Tuesday, September 28, 2010

காவி பயங்கரவாதம்! பாதுகாப்பற்ற இந்தியா.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு நீதி மன்றத் தீர்ப்புக்காக இப்படியொரு எதிர்பார்ப்பும் பதற்றமும் இதற்கு முன் இருந்தது இல்லை.

பாபரி மசூதி இட விவகாரத்தில் அலகபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாட்டின் அனைவரின் கவனமும் செப்டம்பர்24 னை நோக்கி திரும்பி இருந்தது.

தீர்ப்புக்கு முன்னதாகவே ஒரு அசாதரணமான பதட்ட நிலைகள் நாடு முழுவதும் பரவிவருகிறது. அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்ச நிலையில் மக்கள் உறைந்து உள்ளனர். நாட்டின் பெரும் அரசியல் இயக்கங்களிலிருந்து சிறு மக்கள் அமைப்புகள் வரை வெளி வர இருக்கும் தீர்ப்பின் பாதக சாதகமான நிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு பிரிவினரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

மனித வேட்டை நரபலி நரேந்திரமோடி கூட குஜராத் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் மக்கள் அனைவரும் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். (இது எதற்கான முன்னறிவிப்பு என்பது மட்டும் தெரியவில்லை).பிஜேபி ஆளும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூட முன்னதாகவே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மாநில மத்திய அரசாங்கள் பல அடுக்கு பாதுகாப்பினை நாடு முழுவதும் அமல்படுத்திவருவதும், காவல் அணிவகுப்புகளை ஆங்காங்கே நடத்தி வருவதும், பிரதமர் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் அறிவிக்கும் செய்திகளும், பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகளும் மக்களை பெரும் அச்சத்திலும் பதற்றத்தையும் எதிர் நோக்கி இருக்க செய்துள்ளது.மேலும் உளவுத்துறைகளின் தீவிரவாத அச்சுறுத்தல் முன்னறிவிப்பின் காரணமாக பெரும்பான்மையான உலக நாடுகள் கூட தனது நாட்டு மக்களையும் விளையாட்டு வீரர்களையும் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிற்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தீர்ப்பினை ஒட்டி மொத்தமாக அனுப்பபடும் அலைபேசி குறுஞ்செய்திகளையும் 3 நாட்களுக்கு தடை செய்தது, மேலும் விரோதம் வளர்க்கும் பேச்சுக்களும் எழுத்துக்களும் தடை செய்யப்பட்டிருந்தது.

பதட்டம் கொஞ்சம் தணியும் விதமாக நீதிமன்றத் தீர்ப்பு சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் நிம்மதியுடன் மக்களை தெருக்களில் நடமாட அனுமதித்துள்ளது.

இத்தனை பேரச்சமும் பெரும் பதற்றமும் ஏன் ஆளும் அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகிறது?
உண்மையில் இந்த பேரச்சநிலை இந்திய சமுக கட்டமைப்பில் யார் மூலம் உருவாகியுள்ளது?
நீதி மன்றத்தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் கூட நீதி மன்றத் தீர்ப்பை எதிர்ப்போம் என கூறியது இல்லை.

இப்படி இருக்கையில் பிறகு யார் மூலம் தான் இந்த தீர்ப்பினால் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் இருக்க கூடும்?... தீர்ப்பு நிச்சயமாக பெரும்பான்மை இந்துக்களுக்கு சாதகமாகத்தான் இருக்க வேண்டும், ஒரு வேளை தீர்ப்பு இந்துக்களுக்கு பாதகமாக வருமேயானால் நாங்கள் நீதி மன்றத் தீர்ப்பை புறக்கணிப்போம், அதே இடத்தில் இராமருக்கு கோவில் கட்டியே ஆவோம் என்கின்றனர் இந்துத்துவவாதிகள்.

நீதி மன்றங்களின் பெருந்தன்மை சில நேரங்களில் புல்லரிக்கவைக்கும் உணர்ச்சி மிக்க தீர்ப்புகளை தரும். அஃப்சல் குரு மீது எந்த ஒரு குற்றமும் நிருபிக்கபடாத நிலையிலும் பெரும்பான்மை மக்களின் மன திருப்திக்காக அஃப்சல் குருவினை தூக்கிலிடலாம் என்ற விசுவாசமான தீர்ப்புகளையும் நீதி மன்றங்கள் வழங்கும்.

