தகைய கேள்விகள் கேட்பதற்குத் தகுதியற்றவை.

தேவேந்திர குப்தா கைதுசெய்யப்பட்டு, இந்து அடிப்படைவாத இயக்கங்கள் மீது கைக்காட்டும் வரை, சந்தேகத்தின் கண்கள் அணைத்தும் முஸ்லிம் அமைப்புகள் மீதே இருந்தன. பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள். ஆனால் இப்போது “இந்து மதத்தைச் சேர்ந்த சிலரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாங்கள் கைது செய்துள்ளோம். சரியான திசையிலேயே எங்களுடைய வழக்கு விசாரனை போய்க்கொண்டிருக்கிறது” – என்று இராஜஸ்தான் மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்பு படையின் (Anti Terrorist Squad - ATS) தலைவர் கபில் கார்க் என்பவர் சொல்கிறார்.


2007ஆம் ஆண்டு மே மாதம் ஹைதிராபாத் மெக்கா மசூதி வளாகத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், 14 பேர் கொல்லப்பட்டனர்; 50க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடனேயே, ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் (Harkat-ul-Jehad-e-Islami - HuJI) என்ற அமைப்பே இந்த குண்டுவெடிப்பிற்குக் காரணம் என்று ஹைதிராபாத் போலீஸ் அறிவித்தது. அப்படி அறிவித்ததோடு மட்டும் அல்லாமல் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 26 பேரைக் கைது செய்து, கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளவைத்து ஆறு மாதங்கள் காவலில் வைத்திருந்தது. ஆனால் இந்த வருடம் (2010) மே மாதம் இந்து அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐ கைது செய்தது.


அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட, உலோகக் குழாய்களில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு செல்போனும் சிம் கார்டும் கொண்டு இயக்கப்பட்ட அதேவகையான வெடிகுண்டுதான் ஹைதிராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதான் இந்த வழக்கின் திருப்புமுணை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் கலவை இந்திய இராணுவம் பொதுவாக பயன்படுத்தும் கலவை விகிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அஸ்வனி குமார் என்ற சி.பி.ஐ இயக்குனர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் தகவல் ஒன்று முக்கியமானது. அஜ்மீர் குண்டு வெடிப்பு சதியில் சுனில் ஜோஷி என்பவன் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், மெக்கா மசூதியில் குண்டை வெடிக்கவைக்க பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ கண்டுபிடிக்கும்வரை ஹைதிராபாத் போலீஸின் கட்டுக்கதையே தொடர்ந்தது.

அதே காலகட்டத்தில், கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த பூனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு விசாரணையும் வழக்கம் போல முதலில் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தியது. சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டவர்கள் இந்தியன் முஜாகிதீன் அல்லது ஜிகாதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டனர்.

சம்பவம் நடந்த இரவு பேக்கரியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல் சமது என்பவரும் உள்ளார் என்ற பிரச்சாரத்தை மகாராஸ்ட்ரத்தின் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவு தீவிரமாக ஆதரித்தது. ஆனால் அப்துல் சமது மீது இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, அதுமட்டுமல்லாமல் மற்ற வழக்குகள் சிலவற்றிலிருந்தும் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேகான் குண்டுவெடிப்பு விசாரணைக்கு பிறகு இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் முற்றிலுமாக புதிய கோணத்தில் அலசப்படுகின்றன. 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, மகாராஸ்ட்ராவில் தீவிரவாத ஒழிப்பு படைப்பிரிவின் தலைவராக இருந்தபோது நடந்த விசாரணையில்தான் மலேகான் குண்டுவெடிப்பினை நடத்தியது அபிநவ் பாரத் (Abhinav Bharat-AB) என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு என்பதனைக் கண்டுபிடித்தது. கைகாட்டியது. கர்கரேவும் அவரது அணியும் வெளிக்கொண்டுவந்தது சமீபத்திய வரலாற்றின் ஒரு பகுதியைதான். இந்துத்துவ தீவிரவாதத்தின் இந்த புதிய வடிவத்தை கண்காணிப்பதற்கு இவர்களது விசாரணை ஒரு துவக்கமாக அமைந்திருக்கவேண்டும்.

ஹைதிராபாத் மெக்கா மசூதி, அஜ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் நடந்த குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் உள்ள தொடர்புகள் கடந்த இரண்டு வருடங்களாகவே வெளிவந்தவண்ணம் உள்ளன.

2002-03வாக்கில் போபால் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இராம்நாராயன் கல்சங்கர, சுனில் ஜோஷி என்ற இந்துத்துவ இயக்கவாதிகள் மீது சந்தேகம் எழுந்தபோதே இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அவர்கள் விசாரிக்கப்பட்டனர் ஆனால் ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் இதைவைத்தே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அந்த வெடிகுண்டுகளுக்கு பின்னணியில் பஜ்ரங்தள் அமைப்பு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

2006 ஆம் ஆண்டு இறுதியில் நண்டெட், கான்பூர் ஆகிய ஊர்களில் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும்போது சிற்சில வெடிவிபத்துகள் நிகழ்ந்தன. அதே ஆண்டில் மகாராஸ்ட்ராவில் உள்ள புர்னா, பர்பானி, ஜல்னா ஆகிய ஊர்களில் உள்ள மசூதிகளில்ள் சிறிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. நண்டெட்டில் வெடிவிபத்து நடந்த வீட்டில் தயாரிக்கப்பட்டுவந்த வெடிகுண்டு அவுரங்கபாத்தில் உள்ள ஒரு மசூதிக்காக செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வீட்டில் அவுரங்கபாத் நகரத்தின் வரைபடமும், சில ஒட்டு தாடிகளும், முஸ்லிம் ஆண்கள் அணியக்கூடிய உடைகளும் கண்டெடுக்கப்பட்டன.
இவைகளைக் கொண்டே இந்து தீவிரவாதம் குறித்து நாம் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் குறித்து இந்த வருட மே-ஜூன் வரையில் யாரும் எந்த கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. வேண்டுமானால் இடையில் ஒரு இரண்டு மாதங்கள் 2008ஆம் ஆண்டு கர்கரே தலைமையில் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை நடந்தபோது சிலர் இந்து தீவிரவாதம் குறித்து ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இப்போதும் நாம் அதனை கவனிக்காது இருக்க முடியாது.

”கடந்த 10 ஆண்டுகளாகவே வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் வன்முறைகள் குறித்த செய்திகள் நம்மிடையே உலவியவன்னம் உள்ளன. தொடர்ந்து நடந்துவரும் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்த முறையான விசாரணை எதுவும் செய்யப்படவில்லை. அங்கங்கே நடக்கும் சம்பவங்களை மட்டும் விசாரிப்பதுடன் அவை நின்றுவிடுகின்றன. இன்னும் பெரிய பெரிய கதைகளெல்லாம் விசாரிக்கப்படமலேயே இருக்கின்றன” – என்கிறார் மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மிகிர் தேசாய்.

மெக்கா மசூதி, மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், மேற்கொண்டு விசாரணையை எவ்வாறு தொடர்வது என்று மத்திய உள்துறை அமைச்சிடம் சி.பி.ஐ இப்போதுதான் ஆலோசித்தி வருகிறது.

2008 செப்டம்பர் 29இல் மலேகான் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், இன்னும் அதிகமானோர் காயமடைந்தனர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் புலனாய்வில், சத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் என்பவருடைய மோட்டார் பைக்கை பயன்படுத்திதான் குண்டு வெடிக்கவைக்கபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து தயானந்த் பாண்டே என்ற சாமியார், பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற இராணுவ அதிகாரி உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவ பணியில் இருக்கும்போதே தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெருமை லெஃப்டினட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோகித்திற்கு மட்டுமே உண்டு. தீவிரவாத ஒழிப்பு பிரிவு (ATS) புரோகித்தை விசாரித்தபோது மெக்கா மசூதி குண்டுவெடிப்பிற்கும் ஆர்.டி.எக்ஸ் (RDX) வெடிமருந்தை விநியோகித்ததும் தான்தான் என்று ஒப்புக்கொண்டுள்ளான்.

ஹைதிராபாத் போலீஸ் ஏற்கனவே ஹர்கட்-உல்-ஜிகாதி-இஸ்லாம் என்ற அமைப்புதான் மெக்கா மசூதி குண்டுவெடிப்பினை நடத்தியது என்று அறிவித்துவிட்டதனால், புரோகித் வெடிமருந்து விநியோகித்த உண்மை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்று ATS அதிகாரிகள் அறிவுறத்தப்பட்டனர்.

அஜ்மீர் சம்பவத்திலும் மெக்கா மசூதி சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து கலவை ஒன்றுபோலவே இருந்தது என்று மேலே குறிப்பிட்டதை நினைவில்கொள்ளவும்.

4,528 பக்கங்களை கொண்ட மலேகான் வழக்கின் குற்றப்பத்திரிகையில் அபிநவ் பாரத் அமைப்பின் பிரமாண்டமான முழுவடிவமும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. “இந்து புனிதத்தளங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பழிக்குப் பழி வாங்கவேண்டும்” என்றும் “தனி இந்து தேசத்தை” உருவாக்கவேண்டும் என்றும் தொடர் குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்ட புரோகித்தும், சத்வியும் மற்றவர்களும் தங்களுக்குள் பேசியுள்ளனர்.

அபிநவ் பாரத் என்ற பெயரில் ஒரு அமைப்பு வீர் சாவர்கரால் ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் அது கலைக்கப்பட்டது . ஹிமானி சாவர்கர் என்பவனால் 2005-06 ஆண்டுவாக்கில் புனேவில் தற்போதைய அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பு, “தனி இந்து தேசம்” அமைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு அரம்பிக்கப்பட்டுள்ளது.

மலேகான் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவார் என்று நம்பப்பட்ட ஹேமந்த் கர்கரே நினைவாக மலேகானில் ஒரு இடத்திற்கு “கர்கரே சந்திப்பு” என்று பெயரிட்டுள்ளனர். செப்டம்பர் 8, 2006 இல் மலேகானில் நடந்த முதல் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் அதிகமானோர் காயமடந்தனர். வழக்கம் போலவே முஸ்லிம் இளைஞர்கள் (சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ) கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன.

முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட முகமது ஜாஹித், சிமி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், சம்பவம் நடந்த அன்று மலேகானில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தியிருக்கிறார். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி சதியில் ஈடுபட்டவர்கள் எவரும் தாடி வைத்திருக்கவில்லை. ஆனால் போலீஸால் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் பல ஆண்டுகள் வளர்ந்த தாடியுடன் இருந்தனர். அவர்களில் சபீர் மசியுல்லா என்பவர் சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதம் முன்புவரை போலீஸ் காவலில்தான் இருந்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு சதியில் சம்பந்தப்பட்ட தேவேந்திர குப்தா, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் சுனில் ஜோசி மூலமாக அபிநவ் பாரத் உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறான் என்று இராஜஸ்தான் தீவிரவாத ஒழிப்பு படை நம்புகிறது. 2007 செப்டம்பரில் சிமி இயக்கத்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் சுனில் ஜோஷி கொல்லப்பட்டபோது ஆத்திரமடைந்த சத்வி, அதற்கு பழிவாங்குவதற்காக 2008 மலேகான் குண்டுவெடிப்பை நடத்தியதாக சொல்கிறது மகாராஷ்ட்ரா ATS.

68 பாகிஸ்தானியர்கள் கொலைசெய்யப்பட்ட சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பில் சுனில் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக பெயர் வெளியிடப்படாத சாட்சி ஒருவர் புரோகித்துடன் நடத்திய தொலைபேசி உரையாடலை ஆதாரமாகக் காட்டுகிறது ATS.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்ளன. முக்கியமாக தேடப்பட்டுவரும் இராம்நாராயன் கல்சங்ரா, சுவாமி அசீமானந்த் உட்பட இன்னும் சிலர் சிக்கினால், மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம். மகாராஸ்ட்ரா , இராஜஸ்தான் விசாரணை அதிகாரிகளின் கூற்றுபடி சத்வியின் மூலம் தேவேந்திர குப்தாவிற்கு அறிமுகமான கல்சங்கரா என்பவன் வெடிகுண்டு தயாரிப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் சொல்லும் ஒரு பெயர் “கல்சங்கரா” என்பதால், அவனைக் கண்டுபிடிப்பது மிக முக்கியமானது.

அஜ்மீர், மெக்கா மசூதி, மலேகான், சம்ஜாவுதா எக்ஸ்ப்ரஸ் மற்றும் பல குண்டுவெடிப்புகளும் ஒரு பெரிய சதிதிட்டத்தின் சிறு சிறு பகுதிகளே. இந்த சம்பவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து இதற்குப் பின்னால் இருக்கும் வலைப்பின்னலை சிபிஐ வெளிகொண்டுவந்தால் மட்டுமே, இந்து தீவிரவாதத்தின் முழு உருவமும் நமக்குத் தெரியவரும்.

(Source : Article titled ‘Hindu Terror - Conspiracy of silence’ by Smruti Koppikar, published in ‘The Outlook “, a weekly news magazine, dated July 19, 2010.)
http://www.outlookindia.com/article.aspx?266145
தமிழாக்கம்: பிரபாகரன்
prabaharan@keetru.com
நன்றி: கீற்று

Tuesday, July 20, 2010

மதச்சார்பின்மையை உடைக்கும் இந்துத்துவ அரசியல்! --அமீர் அப்பாஸ்

"மாதா கோயிலில் மணியடிக்கிறது.

புறாக்கள் பறக்கிறது...!

மாரியம்மன் கோயிலில் போய் உட்கார்ந்து கொள்கிறது..!

மாரியம்மன் கோயிலில் மணியடிக்கிறது...!புறாக்கள் பறக்கிறது...!

மசூதியில் போய் உட்கார்ந்து கொள்கிறது..!

புறாக்களுக்கு இருக்கிற புத்திக் கூட..சில மனிதர்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது..?”

என்று தொடங்கும் ஒரு அற்புதமான கவிதை படித்தேன். அது முன்பொரு நாள் படித்த கல்கத்தா நகரின் சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்தியது.
கல்கத்தா நகரின் நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலை ஒன்றில் காளி கோயில் பூசாரி ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டுக் கிடந்தார். போவோரும் வருவோரும் வேடிக்கை பார்க்க ஒருவரும் உதவ முன்வரவில்லை. ரத்த பெருக்கில் நினைவிழந்தார். நினைவு மீண்ட போது அவர் மருத்துவமனையில் இருநதார். தன்னை இங்கு வந்து சேர்த்தது யார்? என அறிய விரும்பினார். அப்போது ஒரு வயதான அம்மாவை அறிமுகம் செய்து வைத்தர்கள். "அன்னை தெரசா” என்று..!

அந்த காளி கோயில் பூசாரி சொன்னார்.” நான் முப்பது வருடங்களாக காளியை பூசை செய்து வருகிறேன். அப்போது எல்லாம் என் கண்களுக்கு காட்சி தராத காளி அன்னை தெரசாவின் வடிவத்தில் எனக்கு காட்சி தருகிறாள்”. இது தான் இந்திய தேசத்தின் மதச் சார்பின்மை.


இதை கெடுக்க நினைக்கும் தீய சக்திகளின் வரலாறு நீண்ட நெடியது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான கொடுமை இன்னும் தொடரும் அவலம் நீள்கிறது. இந்திய திருநாட்டில் சுதந்தரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இந்துத்துவம் ஓங்கி வளர்ந்து இருந்தது."காங்கிரஸ்காரர்களுக்கு கதர் உடுத்தவும் அகிம்சையாக வாழவும் அறிவுறுத்தவும் செய்கிற நீங்கள் ஏன் தீண்டாமையை மறுக்க கற்றுத் தரவில்லை?” என காந்தியைப் பார்த்து அண்ணல் அம்பேத்கர் கேட்டார்.
இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட காந்தியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஆனாலும், அவர் பிற மதத்தின் மீதும், அதன் உயரிய கருத்துக்கள் மீது மரியாதை கொண்டிருந்தார். தான் நம்பிய மதத்தாலும் தேசத்தாலும் அவருக்கு மரணம் நிகழ்ந்தது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லவாய் பட்டேல் நான் சொல்வதையே கேட்பதில்லை. காந்தி படுகொலைக் குறித்த விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை என்று பிரதமர் நேருவின் வாக்குமூலம் பதிவாகி இருக்கிறது.


பெரும்பான்மை மக்கள் வன்முறையில் ஈடுபடும் போது அது தேச பக்தியாக பார்க்கப்படுவதும், சிறுபான்மை மக்கள் திருப்பித் தாக்கினால் அது தீவிரவாதம் என்பதும் மிகவும் ஆபத்தான் மனப்போக்கு” என்று நேரு குறிப்பிட்டது, இன்று வரையிலும் தொடர்கிறது.காந்திக்கு நேர் எதிரான ஆளாக ஜின்னா இருந்தார். அய்ரோப்பிய கலாச்சாரத்தில் மூழ்கி குடியும் கும்மாளமாக வாழ்ந்தவர். காங்கிரஸ் இருக்கும் போது எதற்கு முஸ்லிம் லீக்? என வினவியவர். தொழுகை போன்ற இஸ்லாமியக் கொள்கையை மறுத்தவர். முஸ்லிம்கள் வெறுக்கும் பன்றிக்கறியை விரும்பி உண்டவர். காலப்போக்கில் அவரையே திசை மாற வைத்து, தனி நாடு கேட்க வைத்த பெருமை இந்துத்துவவாதிகளுக்கே போய் சேரும்.


”தப்பிப்பதற்கான..எல்லா வாசலையும் அடைத்து விட்டு..பூனையை எதிர்கொள்..!அங்கே புலியைக் காண்பாய்..!”
என்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். ஜின்னாவிற்கு நிகழ்ந்தது அது தான். பாகிஸ்தானை அவர் ஒரு மத சார்பற்ற நாடாகவே அவர் உருவாக்கினார். பிற்காலத்தில் அதுவும் மதவாதிகளால் மாற்றப்பட்டது.இந்து மத வழிபாட்டிற்கு எதிரானவர்கள் அனைவரும் அன்னியர்கள் என்பது திலகர் போன்றவர்களின் கோட்பாடு. அதனால் தான் ஆங்கிலேயனை அச்சுறுத்த தொடங்கப்பட்ட விநாயகர் ஊர்வலம் இன்றும் இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுகிறது.


விநாயகப்பெருமான் யாருக்குமே கிடைக்காத ஞானப்பழம் வேண்டும் என்கிற சூழலில் கூட வெளியில் ஊர்சுற்ற விரும்பாதவர். அவரை வைத்து கொண்டு அரசியல் உள்நோக்க ஊர்வலமா? என கேட்கிறார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். ஒரு அரசியல் தலைவன் எப்படி இருக்க வேண்டுமென அவரே குறிப்பிடுகிறார்.


காந்தியார் ராமராஜ்யம் வர வேண்டும் என சொன்னதைப்போலவே, அது கலீபா உமர் அவர்களின் ஆட்சியைப் போலவே, அது நேர்மையாக இருக்க வேண்டும்” என்றார்.உமர் அரபு தேசத்தின் அதிபராக இருக்கும் போது கிறிஸ்துவ நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். ஜெருசலேம் தேவாலயத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.தொழுகைக்கான் நேரம் வந்தது. உமர் தொழுகை செய்ய இடம் தேடினார். பாதிரியார்கள் அன்போடு சொன்னார்கள், எங்கள் தேவாலயத்தின் ஒரு பகுதியிலேயே தொழுகை செய்து கொள்ளுங்கள் என்று. உமர் மறுத்தார் வெட்ட வெளியில் வந்து தொழுகை செய்தார். பிறகு விருந்து நிகழ்ந்தது. எங்கள் தேவாலயம் என்ன உங்கள் தொழுகைக்கு தீட்டா? என பாதிரியார்கள் வினவினர். உமர் பொறுமையாக பதில் சொன்னார். “நான் தொழுகை செய்து விட்டு சென்றால் வரலாற்றில் உமர் தொழுகை செய்த இடம் என குறிப்பிடப்படும். ”நீங்களும் நானும் மறைந்து விடுவோம்.அடுத்த தலைமுறை வரும். உமர் தொழுகை செய்த இடம் ஒரு போதும் தேவாலயமாக இருக்க முடியாது. மசூதியாக மட்டுமே இருக்க முடியும்.. என்று கடப்பாரையோடு இடிக்க காட்டுமிராண்டித்தனமாக திரளக் கூடும். ஒரு அரசியல் தலைவன் அடுத்த தலைமுறையின் அமைதிக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டும்.” என்றார்.


உமரின் அறிவு நாணயம், அரசியல் நேர்மை, நம்ம அரசியல்வாதிகளுக்கு வந்து விட்டால் சமூக நல்லிணக்கதிற்கு ஆபத்து நேராது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை குண்டுவெடிப்புக்கு தேசம் ஆளாகி இருக்காது. மத வெறியற்ற சமூக நல்லிணக்கம் காப்பதில் தான் உண்மையான தேசபக்தி இருக்கிறது. நாம் தேசம் காப்போம்.

