Thursday, November 27, 2008

மும்பை தாக்குதலில் "மாலேகான்" ஹேமந்த் கொலை-- பலன் யாருக்கு?


மும்பை: மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மிகத் திறமையாக விசாரித்து வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே (54), நேற்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியாகி விட்டார். தாஜ்ம ஹால் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அடக்கும் முயற்சியில் போலீஸ் படை இறங்கியபோது, தலையில் ஹெல்மட், மார்பில் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடன் நேரடியாக களம் இறங்கினார் ஹேமந்த் கர்கரே. அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கர்கரேவின் பெயர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானது. அனைவருமே முஸ்லீம் தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, இதில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்தது கர்கரே தலைமையிலான ஏ.டி.எம். குழு.


அதன்பின்னர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் என அடுத்தடுத்து அதிரடியான கைதுகள் நடந்தன. மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களையும் ஏ.டி.எஸ். வெளியிட்டு வந்தது. நேற்று காலையில் கூட பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரை, போலீஸ் காவலில் அனுமதிக்க மும்பை கோர்ட் அனுமதிக்க மறுத்தது குறித்து கவலை தெரிவித்திருந்தார் கர்கரே. பிரக்யா சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும், விசாரணையும் விரைவாக நடக்கும் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இரவே அவரது மூச்சை நிறுத்தி விட்டனர் தீவிரவாதிகள்.
1982ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் கர்கரே. இந்திய அரசின் உளவுப் பிரிவான 'ரா' வில் முன்பு இருந்தவர். அப்போது ஆஸ்திரியாவில் 9 ஆண்டுகள் பணியாற்றினார். மிகவும் நேர்மையான, கட்டுப்பாடான, ஸ்ட்ரிக்ட்டான அதிகாரி என பெயரெடுத்தவர் கர்கரே. இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அவர் தனது ரா பணியை முடித்து விட்டு மகாராஷ்டிரா திரும்பினார். உடனடியாக அவரை மகாராஷ்டிர அரசு ஏ.டி.எஸ். தலைவராக நியமித்தது. இதைத் தொடர்ந்தே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. தானேவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கர்கரேதான் தீவிரமாக செயல்பட்டு துப்பு துலக்கினார். அதேபோல பான்வேல், வாஷி குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் கர்கரே தலைமையிலான டீம்தான் துப்பு துலக்கியது. ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்தான் கர்கரேவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது. தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், நாம் போலியான சாட்சியங்களை, ஆதாரங்களை உருவாக்கக் கூடாது. நமது கடமையை நாம் செய்வோம். நீதி்மன்றம் மற்றதை முடிவு செய்யட்டும் என்பாராம். கடைசியாக அவர் என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்தார். நேற்று அவர் அளித்த பேட்டியின்போது பிரக்யா சிங்கை துன்புறுத்தியதாக அத்வானி குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது, எங்கள் மீது புகார் கூறப்படும்போது அதைக் கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். ஆனால், சாத்வி பிரக்யா சிங் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை. சட்டவிதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம். கோர்ட் எப்போதெல்லாம் உத்தரவிடுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் குற்றவாளிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம். துன்புறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். கர்கரேவின் மரணம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நிச்சயம் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.
விஜய் சலஸ்கர்
அதேபோல 75 கிரிமினல்களை சுட்டு வீழ்த்தி என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்தவரான விஜய் சலேஸ்கரும் நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டார். மும்பையை நடுங்க வைத்த பல குற்றவாளிகளையும், கிரிமனல்களையும் போட்டுத் தள்ளியவர் சலேஸ்கர். சில காலம் அமைதியாக இருந்து வந்த இவரது காவல்துறை வாழ்க்கை சமீபத்தில் மீண்டும் சூடு பிடித்தது. சமீபத்தில்தான் குற்றப் பிரிவு, கடத்தல் தடுப்புப் பிரிவில் இவர் பணியில் சேர்ந்தார். அதேபோல கூடுதல் காவல்துறை ஆணையரான அசோக் காம்தேவும் நேற்று உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர காவல்துறையில் முக்கியமான அதிகாரிகளில் இவரும் ஒருவர். ஒரே நாளில் மூன்று முக்கியமான காவல்துறை அதிகாரிகளை பறி கொடுத்து விட்டு மகாராஷ்டிர அரசும், காவல்துறையும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.


News source: Thatstamil

Saturday, November 22, 2008

இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா கண்டனம்

இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா


புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 13:18 IST )

மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.


டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிரவின் சர்மா, மேலும் கூறியதாவது " பா.ஜனதா கட்சி இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு மீண்டும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது.முன்னர் அந்த கட்சி ராம ஜென்ம பூமி பிரச்சனையை கிளப்பி அரசியல் ஆதாயம் அடைந்தது.தற்போது மாலேகாவ் குண்டு வெடிப்பு மற்றும் அது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து தலைவர்களை பற்றிய உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது. பா.ஜனதா மற்றும் சங் பரிவார் ஆகிய அமைப்புகள் இந்துக்களை ஏதாவது ஒரு பிரச்சனையை முன்பவைத்து இந்துக்களை முட்டாளாக்கி வருவது எங்களை சோர்ந்து போகச் செய்துவிட்டது. இப்போது அவர்கள் மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு சட்ட உதவி அளிப்பதாக கூறி மக்களிடமிருந்து நிதி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.மாலேகாவ் குண்டு வெடிப்பையோ அல்லது இதர பயங்கரவாத செயல்களையோ அகில இந்திய இந்து மகாசபா ஆதரிக்கவில்லை.இதுவரை இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும் நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்று பா.ஜனதா, விஎச்பி, பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ் மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை கேளுங்கள்" என்றார்.இதனிடையே இந்து மகாசபாவின் இந்த குற்றச்சாற்று குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேதக்ரிடம் கேட்டபோது, " காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாற்றுகளை கூறியிருந்தால் நாங்கள் அதற்கு பதிலளித்திருப்போம்.இவர்களுக்கு ( இந்து மகா சபா ) பதிலளித்து என்ன பயன் ஏற்படப்போகிறது ? என்ன அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது ? " என பதிலளித்தார்.


இந்துத்துவ பயங்கரவாதிகளை இந்து சமூகமே அடையாளம் கண்டுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பா.ஜ.க வின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை இனிமேலும் அனுமதியோம். இந்துக்களை ஒன்றுப்படுத்த இஸ்லாமியர்களை விரோதியாக்கப் பார்க்கும் இந்த கேவலமான அனுகுமுறையையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். இந்து மகா சபை இதை உணர்ந்து அறிக்கை விட்டது மிகவும் பாராட்டுக்குரியது.

உதயன்

Friday, November 21, 2008

ஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்!

ஐ.பி!

* நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா?

* புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பின்னணியில் ஐயத்திற்கிடமாக ஏதும் இருக்கிறதா?

* முக்கிய அரசியல் தலைவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளையக் கூடிய சாத்தியம் நிலவுகிறதா?

* உள்நாட்டில் தீவிரவாதம்/குழப்பம் உருவாகக் கூடிய சாத்தியமுள்ள இடங்கள், சூழ்நிலைகள் யாவை?

ஆகியவை குறித்துத் தகவல்கள் சேகரிப்பது ஐபி என்று சுருக்கி அழைக்கப் படும் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ (Intelligence Bureau) ஏஜென்ஸியின் வெளிப்படையான நடவடிக்கைகளாகும்.
ஆனால், இந்திய உளவுத்துறைக்குத் தகவல் சேகரித்து அனுப்பும் நிறுவனமான இந்த இரண்டெழுத்து நினைத்தால் தனியொரு மனிதனுடைய வாழ்க்கையைத் தடம் புரள வைக்கலாம்; வளர்ந்து வரும் ஓர் அமைப்பு/கட்சியை இரண்டாக உடைக்கலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் ஆட்சியைக் கலைத்து விடலாம்; இல்லாத ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்து, அதுதான் இயல்பான உண்மை என்பதுபோல் மக்கள் மத்தியில் உலா விடலாம். இவற்றுள் எதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்வது யார் என்று வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது அத்துணை எளிதன்று.

இன்றைக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. அரசு 1990இல் கலைக்கப் பட்டதன் பின்னணியில் இருந்தது ஐபிதான். அனைத்து அரசு இயந்திரங்களையும் கையில் வைத்துக் கொண்டு அன்றைக்கு(ம்) இயக்கிக் கொண்டு முதல்வர் பதவியிலிருந்த கருணாநிதிக்கே அப்போது இந்த உண்மை தெரியாது!