ஆக தீர்ப்புகள் எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகத்தான் இருக்கின்றனர். தீர்ப்பு நெருங்கும் முன்னரே இந்துத்துவ தலைவர்களின் இரத்தம் கொதிக்க வைக்கும் பேச்சுகள் தொடர்கின்றது, இது போன்ற பேச்சுகளால் தான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது, அதே போன்ற துவேசமிக்க பேச்சுகள் அத்வானி போன்ற இந்துத்துவ கொடுரர்களால் துவங்கப்பட்டு விட்டது, இரத்த யாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.ஒரு வேளை தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக வந்தாலும் இஸ்லாமியர்கள் பெருந்தன்மையுடன் அதை பெரும்பான்மை இந்துக்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் எனவும் மறைமுக மிரட்டல் விடுகின்றனர் இந்துத்துவவாதிகள்.

விட்டுக் கொடுக்க வேண்டியது இந்த ஒரு பள்ளிவாசலை மட்டுமா?, அவர்களின் பட்டியல்களில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடிப்புக்காக திட்டமிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் இதனை எப்படி பெருந்தன்மையுடன் விட்டு கொடுக்க முடியும்? பள்ளிவாசல் இடிப்பு என்பது இந்துத்துவாவின் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட பாரத கனவு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இராம இராஜ்ஜியம் காண்பதற்கு முன் பள்ளிவாசல்களை இடிப்பது, பிறகு இஸ்லாமியர்களின் கலாச்சார பண்பாடுகளை நாட்டில் இல்லாமல் செய்வது தான் அவர்களின் முதல் திட்டம் ஆகும்.அதற்காகத்தான் நாடு முழுவதும் வலம் வருகிறது ரத யாத்திரைகள், மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புகள், அப்பாவி இஸ்லாமியர்களை சிறைச்சாலைகளில் அடைப்பதும், போலி மோதல் கொலைகளில் கொல்வதும், ரகசிய சித்திரவதை கூடங்கள் வன்கொடுமைகள் புரிவது எல்லாம்.

நாட்டில் இத்தனை வன்முறைகளையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்துத்துவ தீவிரவாதிகளை அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிப்பதில் ஏன் இந்த தயக்கம்?..

இந்துத்துவவாதிகள் காந்தியை கொலை செய்த காலத்திலிருந்து இன்று வரை இவர்களை எந்த அரசாங்க மும் ஒன்று செய்ய முடிய வில்லை.“காவி தீவிரவாதம்” ”என்ற ஒற்றை வார்த்தையை கூட ஒரு உள்துறை அமைச்சரால் சொல்ல முடியாத அளவிற்கு காவி தீவிரவாதம் நாடு முழுவதும் ஒரு அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு டிச6-ம் இந்திய அரசாங்கம் இதே போன்று ஒரு பதட்டத்தை முன் கூட்டியே உருவாக்கி அதன் அதிர்வுகளை நாடு முழுவதும் பரப்புகின்றது. அப்படி அரசு எதிர்பார்தது போன்று எந்த ஒரு அசம்பாவிதங்களும் இதுவரை நடந்ததே இல்லை, இருந்த போதும் இந்த பாதுகாப்பு சோதனை அச்சுறுத்தல்கள் இஸ்லாமியர்களை நோக்கியே இருப்பதால் இஸ்லாமியர்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் முழுமையான சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இந்த தொடர் சோதனை, சந்தேகங்கள் மூலம் தன் சக நாட்டு மக்களே இஸ்லாமியர்களை சந்தேகத்துடனும், அச்சத்துடனும் பார்க்கும் நிலை இயல்பாகவே உருவாகியுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் இயல்பாகவே உணர்வு மிகுதியால் கட்டுக்குள் அடங்காத போராட்டங்களினால் நாட்டினை கலவர பகுதியாக மாற்றும் சூழ்நிலைகள்தான் இருந்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு மதத்தினராக இருந்திருந்தாலும் இத்தனை பெரிய இழப்பிற்கு பின் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்துவருகின்றனர்.மக்கள் தொகையில் மிகச் சிறு கூட்டமாக இருக்கும் சீக்கியர்களின் பொற்கோயிலை அன்றைய அரசு முரட்டு அத்துமீறல்கள் மூலம் கலங்கப்படுத்தியதன் விளைவு பிரதமர் இந்திரகாந்தி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். ஆனால் இஸ்லாமியர்களின் ஒரு பாரம்பரிய வழிபாட்டுத்தளம் மிகவும் கொடுரமான முறையில் இடித்துத் தள்ளப்பட்டும் அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மதக்கலவரங்களாலும், குண்டு வெடிப்புகளாலும் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலைகளில் கூட இஸ்லாமியர்கள் இது வரை அமைதியை மட்டுமே கடைபிடித்து வருகின்றனர். ஆனால் இதுவே ஒரு இந்துக்கோயில் தகர்க்கப்பட்டிருக்குமாயின் அதன் விளைவுகளை கற்பனை கூட செய்ய முடியாது.ஆனாலும் இஸ்லாமியர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள். அவர்கள் மனநிலையில் பெரும் அச்ச உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.இந்த அச்சுறுத்தல்கள் வெளி தேசத்திலிருந்து வருபவை அல்ல, தேச நலனுக்கு விரோதமான இந்த அச்சுறுத்தல்கள் உள் நாட்டிலிருந்து தான் கிழம்பியுள்ளன? அப்படி இருக்கும் போது முன் கூட்டியே இந்த தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