அமீர் அப்பாஸ்
israthjahan.ameer@gmail.com

நன்றி.கீற்று இணைய தளம்

Monday, July 19, 2010

மறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்!

முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறுகளையும்,காவல்துறையோ, உளவுத்துறையோ வெளியிடும் புதிய பெயர் தெரியாத இயக்கங்களோடு செய்திகளை புணைந்து மேலும் அச்செய்திக்கு வலுசேர்க்கும் வகையில் கட்டுக்கதைகளையும் வெளியிடும் ஊடகங்களுக்கு,சமீப காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் விசாரணைகள் தெரியாமல் போயினவோ! என்னவோ?

குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் வழக்கமாக அறிவிக்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிகாத், இந்திய முஜாஹிதீன்கள், சிமி ஆதரவு தீவிரவாதிகள் ஆகியவற்றோடு சேர்த்து அச்சமயத்தில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் வரிந்து கட்டி செய்திகளையும், கட்டுக்கதைகளையும் மற்றும் அவதூறுகளையும் பக்கத்திற்க்கு பக்கம், நொடிக்கு நொடி வெளியிடும் ஊடகங்களுக்கு இக்குண்டுவெடிப்பு பற்றிய சமீபத்திய விசாரணகளும், கைதுகளும் தெரியாமல் போனது ஏனோ?

இதில் வேடிக்கை என்னவென்றால் இக்குண்டுவெடிப்பில் பலியாவதும், கைது செய்யப்படுவதும், விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்களே என்பது வாடிக்கையாகி வருகிறது.


அவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற ஹிந்துத்துவத்தின் பயங்கரவாத செயல்களையும், சமீபத்திய சி.பி.ஐ., ஏ.டி.எஸ்.ன் விசாரணைகளையும் இங்கு காண்போம்.

மாலேகான் குண்டுவெடிப்பு-1


Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்


சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு

Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப்பட்டது - (லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)
சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்


மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு

May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.
சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா


அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு :
Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்
சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.

தானே சினிமா குண்டுவெடிப்பு.

Jun 4 2008. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:

Aug 2008இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி.

மாலேகான் குண்டுவெடிப்பு-2Sep 29 2008 - 7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.

கோவா குண்டுவெடிப்பு:
Oct 16 2009. குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி

தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு :
சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டு பயங்கரவாத முகம் வெளியுலகிற்கு தெரிந்து விட்டதே என்று வெட்கி நின்றனர். நேர்மையாக துப்பறிந்த தமிழ காவல் துறைக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையெனில், யாராவது அப்பாவி முஸ்லிம்கள் பலிகடாவாக்கப்பட்டிருப்பார்கள்.

இதுபோன்று பல பயங்கரவாத சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம்.இவை அனைத்தும் அதிகரித்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாதத்தையே காட்டுகின்றன. ஊடகங்கள் தங்கள் பத்திரிகை தர்மத்தை கடைபிடித்து உண்மையான, நேர்மையான செய்திகளை வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் அநியாயமாக பழி போடுவதும், தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும் அந்த சமுதாயத்தை மட்டும் பாதிக்கப்போவதில்லை.மாறாக அது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் கோர முகத்தை வெளிக்கொணர ஊடகங்கள் பாரபட்சம் காட்டும் போது ஒரு சில ஊடகங்கள் தைரியமாகவும், நேர்மையாகவும் இவர்களின் முகத்திரையைக் கிழிக்கின்றன. அவ்வாறு அவர்களின் பயங்ரவாத செயல்களை அம்பலப்படுத்திய "ஹெட்லைன்ஸ் டுடே" வை அடித்து நொறுக்கினர்.
இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளும் அதன் பிண்ணனிகளையும் அறிய... http://headlinestoday.intoday.in/site/headlines_today/ProgrammesShow?catName=Centre Stage&video=1&counter=null&contentId=105569&catId=50
நன்றி. நிகழ்வுகளின் நிதர்சனம்.

Sunday, July 18, 2010

ஹிந்துத்துவாவிற்கும் புலனாய்வு துறைக்கும் ரகசிய கூட்டணி உண்டா..?


மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் காவல்துறையில் ஐ.ஜியாக பணியாற்றி விருப்ப ஒய்வுபெற்றவரும், கர்கரேயைக் கொன்றது யார்? என்ற நூலின் ஆசிரியருமான எஸ்.எம். முஷ்ரிஃப் அப்புத்தகத்தின் மலையாலப் பதிப்பை வெளியிட கோழிக்கோட்டிற்கு வரிகைத் தந்தபொழுது தேஜஸ் பத்திரிக்கையின் செய்தியாளருக்கு அளித்த பேட்டி:


உள்நாட்டு பாதுகாப்பு முகமையான இண்டலிஜன்ஸ் பீரோவைக் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளுடன் காவல்துறையில் பணியாற்றிய ஒருவர் களமிறங்குவது இதுதான் முதல் முறையாகும். இத்தகையதொரு புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது?

ஐ.பிக்கும் இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கும் இடையேயான ரகசிய கூட்டணி குறித்து காவல்துறையில் பணியாற்றியபொழுதே கண்காணித்து வந்தேன். இது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஐ.பி.யின் முஸ்லிம் விரோத திட்டங்களை வெளிப்படுத்தும் பத்திரிக்கைச் செய்திகளை பாதுகாத்து வைப்பது எனது வழக்கமாகும். நாட்டில் நடைபெறும் மதமோதல்களை மிக ஆழகமான ஆய்வுக்கு உட்படுத்தியதில் எனக்கு புரிந்த ஒரு விஷயம் என்னவெனில், இரு சமூகங்களுக்கிடையேயான தவறான புரிந்துணர்வின் மூலம் இம்மோதல்கள் நடைபெறவில்லை என்பதுதான்.


நூற்றாண்டிற்கும் மேலாக புலனாய்வுத்துறைக்கும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்குமிடையே நிலவும் ரகசிய கூட்டணியின் உருவாக்கம்தான் இக்கலவரங்கள் என்பதை பணியிலிருந்து நான் ஒய்வு பெற்றபொழுது தெரிந்து கொண்டது.


நான் தெரிந்து வைத்திருந்த விஷயங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினேன். மதக்கலவரங்களைக் குறித்து எழுதத் துவங்கியபொழுது தான் மும்பை தாக்குதல் நடைபெற்றது. எனது ஊகங்கள் தவறில்லை என்பதை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள்தான் பின்னர் நடந்தேறியது. இது தான் கர்கரேயின் கொலை குறித்த புத்தகம் எழுதும் ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது என்று வேண்டுமானால் கூறலாம்.


கர்கரேயின் கொலைக்கு பின்னணியில் ஐ.பி - ஹிந்துத்துவா கூட்டணி உள்ளது என்பது ஊகம் மட்டும்தானா?

இல்லை. தெளிவான ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலேயே நான் கூறுகிறேன். ஒரு முன்னள் காவல்துறை அதிகாரி என்ற நிலையில் எனது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு இதனை உறுதியாக கூற இயலும்.


மும்பை தாக்குதலின் திரைமறைவில் உள்ளூர் கும்பலை பயன்படுத்தி கர்கரே உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்துள்ளார்கள் என்பதற்கான பத்துக்கும் மேற்பட்ட ஆதரங்களை நான் புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளேன்.


மும்பையை தாக்குவதற்கு ஒரு குழு காராச்சியிலிருந்து படகு வழியாக புறப்பட்டுள்ளது என்ற தகவல் "ரா" மூலமாக ஐ.பிக்கு முன்னரே கிடைத்த பிறகும் பாதுகாப்பு பொறுப்பை வகிக்கும் மும்பை காவல்துறைக்கோ கடற்படையின் மேற்கு கமாண்டிற்கோ அதனை அளிக்க அவர்கள் (ஐ.பி) தயாரில்லை பெயரளவிற்கு சில தகவல்களை கடலோரக்காவக்படைக்கு கொடுத்துவிட்டு ஹிந்துத்துவாதிகளுக்கு ரகசியமாக அளித்துள்ளனர்.


சிவாஜி டெர்மினலில் தாக்குதல் நடத்தியவர்கள்தாம் காமா மருத்துவமானை இடத்திற்கு சென்று கர்கரேயைக் கொன்றதாக போலீஸ் கூறுகிறது. ஆனால் இவ்விரு இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதற்கான ஆதாரங்களை நான் பட்டியலிட்ட பிறகும் அதில் ஒன்றைக்கூட மறுக்க எவரும் முன்வரவில்லை. அதாவது உளவு தகவல்களை போலீஸிற்கும், வெஸ்டர்ன் கமாண்டிற்கும் அளித்து மும்பை தாக்குதலை தடுப்பதற்கு பதிலாக கர்கரேயைக் கொல்வதற்கு ஏற்ற வகையில் மும்பைத் தாக்குதல் நடந்தேறட்டும் என அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர்.


ஹிந்துத்துவவாதிகளின் விருப்பங்கள்தான் தேசப்பாதுகாப்பை விட ஐ.பிக்கு முக்கியம் என்றா தாங்கள் கூறுகிறீர்கள்?
நிச்சயமாக! அவ்வாறில்லையெனில் உளவுத் தகவல்களை அவர்கள் முறையாக உரிய பாதுகாப்பு படையினருக்கு அளித்து தாக்குதலை தடுத்திருப்பார்கள்.

அந்தளவுக்கு ஹிந்துத்துவா மயமாக்கப்பட்டதுதான் ஐ.பி.
ஆர்.எஸ்.எஸ்சை விட அபாயகரமானது ஐ.பி என்று நான் நம்புகிறேன்.
காரணம் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பெயரால் ஆட்சியாளர்களை தவறான புரிந்துணர்வுக்கு கொண்டுசெல்லும். உண்மையான தீவிரவாதிகளான ஹிந்துத்துவ வாதிகளின் செயல்பாடுகளை மறைக்க செய்வது தான் ஐ.பி.யின் வேலை.