அரசியல் கட்சிகள், அதீத வளர்ச்சியைப் பெறும் சமுதாய அமைப்புகள் அடிக்கடி உடைகின்ற செய்தியைப் படிக்கும்போது, தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றுதான் சாதாரண மக்கள் நினைப்பார்கள். ஆனால், அத்தனை கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியத்தை ஐபி செய்யும் இரகசியம் வெளியே யாருக்கும் தெரியாது. உயர் மட்டத் தலைவர்கள் காதில் ஊதப் படும் செய்திகளை உருவாக்குவது மட்டுமின்றி, 'ஆசிரியருக்குக் கடிதம்' எழுதுவதுவரை அத்தனை சேவை(!)களையும் செய்பவர்கள் ஐபியின் ஐப்பீஎஸ் ஆஃபிஸர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஐபி உருவாக்குவது போலிக் கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல; போலித் தீவிரவாதிகளையும்தான் என்பதே சான்றுகளால் நிறுவப் பட்ட இத்தலையங்கத்தின் கரு. அது, இறுதியில் சொல்லப் பட்டுள்ளது. ஐபி என்ற புலிவாலைப் பிடித்தவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் கேரளாவும் காஷ்மீரும் ...

"கஷ்மீரில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் மலையாளிகளும் அடக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசும் காவல்துறையும் கேரளத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காட்டு தர்பார், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்" எனப் பிரபல கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கப் பட்டவர்களாக காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நெருங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலாபம் அடைய இந்த என்கவுண்டரைப் பயன் படுத்திக் கொள்வதற்கு இடதுசாரிகளும் சங் பரிவாரமும் முயல்கின்றன. கஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காகச் சென்றவர்களுள் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குக் கூச்சப் படாத கொச்சியிலுள்ள கிரிமினல் குண்டர் குழுவில் இருந்த சிலரும் அடக்கம் என்பதே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல்களாகும். இதிலிருந்து தெளிவான திட்டத்துடன் பணம் கொடுத்து, ஏதோ ஓர் ஏஜன்ஸி குற்றப்பின்னணியுடைய மலையாளி இளைஞர்களைத் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காக உருவாக்குகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்த ஏஜன்ஸி, அரசின் ஐபியோ சங் பரிவார தனி அமைப்புகளோ காஷ்மீர் அமைப்புகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதுமுள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்தால் அதன் பலனை அடைந்து கொள்வது ஆர்.எஸ்.எஸ்ஸாகும். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதே இவர்களின் இலட்சியமாகும். இக்காரணத்தினாலேயே இச்சம்பவங்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக நான் அவர்களைச் சந்தேகிக்கிறேன்.

இந்தியாவில் ஐபியே நேரடியாகக் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. ஜாமிஆ சம்பவத்தில் காவல்துறையின் பொய்முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே?.

'ஃபாயிஸின் தாய் தேச விரோதியான மகனின் உடலைக்கூடப் பார்க்க மறுத்ததைப் பலரும் பெரிய தேசப்பற்றாக உயர்த்திக் காட்டுகின்றனர். பிறந்த ஊரில் இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ள எளிய தாயொருத்தி, நிர்பந்திக்கப் பட்டச் சூழலில் கூறிய வாசகங்களாகும் அவை. கஷ்டப்பட்டுப் பெற்ற எந்த ஒரு தாயும் தன் மகனைப் பற்றி மனப்பூர்வமாக இவ்விதம் கூறமாட்டாள்.

நேற்று வரை கிறிஸ்தவனாகவும் ரவுடியாகவும் வாழ்க்கை நடத்திய வர்கீஸ், திடீரென யாசிராக மாறி கஷ்மீரில் கொல்லப்பட்ட உடன், அதன் முழுப் பொறுப்பையும் இஸ்லாம் ஏற்றெடுக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. கொச்சியில் தம்மனம் ஷாஜி உட்பட எல்லா குண்டர்களும் கஷ்மீரில் என்றல்ல, எங்கு போய்க் கொல்லப்பட்டாலும் மக்களிடையே எவ்வித எதிர்ப்புகளும் உருவாகப் போவதில்லை.


கிரிமினல்களை மதம் மாற்றி, தீவிரவாதச் செயல்பாடுகளில் பங்கு கொள்ள வைத்து, ஒரு மதத்துக்குக் களங்கம் உண்டாக்குவதற்கானக் கூட்டுசதி வரை நடக்கலாம் என நான் சந்தேகப் படுகிறேன். காவல்துறையும் ஊடகங்களும் கூறுவது எதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. காவல்துறையும் ஊடகங்களும், "மஅதனி சிறையிலிருந்து வெளியானால் நாட்டில் கலவரம் உருவாகும்" என அச்சுறுத்தி வந்தனர். பின்னர் அது என்ன ஆனது?" என்று பாலசந்திரன் கேள்வி எழுப்பினார்.


"கஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட கேரள முஸ்லிம்களை, காஷ்மீருக்குக் கடத்திக் கொண்டு போய்ச் சேர்த்ததன் பின்னணியில் ஐபி செயல்பட்டுள்ளது" என்றும் "இது நாட்டில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி" என்றும் இந்திய தேசிய லீக்கின் அகில இந்தியத் தலைவர் பேரா. முஹம்மது சுலைமான் குற்றம் சாட்டியுள்ளார்.

"சிறிய கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்திச் சிறை வைப்பதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கிறது. போலித் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர். பின்னர், தாக்குதலில் 'முஸ்லிம் தீவிரவாதி'கள் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான தங்களின் பிரச்சாரங்கள் சரியானவைதாம் என்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே திணிப்பதற்காகக் காவல்துறையும் இராணுவமும் இணைந்து என்கவுண்டர் நாடகங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் மதசார்பின்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய உளவுத்துறைகூட, மக்களிடையே அச்சத்தையும் மனக் கலவரத்தையும் விதைத்து, நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றது. காஷ்மீருக்குக் கேரளத்திலிருந்து இளைஞர்களைக் கடத்தி, அங்கு வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஐபிதான் செயல்பட்டுள்ளது" எனக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கக் கேரளத்திற்கு வந்த பேரா. முஹம்மது சுலைமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட, காவல்துறையும் ஹிந்துத்துவ சக்திகளும் இணைந்து போலித் தீவிரவாதிகளை உருவாக்குகின்றன என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கதை-வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் என்பது நாடகம்/திரைப்படங்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல; அவை ஐபிக்கும் சொந்தமானவைதாம் என்பது வெள்ளிடை மலையாகி விட்டது.

டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் மற்றும் மத்திய உளவுத்துறையின் இன்டலிஜன்ஸ் பியூரோ (ஐபி) என்றழைக்கப் படும் நுண்பிரிவு ஆகியவற்றால், "இன்ஃபார்மர்" என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் உளவாளியாக நீண்ட காலம் புலிவாலைப் பிடித்த கதையாகச் செயல்பட்ட இர்ஷாத் அலி என்பவர் திகார் சிறையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியக் கடிதத்தில் இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்கள் அடங்கியுள்ளன.

காஷ்மீரில் இயங்கும் லஷ்கரே தொய்பாவில் சேர்ந்து கொள்வதற்கும் பாகிஸ்தான் எல்லையில் அதற்கான பயிற்சி மையத்தில் இணைவதற்கும் கட்டாயப் படுத்திய ஐபியின் கட்டளைகளுக்கு இணங்காததால் இர்ஷாத் அலி என்பவரும் அவரின் நண்பர் நவாப் கமர் என்பவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐபிக்கு உதவா விட்டால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் நீண்ட நாள்களாக ஐபியின் உளவாளிகளாகச் செயல்பட்ட அவ்விருவரும் சிறையில் தள்ளப் பட்டதற்கான காரணம், ஐபியின் சதிக்குத் தற்போது அவ்விருவரும் இணங்க மறுத்ததுதான் என அவர்களின் வழக்கறிஞரான சுஃப்யான் சித்தீக் கூறுகிறார்.

இர்ஷாதுக்கு ஐபியால் அன்பளிப்பு(!)ச் செய்யப் பட்ட 9873303646 என்ற மொபைலுக்கு ஐபியின் அலுவலகத் தொலைபேசியில் இருந்து 56 முறை ஓர் ஐபி அதிகாரி தொலைபேசியுள்ளதன் மூலம் இர்ஷாத் அலியும் கமரும் ஐபியின் இன்ஃபார்மர்களாகச் செயல் பட்டவர்கள்தாம் என்பதையும் சிபிஐ உறுதி செய்துள்ளது.