அரசாங்கத்தால் கட்டுபடுத்தமுடியாத அளவிற்கு உள் நாட்டு தீவிரவாதம் இருக்கும் என்றால், உள் நாட்டு மக்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு தரமுடியவில்லை என்றால் இது எப்படி ஒரு சுதந்திரமான நாடாக இருக்கமுடியும்?

இஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் எல்லா சூழ் நிலைகளையும் இந்துத்துவா சக்திகள் உருவாக்கி வரும் நிலையில்,அரசாங்கம் பேராண்மையுடம் தீவிரவாதத்தின் ஆணி வேரை புடுங்கி எறிய வேண்டும், ஒரு பள்ளிவாசலை இடித்து ஒரு நூற்றாண்டுக்கு அரசியல் செய்யும் பாஜக விற்கு மதவாத துவேச அரசியலை தவிர்த்து வேறெந்த அரசியலும் தெரியாது.வெறுப்பு அரசியலை உருவாக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார்கள் அடங்கிய எல்லா இந்துத்துவா சக்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக இருப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் காங்கிரஸ் அரசாங்கமோ எந்த ஒரு பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைக்கும், அமைதி காக்கும் பிறகு சமாதானம் செய்யும் அப்படியே ஆறப்போட்டு மக்கிபோகவிட்டு அரசியல் ஆதாயம் பெரும். அது தெலுங்கான பிரச்சனையாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், பாபர் மசூதி பிரச்சனையாகட்டும் எல்லாமே ஒரே விதமான அணுகுமுறைதான்.

60 ஆண்டு பிரச்சனைக்கு இப்பொழுது தான் தீர்ப்பு வந்துள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளை சந்திக்க நேரிடலாம். ஒரு வழக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் இழுக்க முடியுமோ அத்தனை ஆண்டுகள் இழுத்துப் பார்க்கும் இந்த நீதி துறை.நாளைக்கு பாரளுமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ கூட இந்த சங்கபரிவார்கள் இடித்து நொறுக்கக் கூடும் அப்பொழுதும் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பல நூற்றாண்டுகள் கழித்து தான் வரும்.இதற்கு இடையில் யாருக்கு தண்டனை கொடுக்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது எல்லாம் வெரும் கனவாகத்தான் இருக்கும்.இந்தியாவில் மட்டும் தான் ஒரு மனிதன் எத்தனை கொடுமையான குற்றத்தையும் செய்து விட்டு தண்டனை அனுபவிக்காமல் இருக்க முடியும்,அதே இந்தியாவில் மட்டும் தான் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்கவும் முடியும்.