உதாரணமாக உளவுத்துறையின் அறிக்கைகள் என்ற பெயரில் தினந்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகளை கவனித்துப்பாருங்கள் நாட்டில் தீவிரவாதத் தாக்குதல் பீதியை ஏற்படுத்தும் வகையில் கட்டிக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு, சினிமாத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கும், அணுசக்தி நிலையங்கள், பாதுகாப்பு மையங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கெதிராகவும் தாக்குதல் நடக்கப்போவதாக கூறும் அச்செய்திகள். இதில் பெரும்பாலும் போலியான தகவல்களாகும் என்பது அனுபவமாகும்.
சரி இந்த அறிக்கைகள் உண்மை என்றே கருத்தில் கொள்வோம்; அவ்வாறெனில் ரசசிய புலனாய்வு ஏஜன்சிகள் என்ன செய்ய வேண்டும்? அவற்றை பகிரங்கப்படுத்தி தாக்குதல் நடத்துபவர்களுக்கு தப்பிக்க வழி வகைச்செய்வதா? அல்லது தகவல்களை ரகசியமாக வைத்து அவர்களை பிடிப்பதா? மக்களுக்கிடையே தேவையற்ற பீதியையும், பகை உணர்வையும் அதிகரிக்கத்தான் ஐ.பியின் இத்தகைய போலித்தகவல்கள் உதவும் என்பதுதான் உண்மை. இந்த செய்திகள் அனைத்தும் சரியானது என்றுதான் பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.


ஐ.பி ஹிந்துத்துவா சக்திகளின் ஊதுகுழலாக மாறிய சூழல் எவ்வாறு உருவானது?
இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல ரகசிய புலனாய்வு ஏஜன்சியின் மதரீதியான சிந்தனை பிரிட்டீஷாரின் காலத்திலிருந்தே பார்ப்பணர்கள் கடைப்பிடித்துவந்ததுதான் இது. மதராஸ் கவர்னர் பிரிட்டீஷ் அரசுக்கு இதைக்குறித்து கடிதம் எழுதியிருந்தார் என சுப்ரீம் கோர்ட் நீதிபதியொருவர் என்னிடம் சமீபத்தில் தெரிவித்தார்.


பிராமணர்களிடமிருந்துதான் தங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கின்றன என்பது அவருடைய குற்றச்சாட்டு. சுதந்திரத்திற்கு பிறகு ஐ.பி இதனை பின்பற்றி வந்தது. அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை ரகசியமாக தேர்வு செய்தார்கள்.


1993 வரை ஒருமுஸ்லிமுக்கு கூட ஐ.பியில் அதிகாரி பதவி கிடைத்ததில்லை என்பதே இவ்விஷயத்தின் தீவிரத்தை எடுத்தியம்புகிறது. முஸ்லிமான முன்னாள் உள்துறை செயலாளருக்கு சட்டபடி தகவல்களை வழங்க தயங்கிய வரலாறு ஐ.பிக்கு உண்டு. ஐ.பி.யின் அதிகாரப்பூர்வ தலைவர்தான் உள்துறை செயலாளர். இது பின்னர் சர்ச்சையானது. அரசால் கூட கட்டுப்படுத்த முடியாத சக்தியாக ஐ.பியின் சாம்ராஜ்யம் வளர்ந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.


கர்கரே கொல்லப்படும் வரை மாலேகன் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா சக்திகளின் பங்கைக்குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் பின்னர் அவ்வாறான செய்திகள் வரவில்லை.


வழக்கின் தற்போதைய நிலை என்ன?
மாலேகான் உள்ளிட்ட ஏராளமான குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் செயல்பட்ட அபினவ் பாரத் மற்றும் கர்னல் காந்த் புரோகித் போன்ற தலைவர்களைக் குறித்து அதிர்ச்சி தரத்தக்க செய்திகள் வெளியாகவிருந்த நிலையில் தான் கர்கரேயை இந்த பூமியிலிருந்து அவர்கள் துடைத்து நீக்கிவிட்டார்கள்.


வழக்கில் கைது செய்யப்பட்ட தயானந்த பாண்டேயின் லேப்டாப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விபரங்கள் நடுங்கச்செய்பவையாகவிருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்களின் பெயர்களிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை நன்கொடையாக வழங்கிய சில பணக்கார முதலைகளின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தன. கர்கரே கொல்லப்பட்ட பிறகுதான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. லேப்டாப்பில் இருந்த அனைத்துவிபரங்களையும் குற்றப்பத்திரிக்கையில் உட்படுத்த கர்கரேக்குப் பிறகு மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படைக்கு தலைமையேற்ற ரகுவன்ஷி தயாராகவில்லை.


கர்கரேயை நேரடியாக சந்தித்துள்ளீர்களா?
தனிப்பட்ட ரீதியாக கர்கரேயுடன் எனக்கு நெருங்கிய நட்பு இல்லை. என்னைவிட மிகவும் ஜூனியர் அதிகாரியாக இருந்தார் அவர். ஒன்றிரெண்டு முறை அவரை கூட்டங்களில் நேரடியாக சந்தித்த பழக்கம் உண்டு. சில ரிப்போர்ட்டுகளுக்காக அவருடன் பேசியபொழுது கர்கரே நேர்மையான, துணிச்சலான அதிகாரி என்று எனக்கு புரிந்தது.


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் செய்தது மற்ற எவரும் செய்யத் துணியாத பணியாகும். நான் அந்த வழக்கை விசாரித்திருந்தால் கூட கைதுச் செய்யபபட்டவர்களிடமிருந்து கிடைத்த விபரங்களை வெளியிட துணிந்திருக்கமாட்டேன். அவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் தகவல்கள் அவை அத்தகையதொரு துணிச்சலும், தேசத்தின் மீதான அபிமானத்திற்கும் தனது உயிரை அர்ப்பணிக்க வேண்டியதாயிற்று; அந்த நேர்மையான அதிகாரியான கர்கரே இந்நாட்டின அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஹிந்து ராஷ்ட்ரம் உருவாக்க முயற்சித்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடமிருந்து நமது அரசியல் சட்டத்தை பாதுகாக்கத்தான் அவர் முயன்றார்.


உங்களுடைய புத்தகத்தால் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
உறுதியாக என்னால் கூற இயலாவிடினும், சில நல்லமாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது எனக் கூறலாம். புனே குண்டுவெடிப்பு நடந்தபிறகு அரசு மற்றும் காவல்துறையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம்.


குண்டுவெடிப்பு நடந்து சில மணிநேரங்களுக்குள்ளாகவே ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பு அல்லது தனிநபர்களின் பெயர்களையோ வெளியிடும் வழக்கம் இம்முறை அரசு வட்டாரத்திலிருந்தோ காவல்துறையிடமிருந்தோ ஏற்படவில்லை. விரும்பத்தக்க மாற்றம் இது.


மேலும் புலனாய்வு விசாரனையில் ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியின் பெயர் இதுவரை முன்னிலைப் படுத்த்ப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும். (இப்போது ரகுவன்ஷி ஏ.டி.எஸ் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்) பத்திரிகைகள் தான் உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி யூகங்களை பிரசுரிக்கின்றன இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கரின் பெயரைக்குறிப்பிடுகின்றவர்கள் அபினவ் பாரத் அல்லது இதர ஹிந்துத்துவா இயக்கங்களை சந்தேகிப்பதில்லை.


அபினவ் பாரத்தின் மையம்தான் புனே. ஹிந்துத்துவ வாதிகளின் ஏராளமான பயிற்சிகள் நடந்தது புனேயிலிலுள்ள மையங்களிலாகும். குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்குகளில் பிடிப்பட்டவர்கள் என்ற நிலையில் இத்தகைய இயக்கங்களின் பெயர்களையும் பாரபட்சமற்ற முறையில் செயல்படுவதாக கூறும்பத்திரிக்கைகள் வெளியிடவேண்டும். அனால் அது நடக்கவில்லை .


தேசிய பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து எம்.கே. நாரயணனை மேற்குவங்காள கவர்னராக்கியது மத்திய அரசிடம் ஏற்பட்ட கொள்கை மாற்றத்தின் அடையாளம் என்று பிரபல தலித் சிந்தனையாளரும், எழுத்தாளருமான வி.டி. ராஜசேகர் குறிப்பிட்டிருந்தார். எம்.கே. நாராயணன் ஐ.பியின் தலைவர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.


என்னவாயினும் அதிரடியான மாற்றம் என்பது சாத்தியமில்லை மத்திய அரசு நினைத்தாலும் கூட ஐ.பியை உடனடியாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலாது. பத்திரிக்கைகல் ஐ.பியின் பக்கம் சார்ந்துள்ளதுதான் அதற்கு காரனம் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை கைப்பற்ற பத்திரிக்கைகளின் உதவி தேவை. புனே குண்டுவெடிப்பில் பாரபட்சமற்ற முன்னரே திட்டமிடாத புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. குற்றவாளிகள் யாராக இருக்கலாம் என்பதை முன்னரே தீர்மானித்துவிடக்கூடாது.


மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி சமீபத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உங்கள் கவனத்தில் பட்டதா?

நிச்சயமாக.. அச்சம்பவம் குறித்து நான் மிகவும் கவலைகொண்டுள்ளேன். காரணம், அவ்வழக்கின் விசாரணையும், குற்றவாளிகளை கைது செய்ததும் மிகுந்த சந்தேகங்களை உண்டாக்குகிறது. இத்தகைய வழக்கினை அவ்வளவு எளிதாக தீர்க்கவியலாது என்பது மட்டுமல்ல அவ்வழக்கினை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் நிறைய சந்தேகங்கள் உள்ளன.


சில நாட்களுக்குள்ளாகவே குற்றவாளிகள் பயன்படுத்திய ரைஃபிள்களை கைப்பற்றியது, குற்றவாளிகளை கைது செய்தது, பணம் பட்டுவாடா செய்யப்பட்ட வழியை கண்டறிந்தது ஆகியவற்றை முன்னாள் போலிஸ் அதிகாரி என்ற முறையில் என்னால் நம்ப இயலவில்லை. நிழலுலக தாதாக்கள் தான் இக்கொலைக்குப் பின்னால் செயல்பட்டுள்ளது என போலீஸ் கூறுகிறது. வெளிநாட்டில் வாழும் நிழலுலக தாதா ஹாவாலா வழியாக கொலையாளிகளுக்கான பணத்தை அனுப்பிக் கொடுத்ததாகவும் போலீஸ் கூறுகிறது. 25ஆயிரம் ரூபாய்க்காக மும்பை போன்ற நகரத்தில் ஒருவர் ஒரு கொலையைச் செய்வது என்பது நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதுமட்டுமல்ல நிழலுலக தாதாக்கு வெறும் ஒரு தொலைபேசி அழைப்பின் வாயிலாக லட்சக்கணக்கான பணத்தை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சேர்க்கலாம் என்றிருக்க ஒரு லட்சம் ரூபாயை ஹவாலா வழி அனுப்பினார் என்பதை எவ்வாறு நம்ப இயலும்?