இரு இன்ஃபர்மர்களோடும் தொடர்பிலிருந்த ஐபி ஆஃபிஸர்கள்:
பெயர்
மொபைல்
சஞ்சீவ் யாதவ்
9810058002
லலித் மோகன்
9811980604
ஹர்தேவ் பூஷான்
9811980601
மாஜித் (எ) காலித்
9810702004
அஃப்தாப்
9810702004

தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுத் திகார் சிறையில் அடைத்துள்ளதாகவும் இதுவரை எவ்வித விசாரணையும் இன்றித் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும் இதனை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் பிரதமருக்கு இர்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.ஐ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், ஐபி அதிகாரி முஹம்மது காலித், டெல்லி ஸ்பெஷல் செல்லிலுள்ள லலித், பூஷண் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து இர்ஷாதையும் நவாப் கமரையும் கடத்திச் சென்றனர் என்பதைச் சான்றுகளுடன் ஸி.பி.ஐ வெளிக் கொண்டு வந்துள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் 'தீவிரவாதத் தாக்குதல்'களில் முஸ்லிம் 'தீவிரவாதிகள்' கொல்லப்படுவது எப்படி? என்பதைப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி தெளிவு படுத்தியுள்ளார். காவல்துறையின் முக்பிர்(உளவாளி)ஆகச் செயல்பட்ட தனது சொந்த அனுபவத்தை, திகார் சிறையின் 8ஆம் எண் வார்டிலிருந்து விவரிக்கும் இர்ஷாதின் கடித வரிகள்:

"இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் ஓரளவு அறிவுள்ள, தாடியும் தலைப்பாகையும் அணிந்த ஓர் உளவாளி முல்லாவை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் குடியமர்த்துவதே ஐபியின் முதல் நடவடிக்கையாகும். பெரும்பாலும் பள்ளிவாசலின் அண்மையில் உள்ள வாடகைக் கட்டிடங்களிலோ பள்ளிவாசலிலேயோ உளவாளியின் வசிப்பிடம் அமையும். உறுதியான இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணுவதும் வசீகரிக்கும் படியான அவரது பழக்கவழக்கங்களும் நாட்கள் செல்லச் செல்ல இளைஞர்களை இவரோடு நெருங்க வைக்கும். அவர்களுள் உறுதியானவரும் மிகுந்த நம்பிக்கையாளருமான இளைஞர்களையே முல்லா குறி வைப்பார்.

தம்மிடம் நெருங்கிப் பழகும் இளைஞர்களிடம், "இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமைக்கு ஜிஹாத் மட்டுமே ஒரே தீர்வு" என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வெறியூட்டுவார். தன்னோடு தொடர்ந்த தொடர்பிலிருப்பவர்களுள் நம்பிக்கையானர்வகளிடம், தான் ஒரு லஷ்கரே தொய்பா கமாண்டர் என்று மெதுவாக உளவாளி முல்லா அறிமுகம் செய்து கொள்வார்.

ஐபி சொல்லிக் கொடுத்தபடி அவர்களுக்குச் சிறிய அளவிலான ஆயுதப் பயிற்சியும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் கற்றுக் கொடுப்பார். அதற்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களையும் உபகரணங்களையும் ஐபியே ஏற்பாடு செய்யும். அதன் பின்னர், யாராவது ஒருவரை அல்லது கோயில் போன்ற பொது இடத்தை இலக்காக்கித் தாக்குவதற்கான திட்டத்தை ஐபியின் உத்தரவுப்படி ஐபி உளவாளி முல்லா தயாராக்குவார்.

முன்னரே தீர்மானித்தபடி சம்பவ இடத்திற்கு முல்லா மூலம் ஐபி வழங்கிய ஆயுதங்களுடன் வரும் இளைஞர்களை, ஐபி உளவாளி முல்லா ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைவாகக் காத்திருக்கும் காவல்துறை, ஐபியின் திட்டப்படி உருவாக்கப் பட்ட இளைஞர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும்; அல்லது தாக்குதலில் தீர்த்துக் கட்டும். இதற்குப் பின்னணியில் செயல்பட்ட முல்லாவைக் குறித்து, அதன் பின்னர் எவ்வித விவரங்களும் வெளியாவதில்லை" என இர்ஷாத் அலி தனது கடிதத்தில் கூறுகிறார்.


'ஆபரேஷன் முல்லா' மூலம் கைது செய்யப்படும் இளைஞர்களை மறைமுகமாக வைக்க, டெல்லி காவல்துறைக்கு விசாலமான 'ஃபாம் ஹவுஸ்கள்' உண்டு. மனித உரிமை கமிஷன்கள் எதுவும் அந்தப் பக்கம் தலை காட்ட முடியாது. பொய் என்கவுண்டர்களில் கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பாதுகாப்பதும் அங்குத்தான். மாதக்கணக்கில் சில 'கைதிகள்' அங்குக் காக்க வைக்கப் பட்டு, தேவைப்படும் வேளைகளில் கொலை செய்யப் படுவர். பின்னர் மீண்டும் ஒரு என்கவுண்டர் நாடகம் மூலம் அவர்களது உடல்கள் மீண்டும் அவ்விடத்திற்கே கொண்டு வரப்படும். இவ்வாறு கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கக் காவல்துறையோ ஊடகங்களோ முயல மாட்டார்கள். அவர்களின் தாய், தந்தையரோ, தங்களுக்கே தெரியாமல் திடீர்த் 'தீவிரவாதி' ஆகிபோன மகனின் உடலைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள்.

'முஸ்லிம் தீவிரவாத'த்தைக் குறித்தத் தங்களின் பிரச்சாரம் சரிதான் என்பதை நிறுவுவதற்குக் காவல்துறை செய்து கொண்டிருக்கும் சதிகளில் தங்களுக்கும் பங்குண்டு என்பதால் இவ்விவரங்களை வெளி உலகத்திற்குத் தெரிவிப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்ததுதான் இக்கடிதம் எழுதுவதற்கான காரணம் எனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இர்ஷாத் அலி குறிப்பிட்டுள்ளார்.

"நமது நாட்டின் பாதுகாப்பு ஏஜன்ஸிகள் நாட்டைப் பதுகாப்பதற்கு மாறாக, மக்களின் மனங்களில் கலவரத்தையும் அச்சத்தையும் விதைத்து, குழப்பத்தையே உருவாக்குகின்றன. தீயைக் கொண்டு தீயை அணைக்க இயலாது. தீயை அணைப்பதற்குத் தேவை தண்ணீர்தான். ஆனால், நமது பாதுகாப்பு ஏஜன்ஸிகள், பெட்ரோல் ஊற்றித் தீயை அணைக்க முயல்கின்றன" - எனக் குறிப்பிட்டிருப்பதோடு, தங்களின் விஷயத்தில் தலையிட்டு, நியாயமான விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் எனப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி கோரிக்கை வைத்துள்ளார்.

***
புலி வாலைப் பிடித்த கதையாக, உருவாக்கப் படும் உளவாளிகளால் ஒரு காலகட்டத்துக்குமேல் அதிகப் பயனேதுமில்லை என்று அறிய வரும்பொழுதோ தாங்கள் செய்யும் சட்டவிரோதத் செயல்கள் உளவாளி இன்ஃபார்மர்கள் வழியாக வெளியாக வாய்ப்புள்ளது எனத் தெரிய வரும்போதோ உளவாளிகள் காவல்துறையினால் 'தீவிரவாதிகளாக' மாற்றப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்படுவர்; அல்லது சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் படுவர் என்பதற்கு அண்மையில் கஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஃப்சல் குருவும் திகார் சிறையிலிருந்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள இர்ஷாத் அலியும் அவரது கூட்டாளியும் மிகச் சிறந்த உதாரணங்களாவர்.

தென்காசி, நான்டட், கான்பூர், மாலேகோன், கண்ணூர் என "தேசப்பற்றாளர்கள் முகமூடி" அணிந்து உல்லாசமாக உலாவந்த இந்துத் தீவிரவாதிகளின் பொய் முகங்களும் இந்துத் தீவிரவாதமும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்.....
நாட்டில் தீவிரவாதமாம்; காரணம் முஸ்லிம் தீவிரவாதிகளாம்!அசத்துகிறது ஐபி!
ஜெய் ஹிந்த்!