தாமதிக்கப்பட்ட வழக்குகள் மட்டும் நாட்டில் உண்டு கோடான கோடி, அவை ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நீதிகள். இந்த நீதி முறையை உலகில் எங்கும் காணமுடியாது.பாதிக்கப்பட்ட மனிதன் நீதி கிடைக்காத போது அவன் தவறான வழிகளுக்கு செல்லும் அபாயத்தையும் நீதித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசாங்கம் திராணியற்று ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கும் நிலையில்,இந்த நாட்டில் மதசார்பின்மையை காக்கவும், எல்லோரும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு நடு நிலையாளர்கள், முற்போக்காளர்கள், மனிதம் நேசிக்கும் எல்லா மக்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும். இந்துத்துவா சக்திகளை நம் நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.

மால்கம் X ஃபாருக் -இராஜகம்பீரம்
நன்றி: பாலைவன துது

Monday, September 27, 2010

இல.கணேசனின் திணமணி கட்டுரைக்கு டாக்டர்.ஜவாஹிருல்லா மறுப்பு.

அயோத்திப் பிரச்னை - ஓர் உரத்த சிந்தனை! இல. கணேசன் .

First Published : 23 Sep 2010 12:00:00 AM IST

நான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே.

குறிப்பாக பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது? இஸ்லாம் என்ற மதம் வெளிநாட்டில் தோன்றிய மதம் என்பது உண்மை. இஸ்லாம் வெளிநாட்டில் தோன்றி நம் நாட்டுக்கு வந்தது.

ஆனால், இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.

ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர். இந்த ஒற்றுமை ஆபத்து என ஆங்கிலேயன் கருதினான்.

அயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர். இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள்.


டிசம்பர் 6, 1992-க்கு முன்பு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன். வெளியில் இருந்து பார்த்தால் மசூதிபோன்ற தோற்றம். உள்ளே போனால் கோயில். தரையிலிருந்து சுற்றிலும் ஐந்தடி உயரத்தில் உள்ள சுவர்களில் எல்லாம் நமது கோயில்களில் காணப்படும் சிற்பங்கள். யாழி, பாவை விளக்கு, தசாவதாரச் சிற்பங்கள் போன்றவைகளோடு பூவேலைப்பாடுகள். அண்ணாந்து மேலே பார்த்தால் தஞ்சாவூர் தொளைகால் மண்டபம் (சரியான பெயர் என்ன என்று தெரியாது. இப்படித்தான் அழைத்து வருகிறோம்) உள்ளே இருப்பதுபோல் அமைப்பு. இதுதான் இடிபட்டது. அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்மஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்மஸ்தான் தபால் ஆபீஸ்.

முஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும்.

சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.

பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.
அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.


பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது.

நாளையே பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதிபரும், மக்களும் எங்கள் மதத்தைத் சார்ந்தவர்கள். அதனால், அவர்களை வரவேற்போம் என்று எந்த இந்திய இஸ்லாமியரும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால், அது நியாயமானது என எந்த மதச்சார்பற்றவாதிகளும் கருதமாட்டார்கள். அதுபோலத்தானே இதுவும்.

ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை.

சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.

மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி.
நீண்ட காலமாகவே நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகள் இவை. அயோத்தி பிரச்னை தொடர்பாக உள்ள ஒரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவர இருக்கும் இந்த நேரத்தில், எனக்குள் எழுந்த உரத்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.


------------- ------------------- ---------------------- ----------------------------------- ------
மேற்கண்ட இல.கணேசனின் கட்டுரையை பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு செப்.24 ந் தேதி வர இருந்த வேளையில் , திணமணி நாழிதழ் முதல் நாள்(செப்.23) வெளியிட்டு அப்பட்டமான பாரபட்சம் காட்டியது. இதற்கு எதிர்வினையாக த.மு.மு.க. வின் தலைவர் ஜவாஹிருல்லாவின் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இரு சாராரின் கட்டுரையையும் முன் வைத்துள்ளேன்.

மெய்பொருள் காண்பதறிவு.

------------------------------------------------------------------------------------------------------------------------------

இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்
Monday, 27 September 2010 22:04

(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா -ஆசிரியர்)

அயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன்.

நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.

கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன. கோல்வால்கரின் பாசிச கருத்துகள்பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு.

இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.

ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது".

'இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: 'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது".

நாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு.

கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.

'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.

'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.

' பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன்.

450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.

ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?
அயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.

வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது.

அதில், "'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்.'

இது மட்டுமா? டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.

பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)

பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?

திரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா? பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா?

மக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள்.

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்!
------------ --------------------- ----------------- -------------------------- -- -------------------

இது மெய்யெழுத்தின் 100வது பதிவு. நன்றி.

Wednesday, September 22, 2010

பாபர் மசூதியின் சரித்திரம்.

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த மஸ்ஜித் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தாலும் நடைமுறையில் உண்மையான நீதி கிடைக்குமா என்பது இந்திய அரசின் முன்னைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த நிலையில் இந்திய தளங்களில் -ஏ1ரியலிஸம்.காம் -முன்பு வெளியான கட்டுரைகளின் முக்கிய பகுதிகள் இங்கு தொகுப்பாக தரப்படுகின்றது.

டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள்.
டிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்க பட்டது முழு உலக முஸ்லிம்களும் அதிர்ந்து போன நாள் அன்று முஸ்லிம் தலைவர்களாக தம்மை அடையாள படுத்திக் கொண்டவர்கள் அவமானத்தையும் கையாலாகாத தனத்தையும் ஏற்றுக்கொண்ட நாள் ஹிந்து பாஸிஸச் சக்திகளால் இந்திய முஸ்லிம்கள் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட நாள்.

பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்சாலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.

கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு
இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட். இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.

ஆட்சியாளர் ஜஹாங்கீர் காலம் முதற்கொண்டு தான் இந்தப் மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் என்றழைக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல் முஸ்லிம்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றி வந்தார்கள்.

1950 ம் ஆண்டு பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் மஸ்ஜித்திலுள் நுழைவதைத் தடுத்தது.அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றியே வந்தார்கள்.

1855 ஹனுமன் கார்ஹி வழக்கு.
19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு முஸ்லிம்களுக்கும் நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.

இந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் மஸ்ஜித் ஒன்று இருந்தது எனவும் அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.

இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் மஸ்ஜித் இடத்தை மீட்க இயலவில்லை.
முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த மஸ்ஜித்தை மீட்க முயற்சி செய்தார்கள் என்பதற்காக இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி மஸ்ஜித் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.

முஸ்லிம்கள் தங்கள் மஸ்ஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.
அவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் மஸ்ஜித் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி மஸ்ஜித்தை இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)

1857 நாம் சாபுத்ரா.
பாபரி மஸ்ஜித் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும் அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

1857 ல் பாபரி மஸ்ஜித் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற பெயரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள் முஸ்லிம்கள் மஸ்ஜித் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.

இரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.

1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.

இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
பட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.

1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு.
ஜனவரி 15 ,1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

மஸ்ஜித்க்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் எதிலும் பாபரி மஸ்ஜித் சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.

1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும் தாக்கி மசூதியையும் தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.
இராமர் சிலைகள்.

1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மசுதியுள்ளே வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மஸ்ஜித் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.

கே.கே.நய்யார்.
பாபரி மஸ்ஜித்தில் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆக முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.
இந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும் உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் – இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.

மஸ்ஜித்தில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

சிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி.
சிலைகள் வைக்கப்பட்டவுடன் மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் மஸ்ஜித்தை கைப்பற்றினார். மஸ்ஜித் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் மஸ்ஜித்க்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.

நீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்.
பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில் அவர் செய்ததெல்லாம் பள்ளிவாசலுக்குள் பூஜைகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.
………
ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :
"மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்".

பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும் அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.

பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும் உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:
அந்தக் கேள்விகள் :
1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?
2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை?

இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27 1949 அன்று அனுப்பப்பட்டது.

இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார் முஸ்லிம்களிடம் பேசி அந்த மஸ்ஜித்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.

அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவேறத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில் அந்த மஸ்ஜித்துகுள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால் மஸ்ஜித் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
(ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : Dangerous Example is being set there, which will have bad consequences? 500 044).

