Saturday, January 30, 2010

ஸ்பெயினில் இஸ்லாத்தின் வெற்றியும் வீழ்ச்சியும்..!

அரேபியாவில் மறுமலர்ச்சி பெற்ற இஸ்லாம் ஐரோப்பாவின் ஸ்பெயின் வரை தனது ஆட்சியைக் கொண்டிருந்தது. சுமார் 800 ஆண்டு காலம் இம்மண்ணை ஆண்ட இஸ்லாம் வீழ்ந்தது எப்படி? நீங்கள் பார்க்கப்போகும் இந்த குறும்படம் இதனை வரலாற்று ஆய்வோடு அலசி ஆராய்கிறது.

விடியோவை காண ..
http://video.google.fr/videoplay?docid=7439633000240909150&ei=c-FlS7CrMsKu-AaVxqW7CA&q=islam+in+spain+tamil&view=3#

Tuesday, January 26, 2010

முஸ்லிம் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் பயங்கரவாதம்!


Dr .மசூத் முஹம்மத்

பிப்ரவரி 2007 ஆண்டு அமெரிக்காவின் டெனிசி பல்கலைகழகதின் - University of Tennessee- சட்டத்துறை பேராசிரியர் றிநோல்ட் -Glenn "Instapundit" Reynolds- அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய தலைவர்களையும் , அணுவாயுத விஞ்ஞானிகளையும் கொலை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். 12.01.2010- மேற்கு பயங்கரவாதம் ஈரான் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலைகழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை கொலை செய்துள்ளது. இது றிநோல்டின் என்ற ஒருவருடைய வாதம் அல்ல இது ஒரு சிந்தனை போக்கு இதை மேற்கு பயங்கரவாதம் றிநோல்டின் வாதத்திக்கு முன்னரும் பின்னரும் அழகாக செய்து வருகின்றது.


மேற்கு பயங்கரவாதம் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலைகழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை ஈரான் தலை நகரில் அவரின் வீட்டின் அருகில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டின் மூலம் கொலை செய்துள்ளது இதை அமெரிக்க, இஸ்ரேலிய பயங்கரவாதம் என ஈரான் கூறியுள்ளது. இந்த கொலை இஸ்லாமிய உலகத்துக்கு புதியது அல்ல அதிகமான முஸ்லிம் விஞ்ஞானிகள் அன்மை காலமாக கொலை செய்யப்படுகின்றனர் அல்லது கடத்தப்படுகின்றனர்.


ஈராக் ஆக்ரமிக்கபட்டு ஆரம்ப 18 மாதங்களில் மட்டும் 310 முஸ்லிம் விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் முக்கிய அணு விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்கள்,17500கும் அதிகமான விஞ்ஞானிகள் நாட்டை விட்டும் வெளியேரிவிட்டனர் இவர்களில் அதிகமானவர்கள் மேற்கு மேலாதிக்க பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது ஏதே ஒரு வகையில் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று இது பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒரு எகிப்திய ஆய்வுமையம் கூறுகிறது என்பதுடன் இந்த கொலைகள் அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களினால் செய்யப்பட்டவை என சுட்டிகாட்டுகிறது.


ரஷிய கம்யூனிஸ ராஜ்ஜியம் பிரிந்து உடைந்த போது கீர்கிஸ்தான்- Kyrgyzstan- , தாஜ்கிஸ்தான்-Tajikistan-, டேக்மிஸ்தான் -Turkmenistan-, உஸ்பெக்கிஸ்தான்-Uzbekistan- என்ற நாடுகள் கம்யூனிஸ அராஜகதில் இருந்து முஸ்லிம் நாடுகளாக விடுதலை பெற்று நிமிர்ந்தன அங்கும், செச்னியா-Chechnya-, டாகஸ்தான்- Dagestan- , இங்குஸ்கீட்டியா-Ingushetia- ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தேசங்களிலும் பல முஸ்லிம் விஞ்ஞானிகள் ,புத்திஜீவிகள் கடத்த பட்டு காணாமல் போயுள்ளனர் அல்லது கொலை செய்யபட்டுள்ளனர் கடத்தப்பட்ட முஸ்லிம் விஞ்ஞானிகள் பற்றி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் இதுவரையும் கிடைக்கவில்லை , இங்கு நடந்த கடத்தல் , காணாமல் போதல் என்பனவற்றின் சூத்திரதாரிகளாக ரஷிய , அமெரிக்க மேலாதிக்கங்கள் இருப்பதாக நம்பபடுகிறது.அதேபோன்று மேற்கு நாடுகளில் பணியாற்றும் முஸ்லிம் விஞ்ஞானிகள் ஐந்து வேலை தொழுதாலும் பயங்கரவாத பிரிவுகளினால் கைதாகின்றனர்.


கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் அணு விஞ்ஞானி ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரும் இவரின் சகோதரர்களும் இணையத்தின் வாயிலாக அல்ஜீரியா இஸ்லாமிய போராளிகளின் இணைய தளங்களை பார்க்கிறார்கள் தாடி வைத்துள்ளார் ஐந்து தடவை தொழுகிறார் என்ற காரணத்தால் வட ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி . இவருடன் சேர்ந்து, அவரது 2 விஞ்ஞான துறை மாணவர்களான சகோதரர்களையும் கைது செய்தனர்.


Dr.ஆபியா : பாகிஸ்தானிலும் பல முஸ்லிம் அணுவாயுத விஞ்ஞானிகள் கடத்தபடுகின்றனர் இந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த Dr.ஆபியா என்ற பெண் முஸ்லிம் விஞ்ஞானி 2003 மார்ச் 30ல் கடத்தப்பட்டு காணாமல் போனார் . கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார் . சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.


இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் தேதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். இவோன் ரெட்லி இதை வெளிகொண்டுவந்ததால் உலகம் இதை அறிந்து கொண்டது அல்லது மற்ற ஆயிர கணக்கான முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் புத்திஜீவிகள் , போன்று இதுவும் அறியப்படாத செய்தியாக இருந்திருக்கும்இருட்டில் இருந்த இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அழைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் இதுபற்றி Marguis' எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


'It is to Muslim science, to Muslim art and to Muslim literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.' '


ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .'8-12ம் நூற்றாண்டு காலப்பகுதி 'ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என வரலாறு கூறுகின்றது.


இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞான அடிபடைகளை உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு எழுச்சி, புரட்சி விஞ்ஞானம் என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று உலக வரலாறு கூறுகிறது.இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அஸ்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் திட்மிட்டு மேற்கு உலகால் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் . ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவரபடுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது.


இன்று இஸ்லாத்தின் எழுச்சியை தடுக்க இஸ்லாம் மீண்டும் உலகை ஆள்வதை தடுக்க இஸ்ரேல மற்றும் அமெரிக்க,மேற்குலக பயங்கரவாதம் இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளை கொலை செய்து வருகின்றது.


கடந்த வருடம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women's Invention Exposition) யில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றனர்.விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில் கலந்து கொண்டன என்பதும் முஸ்லிம் பெண் விஞ்ஞானி மெஹ்ராஜ் கோல்கின்பர், மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றார் . மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப் பரிசை வென்றது.


சோனியா சப்ரீ பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் "நானோ காம்ப்போஸைட்" கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினை பெற்றார், மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors' Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது என்பனவும் அவதானிக்க ப்படவேண்டியவை.


இந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் இருவர் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு பிரித்தானிய உளவு துறையால் பல மணி நேரம் விசாரிக்க பட்டார்கள் என்பதும் இவர்கள் இஸ்லாமிய உடைஅணிந்தவர்கள் என்பது குறிபிட்டதக்கது.


லகளாவிய இஸ்லாமிய எழுச்சியை, இஸ்லாமிய ஆட்சியை-இஸ்லாமிய கிலாபத்- தடுக்க, தாமதபடுத்த மேற்கு பயங்கரவாதம் பல களங்களில் முனைகிறது அதில் ஒன்றுதான் இந்த முஸ்லிம் விஞ்ஞானிகளை, புத்திஜீவிகளை ஊதி அணைக்க முனையும் முயற்சி.