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

Saturday, November 15, 2008

'சிமி' யை ஒழித்துக் கட்டவே மாலேகாவ் குண்டு வெடிப்பு

பெங்களூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 11:24 IST )

நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ' சிமி' இயக்கத்தை ஒழித்துக் கட்டவே, மாலேகாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக, கைது செய்யப்பட்ட ராணுவ உயரதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடத்தப்பட்ட 'நார்கோ அனலைஸிஸ் ' ( ஆழ்நிலை மயக்க நிலை விசாரணை ) சோதனையில் இதனை தெரிவித்துள்ள அவர், நாட்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் தமக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் மற்றும் துறவி தயானந்த பாண்டே ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே தாம் இதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாலேகாவ் குண்டுவெடிப்பை எப்படி நிகழ்த்துவது என்பதற்கான சதித்திட்டத்தை தாமும், ( புரோஹித்), பெண் சாமியார் பிரக்யா, தயானந்த் பாண்டே ஆகியோர் தயாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டில் நான்டட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் பாண்டேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புரோஹித் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அஜ்மீர் குண்டுவெடிப்பும் தயானந்த் பாண்டேவால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட சுமார் 500 பேருக்கு அகமதாபாத் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் புரோஹித் தெரிவித்ததாக காவல் துறையை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)


இந்துத்துவ பயங்கரவாதம் என்னும் நச்சு நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி, தற்போது ராணுவத்திலும் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடியாதகவே இருக்கப்போகிறது என்பது கவலை தரும் விஷயம். இந்த மாதிரியான பயங்கரவாத கும்பல்களை பாதுகாத்து அரவணைக்கத் துடிக்கும் பால் தக்கரே போன்ற தீவிரவாதிகளை தடுக்க முனையாமல் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் தெரிகிறது. 'சுரனையற்ற இந்தியா' என்று கட்டுரை எழுதிய பாசிஷ்டுகள் இப்பொது என்ன செய்கிறார்கள்.? தெகல்கா, குஜராத் இன கலவரத்தைத் தோலுரித்துக் காட்டியும் இந்தியாவில் எவ்வித சலனமுமில்லை, குண்டு வெடித்தவர்கள் இந்துதுவா அமைப்பினர் என்ற போதும் நாட்டில் பெரியளவு எதிர்ப்புமில்லை எனும் போது, நிச்சயமாக தெரிகிறது இது 'சுரனையற்ற இந்தியா'.

"சிமி" அமைப்பினைச் சார்ந்தவர்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்றால் அந்த அமைப்பினர் எத்தனைப் பேர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்?

"சிமி" தடைச் செய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் போது எப்படி செயல்படுகிறது.? இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது,?

மும்பை குண்டுவெடிப்பையும், கோவை குண்டுவெடிப்பையும் தவிர எந்த குண்டு வெடிப்புகளையும் யார் செய்தார்கள்? என்ன விசாரணை எதுவரை நடந்து வருகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கைது செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா ? தடா, பொடா சட்டங்கள் இருந்த காலத்திலும் பயங்கரவாத்தை தடுக்க முடியவில்லை எனும் போது குற்றவாளிகள் ஆட்சி,அதிகாரங்களில் தான் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது. இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளையும் அதன் விசாரணை விவரங்களையும் வெள்ளை அறிவிக்கையாக மத்திய அரசு வெளியிட்டால் பல மர்ம முடிச்சுக்கள் அவிழும். இல்லையென்றால் வழக்கம் போல் முஸ்லிம்களை குற்றம் சுமத்தி இந்துத்துவாவையும் அதன் பயங்கரவாத்தையும் வளர்க்கும் வேலையைத்தான் அரசு செய்யும்.

Tuesday, November 11, 2008

'குண்டு வெடிச்சுருச்சா?.. பழியை, முஸ்லீம் மேல போடு!'

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு வியூகம் என்பது இரட்டைப் போக்காகவும், நேர்மையற்றதாகவும் இருக்கிறது. விவேகமற்ற முறையில், மதத்தின் மீது அது தொடுக்கும் தாக்குதல், பயங்கரவாதத்தின் வேர்களையும் அதன் போக்கையும் பலப்படுத்துவதற்கு மட்டுமே உதவும்முஸ்லீம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, பாரதீய ஜனதா கட்சி பலத்த குரலில் ஆதாரமற்று எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளுக்கு உடன்பட்டுப்போகும் மொன்னைத்தனத்தையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைக்கொண்டு வருகிறது. 'பயங்கரவாதத்தை வேரறுக்கும் திராணியற்றவர், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். அந்தப்பதவிக்கு பொருத்தமற்றவர். பதவியிலிருந்து அவர் விலகவேண்டும்' என்று 'காவித்தனமாய்' அவை வைக்கும் கோரிக்கைகளால் உசுப்பேற்றப்படும் பாட்டீல், தனது பதவியின் புஜ பலத்தைக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி, குயுக்தியான நடவடிக்கைளுக்கு மூலகர்த்தா ஆகியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்றிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவரான வீரப்பமொய்லியோ, இன்னும் ஒருபடி மேலேபோய், பாரதீய ஜனதா கட்சியின் ஊதுகுழலாகவே மாறிவிட்டிருக்கிறார். 'பயங்கரவாத ஒழிப்புச்சட்டம் கடுமையாக, புதிதாகக் கொண்டு வரப்பட வேண்டும்' என்று, அவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில், திருவாய் மலர்ந்து அரசுக்கு பரிந்துரை செய்கிறார். அந்தப்பரிந்துரை பாரதிய ஜனதா கட்சியின் முக்கியக் கோ¡¢க்கைகளில் ஒன்றான கொடிய 'பொடா' சட்டத்தைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதை ஒத்தே இருக்கிறது. போலீஸ் சொல்லும் செய்தியை அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்கா¢த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவரது பா¢ந்துரை வலியுறுத்துவதாக இருக்கிறது.இதனடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பயங்கரவாத ஒழிப்பு நட வடிக்கைகள் அமைந்து வருகின்றன என்பது, தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.


தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 13 ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின், இஸ்லாமிய சமூகத்துக்கு நெருக்கடியும், வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையும் அதிகா¢த்து வருகிறது. அதன் ஒருபடிதான், செப்டம்பர் 19ம் தேதியின் பட்டப்பகலில், டெல்லி ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் முன்பு, அரசு தன் கோரமுகத்தைக் காட்டியதும்!டெல்லி போலீஸின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப்பி¡¢வு, ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் குடியிருந்த மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித் ஆகிய இரு இளைஞர்களை பயங்கரவாதிகளாகக் குற்றம்சாட்டி சுட்டுக்கொன்றது. மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக வும் இரண்டுபேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ்தரப்பில் தொ¢விக்கப்பட்டது.


'இவர்கள்தான் நாட்டில் நடந்த, சமீபத்திய அனைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் திட்டமிட்டு நடத்தியவர்கள்' என்று அது வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் 'தனிப்பட்ட கவனத்தின்' போ¢ல் நடந்தேறியதாகச் சொல்லப்படுகிறது.இரு இளைஞர்களைச் சுட்டுக்கொன்ற இந்தச்சம்பவம், ஊழல் மன்னனும் பெரும் பிளாக் மெய்லருமான ரஜ்பீர் சிங்கை, அன்ஸல் பிளாஸாவில் வைத்து, கொடூரமாகச் சிதைத்துக் கொன்ற என்கவுண்டரை போலவே இருக்கிறது.இதற்குமுன்பு, 35 பேரை என்கவுண்டா¢ல் 'போட்டு'த் தள்ளியதில் புகழ்பெற்ற 'இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவை, இந்த இருஇளைஞர்கள் சுட்டுக்கொன்றதால், அதன்போ¢ல் நடத்தப்பட்ட என்கவுண்டர் தாக்குதல் சம்பவம் இது' என்று போலீஸ¥ம், அரசும் ஒரேகுரலில் பொய்யாய்ப் புனைந் துரைக்கின்றன. 'நல்லதொரு போலீஸ் அதிகா¡¢யையே சுட்டுக்கொன்றுவிட்டார்கள்' என்று அரசின் நடவடிக்கைளுக்கு, பா¢தாபத்தை சம்பாதித்துக்கொள்ள முயன்ற அவர்களது புழுகுமூட்டை யுக்தி, தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகாரவர்க்கம் வெளியிடும் அறிக்கைகள், முற்றிலும் கட்டுக்கதைகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.