மஸ்ஜித்தை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள் கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.

இராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மஸ்ஜித்தை சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.
அந்தப் பதில் இது தான் : United Academics International, Vidyanagar, Hyderabad ? 500 044 "உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்".

5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.

முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில் 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஜையை நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.

உத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.
1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சன்னி வக்ப் போர்டு மஸ்ஜித்தையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித்தைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் தமது நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில் இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.

இன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் மஸ்ஜித் கதவுகளைத் திறந்து பொதுமக்களின் பூஜைக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது!
மஸ்ஜித்தை திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.

இவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் மஸ்ஜித்தை பொதுமக்கள் பூஜைக்காக திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக!
அடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதாவது பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு!
இதன் பொருள் மஸ்ஜிதில் தொடர்ந்து பூஜை நடத்தலாம் என்பதே.

1985 முதல் அயோத்தியாவை யைமாகக் கொண்டு (சுளுளுஇ ஏர்Pஇ டீதுP )முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.

நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.

நவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம் சர்ச்சைக்குரிய இடம் என்றும் அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது அதில் துரும்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும் அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.

இந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.

1989 ஆண்டுத் தேர்தல்கள்.
1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே!

அப்போதைய அரசியல் கதாநாயகனாகவும் சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.

தேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜகவினர் இது கோயிலுக்காகக் கிடைத்த ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

பிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி மஸ்ஜத பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.

1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும் இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார்.

இந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.

ரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால் ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும் ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.

இதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் மஸ்ஜித் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும் மஸ்ஜித் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் மஸ்ஜித் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் மஸ்ஜித் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது – இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.

வி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால் இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.

பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள்.

அத்தோடு மதுரா வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் மஸ்ஜித்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள்
என்பதும் தெளிவானது.

1991 தேர்தல்களும் மஸ்ஜித் இடிப்புகளும்!
வி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன் சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று.
1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.

பதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி மஸ்ஜித்துக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில இதில் (மஸ்ஜித்துக்குள்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.

வழிபாட்டுத் தலங்களின் சட்டம்
1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ கோயிலாகவோ மாற்றப்படலாகாது என்றும் எந்தக் கோயிலும் ஆலயமாகவோ பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது
இந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது பாபரி மஸ்ஜித்தை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் மஸ்ஜிதுகள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். மஸ்ஜிதுகள் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.

இதற்கு அது கூறிய காரணம் சுற்றுலாவை வளர்ப்பதும் அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.

இதன் உள்நோக்கம் என்னவெனில் பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே! அக்டோபர் 17 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு உத்திரப் பிரதேச அரசின் ஆணை அதாவது பாபரி மஸ்ஜித் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.

இதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று சொல்லாமல் கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும் இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும் அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனால் கல்யாண் சிங் அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும் பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம் பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.

இதே வேகத்திலும் வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்புதவற்கு அடிக்கல்லும் நாட்டி விட்டார்கள். இந்த அடிக்கல் நாட்டுப் பணி 22 அக்டோபர் 1991 ல் நடைபெற்றது. நரசிம்ம ராவ் அரசு இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்றது. இத்தனையையும் முடிந்த பின்னர் தான் நீதி மன்றம் தனது ஆணையை அக்டோபர் 25 ல் பிறப்பித்தது.

நீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் அங்கு கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. 1991 அக்டோபர் 30 ல் கொடியேற்றினார்கள். இந்நாளில் விஹெச்பி தொண்டர்கள் மஸ்ஜித் முன் கூடி 1990 ல் அங்கு வந்த கரசேவைக்காரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்து வெறி தலைவர்கள் குழமி இருந்தோரைத் தூண்டி விடும் அளவில் வன்முறைப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.
………..
ஆத்திரம் கொண்ட கூட்டத்தினர் பள்ளிவாசலின் மேல் ஏறி காவிக் கொடியைக் கட்டினர். கல்யாண்சிங் அரசு அவர்களுக்கு ஊக்கம் தந்தது. நரசிம்ம ராவ் அரசு அமைதி காத்தது.