உண்மையில் இதன்மூலம் பொதுமக்களுக்கு புதியதொரு எண்ணத்தை உருவாக்குவதற்கான சம்பந்தப்பட்டவர்களின் முயற்சி இது என்பது எனது உறுதியான சந்தேகம். அதாவது ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை எதிப்பதற்கு புதியதொரு நிழலுலக கும்பல் ஒன்று உருவாகி வருகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களுடைய முயற்சி. இது உறுதியாக்கப்பட்டால் எதிர்காலத்தில் தங்களுக்கு தடையாக இருக்கக்கூடியவர்களை நிழலுலக கும்பலின் போர்வையில் எளிதாக தீர்த்துக்கட்ட இயலும்.


கர்கரேயைக் கொன்றவர்கள்தான் ஆஸ்மியின் கொலைக்குப்பின்னணியிலும் செயல்பட்டுள்ளார்கள் என்று நான் கருதுகிறேன். ஒரு வேளை நானும் அவர்களுடைய ஹிட் லிஸ்டில் (கொலைப்பட்டியலில்) இடம் பெற்றிருக்கபாட்டேன் என்று என்ன நிச்சயம் உள்ளது?


உங்களுடைய புத்தகம் போதுமான விவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறதா?
நிச்சயமாக இல்லை. எனது புத்தகத்தைப் பற்றி விவாதிக்க எவருக்கும் துணிவில்லை என்பதுதான் உண்மை. எனது புத்தகம் வெளியானவுடன் ஒரு பத்திரிக்கையின் புனே பதிப்பில் அதைக் குறித்த விமர்சனம் ஒன்று இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் மறுதினம் எனது பேட்டியை பிரசுரித்தார்கள். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி இது நடந்தது.


அடுத்த நாள் எனது வீட்டில் தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்தியாளர்கள் மற்றும் கேமரா மேன்களின் கியூவாக இருந்தது. இந்தியாவில் பிரபலமான சேனல்களின் செய்தியாளர்களெல்லாம் என்னைக் காண வந்தவர்களில் அடங்கும். பதினைந்து இருபது நிமிட பேட்டியை எடுத்துவிட்டு அவர்கள் சென்றனர். ஆனாலெவருமே அதனை ஒளிப்பரப்பவில்லை. டெல்லியில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்து நடந்த சம்பவத்தைக் கூறினார். ஐ.பி. தான் இதில் தலையிட்டுள்ளது. எனது புத்தகத்தைக் குறித்து ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒரு கருத்தைக் கூட கூறக்கூடாது என மத்திய அரசு வாயிலாக தொலைக்காட்சி அலைவரிசைகளின் முதலாளிகளுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்னுடனான பேட்டி முடிந்ததும் ஐ.பி.யின் பதிலை அறிவதற்காக சென்ற சேனல்களின் செய்தியாளர்களிடமிருந்து தான் ஐ.பிக்கு எனது புத்தகத்தைப் பற்றி தெரியவந்துள்ளது.


புத்தகத்தின் உள்ளடக்கத்தின் அபாயத்தைப் புரிந்த அவர்கள் அது விவாதமாகாமலிருக்க முடிந்தவரை முயற்சி செய்துள்ளார்கள். உண்மையில் நாட்டில் பெரிய பயங்கரவாதிகளை பயமுறுத்திய மிகப்பெரிய பயங்கரவாதியாக நான் தற்பொழுது மாறிவிட்டேன். மும்பை காவல்துறையில் சிலருக்கு என்னை தொலைபேசியில் அழைக்கக்கூட இப்பொழுது பயம். எனது தொலைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுகிறது என்ற எண்ணம் அவர்களுக்குண்டு. என்னுடன் தொடர்கொள்பவர்கள் பணியில் தொடர முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.


பொதுமக்களிடமிருந்து போதுமான ஆதரவு உங்களுக்கு கிடைத்துள்ளதா?
துவக்கத்தில் மக்கள் தயங்கி நின்றாலும், தற்பொழுது ஆதரவு தெரிவிக்கின்றனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்திலேயே மும்பை, நாக்பூர் ஆகிய இடங்களில் எனது புத்தகத்தைக் குறித்த விவாதங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் வேறு சில இடங்களிலும் இதுகுறித்து விவாதம் நடை பெறுகிறது.


ஐ.பியை சுத்திகரிக்க என்ன வழி?
அதற்கு குறுக்கு வழிகள் ஒன்றுமில்லை ஐ.பியை முற்றிலும் மறுகட்டமைக்கவும், சுத்தப்படுத்தவும் மத்திய அரசு தயாராக வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் அது எளிதாக நடக்ககூடியது அல்ல. எனினும் ஆட்சியாளர்களின் புறத்திலிருந்து சில சுய அறிகுறிகள் தெம்படுகிறது. அரசு நடவடிக்கையை விட குடிமக்களின் பங்குதான் முக்கியமானது.ஐ.பி. மற்றும் பிராமணவாதிகளின் கொடூரதந்திரங்களுக்கு ஊதுகுழலாக செயல்படும் பத்திரிக்கைகளின் மீது சமூக ரீதியான கட்டுப்பாடுகள் தேவை. அதனைவிட தங்களைக் குறித்த தவறான புரிந்துணர்வை நீக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும். தேசத்தின் சாதாரணமக்களான ஹிந்து மக்களின் உள்ளத்திலிருக்கும் சந்தேகங்களை நீக்க தலைவர்களும் முன்வரவேண்டும். இவ்வகையிலான கூட்டு முயற்சியின் மூலமாகவே இத்தகைய சவால்களைசந்திக்க முடியும்.


நன்றி: தேஜஸ் : விடியல் வெள்ளி (ஜூன் - ஜூலை 2010)

Saturday, July 17, 2010

திருமாவளவன் இதற்கு விடை அளிப்பாரா?
ஆண்டாண்டு காலமாக அடிமைகளாகவும், கூலிகளாகவும் கைகட்டி நின்ற சமுதாயத்தை, 'டை' கட்ட வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்.


ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் அடையாளமாக உதித்த அவர், தமது அறிவாலும், ஆளுமையாலும், தலித் மக்களைத் தலைநிமிரச் செய்தார்.சாதியின் பெயரால்... மனுநீதியின் பெயரால்... ஒதுக்கப்பட்டு, வதைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்.


இந்துத்துவத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய அந்தத்தலைவர், தமது இறுதி மூச்சு உள்ளவரை இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். "இந்துவாகச் சாகமாட்டேன்" என்று சூளுரைத்துச் செயல்படுத்தினார்.


அந்தப்புரட்சியாளரின் தொடர்ச்சியாய், தமிழ்மண்ணில் களமாடுபவர்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.சேரிகளில் அடுப்பு எரியவும், விளக்கு எரியவும் வழிவகுக்தவர் அம்பேத்கர் என்றால், சேரிகள் எரிக்கப்படுவதை தடுத்துக் காத்தவர் திருமாவளவன்.சட்டங்கள் ஆளவும், பட்டங்கள் அடையவும் திட்டங்களைத் தந்தவர் அம்பேத்கர் என்றால், அரசியலில் பொம்மைகளாய் இருக்காமல் தனித்தன்மையோடு வளர அடித்தளமிட்டவர், திருமாவளவன்.


இவ்வாறு அம்பேத்கரின் வழித்தடத்தில் அரசியல் அதிகாரத்தை நோக்கி திமிறி எழுந்த திருமாவளவன், தலித் பிரச்சினைகளை மட்டுமில்லாமல், தமிழக முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கையில் எடுத்து போராடி வருகின்றார்.இந்தியச் சூழலில் தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான உறவை 'தொப்புள்கொடி உறவு' என்று அழைப்பதுண்டு. நெருக்கமும், இணக்கமும் கொண்ட சிறப்பு மிக்க உறவு அது.


இந்துத்துவத்தின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகும் இரட்டைச் சமூகம் என்ற அடிப்படையில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கும், வட்டமேசை மாநாட்டிற்கும் அனுப்பி வைத்து ஆதரவளித்த முஸ்லிம் லீக்கின் காலத்திலிருந்தே அந்த உறவு வலுப் பெற்றுத் தொடர்கிறது.தலித்துகளைக் கருவியாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டிவிடும் இந்துத்துவ சூழ்ச்சியை வேரறுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தலித் தலைவர்களோடும், இயக்கங்களோடும் முஸ்லிம்களுக்கு நல்லுறவே நீடித்து வருகிறது.


தமிழச் சூழலில் தலித்துகளின் தலைவரான இளையபெருமாள் காலத்திலிருந்து டாக்டர் அ.சேப்பன், திருமாவளவன் என இன்றுவரை அனைவருடனும் நட்புறவு நீடித்து வருகிறது.இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த உறவைச் சீர்குலைத்து, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இந்துத்துவக் கும்பல் துடியாய்த்துடிக்கிறது.


அம்பேத்கரின் பெயரைச் சொல்லி, அரசியல் களத்திற்கு வந்த பலரையும் மென்று விழுங்கிவிட்டது.தமிழகத்தில் தடா பெரியசாமி முதல் டாக்டர் கிருஷ்ணசாமி வரை எல்லா சாமிகளும், சங்கராச்சாரி சாமியிடம் சரணடைந்ததுவிட்ட நிலையில், சங்கராச்சாரியாருக்குப் பணிய மறுத்த திருமாவளவன் மீது முஸ்லிம்களுக்கு எப்போதும் நன்மதிப்பு உண்டு.2009, நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளோடு கூட்டணி உடன்பாடு கண்ட பின்னர், பச்சைத் துரோகம் புரிந்துவிட்டு, பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்த கிருஷ்ணசாமி போல் அல்லாமல் பா.ஜ.க.வின் பக்கமே செல்லாமல் இந்துத்துவ எதிர்ப்பில் தீவிரமாக இயங்கி வருபவர், தொல். திருமாவளவன்.


பா.ஜ.க.வின் நேரடிப் போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களைத் தவிர, ஏனைய அனைவரும் தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துவிட்டனர். தி.மு.க., ஆ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மற்றும் புதிய தமிழகம் மட்டுமன்றி, நேற்று முளைத்த நடிகர் சரத்குமாரின் ச.ம.க.முதல் நடிகர் கார்த்திக்கின் நா.ம.க. வரை எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வைத் தழுவிய கட்சிகள்தான்.மாற்றத்தை நிகழ்த்தப் புறப்பட்டிருக்கும் தே.மு.தி.க.வின் விஜயகாந்தும் பா.ஜ.க.வுடன் பெரும் பேரம் நடத்தியவர்தான்.அரசியலில் பல நெருக்கடியான தருணங்களை எதிர்கொண்டபோதும் தடுமாறிவிடாமல், பா.ஜ.க.வின் பக்கம் சாய்ந்துவிடாமல் கொள்கை உறுதி காப்பவராக திருமாவளவன் விளங்குகின்றார்.