அதிகாரவர்க்கம் வெளியிட்டிருக்கும் இன்னொரு கேலிக்கூத்து அறிக்கையைப் பார்ப்போம். வாரணாசி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் சமீபத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. அதில் பாவப்பட்ட... ஒன்றுமறியாத அப்பாவி மக்களே பெரும்பாலும் உயி¡¢ழந்தனர். இந்தச்சம்பவங்களை நடத்தியது, இந்தியன் முஜாஹிதீனின் முக்கியத்தலைவரான அதீப் அமீன் என்கிறது, டெல்லி போலீஸ். ஆனால் மும்பை போலீஸோ, அதற்கு முற்றிலும் மாறாக... அனைத்துச் சம்பவங்களும் - டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் உட்பட - நான்குபேருடன் கைது செய்யப்பட்டுள்ள மொகம்மத் சாதிக் ஷேக்கின் திட்டமிடலின்படியே நடந்தேறியது என்று சாதிக்கிறது.இந்த முரணான அறிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பேரும் தவறாகப் பிடிக்கப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ எனும் ஐயத்தை உருவாக்கியுள்ளது. ஜூலை மாதம் மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதன் அடிப்படையில்தான் என்று எண்ணவும் தோன்றுகிறது.

டெல்லி போலீஸ் சொல்லும் அறிக்கைகளுக்கு எதிரானவையாகவே உள்ளன, வாரணாசி, ஜெய்ப்பூர், அஹமதாபாத் போலீஸ் சொல்லும் தகவல்கள். அந்தச்சம்பவங்களை முறையே வலியல்லாஹ், ஷாபாஜ் ஹ¥சைன், அபு பஷீர் மற்றும் அப்துல் சுபான் குரேஷி என்ற தவ்கீர் ஆகியோர் நடத்தியதாகச் சொல்கின்றன. இதில் தவ்கீர், மத்திய புலானாய்வுத்துறையினரால் 'சதித் திட்டங்களை தீட்டியவர்' என்ற வர்ணிப்புடன் பிரபல்யமாக்கப்பட்டவர்.இதில் அதீப் அமீனுக்கு, பஷீர் என்று இன்னொரு பெயரும் இருப்பதாக போலீஸ் திட்டமிட்டுச் சொல்லி வருகிறது. இதனை அதீப் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் அப்படி ஒருபெயர் அவருக்கு இருந்ததில்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர். இங்கு அதீப்பின் அடையாளத்துடன் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட இல்லாத நபரை அரங்கேற்றும் போலீஸின் அரக்கத் தன்மை காணக் கிடைக்கின்றது.


டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன்பு, அஜாம்கா¡¢லுள்ள யூனியன் பேங்க்கிலிருந்து அதீப் அமீன் 3 கோடி ரூபாயை எடுத்தாகவும், அதைக்கொண்டுதான் நிழல் நடவடிக்கைகளையும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியதாகவும் காட்சிப்படுத்துகிறது. ஆனால் ஊடகங்களின் விசாரணை, போலீஸின் பொய்யுரைகளை தண்டவாளத்தில் ஏற்றுகின்றன. ஜூலை மாதத்திலிருந்து செயல்படுத்தப்படாமலிருக்கும் அதீப் அமீனின் வங்கிக்கணக்கில் இருப்பதோ வெறுமனே 1,400 ரூபாய் தானாம்!ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் சமீபத்தில் குடிவந்த மொகம்மத் அதீப் அமீன், அதற்கு முறையாக பத்திரம் பதிவு செய்திருக்கிறார். அதை போலீஸ் ஆய்வு செய்திருக்கிறது. போலீஸால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் அவர்கள், உண்மையிலேயே பயங்கர வாதிகளாக இருந்தால், வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் செயல்படுவார்களா என்ன?ஜாமியா நகர் என்கவுண்டர் சம்பவத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே அந்தப்பகுதி, போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நடஜூலை 26 ம் தேதி அஹமதாபாத் குண்டு வெடிப்புச்சம்பவத்தில், குண்மாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பே 'குண்டுவெடிப்புச் சம்பவங்களின் மூளை இவர்கள்' என்று, திட்டமிட்டு என்கவுண்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. டுகளை வைத்ததாக போலீ ஸால் குற்றம்சாட்டப்பட்டு, அதீப் அமீனின் கூட்டாளியாக வர்ணிக்கப்படும் சாகிப் நிஸார், ஜூலை 22 ம் தேதியிலிருந்து 28 ம் தேதிவரை டெல்லியில் எம்பிஏ தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.

என்கவுண்டர் சம்பவத்தை நோ¢ல்கண்ட பல சாட்சிகள், போலீஸ் வெளியிட்டிருக்கும் பொய் அறிக்கைகளைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். தி¡¢க்கப்பட்டுள்ள அந்தஅறிக்கையில், எதுவுமே உண்மையில்லை என்று அப்பட்டமாகியிருக்கிறது.சம்பவம் நடந்த அன்று, அதீப் அமீன் குடியிருந்த ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் போலீஸ் நுழைகிறது. நான்காவது தளத்திலிருக்கும் அந்தவீட்டிலிருந்து இரண்டுபேரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வருகிறது. கிட்டத்தட்ட நூறுபடிகளுக்கும் மேலான அந்த குறுகலான நடைபாதையில் 'தரதர'வென்று இழுபட்டு வந்த அவர்கள், தரைப்பகுதியில் குவிந்திருக்கும் போலீஸ் முன்னால் நிறுத்தப்படுகின்றனர்.

பெரும் ஆயுதப்படையுடன் போலீஸ் அங்கே குவிக்கப்பட்டிருந்தது. அதில் முக்கிய நபராக, 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவும் இருக்கிறார்.போலீஸ் காட்டிய வலுப்பிரயோகத்தில் இழுபட்டபோது நைந்து போயிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் நிற்கவே திராணியற்றவர்களாக இருந்தார்கள். அந்தப்பகுதியையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போலீஸ், நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இருவரையும் மேலும் நையப்புடைத்துத் தள்ளியது. போலீஸ் கும்பல் சுற்றிநின்றுகொண்டு 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் தலைமையில் அவர்களை வெளுத்துக் கட்டும்போது, போலீஸ்காரன் ஒருவனின் துப்பாக்கி ஒன்று, கூட்டத்தில் முழங்குகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள் 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவைத் தாக்குகிறது. ஷர்மா தரையில் வீழ்கிறார்.அதன்பின்பே கண்மூடித்தனமாக அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் எதிர்ப்பு காட்ட முடியாத point - blank range ல் சுட்டிக் கொல்லப்படுகின்றனர்.

சவக்குழியில் வைக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சாகிப் நிஸா¡¢ன் புகைப்படத்தில் தோளிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்த பெருந்துவாரங்கள் காணப்படுகின்றன. தலையின் முன்பகுதியில் குண்டுதுளைத்த நான்கு ஓட்டைகள் இருந்தன. தலையில் ஒருகுண்டு புகுந்தாலே உயிர்போய்விடும் என்று அறிவியலே சொல்லும்போது, அடுத்தடுத்து குண்டுகளை தலையில் செலுத்தியிருப்பது, போலீஸின் கடைந்தெடுத்தக் கோழைத்தனத்தையும் காட்டு மிராண்டித்தனத்தையும் ஒருசேர நமக்கு புலப்படுத்துகிறது.


'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை, ஹெட் லைன்ஸ் நியூஸ் சானலுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அறிக்கையை அந்த சானல் வெளியிட்டிருக்கிறது. அதில், நேருக்கு நேரான என்கவுண்டர் மோதலில் துப்பாக்கியால் அவர் சுடப்படவில்லை என்றும் அவருக்கு பின்புறத்திலிருந்து வந்து துளைத்த குண்டுகள், பக்கவாட்டில் வெளியேறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ¥ம், அரசும் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் சரமா¡¢யாகச் சுட்டதில் அவர் உயி¡¢ழந்ததாக பா¢தாபக் கதையை உருவாக்கி உலவவிட்டிருந்தது. அதுபோல அவர் மீது இளைஞர்கள் இருவரும் பலமுறை சுட்டதில் வயிற்றிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்ததாகச் சொல்லப்பட்ட இட்டுக்கட்டலும் பொய்யாகியுள்ளது.