1992 பிப்ரவரி
8 ம் நாள் உத்திரப்பிரதேச அரசு தான் கையகப்படுத்திய இடத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.

1992 மார்ச்
கல்யாண்சிங்கின் பாஜக அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றி இன்னும் 42 ஏக்கர் நிலத்தை இராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குக் குத்தகைக்கு விட்டது. இந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தது அரசு.

1992 மார்ச் 22
இதில் உற்சாகம் பெற்ற விஹெச்பி பஜ்ரங்தள் தொண்டர்கள் இன்னுமிருந்த சிறு சிறு கோயில்களை இடித்து இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட வகை செய்தனர்.

இந்தச் சாக்கில் சுற்றி இருந்த வீடுகளையும் கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு மாநில அரசை மிரட்டி சில அறிக்கையை வெளியிட்ட வாளாவிருந்தது.

1992 ஏப்ரல்
7 ம் நாள் நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழவின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 35 உறுப்பினர்கள் அயோத்தியாவில் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்வையிடச் சென்றனர். இந்தப் பார்வைக் குழுவுக்கு ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர். பொம்மை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்தக் குழு அயோத்தியாவிலும் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள்ளும் நீதி மன்ற ஆணைகளும் நீதிமன்ற நெறிகளும் தொடர்ந்து மீறப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கரசேவை ஜுலை 1992
9 ம் நாள் 2.774 ஏக்கர் நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டு கரசேவைகள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப் புறக்கணிப்புக்கு நடவடிக்கை ஏதமில்லை. 15 ம் நாள் விஹெச்பி க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஓர் ஆணையிட்டது. அந்த ஆணை பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் நடக்கும் அத்தனை கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்திட வேண்டும் என்பதே! நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதுமில்லை .

ஜுலை 22 1992 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்து கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும் எனப் பணித்தது.
23 ஜுலை 1992 ல் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் இனி அதன் ஆணைகளை நிபந்தனைகளின்றி அடிபணிந்திட சித்தமாய் இருப்பதாக அறிவித்தார்.

பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களுக்குத் தந்த உறுதிமொழி
ஜுலை 22 1992 அன்று நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களை – சாமியார்களை அழைத்துப் பேசினார். நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்த மனமில்லாத அவர் சாதுக்களை அழைத்துச் சமாதானம் பேசினார். அந்தச் சாதுக்களிடம் கரசேவையை நிறுத்திட வேண்டும் என்று முறையிட்டார். நான்கே மாதங்களில் தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும் வாக்களித்தார். கரசேவையை நிறுத்திட வேண்டும் என முறையிட்ட அவர் கரசேவை செய்பவர்களின் மீது எந்தப் பலப் பிரயோகமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒரு தேவையற்ற யாரும் கேட்காத வாக்குறுதியைத் தந்தார்.

இந்தக் கடைசி வாக்குறதியின் பொருள் நீங்கள் கரசேவையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே! அத்தோடு சாதுக்கள் கரசேவையாளர்களை பக்கத்தில் கிருஷ்ணனுடைய கோயிலைக் கட்டுவதற்காக அனுப்பினார்கள்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னாரா?
சாதுக்களை சந்தித்து ஒரு வாரத்திற்குப் பின் பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைச் சொன்னார். தான் சாதுக்களைச் சந்தித்துப் பேசி விட்டதாகவும் பல்வேறு நீதிமன்றங்களிலும் கிடப்பிலிருக்கும் பாபரி பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் உச்சநீதிமன்றத்திடம் இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டிடப் போவதாகவும் அறிவித்தார்.

அத்தோடு பாபரி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன் அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா? என்றொரு வினாவை உச்சநீதிமன்றத்திடம வைத்து விடை கேட்கப் போவதாகவும் அறிவித்தார்.

பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கோயில் இருந்தது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்து வகுப்புவாதிகள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இந்த அறிவிப்பைச் செய்த மறுநாள் சாதுக்கள் மிரண்டார்கள். பிரதமரை மிரட்டினார்கள். பிரதமர் தங்களிடம் (சாதுக்களிடம்) பேசிடும் போது நீதிமன்ற விவகாரங்கள் எதையும் பேசவில்லை ஆகவே பிரதமர் பொய் சொல்லுகின்றார். எனவே நாங்கள் பிரதமரிடம் ஒப்புக் கொண்டவற்றிலிருந்து பின்வாங்குகின்றோம் என்றும் அறிவித்தனர்.