1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார் என்றாலும், 1990 களிலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் தொட்டே அவர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி வருகின்றார்.


1992, டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் களமிறங்கி உடனடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்தவர் அவர்."எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி" என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை ஈர்த்தவர். ஈழத்தை ஆதரிப்பதுபோலவே பாலஸ்தீனத்தையும் ஆதரித்து வருபவர். சதாம் ஹுஸைனின் தீரத்தால் ஈர்க்கப்பட்டவர். தீவிர ஏகாதிபத்திய எதிப்பாளர்.


தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு கோரிக்கையைச் சட்டப் பேரவையில் முழங்கியவர். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டை நடத்தியவர். முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காகப் போராடியவர். எல்லா முஸ்லிம் அமைப்புகளோடும் தோழமை போற்றுபவர்.இப்படியாக... தமது ஒவ்வொரு அசைவுகளாலும் முஸ்லிம்களுடனான உறவை உறுதிப்படுத்தி வந்த திருமாவளவன், கடந்த சில ஆண்டுகளாக அதில் ஒரு தீவிரப் போக்கை கையாண்டு வருகின்றார்.


"மக்களே மசூதியைக் கட்டி எழுப்புவோம்" என்று சொல்லி பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்தார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்.


முஸ்லிம்களின் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று விருந்துண்டு செல்லும் பிற அரசியல்வாதிகளைப் போலல்லாமல், முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்து அசத்தினார்.முஸ்லிம்களைப் போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொன்டர்களையும் நோன்பு நோற்கச் செய்தார்.தலைவர்களின் பெயரால் தமிழக அரசு வழங்கிவரும் விருதுகளில் காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பினார். அரசுக்கு உரைக்கும் வண்ணம் தமது கட்சியின் சார்பில் காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும் கொடுத்து அனைவரையும் அதிர வைத்தார்.


தமது கட்சியின் பொருளாளர் பொறுப்பை முகமது யூசுப் என்ற முஸ்லிமுக்கு தந்ததோடு, ஏராளமான முஸ்லிம்களைக் கட்சி நிர்வாகிகளாக்கினார்.நாடாளுமன்றத்தில் தனது முதல் கன்னிப் பேச்சிலேயே முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தார்.


பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவியபோது எல்லா பெரியாரிஸ்டுகளும் அவரை கடுமையாக விமர்சித்த வேளையில், பெரியார்தாசனை ஆரத்தழுவி வாழ்த்தினார், திருமாவளவன்.


இவ்வாறு, தொடர்ச்சியாக... அதிரடிமேல் அதிரடிகளை அரங்கேற்றி வருகின்றார்.முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்து, திருமாவளவன் இவ்வளவு தீவிரமாக இயங்கி வருவது தமிழக அரசியல் சமூகக் களத்தில் அதிவலைகளை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.


முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்துகின்றாரே என்ற வெறுப்பில் இந்துத்துவ சக்திகளும்...நாம் பேசி வருவதை எல்லாம் இவரும் பேச ஆரம்பித்துவிட்டாரே என்ற பதற்றத்தில் சில இஸ்லாமிய அமைப்புகளும்...முஸ்லிம்களுக்காகப் பொதுத் திளத்தில் நின்று போராடி நமக்கும் நெருக்கடி தருகின்றாரே என்ற படபடப்பில் அரசியல் கட்சிகளும்...'தலைவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை' என்ற புறக்கணிப்பில் சில விடுதலைச் சிறுத்தைகளுமாக அந்த அதிர்வுகள் வேறுபடுகின்றன.


இவர்களைத் தாண்டி, பொதுவான இஸ்லாமிய மக்களிடம் திருமாவின் செயல்பாடுகள் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.'பொதுதளத்தில் நமக்காக வீரியமாக குரல் எழுப்புகின்றாரே' என்ற நன்றி உணர்வும், 'இஸ்லாம் மார்க்கம் குறித்து இவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றாரே' என்ற வியப்பும் திருமா மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.எனினும், நன்றி உணர்வும், வியப்பும் இருக்கின்ற அளவுக்கு ஒரு வித தயக்கமும் முஸ்லிம்களிடம் இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.


"என்னதான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்பினாலும், இஸ்லாத்தைப் பற்றி மேடை தோறும் முழங்கினாலும், அடிப்படையில் திருமா ஓர் அரசியல்வாதி ஆயிற்றே! அவரை எந்த அளவுக்கு நம்பலாம்? நம்பி எந்த எல்லை வரை செல்லலாம்? என்று மனதுக்குள் எழுகின்ற கேள்விகளே முஸ்லிம்களிடம் தயக்கமாக வெளிப்படுகிறது.


முஸ்லிம்களின் இத்தகைய மனநிலையைச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், திருமாவை நம்பலாமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கம், திருமா மீதான அவ நம்பிக்கையினால் ஏற்பட்டது அல்ல.அது, காலங்காலமாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வடு. வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டதன் வெளிப்பாடு. எல்லோராலும் ஏமாற்றப்பட்டதனால் ஏற்பட்டிருக்கும் எச்சரிக்கை உணர்வு.தங்களை நோக்கி வரும் அரசியல்வாதிகளைக் கண்டு முஸ்லிம்கள் என்று அச்சப்படுகின்றார்கள் என்றால், அதன் பின்னணியில் ஒரு நூற்றாண்டு கால வரலாறு புதைந்திருக்கிறது.


ஒருவரை நம்புவதும், நம்பிய பின் கழற்றி விடப்படுவதும், களமிறங்கிய பின் கவிழ்க்கப்படுவதுமாக முஸ்லிம்கள் சந்தித்துவரும் துரோக வரலாறு காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்குகிறது.ஒருங்கிணைந்த இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார நலன்களை இலக்காக கொண்டு 1906 ஆம் ஆண்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லிம் லீகை தொடங்கிய தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்களே.காங்கிரசின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதும் முஸ்லிம்களின் நலன் காக்க தனியொரு அமைப்பை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.


காங்கிரஸ் முன்னொடியான முஹம்மது அலி ஜின்னா, முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட போது அதை எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியின் மூலம்தான் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும் என்று விடாப்பிடியாக நம்பினார். இறுதியில் அவருக்கும் அவநம்பிக்கையே பரிசாகக் கிடைத்தது. தீவிட மதச்சார்பற்றவாதியாக தன்னை முன்னுறுத்திய அவர், காங்கிரசின் வகுப்புவாதத்தினால், முஸ்லிம் லீக்கில் இணைந்து அதன் தலைவராக உயரும் நிலை வந்தது.


1906-ல் அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட்போதும், 1938ல் தான் தமிழகத்தில் அவ்வியக்கம் வேரூன்றியது. அதுவரை இங்குள்ள முஸ்லிம்கள் காங்கிரசே கதி என நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கைக்கு வேட்டு வைத்தது காங்கிரஸ் கட்சி.


தென்னகத்தில் வணிகப் பெரு வள்ளலாகவும், காங்கிரசில் செல்வாக்கு செலுத்திய தலைவராகவும் விளங்கிய ஜமால் முஹம்மது சாஹிப், 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரசில் மேலோங்கி இருந்த வகுப்புவாதமும், பிரித்தாளும் சூழ்ச்சியும் ஜமால் முஹம்மது சாஹிபை தோற்கடிக்கச் செய்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிபெற வைத்தது.


காங்கிடசின் இத்தகைய நயவஞ்சகத்தனத்தால் நிலைகுலைந்தார் ஜமால் முஹம்மது சாஹிப் ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீகிலிணைவது குறித்து, அதுவரைச் சிந்தித்துக் கூட பார்த்திடாத அவர், உடனடியாக காங்கிரசில் இருந்து விலகி, முஸ்லிம் லீகில் இணைந்தார்.ஜமால் முஹம்மது சாஹிபுக்கு இழைக்கப்பட்ட துரோகம், தீவிர காங்கிரஸ்வாதியான அவரது உறவுக்காரர் ஒருவரின் உள்ளத்தை உலுக்கியது. காங்கிரசின் நம்பிக்கைத் துரோகத்தை உணர்ந்து தெளிந்த அவரும் தன்னை முஸ்லிம் லீகில் இணைத்துக்கொண்டார். அவர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.


காங்கிரகை நம்பி முஸ்லிம்கள் இழந்தவற்றைப் பட்டியலிட்டால் அது எதற்குள்ளும் அடங்காமல் நீண்டு செல்லும். பாகிஸ்தான் பிரிவினை முதல் பாபர் மஸ்ஜித் பிரச்சினை வரை இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப்பெரும் இழப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியால் நேர்ந்தவையே.முஸ்லிம்களுக்கு எப்போதுமே எதிரியைத் தீர்மானிப்பதில் பிரச்சினை இருந்ததில்லை. பா.ஜ.க.வை நம்பி அவர்கள் மோசம் போனதாக வரலாற்றில் ஒரு வரி கூட இல்லை. அவர்களின் பிரச்சினைகள் எல்லாம் நண்பர்களை நம்பியதிதான் இருக்கிறது.


காங்கிரசின் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றாக ஒடுக்கப்பட்டோரின் உரிமை அரசியலை முன்னெடுத்து தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட அச்சாணியாய் இருந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.


காங்கிரசை வீழ்த்தி தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சியும், கேரளாவில் இடதுசாரி ஆட்சியும் ஏற்பட வழிவகுத்தவர் அவர். அப்படிப்பட்ட காயிதே மில்லத்தும் கடைசியில் ஏமாற்றப்பட்டார்தமிழகத்தில் நமது அணி வெற்றிபெற்றால் கூட்டணி ஆட்சி என்று கரம் பற்றிச் சொன்னவர்கள், வென்ற பின்னர் காலை வாரினார்கள். பதவி ஏற்றபின் வந்து கரம் கூப்பினார்கள்.