இந்தச்சம்பவத்தில் உயி¡¢ழந்த மோகன் சந்த் ஷர்மா உள்ளிட்ட மூவா¢ன் சடலங்களும் தடய அறிவி யல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதுபோலவே பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள்ளி ருந்த ஐந்துபோ¢ல் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுவது, மிகப்பொ¢ய புனைக்கதை! ஏனென்றால், தப்பி ஓடிச்செல்லுமளவுக்கு அங்கே விசாலமான வழி ஏதும் இல்லை. உள்ளே செல் வதற்கும் வெளியே வருவதற்கும் மிகக் குறுகலான ஒரே பாதைதான் உள்ளது.நேர்மைக்குப் புறம்பான போலீஸின் செயல்பாடுகளும், அதன் அறிக்கைகளும், மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் கடப்பாடற்ற நடவடிக்கைகளும் நீசத்தனத்துடன் இருப்பதால், அரசையும் நம்பும்படியாக இல்லை. பாமர மக்கள் கூட அதை ஏற்கஇயலாது, வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையை உணர்ந்துள்ளனர். நடந்து முடிந்துள்ள கொடூரத்தை, கண்ணியமற்றச் செயல்களை சுதந்திரமான... நேர்மையான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தி, 'போலீஸ் சொல்வது சா¢தானா... அல்லது பொய்யா...' என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

சமீபத்திய சம்பவங்களால் ஒன்றுபட்டிருக்கும் இந்துத்துவ 'பயங்கரவாதி'களான பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகள், தங்களை சுத்த சுயங்களாக்கிக் கொண்டுள்ளதாக வேடம் போடுகின்றன. சிறுபான்மையினத்தவருக்கு எதிரான வன்முறையையும் பயங்கரவாதத்தையும் அவைதான் அடையாளத்துடனேயே நடத்துகின்றன. அதற்கு போலீஸ¥ம் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களும் குடைபிடிப்பதுதான் கொடுமை!


இந்த இந்துத்துவ பயங்கரவாதிகள்தான், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அசுர அட்டகாசத்தை, கொலைவெறியை, தீ வைப்பை, கற்பழிப்பை, சொத்துகள் சூறையாடலை ஒ¡¢சாவிலும், கர்நாடகத்திலும், மத்திய பிரதேசத் திலும், கேரளத்திலும் நடத்தியவை. அரசுகளின் ஒத்துழைப்பும் சதித் திட்டமுமின்றி இவற்றைச் செய்திருக்கவே முடியாது. பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாட்டில், இந்துக்கள் அல்லாத அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்ததை ஒத்துக்கொண்டிருக்கும் அவர்களை, இந்துத்துவ பயங்கரவாதிகள் என்ற வார்த்தைக் கொண்டு யாரும் விளிப்பதே இல்லை. மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்தியவர்களை, தமிழ்நாட்டில் தென்காசியில் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களை, உத்தரபிரதேச மாநிலம் கான்பூ¡¢ல் குண்டுகளை விதைத்த காவிக்கும் பலை இந்துத்துவ பயங்கரவாதிகள் என்று அழைக்காமல், வேறு எப்படி அழைக்கமுடியும்?

சிறுபான்மை இனத்துக்கு எதிரானக் கொடூரங்களில் ஈடுபடும் பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அடையாளங்கண்டு கைது செய்யப்படும் சம்பவங்கள், எப்போதாவது அத்திப்பூத்தாற் போல நடந்து விடுகிறது. ஆனால் அவர்கள் தண்டனைக்குள்ளாவது, இந்தியாவில் மிகச் சொற்பமாகவே நடந்துள்ளது.அதேவேளையில், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று மதச் சிறுபான்மையினரை, சந்தேகத்தின் அடிப்படையில் கருணையற்ற முறையில் பிடித்துச்சென்று மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும், சட்ட விரோதமாகத் தண்டிப்பதும், சித்ரவதைக்கு உள்ளாக்குவதும், பல நேரங்களில் விசார ணையின்றி தண்டனை வழங்குவதும், கொல்லப்பட்டு விடுவதும் கூட வாடிக்கையாக உள்ளது.


பயங்கரவாதம் குறித்த சொல்லாடல் வெளிப்படும்போதெல்லாம், அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் இரட்டைத்தன்மை முறையை கையாளுகின்றனர். பயங்கரவாதம் என்ற சொல், சிறுபான்மையினருக்கு எதிராகவே பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான பார்வையையே அது கொண்டிருக்கிறது. நீண்டகாலமாகவே இந்தப்பார்வை இருந்து வருகிறது. அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் அதைத் திரும்பத் திரும்ப பிரசாரம்செய்து, பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள் என்று அர்த்தம் கற்பித்து ஸ்திரப்படுத்திவிட்டது.அதைத் தெளிவுபடுத்துவதுபோல, கடந்த செப்டம்பர் 22 ம் தேதி, இந்திய ஊடகங்கள் அனைத்துமே பயங்கரவாதிகள் என்று 'கெப்•பியா' என்ற துணியால் அரேபியர்கள்போல முகம் மூடப்பட்ட மூன்று போ¢ன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அப்படி முகம் மூடி, துணி அணியச்சொல்லி அழைத்து வந்தது, டெல்லி போலீஸ். முகம் மறைக்கப்பட்ட மூவரும் பயங்கரவாதத்தை அரங்கேற்ற தேவையான பொருட்களை வாங்கி சேகா¢த்துத் தந்தவர்களாம். இந்த இடத்தில் பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள். முஸ்லீம்கள் என்றால், சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஒசாமா பின்லேடனின் சொல்லை இங்கே நிறைவேற்றுபவர்கள் என்ற சமன்பாட்டை நிறுவ அரசு முயலுகிறது. ஒரு அரசுநிறுவனத்தால் குறிப்பிட்ட சமூகத்தை, அதன் வளமையை, தொன்மையை சிதைக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை.


குண்டுவெடிப்பு சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தவுடன், சம்பவத்தை நோ¢ல் பார்த்த சாட்சியங்கள் சொல்லும் குறிப்பின்படி வரையப்பட்ட சிலபடங்கள் ஊடகங்களில் வெளியாகும். அவற்றின் கீழே அரபி வார்த்தையுடன் கூடிய ஒருபெயர் இருக்கும். அடுத்த சிலநாட்களில், அந்தப் பெயருக்கு¡¢யவர் கைது செய்யப்பட்டதாக செய்திவரும். இப்போது இடம்பெற்றிருக்கும் படத்திலிருப்பவர், 'கெப்•பியா' வோ... ஸ்கார்ப்போ... அல்லது பத்துரூபாய்க்கு விற்கும் பிளாட்பாரத்துண்டால் முகம் மூடியவராக இருப்பார். படத்தில் வரையப்பட்டவர் பிடிபட்டிருந்தால், அதை ¨தா¢யமாக... வெளிப்படையாக... 'அவர் தான், இவர்' என்று பகிரங்கப்படுத்தலாமே. புனைந்துரைக்கும் அரசு நிறுவனத்தால் அது ஒரு போதும் முடியாது. ஏனென்றால், படத்திலிருந்தவர் ஒருவராக இருப்பார். அவர் பெயா¢ல் பிடிக்கப் பட்டு வந்தவர் வேறு ஒருவராக இருப்பார். தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டிய முக்காட்டை, பிடித்துக்கொண்டுவந்த அப்பாவியின் மீது போலீஸ் போடுகிறது. அவ்வளவுதான்! ஏனென்றால், இந்திய அரசு சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் பாதுகாக்கத் தவறிவிட்டது. பெரும்பான்மைக் குழுக்களை காப்பதிலேயே அது கவனம்செலுத்தி வருகிறது. சிறுபான்மையினர் உ¡¢மை இழந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்ட அறிவு முகமையின் பெருந்தலைகள் உள்ளன.