ஆனால் பாபரி பள்ளிவாசல் செயல்பாட்டுக் குழு நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.ஆனால் இந்துத் தீவிரவாதிகள் மத நம்பிக்கை என்பது நீதிமன்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த விவகாரத்;தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று அறிவித்தார்கள்.

1992 அக்டோபர் மாத இறுதி நாட்களில் .. ..
விஹெச்பி யின் சாதுக்களின் அவை டெல்லியில் கூடி பின்வருமாறு அறிவித்தது:
நீதிமன்ற ஆணைகளைப் பற்றிக் கவலைப் படாமல் டிசம்பர் 6 1992 முதல் கரசேவை துவங்கும். அது கர்ப்பக் கிரகத்திலிருந்து ? அதாவது பாபரி பள்ளிவாசலின் மத்திய (டூம்) பகுதியிலிரந்து ஆரம்பிக்கும். அந்தக் கரசேவை கோயில் கட்டி முடிக்கப்படும் வரை தொடரும்.. ..

1992 நவம்பர் உச்ச நீதிமன்ற உத்தரவு
இந்நாளில் உச்ச நீதிமன்றம் உத்திரப்பிரதேச அரசுக்கு 2.774 ஏக்கரில் எந்தக் கட்டுமானப்பணிகளும் நடக்கக் கூடாது என்றும் ஆணையிட்டது. அத்தோடு கட்டுமானப் பணிகளை அரசு எப்படித் தடுக்கப் போகின்றது என்பதை எழுத்து மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திட வேண்டும் என்றம் கூறியது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணையின் கீழ் உத்திரப்பிரதேச பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் டிசம்பர் 6 , 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் பாடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் பிஜேபி தலைவர்களான எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஸி அவர்களும் கரசேவைக்காரர்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாட வரவில்ல. அவர்கள் முழு அளவில் கோயில் கட்டவே வருகின்றார்கள் என அறிவித்தார்கள்.

ஆனால் பள்ளிவாயிலை இடிப்பதற்குத் தேவையானவற்றையெல்லாம் சங்க் பரிவாரம் முழு அளவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இதனை அறிந்தும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.

டிசம்பர் 6 1992 ஞாயிறு அன்று சுமார் 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் பாபரி பள்ளிவாசல் முழமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதை பாஜக தலைவர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அவர்களுக்கும் தவறாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இடித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் – சீதை (குழந்தைகள்) சிலையை வைத்தார்கள்.

1992 டிசம்பர் 8 ம் நாள் மத்திய அரசின் செலவின் கீழ் கரசேவைக்காரர்கள் இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரசேவைக்காரர்களை இலவசமாக இல்லாங்கொண்டு சேர்த்திட ரெயில்வே துறைக்கு மட்டுமே 300 கோடி செலவு என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.


எதிரொலி
1992 டிசம்பர் 6 அன்று மாலை உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். எல்.கே.அத்வானி அன்று வரை தான் வகித்து வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பதவியை இராஜினாமா செய்தார்.

உத்திரப்பிரதேச சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமல்படுத்தப்பட்டது. பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டன. இதற்கிடையே அயோத்தியிலிருந்த முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

நாடு முழவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட அறப் போராட்டங்களை நடத்தினர். பல்லாயிரம் முஸ்லிம்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தடா வின் கீழ் கைது செய்யப்பட்டு நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
(நன்றி : விடியல் வெள்ளி டிசம்பர் 1998)

பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள் .(ஒன்று )

பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள் .(இரண்டு)

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?

Saturday, September 18, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: வெல்லப்போவது நீதியா? இந்து மத வெறியா?

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது.

இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.

வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.

நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.


உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை
உள்ளது.பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.

நன்றி: பாலைவன துது.

தெரிந்து தெளிய வேண்டிய விஷயங்கள் .
பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்
பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்