நிராகரிபவர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். அல் குர்ஆன் (9:32)


நன்றி M.ஷாமில் முஹம்மட் -

லங்கா முஸ்லிம்

Sunday, January 24, 2010

பர்தா விவகாரம்: உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டைக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து புகைப்படம் எடுக்க அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன.'வாக்காளர் அடையாள அட்டையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் ஹிஜாப் அங்கியை அணியாமல் படமெடுப்பது மத சம்பிரதாயத்தை மீறும் செயல். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சலுகை வழங்கவேண்டும்' எனக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த அஜ்மல் கான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்து, மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

நீதிபதிகளின் இந்த தீர்ப்பை முஸ்லிம் சமுதாய அமைப்புகள் வரவேற்றுள்ளன.டெல்லி சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரிய உறுப்பினருமான கமால் ஃபரூக்கி இதுபற்றி கூறுகையில்,'ஹஜ் பயணத்துக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் எடுக்க முகத்தை மூடாமல் தான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம். அப்படியிருக்கும் போது வாக்காளர் அட்டை விஷயத்தில் ஏன் பிரச்னை எழுப்ப வேண்டு்ம.புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பது நாட்டுக்கு மிகவும் அவசியமானது. பொது நலனுக்கான அரசின் நடவடிக்கைக்கு மத விவகாரங்கள் தடையாக இருக்கக் கூடாது என நீதிபதிகள் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.'

இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிவது கட்டாயம் தான் என்றாலும், சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள சட்டத்திலேயே அனுமதி அளிக்கப்படுகிறது.குறிப்பிட்ட காரணங்களுக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை' என்று முஸ்லிம் சட்டவாரிய உறுப்பினர் காலித் ரஷீத் கூறியுள்ளார்.மேலும், 'உடல்நலம் சரியில்லை என மருத்துவரிடம் போகிறோம். அப்போது முகத்தை காட்டமாட்டேன் என சொல்ல முடியுமா? அதுபோல வாக்காளர் அட்டை முக்கியமானது என்பதால் சம்பிரதாயத்தை தளர்த்திக் கொள்வதில் தவறேதும் இல்லை' என பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் கருத்து தெரிவித்துள்ளன.

எனினும், 'ரொம்பவும் மதரீதியாக உணர்ந்தால், ஓட்டுப் போடவே வேண்டாம்' என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டது வருத்தமளிப்பதாக சில இமாம்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையே, அகில இந்திய ஷியா தனிச்சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் கூறும்போது, 'வாக்காளர் பட்டியலுக்காக முஸ்லிம் பெண்கள் காது பகுதியை சேர்த்து தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்தபடி புகைப்படம் எடுக்க அனுமதிக்கலாம். இதுதொடர்பாக தெளிவான சட்டம் இருக்கவேண்டும். இல்லையெனில் முஸ்லிம் பெண்களில் ஒருபகுதியினர் தேர்தலில் பங்கேற்க இயலாத வாய்ப்பு ஏற்படலாம்.அந்தவிதத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுக்களை சிதைப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதியாகக் கூட இதை சந்தேகிக்க வாய்ப்புள்ளது' என்றார .

தட்ஸ் தமிழ்

Monday, January 11, 2010

புர்காவை தடை செய்யப்போகும் பிரான்ஸ்!

06 January 2010 - 18H22

French opposition takes stand against burqa ban
Muslim women wearing veils walk in the center of Marseille, southern France, in June 2009. France's opposition Socialists on Wednesday came out against calls for a law banning the full Islamic veil but said Muslim women must be discouraged from wearing the burqa.

A Muslim woman dressed in traditional clothes, walks with her child in Venissieux, near Lyon central France in June 2009. France's opposition Socialists on Wednesday came out against calls for a law banning the full Islamic veil but said Muslim women must be discouraged from wearing the burqa.

France's opposition Socialists on Wednesday came out against calls for a law banning the full Islamic veil but said Muslim women must be discouraged from wearing the burqa. The Socialist Party opposes the wearing of the burqa but "is not favourable" to a legal ban, which would amount to an inconsistent "ad hoc law", its spokesman Benoit Hamon, pictured in November 2009, said on RTL radio. AFP - France's opposition Socialists on Wednesday came out against calls for a law banning the full Islamic veil but said Muslim women must be discouraged from wearing the burqa.

The announcement by the Socialists came after President Nicolas Sarkozy left open the prospect of legislation to ban the veil and ahead of a much-awaited parliament report on the loaded issue to be released at the end of the month.

Home to Europe's biggest Muslim minority, France set up the special panel six months ago to consider whether a law should be enacted to bar Muslim women from wearing the full veil, known as a burqa or niqab.

The Socialist Party opposes the wearing of the burqa but "is not favourable" to a legal ban, which would amount to an inconsistent "ad hoc law", its spokesman Benoit Hamon said on RTL radio.

"We are totally opposed to the burqa. The burqa is a prison for women and has no place in the French Republic," he said. "But an ad hoc law would not have the anticipated effect."

