ஜுலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுடில்லியில் உள்ள "ஹெட்லைன்ஸ் டுடே" என்ற தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தின் எதிரில் சங்பரிவாரைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். சில நிமிடங்களில் பல ஆயிரம் தாதாக்கள் இணைந்ததைத் தொடர்ந்து ஆவேசமாக தாக்குதல் தொடங்கியது. முரட்டுத்தனமாக அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்புக் காவலர்கள் தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையை எதிர்பாத்திருந்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் காவல்துறைக்கும் முறையாக அறிவித்திருந்தனர். இப்படி பெருமளவில் தாக்குதல் நடத்த முயல்வார்கள் என எதிர்பார்க்காததால் காவல்துறையினரும் குறைந்தளவிலேயே வந்திருந்தனர். கலவரக்காரர்கள் அலுவலகம் அமைந்திருந்த தெருவில் ஏற்படுத்திய களேபரத்தின் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் அரண்டு,மிரண்டு ஓடவேண்டியதாயிற்று. பாதுகாப்பு துறையினர் லிப்ட்களை இயங்கவிடாமல் செய்துவிட்டதாலும்,காவல்துறையினர் தடுத்ததாலும் நான்காவது மாடியிலிருந்த தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தினுள் கலவரக்காரர்களால் நுழைய இயலவில்லை. இருப்பினும் முகப்பு அலுவலத்தின் கண்ணாடிக் கதவுகளை அடித்து நொறுக்கினர்.15 நிமிடத்திற்கு மேல் நடைப்பெற்ற இந்த அநாகரிகமான தாக்குதலுக்குப் பின் டெல்லி காவல்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு என்ன காரணம்?
காவிக்கூட்டத்திற்கும் அதன் தீவிரவாத அமைப்புகளுக்குமிடையே உள்ள கள்ள தொடர்பினை அந்தத் தொலைக்காட்சி சேனல் வெளிப்படுத்தியது. நாட்டின் உத்தமபுத்திரர்களாக, சாமியார்களாக கபட நாடகமாடிய கயவர்களின் போலி வேஷத்தைக் கலைத்து உண்மையை உலகிற்கு அறிவித்தது.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலையில் துவங்கி,தென்காசியில் வெள்ளோட்டம் பார்த்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வழியாக மலேகான் சென்று அஜ்மீரை அடைந்த, இந்து தீவிரவாத அமைப்புகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்த நல்ல காரியத்தை செய்ததே தொலைக்காட்சி நிறுவனம் செய்த பாவம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பினைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டியது தான் அது செய்த குற்றம்.
காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிளவு படுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை எட்டிப்பிடிக்க விழையும் எத்தர்களின் இரகசியக் கூட்டம். அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமார் பங்கேற்றுள்ள விடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. நியாய உணர்வு படைத்த பெருமக்களை இச்செய்திகள் அதிரவைத்துள்ளன. ஏனென்றால் இந்தரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். ஸின் சாதாரண தொண்டரல்ல;அதன் மூத்த தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர்.கஷ்மீரின் அமர்னாத் யாத்திரைக்கு இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நடைப்பெற்ற வன்செயல்களில் திரைமறைவு இயக்குநராக இருந்தவர் இவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் மத்திய செயற்குழுவில் முக்கிய உறுப்பினர். 2006ம் ஆண்டு வரை "சம்பார்க் பிரச்சாரக்".
முஸ்லிம்கள் கூடக்கூடிய இடங்களில் குண்டு வைத்து குழப்பம் விளைவிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்கான வெடிமருந்துப்பொருட்களைச் சேகரிக்கும் முறைகள் பற்றியும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பரப்பப்பட்டக் காட்சிகள் இந்தரேஷ் குமாருக்கும் சங்பரிவாரின் தீவிரவாத அமைப்பிற்குமுள்ள இணக்கத்தை உறுதி செய்துள்ளது.
நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க. வை தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் ஆற்றல் படைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
திடுக்கிட வைக்கும் மற்றொரு வெளிப்பாடு என்னவென்றால், பா.ஜ.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இக்கூட்டத்தில் பங்கேற்றதும் இக்கொலைக்காரக் கும்பலைச் சேர்ந்த டெல்லி மருத்துவர் ஒருவர் 2006ம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடைப்பெற்ற, விழா ஒன்றிற்கு வருகை தந்த இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அவர்களைக் கொலை செய்ய முயன்றதுமாகும். சரியான சந்தர்ப்பம் கிடைக்காதக் காரணத்தால், அது முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ள செய்தி ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ளது.
அதுமட்டுமல்ல, புனேயைச் சேர்ந்த இரசாயனத்துறைப் பேராசிரியர் ஒருவர் சங்பரிவார் அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளித்ததும், டெல்லியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஆர்.பி.சிங் என்பவர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்த ஆயுதங்கள் வாங்கியதும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் தங்களுக்கு இந்திய திருநாட்டின் அரசியல்சாசனத்தில் நம்பிக்கை இல்லை என்று கூடிப்பேசி விவாதித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன
நாட்டின் பல பகுதிகளிலும் நடந்து வரும் நிகழ்வுகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிச்சயமாகத் தீவிரவாத அமைப்பு தான் என்பதையும், அது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு தேசவிரோத இயக்கமே என்பதையும் நிரூபித்து வருகின்றன. இந்நிலையில் அந்த அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என ஏன் பிரகடனப்படுத்தவில்லை?. அதைத் தடை செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
இந்த ஒளி,ஒலிப்பதிவுகள் அடங்கிய இரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தன?.
மாலேகான் குண்டு வெடிப்பில் பிரகியா தாக்கூருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயானந்த பாண்டே பயன்படுத்திய "லாப்டாப்" கருவியிலிருந்து இவை எடுக்கப்பட்டுள்ளன. தடயவியல் வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்ட இப்பதிவுகள் நீதிமன்றத்தில் சாட்சிகளாக சமர்பிக்கப்பட உள்ளன. இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த செய்தியாளர் அஸ்கிஷ் கேத்தன். அவர் இச்செய்திகளை வெளியிடக் கூடாது என பல அதிகார மையங்களிலிருந்து பயமுறுத்தல்கள் வந்ததாகக் கூறுகிறார். அனைத்தையும் மீறி துணிவுடன் செயல்பட்ட அவருக்கு நம் பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்க வேண்டும்.
இதேபோன்று கோலாப்பூரில் "ஜி" தொலைக்காட்சி நிலையத்தை வன்செயல் கும்பலொன்று தாக்கியுள்ளது. காரணம் கர்நாடகா ரக்ஷனா வேதிகா இயக்கத்தின் தலைவர் செய்யது மன்சூர் அவர்கள் அங்கு வந்திருந்ததே காரணம்.
சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்தே தீரும். என்பது அருள்மறையின் அறிவுரை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். போலி சாமியார்களின் வேஷம் கலைந்து வருவதைப் போல், போலி காவிகளின் வேஷமும் விரைவில் கலைந்தே தீரும்.
இந்துத்துவ பயங்கரவாதமும் அதனை மறைக்கும் இந்திய ஊடகங்களும்,அரசியல், நீதித்துறை, காவல்துறை போன்றவை இவர்களுக்கு பல்லக்கு தூக்குவதையும், இதனால் ஒரு சமூகம் குற்றவாளியென தனிமைப்பட்ட்டு நிற்க வைத்திருப்பதையும் இந்துத்துவத்தின் பயங்கரவாத நிஜ முகம் உங்களுக்கு முழுவதுமாக தெரிய... இங்கே அழுத்தி காணலாம்.
மேலும் அறிய ...
2 comments:
அருமை நண்பரே! அப்படியே ஹேமந்த கார்கரேயை திட்டமிட்டு தூக்கிய விபரங்கள் இருந்தாலும் இணைக்கலாம்
வாங்க நிஜாம்.. உங்கள் கருத்துக்கு நன்றி. இந்துத்துவ பயங்கரவாதத்தின் நிஜ முகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவருகிறது. ஆனால் பொதுமக்கள் இன்னமும் முஸ்லிம்கள் தான் குண்டு வைத்துக்கொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டுள்ளனர். ஊடகங்களும் இவர்களின் முகத்திரையை கிழிப்பது போதுமானதாக இல்லை.
Post a Comment