இந்துத்துவ பயங்கரவாதச் சாயத்தை தங்கள் மீது ஊற்றிக் கொண்டிருக்கும் அவர்கள், முன்பெல்லாம் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற அந்த அமைப்புதான் இதைச் செய்தது ... அதைச் செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது அதிலிருந்து மாறி சுதேசிகளாகி விட்டனர். 'குண்டு வெடிச்சுருச்சா? ஏன் கவலைப்படுற? பழியைத்தூக்கி முஸ்லீம்க மேல போடு!' என்பதாக எல்லா குண்டு வெடிப்பு சம்பவங்களையும் இந்துத்துவ கண்ணாடி மூலம் பார்த்து, முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் என்பதும், வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள Delhi's Special Cell, Maharastra's Anti - Terrorism Squad, Special Task Forces, உள்ளிட்ட அமைப்புகள் அந்தந்த மாநிலத்தில் சகல அதிகாரங்களையும் படைத்ததாக இருக்கின்றன. அதனாலேயே ஊழலும், சட்டத்துக்கு புறம்பான குற்றங்களும், வரம்புமீறிய செயல்களும் செய்பவர்களாக இந்த அமைப்புகளில் பணிபு¡¢பவர்கள் இருக்கின்றனர். தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி பொதுமக்களின் சொத்து களையும், பொதுச் சொத்துகளையும் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதத்தை விளைவித்து உள்ளனர். அதுபோல மனிதஉ¡¢மை மீறல்களையும் நீதிக்குப்புறம்பான செயல்களையும் செய்துள்ள அவர்கள், அரசுப்பணத்தில் பெருமளவு சொத்துகளை வாங்கியும் குவித்துள்ளனர்.இந்த சம்பவங்களுக்குப் பின்பு, சிறுபான்மையின முஸ்லீம்களுக்கு எதிரான சமூக, பொருளாதாரத் தடைகள் அதிகா¢த்து வருகின்றன.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவத்துக்குப் பின்பு, தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணம் வசூலிக்க அந்தப்பகுதிக்கு அனுப்புவதில்லை. பிஸ்ஸா டெலிவா¢ செய்யும் பையன்கள் அந்தப்பகுதிக்குள் செல்லவே பயப்படுகின்றனர். அந்தளவுக்கு போலீஸ், பல்வேறு பயங்கர மலிவான கதைகளைப் பரப்பிவருகிறது.பொதுச் சமூகத்திலிருந்து பிளவுபடுத்தப்பட்டுள்ள ஜாமியா நகர்வாசிகளுக்கு, டெல்லி நகராட்சியின் அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! இது மேலும்மேலும் மன வேறுபாடுகளுக்கே வழிசெய்யும். குறைகளையும் நீதிக்குப்புறம்பானவற்றையும் சீர்படுத்திவிடவேண்டும். இல்லாவிட் டால், சமூக இணக்கம், சகிப்புத்தன்மை, மனித உ¡¢மைகளை இழந்தவர்களாகி, நாகா£கமான நாடு என்ற சொல்லிலிருந்து விலகி, வெகுதூரம் வந்துவிடுவோம்.அதற்கான விலையை, நம்மால் கொடுக்க முடியாது!

- எஸ். அர்ஷியா (arshiyaas@rediffmail.com)Thanks to www.keetru.com

Monday, November 10, 2008

ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!

இது குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்துத்துவ பயங்கரவாத சாமியாரிணி கும்பல் கைது செய்யப்படுவதற்கு முன் வெளியான கட்டுரை!


டெல்லி காவல்துறை குண்டுகள் வெடிக்கும் 'மர்மத்தை கண்டு பிடித்து' விட்டதால் நான் எனது சுய வாக்குமூலத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். சந்தேகப்படுவது இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை அல்ல என்றாலும் செழிப்பான ஜனநாயக அமைப்பிலிருந்து பிரிக்க முடியானதொரு அங்கம் அது. நமது உளவுத்துறை அமைப்புகளின் அஸ்திவாரம் சந்தேகப் படுவதில்தான் இருக்கிறது எனலாம். எனவே, யார் மேல் வேண்டுமானாலும் சந்தேகப்படும் உரிமை நிச்சயமாக நம் உளவுத் துறையினருக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சந்தேகப்படும் உரிமை சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இருப்பதையும் யாராலும் மறுக்கவியலாது. சமத்துவம் ஜனநாயகத்தின் அடையாளமல்லவா?


கேள்விகள் கேட்டு பதில் விளக்கங்கள் பெற வாய்ப்பில்லாத ஓர் அரசாங்க அறிக்கை வேதவாக்குப் போலக் கருதப்படும்போது என்னுள் இருக்கும் 'பத்திரிக்கையாளனுக்கு' எரிச்சல் ஏற்படுகிறது. தீர்மானமான முடிவுகளுக்கு வருவது ஊடகவியலாளர்களின் பணி அல்ல. ஒரு சமுதாய வட்டத்திற்குள் நிகழ்பனவற்றை அந்த வட்டத்திற்கு வெளியில் நின்று விருப்பு வெறுப்பின்றி ஊடகத்தில் பதிவுசெய்வதுதான் அவரது பணியாக இருக்க வேண்டும். ஒரு பத்திரிக்கையாளர் அந்த வட்டத்திற்குள் நுழைந்தால் அவரும் அந்த நிகழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விடுகிறார். ஒரு தரப்பினருடன் நெருக்கமாக இருப்பது சார்பு நிலையைத் தோற்றுவிக்கும். சார்பு நிலை மறுதரப்பினரின் நியாயங்களைப் பார்க்க முடியாத குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஓர் உண்மையான பத்திரிக்கையாளர் இது போன்றதொரு கருத்துக் குருடராக இருக்கவே கூடாது.


மக்களிடையே பொதுவான அபிப்ராயங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதானால், அவற்றிடையே 'கருத்துக் குருட்டுத் தன்மை' நிலவுவது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்தியறிக்கையும் பொது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நாட்டின் அரசியலமைப்பில் 'நான்காம் தூண்' என்று கருதப்படும் ஊடகங்கள், ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் 'நான்காம் தவறு' என்று சொல்லத்தக்க விதத்திலேயே செய்திகளை வெளியிடுகின்றன. குண்டு வெடித்தது மக்கா மசூதியாக இருந்தாலும், தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்ட மாலேகானாக இருந்தாலும், சந்தேக முள் தானாகவே சாய்வது முஸ்லிம்கள் பக்கம் தான். ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் அலைக்கழிக்கப்படுவதும் முஸ்லிம்கள்தான். ஒரு புறம் குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயங்கரவாதிகள், மற்றொரு புறம் உளவுத் துறை அமைப்புகள் என இருபுறமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலையில் முஸ்லிம்கள். இந்த இரு தரப்பினருமே முஸ்லிம்களை நம்புவதில்லை என்பதுதான் பரிதாபம். அன்றாட வாழ்க்கைப் பாட்டை தீர்ப்பதற்கே போராடும் முஸ்லிம்களுக்கு குண்டுகளைப் பற்றி சிந்திப்பதற்குக்கூட நேரம் கிடையாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதேயில்லை.


ஒவ்வொரு குண்டு வெடிப்பும் இஸ்லாம் எனும் 'பச்சைக் கண்ணாடி' கொண்டே பார்க்கப் படுகிறது. ஆனால், 'இந்துத்துவ காவி' இந்தியாவை 'சிவப்பாக' மாற்றுவதில் சற்றும் சளைத்ததல்ல. குண்டுகள் வெடிப்பதற்கான காரணங்களுள் ஒன்று, இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பற்ற அச்ச உணர்விலேயே நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பதுதான். உண்மையான போர் துவங்குமுன் மனதளவில் எதிர்தரப்பினரை வலுவிழக்கச் செய்யும் உத்தி இது.


இந்திய முஸ்லிம்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் தீவிரவாதிகளாக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம். அதே போன்று இந்துக்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் அதிதீவிரவாதிகளாக இருப்பதும் உண்மையே! சிமி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை தத்தம் சமுதாயங்களை பிரதிநிதிப்பதாக சொல்லிக் கொண்டாலும் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட அடையாளங்களை கொண்டவை. செயல்வடிவிலான அதிதீவிரவாதத்தை இவ்வாறு ஒரு வரியில் சுருக்கிச் சொல்லலாம்: "உனது தீவிரவாதத்தை விட எனது தீவிரவாதம் சிறந்தது!"


ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை குண்டுவெடிப்புகளில் ஈடுபடும்போது இந்திய ஊடகங்கள் 'அடக்கி வாசிப்பதை'க் காண்கிறோம். அதே சமயத்தில் ஒரு வழக்கில் சிமி-யின் பெயர் அடிபட்டால் 'பத்திரிக்கைத் தர்மம்' உச்ச வேகத்தில் வெளிப்படுவதையும் காண்கிறோம். இந்த இரண்டு வித்தியாசமான அணுகுமுறைகளுக்கும் காரணம் வியாபாரம்தான். எந்தப் பத்திரிக்கை முதலாளியும் பெரும்பான்மையான இந்து வாசகர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார். ஊடகங்கள் தங்களை தேசிய சிந்தனை கொண்டவர்களென உரிமை கொண்டாடினாலும், நடைமுறையில் அவை பெரும்பான்மையினரை திருப்திப் படுத்தும் நோக்கம் கொண்டவைதான்.