500 ஆண்டுகள் ஆனாலும் முஸ்லிம் லீகை அழிக்க முடியாது என்று சூளுரைத்தார் காயிதே மில்லத். அந்த மகத்தான தலைவர் உயிர் கொடுத்து வளர்த்த அந்த இயக்கத்தை அவரது மறைவுக்குப் பின் நிர்மூலமாக்கிய பெருமை திராவிட கட்சிகளையே சாரும்.முஸ்லிம் லீகின் இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே குழு அரசியலை உருவாக்கி, ஈகோவை கூர்தீட்டி, ஒன்றுபட்ட ஓர் இயக்கத்தை உருக்குலைத்தன திராவிடக்கட்சிகள்.எந்த திராவிடக் கட்சியை காயிதே மில்லத் நண்பன் என்று நம்பினாரோ அந்த திராவிடக் கட்சிதான் அவரது மறைவுக்குப் பின் தனது சுயநலனுக்காக முஸ்லிம் லீகை சூறையாடியது.


இது ஒருபுறமென்றால், தமது கட்சிக்காக காலமெல்லாம் உழைத்த முஸ்லிம்களைத் திராவிடக் கட்சிகள் கைவிடும் அவலம் மறுபுறம் தொடர்கிறது.தி.மு.க தொடங்கப்பட்டபோது அறிஞர் அண்ணாவுக்குக் களம் தந்தவர்கள் முஸ்லிம்கள். 'நபிகள் நாயகம் பிறந்த தின விழா' என்ற பெயரில் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தப்பட்ட 'மீலாது விழா'க்கள் தான் தி.மு.க.வின் பிரச்சாரக்களம்.


முஸ்லிம்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்த தி.மு.க.வில் முன்னணி தலைவராக இன்று ஒரு முஸ்லிம் கூட இல்லை. தலைவர், செயலாளர், பொருளாளர், துனைப் பொதுச்செயலாள்ர்கள் என நீளும் தலைமை நிர்வாகிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. சமூக நீதியை வலியிறுத்தும் தி.மு.க.வின் நிர்வாக அமைப்பில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.


ஆயிரம் விளக்கு உசேன், தி.மு.க. முன்னொடிகளில் ஒருவர். மு.க.ஸ்டாலினை அரசியலில் ஒளிரச் செய்வதற்காக தன்னையே உருக்கிக்கொண்ட மெழுகுவர்த்தி அவர். நெருக்கடி நிலை கால சிறைவாசிகளில் ஒருவர். கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த சிறப்புக்குரியவர்.அப்படிப்பட்ட உசேனுக்கு 2006 சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அவரது தொகுதியான திருவல்லிக்கேணியில் கலைஞரின் நண்பர் பேராசிரியர் நாகநாதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.உசேனுக்கு நேர்ந்த இந்த அவலம், தி.மு.க.வின் வேறு எந்த தலைவருக்காவது நேர்ந்திருக்குமா?


வன்னியர்கள் நிறைந்து வாழும் தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பதிலாக வேறு ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை வேட்பாளராக நிறுத்த தி.மு.க.வுக்குத் துணிவு வருமா?

காட்பாடியில் துரைமுருகனுக்குப் பதிலாக, துறைமுகம் காஜாவுக்கு சீட் தருமா?

திருவல்லிக்கேணியில் உசேனை மறுத்து, நாகநாதனை நிறுத்துகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்?

எனினும், முஸ்லிம்கள் முன்புபோல் இல்லாமல் தெளிவாக முடிவு எடுத்து நாகநாதனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வின் முஸ்லிம் வேட்பாளர் பதர் சயீதை வெற்றிபெற வைத்தார்கள். தம்மை வஞ்சிப்பவர்களுக்கு வாக்குகள் மூலம் பதிலடி தந்தார்கள். தாங்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டோம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.


தி.மு.க.வில் இத்தகைய நிலை என்றால், அ.தி.மு.க. பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தமது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம்தராமல் புதிய வரலாறு படைத்தார் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு எதிரான அவரது பாசிசப் போக்கை விவரிக்க முடியாத அளவுக்கு அது நீளமானது; ஆழமானது.


தமிழக அரசியல் களத்தில் சமூகப் நீதிப் போராட்டத்தின் மூலம் அரசியல் கட்சியாய் பரிணமித்த பாட்டாளி மக்கள் கட்சியாலும் முஸ்லிம்களுக்குப் படிப்பினைகளே அதிகம். பா.ம.க.வின் வளர்ச்சிக்காக ஊர்தோறும் அலைந்து மேடைகள் தோறும் முழங்கியவர் போராளி பழனிபாபா."டாக்டர் இராமதாசை நம்பினால் கைவிடப்பட மாட்டோம்" என்று சொல்லி முஸ்லிம்களிடம் நம்பிக்கை விதைகளைத் தூவியவர் அவர்.


இறுதியில் அவரே அவநம்பிக்கை அடையும் அளவுக்கு இராமதாசின் சுயமுகம் வெளிப்பட்டது.தி.மு.க.வின் முன்னணிப் பொறுப்புகலில் முஸ்லிம்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த வகையில் பார்க்கும் போது தி.மு.க அளவுக்கு இராமதாஸ் மோசமானவரில்லை. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அவர் சமூக நீதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவிடுவார். இதுவரை எந்த தேர்தலிலும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக் கூட அவர் வாய்ப்பளித்ததில்லை.


இடதுசாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம் லீகை மதவாதக் கட்சி என்றும் சொல்வார்கள். அதே முஸ்லிம் லீக்கோடு கூட்டணியும் வைத்துக் கொள்வார்கள்.

கேரளாவில் இளம்தலைமுறை தலைவரான அப்துல் நாசர் மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சியோடு 2009 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்தனர். தேர்தலில் தோல்வியடைந்த உடன், தமது கூட்டணி சகாவான மதானியைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் மலிவான அரசியலை கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்தனர். பொய் வழக்குப் போட்டு மதானியின் மனைவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு அரசின் பழிவாங்கும் போக்கை அம்பலப்படுத்தி மதானியின் மனைவியை விடுதலை செய்தது.


கம்யூனிஸ்டுகளை நம்பிய மதானி ரணப்பட்டார்.

பா.ம.க.வை நம்பிய பழனிபாபா மனம் புண்பட்டார்.

தி.மு.க.வை நம்பிய காயிதே மில்லத் ஏமாற்றப்பட்டார்.

காங்கிரஸை நம்பிய ஜமால் முஹம்மது சாஹிப் தோற்கடிக்கப்பட்டார்.


நாம் எப்படி திருமாவளவனை நம்புவது?இதுதான் இன்றைய தமிழக முஸ்லிம்களின் தயக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒற்றைக் கேள்வி.


திருமாவிடம் விடை இருக்கிறதா?நன்றி. ஆளூர்ஷாநவாஸ்
சமநிலைச் சமுதாயம் ஜூலை 2010
பழனி பாபா வலைத்தளம்

Friday, July 16, 2010

இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு; CBI கண்காணிப்பில் RSSஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த அஷோக் பெர்ரி, அஷோக் வர்ஷ்னே ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவ்விருவரும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியாகிய தேவேந்தர் குப்தாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.


புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இரு மூத்த செயல்வீரர்களின் விசாரணை அறிக்கை, தற்போது CNN-IBN நிருபர்கள் கைவசமுள்ளது. முக்கியக் குற்றவாளியோடு அவ்விருவருக்கும் தொடர்புள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆயினும், ஆர்.எஸ்.எஸுக்குப் புதிய தலைவலியாக இப்போது உருவாகியுள்ளவர் அதனுடைய தலைமைச் செயற்குழுவின் உறுப்பினரும் மூத்தத் தொண்டருமான இந்திரேஷ் குமார் என்பவராவார். இவருக்குத் தீவிரவாதச் செயல்களோடு தொடர்புடைய பல குற்றவாளிகளோடு நெருக்கமுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்தோரில் உள்ள 12 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்டு அப்பன்னிருவரும் தற்போது புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களும் இந்திரேஷுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


ஸீபிஐ எனும் புலனாய்வுத்துறை இத்தகவல்களை வெளியே விடாமல் இருப்பதற்கு எவ்வளவோ முயன்றும் இத்தகவல் இப்போது கசிந்து வெளிவந்திருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகப் பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதால் சென்ற வாரம் ஆர்.எஸ்.எஸின் உயர்மட்டத் தலைவர்கள் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டும் கட்டாயத்துக்குள்ளாயினர்.
கூட்டத்திற்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், "சங் பரிவாரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்" என்று வாக்குறுதியளித்தார்.


"நாங்கள் எவ்வித விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், அதில் எங்களைக் களங்கப் படுத்தும் முயற்சியோ முறைக்கேடோ இருக்கக் கூடாது" என்று ராம் மாதவ் நிபந்தனை விதித்திருக்கிறார்.


2007ஆம் ஆண்டு மே 18 அன்று ஹைதராபாத் பழைய நகரப் பகுதியிலுள்ள மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் 9 பேர் மாண்டனர். குண்டு வெடிப்பு என்றால் உடனேயே கைது செய்யப் படுவதற்கு முஸ்லிம்களுக்கா பஞ்சம்? "மஸ்ஜிதில் குண்டு வைத்தவர்கள்" என்பதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், முஹம்மது கலீம், அப்துல் மஜீத் என்ற நால்வரைக் கைது செய்து வழக்கு ஜோடித்தது காவல்துறை. வழக்கு நடந்தது. காவல்துறையின்மீது காறித் துப்பாத குறையாக, "நால்வரும் அப்பாவிகள்" என நீதிபதி தீர்ப்பளித்து விடுவித்தார்.


அதற்கு முன்னரே, மக்கா மஸ்ஜித் வழக்கை ஸீபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடு முழுதும் கோரிக்கைக் குரல் உயர்ந்தது. மஸ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்திலும் தவ்ஹீது ஜமாஅத் போராட்டம் நடத்தியது. முதலாவது நாடகம் முடிவுக்கு வந்தது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு ஸீபீஐயிடம் ஒப்படைக்கப் பட்டது.
இப்போது, அந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஏற்கனவே கைதாகியுள்ள தேவேந்திர குப்தாவுக்கு அதே குண்டு வெடிப்பில் வர்ஷனேயும் பெர்ரியும் முழு ஒத்துழைப்பு நல்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஜூன் 21முதல் ஜுன் 25வரை வர்ஷ்னே, பெர்ரி மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய மூவர் மீதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர்.