The Socialist spokesman nevertheless called for action.

The wearing of the full veil reflects a "shift away from a certain type of (moderate) Islam", he said, adding: "We must use all of the legal instruments at our disposal to ensure that this behaviour is condemned when it is encouraged."

Sarkozy himself has said that the burqa is not welcome in France but has not stated publicly whether legislation should be enacted.

The leader of Sarkozy's party in parliament, Jean-Francois Cope, has said he will propose a bill this month to ban the wearing of the burqa in public to defend France from "extremists".

But many politicians from the left and right have cautioned that a draconian law banning the head-to-toe veil would be difficult to enforce and probably face a challenge in the European rights court.

"If tomorrow the burqa is not allowed in public places, how would the police act to convince a woman to abandon her burqa? Would they force her to take it off?" asked Hamon.

Sarkozy this week raised the prospect of a non-binding parliamentary resolution against the burqa and said he was not opposed to legislation, members of his right-wing UMP party told AFP.

Critics argue that a specific law enacted to ban the full veil would be tantamount to using a sledgehammer to swat a fly. Only 1,900 women wear the full veil in France, according to the interior ministry, and more than half of those live in the Paris region.

Opponents warn that a law would stigmatise France's six million Muslims who already feel targeted in the government-sponsored debate on national identity, which has exposed fears about Islam.

Interior Minister Brice Hortefeux last month told the parliamentary panel that the burqa should be outlawed in public services such as the post office, government offices, local administrations and in public transport.

The law would invoke security reasons for the ban and the requirement that citizens uncover their faces in public.

In 2004, France passed a law banning headscarves and any other "conspicuous" religious symbols in state schools after a long-running debate on how far it was willing to go to accommodate Islam in its strictly secular society.

07 January 2010 - 19H51
French draft bill to fine burqa-wearing women

Muslim women wearing veils walk in the center of Marseille, southern France, in June 2009. Muslim women who wear the full Islamic veil in France will face a possible 750-euro (1,000-dollar) fine, according to a draft bill unveiled Thursday by the leader of the parliamentary majority.

Muslim women who wear the full Islamic veil in France will face a possible 750-euro (1,000-dollar) fine, according to a draft bill unveiled by the leader of the parliamentary majority. Jean-Francois Cope, who heads the governing UMP party in the National Assembly, told Le Figaro newspaper's weekly magazine that men who force their wives to wear the burqa or niqab could face an even heavier fine.
AFP - Muslim women who wear the full Islamic veil in France will face a possible 750-euro (1,000-dollar) fine, according to a draft bill unveiled Thursday by the leader of the parliamentary majority.
Jean-Francois Cope, who heads the governing UMP party in the National Assembly, told Le Figaro newspaper's weekly magazine that men who force their wives to wear the burqa or niqab could face an even heavier fine.
"The law will address an issue of security," Cope said in an interview with the magazine.
"The proposed measure would prohibit the covering of the face in public places and on the streets, with the exception of special cultural events or carnivals."
The draft legislation will be presented in the next two weeks and should come up for debate in parliament after the March regional elections, he said.
The majority leader, who is also openly campaigning to succeed President Nicolas Sarkozy as the right-wing candidate for the presidency in 2017, said the burqa must be banned to defend women's rights.
"We can measure the modernity of a society by the way it treats and respects women," he said.
France's political establishment is divided on whether to ban the burqa, with the opposition Socialists this week saying that it opposed a law even though Muslim women must be discouraged from wearing the full veil.
The burqa debate has heated up ahead of the release at the end of the month of a much-awaited report by a parliamentary panel that has conducted six months of hearings on the issue.
Many politicians from the left and right have cautioned that a draconian law banning the head-to-toe veil would be difficult to enforce and probably face a challenge in the European rights court.
Sarkozy himself has said that the burqa is not welcome in France but has not stated publicly whether legislation should be enacted.
Critics argue that a specific law enacted to ban the full veil would be tantamount to using a sledgehammer to swat a fly. Only 1,900 women wear the full veil in France, according to the interior ministry.
In the interview, Cope argued that a law would act as a deterrent by sending a "clear message" that France will not allow women to fully cover themselves.http://www.france24.com/en/20100106-french-opposition-takes-stand-against-burqa-ban
VIDEO 1

VIDEO 2

தொடர்புடைய இன்னொரு விடியோ 2

வீடியோ 3