காவல்துறை 'குற்றம் சாட்டப்பட்ட' நபர்களின் பெயர்களை திடீர் திடீரெனெ மாற்றுவது, ஒரு பத்திரிக்கையாளனின் கண்ணோட்டத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக இருக்கிறது. ('குற்றம் சாட்டப்பட்டவர்' என்ற பெயர்ச்சொல் இந்திய ஊடகங்களில் மிக அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் வார்த்தைகளுள் ஒன்று!). குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி என முதலில் சொல்லப்பட்ட பெயர் அப்துல் சுப்ஹான் குரேஷி; அதுவே பிறகு போலி 'என்கவுண்டரில் கொல்லப்பட்ட' அதிப் என மாற்றப் பட்டது.


அஹமதாபாத் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று காவல்துறையினர் சொல்லும் முப்தி அபுல் பஷர்தான் டில்லி குண்டு வெடிப்புகளுக்கும் காரணகர்த்தா என்று சொல்லப்படுவதை ஒரு பத்திரிக்கையாளனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பஷர் உண்மையிலேயே டில்லி குண்டு வெடிப்புகளுடன் சம்பந்தப் பட்டிருந்தால் அது நிகழ்ந்திருக்கவே செய்யாது. ஏனெனில், அந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பஷர் காவல்துறையின் பாதுகாப்பில்தான் இருந்தார். மதரஸாவில் மார்க்கக் கல்வி பயின்ற ஒரு ஏழையான பஷர் எப்படி அஹமதாபாத் குண்டுவெடிப்பை அவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு நடத்தியிருக்க முடியும்? இந்திய மதரஸாக்கள் எப்போதிலிருந்து இதுபோன்ற 'தொழில்நுட்ப வல்லுனர்'களை உற்பத்தி செய்யத் தொடங்கின? அவ்வாறு நடக்குமானால் அது இந்திய அரசிற்கு மிக மகிழ்வைத் தரும் ஒன்றாக இருக்கும். மதரஸாக்களை மேம்படுத்த வேண்டிய தேவை மத்திய மதரஸா வாரியத்திற்கு இனி இருக்காது.


'நன்கு படித்த முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்புகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் காவல்துறையினர் சொன்னாலும், 'படித்தவர்கள்' என்று எவ்வகையிலும் சொல்ல முடியாதவர்களைத்தான் அவர்கள் கைது செய்கிறார்கள். முப்தி பஷர் இதற்கு சரியானதொரு உதாரணம்.


இந்திய ஊடகத்துறையில் ஒரு பகுதியினர் உளவுத்துறை அமைப்புகளின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். காவல்துறையினரின் அறிக்கைகளை புலனாய்வுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிடுகின்றனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவர் உளவுத்துறைக் குறிப்பு போன்றதொரு தகவலை வெளியிட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'நாடெங்கிலும் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காக 2001-ம் ஆண்டு சிமி அமைப்பு 200 இளைஞர்களை பணியிலமர்த்தியது' என்பதுதான் அந்த தகவல். இது உண்மையென்றால் நமது உளவுத்துறை அமைப்புகள் கடந்த 8 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தன?


முறையான விசாரணகள் நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை பதியப்படுமுன்னரே, காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் 'தீவிரவாதிகள்' என முத்திரை குத்தப்படுகின்றனர். சட்டமும் நீதிமன்றமும் அதன் பணியைத் தொடங்குமுன்னரே ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்றன. உதாரணமாக, "கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தீவிரவாதி சைஃப் ஒரு போலி வாக்காளர் அட்டை வைத்திருந்தான்" (டைம்ஸ் ஆஃப் இந்தியா, செப் 21, பக்கம் 1, டெல்லி பதிப்பு).

ஊடகங்களின் 'முன்முடிவுத் தீர்ப்பு'களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமல்லவா?

இந்த அநீதிகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, முஸ்லிம்களோ அச்சத்தால் சூழப்பட்டவர்களாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். "அரசு என்பது ஒருங்கமைக்கப்பட்ட வன்முறை" என்று சொன்னார் காந்திஜி. டெல்லி ஜாமியா நகரில் நிகழ்த்தப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவம், சில குழப்பமான கேள்விகளை எழுப்புகிறது. 'இந்த சம்பவமே சந்தேகத்திற்கிடமானது' என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் இல்லாமலில்லை. உள்ளூர்வாசியான சகோதரி ஒருவர் சொன்னார், "எதிர் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதை யாரும் பார்க்கவில்லை. காவல்துறையினர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்கள். எதிர்தரப்பினர் சுட்டதை யாராவது பார்த்ததாக எந்தப் பத்திரிக்கையிலாவது செய்தி வந்ததா?" அவர் மேலும் கேட்டார், "தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவ்வளவு காவலையும் மீறி எப்படி தப்பித்துச் சென்றார்கள்? அந்த வீட்டிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழிதானே இருந்தது? என்கவுண்டர் நடக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் அவர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்?"


அவர் மேலும் சொன்னது ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு பயங்கரமானதாக இருந்தது; "இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர்கள் (காவல்துறையினர்) யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். இன்று அந்த இளைஞர்களுக்கு நேர்ந்தது நாளை என் சகோதரனுக்கு நேரலாம். ஏதோ ஒரு உப்புப்பெறாத காரணத்திற்காக, தான் நிரபராதி என்று நிரூபிக்கக்கூட அவகாசம் தரப்படாமல் அவன் கொல்லப் படலாம். அவர்கள் உங்களைக் குற்றவாளி என்று சொன்னால் நீங்கள் குற்றவாளிதான். மறுபேச்சிற்கே இடமில்லை. இது என்னைக் கடும் கோபத்திற்குள்ளாக்குகிறது"


இந்திய முஸ்லிம்கள், அச்ச உணர்வு, பாதுகாப்பற்ற சூழ்நிலை, ஆட்சியாளர்களின் பாரபட்ச போக்கு ஆகியவற்றோடு தீவிரவாத முத்திரையையும் சுமந்தவர்களாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 'முஸ்லிம்கள்' என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறு கும்பல் அவர்களின் வாழ்க்கை மற்றும் மதநம்பிக்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. 'குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள்' என்று யாராவது சொல்லும்போது என்னுள் வெறுப்புணர்வுதான் ஏற்படுகிறது. 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அடையாளம் தெரியாத ஒரு அமைப்பு, இந்திய முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற ஒளிவுமறைவு 'ஜிஹாதை' நடத்துகிறதாம்.
ஓர் உண்மையான ஜிஹாத் போராட்டம் ஒளிவுமறைவாக நடக்கவே முடியாது. இஸ்லாமிய சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அநீதிக்கெதிரான ஜிஹாத் போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட முறையிலேயே வெளிப்படையாக நடத்தப்பட்டனவே தவிர, அவை அடையாளம் தெரியாத நபர்களால் ஒருபோதும் நடத்தப் பட்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.


கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நம் நாட்டில், நாட்டைக் கொலைக்களமாக மாற்றத்துடிக்கும் ஒரு சிறு கொலைகாரக் கும்பலை காவல்துறையினரால் வளைத்துப் பிடிக்க முடியவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. இந்திய உளவுத்துறையினரின் கைவசம் ஏராளமான தகவல் சாதனங்களும் துப்புகளும் இருந்தும், பயங்கரவாதச் செயல்களை முறியடிப்பதில் அவர்களின் செயல்பாடுகள் பூஜ்யமாகவே இருக்கின்றன.


இந்தியாவின் 16 கோடி சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இருக்கும் பிரச்னை ஒன்று; அச்சவுணர்வுதான் அது! அவர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கவும் யாரும் தயாராக இல்லை. இந்தியாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் முஸ்லிம்கள் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைக்கான தீர்வின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களேயல்லாது பிரச்னையின் ஒரு அங்கமாக அல்ல. இந்தியா அவர்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.


ஒரு முஸ்லிம் நண்பர் மூடி மறைக்காமல் சொன்னார், "கவி ரவீந்திரநாத் தாகூரின் 'மனம் அச்சமில்லாமல் இருக்கும்போது' எனும் கவிதை வரிகள் இப்போதெல்லாம் என் வீட்டுச்சுவரை அலங்கரிப்பதில்லை".


Mubasshir Mushtaq
(He is a freelance journalist. He specialises in law, journalism and current affairs.)

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்