இவ்விசாரணையின்போது மூவரும் தாங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள்தாம் என்பதை ஒப்புகொண்டதோடு, தாங்கள் கான்பூர், அயோத்தி, மற்றும் ஃபைஸாபாதில் தனியாகச் சந்தித்ததையும் வெளிபடுத்தியுள்ளனர். ஆயினும் வர்ஷ்னேவும் பெர்ரியும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புச் சதியில் தங்களிருவருக்கும் பங்கில்லை என்று மறுத்தனர்.
விடை காணமுடியாத வினாக்கள்:


"ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை ஏதும் நடக்கவில்லை" என்று ஸீபீஐ புலனாய்வுத்துறை மூலம் தொடர்ந்து அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது உண்மை; அந்த விசாரணையின் ஆவணங்கள் தங்கள் கைவசம் உள்ளன என IBN-CNN நிருபர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். இந்த முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஸீபீஐயின் 'விசாரணை முறை'யைப் பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன:


முதலாவதாக, குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி தேவேந்திர குப்தாவின் முன்னிலையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் காரர்களான வர்ஷ்னேயும் பெர்ரியும் விசாரணை செய்யப்பட்டது ஏன்?


தேவேந்திர குப்தாவிற்கு இவ்வருவரும் ஸிம் கார்டு மற்றும் தங்குமிடம் போன்ற இதர முக்கிய வசதிகள் ஏற்பாடு செய்தபோது, அவருடைய குற்றப் பின்னணி இவ்விருவருக்கும் தெரியாதா?


இந்தோரில் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்கள், மாலேகாவ் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸாத்வீ பிரக்யா தாகூரோடு தொடர்புடையவர்களா?
ஆர்.எஸ்.எஸ்ஸின் மடியில் கனமில்லை என்றால் அவர்களது உயர்மட்டத் தலைவர்களின் அவசரக் கூட்டங்கள் தில்லியிலும் இராஜஸ்தானிலும் நடைபெற வேண்டிய கட்டாயம் என்ன?


இந்துத்துவத் தீவிரவாதம் என்பதை மத்திய அரசு இந்நேரம் பார்த்து வெளிக்கொணர்வது, தம் தொண்டர்களைச் செயலிழக்கச் செய்யப்படும் உத்தி என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் இப்போதைய அச்சங் கலந்த குற்றச்சாட்டு. அதன் தொண்டர்கள் தீவிரவாதிகளோடு கலந்து களத்தில் நிற்பதைக் கண்ணாரக் கண்டு கொண்டே அந்த யதார்த்ததை அச்சம் எனும் முகமூடியைப் போட்டு மூடிக் கொள்ளப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.
கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுகின்ற சங்பரிவார், தீவிரவாதிகளுடனான இந்திரேஷ் குமாரின் தொடர்பை வெளியிட்ட ஐபிஎன்-ஸீஎன்என் தொலைக்காட்சி நிலையத்தைத் தாக்குவதற்காகத் தன் தொண்டர்களை இன்று அனுப்பி வைத்துத் தன் உண்மை முகத்தைச் சற்றே வெளிக்காட்டியுள்ளது.


எவ்வாறாயினும், தீவிரவாதப் பின்னணி உள்ளவர்களோடு எந்த மாதிரியான அணுக்கத்தைக் கடைப்பிடிப்பது? என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரம் எதிர் நோக்கும் தற்போதைய தலையாயக் கேள்வி.


நன்றி : இந்நேரம், ஐபிஎன

சத்தியமார்க்கம் .

Wednesday, July 7, 2010

கேள்விக்குறியாகும் பத்திரிகைகளின் நேர்மை!தாமதிக்கும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது வழக்காடு மன்றங்களில் வழக்கமாக ஒலிக்கும் பிரபலமான சொலவடை.

ஆனால், அனேக நிகழ்வுகளில் முஸ்லிம்களுக்கான நீதி தாமதப்படுத்தப்பட்டே வந்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் முஸ்லிம்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் ஏன் உலகம் முழுவதிலும் இதுதான் வழமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுமார் 300 ஈரானிய பயணிகளுடன் வானில் பறந்த பயணிகள் விமானத்தை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்ததை 22 வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாக தற்பொழுது அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழகத்திலும் கூட 13 ஆண்டுகளுக்கு முன் எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டு, 13 வருடங்களாக பிணையும் மறுக்கப்பட்ட குணங்குடி ஹனீபா சென்ற மாதம் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆக முஸ்லிம்களை கைது செய்து சிறையில் தள்ளுவதில் காட்டப்படும் வேகம், அவ்வழக்கை நடத்துவதிலோ, முறையான ஆதாரங்கள் இல்லையென்பதனை ஒப்புக் கொள்வதிலோ, அவர்களை விடுதலை செய்வதிலோ காட்டப்படுவதில்லை.

காவல்துறையினரின் இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களை தட்டிக் கேட்க வேண்டிய பத்திரிக்கையாளர்களின் செயல்பாடு அனைத்தையும் விட மோசமானதாக உள்ளது.

ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது, அது குறித்த முதற்கட்ட விசாரணை கூட முடிவு பெறாத நிலையில் காவல் துறையினரின் கற்பனையில் உதித்கும் இயக்கத்தோடு முடிச்சுப் போட்டு முழுக் கதையையும் எழுதி முடிவுரையையும் எமுதத் துணிந்து விடுகின்றனர்.

இவ்வாறு தான் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு மாற்றமான செய்தியோ, தீர்ப்போ வெளியானால், தான் வெளியிட்ட முந்தய செய்திக்கு மறுப்போ, வறுத்தமோ தெரிவிக்கவும் முன்வருவதில்லை.

"இந்துத்துவா' சார்பு பத்திரிக்கைகள் மட்டுமல்ல, 'த ஹிந்து' பத்திரிக்கையும் கூட இந்த நடைமுறையைத் தான் கடைப்பிடிக்கிறது.

பொதுவாக 'த ஹிந்து' பத்திரிக்கை குறித்து அவர்களுடைய நேர்மை குறித்து – 'அவர்கள் மரண அறிவிப்பு விளம்பரம் கொடுத்தால் கூட மரணச் சான்றிதழ் காட்டினால் தான் பிரசுரிப்பார்கள்' - என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அங்கும் சில காவியாடுகள் நுழைந்து விட்டன போலும்.

மாவீரன் ஹேமந்த் கர்கரேவின் தீவிர புலனாய்விற்குப் பின்னர், நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பின்னணியிலும் ஹிந்துத்துவ சக்திகள் செயல்படுவதை நாட்டு மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். அந்த வகையில் 2007 மே மாதம் நடைபெற்ற ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகி தற்சமயம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஆனால், 2007 அக்டோபர் 15 இல் வெளியான ஹிந்து பத்திரிக்கை 'இஸ்லாமிய தீவிரவாதத்தின் சவால்' என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியது. அதில் 'அஜ்மீரிலுள்ள ஹாஜா மொய்னுத்தீன் சிஸ்தி தர்ஹா தீவிரவாத தாக்குதலைப் போலவே ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் ஹர்க்கத் அல் ஜிஹாத் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
கடவுளின் படைப்பினங்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த பிரச்சாரம் மேற்கொண்ட துறவிகளின் மடங்களையே தகர்க்கத் துணிந்தவர்கள், மனித குலத்தையே வெறுப்பவர்கள் எத்துணை அபாயகரமானவர்கள். இத்தகைய கொடூர தாக்குதலை நடத்துபவர்கள் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முஹம்மது மற்றும் ஹக்கத் அல் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என விசாரணை அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்'.
ஒரு பத்திரிக்கையின் தலையங்கம் என்பது அப்பத்திரிக்கையின் தரத்தை நிறுவக்கூடியதாகும். இத்தலையங்கம் அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் சம்பவங்களுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணம் என அறுதியிட்டுக் கூறியுள்ளது.

விசாரணையின் நோக்கத்தை திசை திருப்பி விடும் பாசிச ஹிந்துத்துவ சக்திகளின் உத்தி. இதற்காகவே பயிற்சியளிக்கப்பட்ட பலரை பத்திரிக்கை உலகில் இந்துத்துவாவாதிகள் ஊடுருவ விட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் 'த ஹிந்து' பத்திரிக்கையின் தீவிரவாத சிறப்பு செய்தியாளர் திரு.ப்ரவீன் ஸ்வாமி.
இந்த பிரவீன் ஸ்வாமி தான், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கு 5 நாள் கழித்து 'மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் பின்னணியில்' என்று எழுதிய செய்திக் கட்டுரையில் இதற்கு முழு காரணமும் யார் என்று தீர்மானமாக முடிவெடுத்து உறுதியாக எழுதுகிறார்'" மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தெளிவாக நாட்டுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், பம்பாய் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னும், இந்திய நகரங்களை தாக்குவதென்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்பது தான்'.
மீண்டும் 2007 அக்டோபர் 14 ஆம் தேதிய நாளேட்டின் முதல் பக்கத்தில் 'அஜ்மீர் குண்டு வெடிப்பில் ஹர்க்கத் அல் ஜிஹாதின் பங்கு – புதிய தகவல்கள்' என்ற தலைப்பில் ஹுஜி அமைப்பைச் சேர்ந்த இரு பங்காளிகள் டெ;டனேட்டர்களை செல்போனுடன் இணைத்து அதனை மக்கா மஸ்ஜிதில் வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்' என்று எழுதினார்.

இவ்வாறு காவல் துறையின் ஊதுகுழலாக தனது கட்டுரைகளை எழுதுவது மட்டுமல்லாமல், ஆசிரியர் குழுவில் தனக்குள்ள செல்வாக்கினால் தலையங்கங்களை கூட தனது விருப்பத்திற்கிணங்க வெளியிட காரணமாகியுள்ளார்.

இன்று அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் சம்பவங்களின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற தீவிர ஹிந்துத்துவ அமைப்பும், ஆர்எஸ்எஸ் குண்டர்களும் சம்பந்தப்பட்டுள்ள உண்மை வெட்ட வெளிச்சமான பின்பு – 2007 தலையங்கம் மற்றும் செய்தி வெளியீட்டிற்காக 'தஹிந்து' மறுப்போ, வருத்தமோ தெரிவிக்க முன்வருமா?

பத்திரிக்கையின் தரத்தை கேள்விக்குறியாக்கிய பிரவின் ஸ்வாமியை ஓரம் கட்டுமா?

ஈரானிய பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை அமெரிக்கா தற்சமயம் ஒப்புக் கொண்டதும், அமெரிக்கா வருத்தம் தெரிவிக்க வேண்டும், நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறன்றது.

அதுபோல் ஹிந்துவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும், நஷ்ட ஈடு வழங்கவேண்டுமென நாமும் போராட ஆரம்பித்தால் தான் முஸ்லிம்களின் மீதான பத்திரிக்கை தீவிரவாதம் சற்று மட்டுப்படும்.