Saturday, December 27, 2008

அரசு அதிகாரியின் லஞ்சக் குவியலும் கொஞ்சல் வாழ்க்கையும்.. (ரிப்போர்ட்டர்)



தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக வசமாக மாட்டிக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, என வர்ணிக்கப்படும் அளவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட கரூர் டி.ஆர்.ஓ. ஜவஹர் சாந்தகுமார், கோடி கோடியாகக் குவித்திருக்கிறார் என கண்டுபிடித்திருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்.


இன்னும் ஓரிரு நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஓரிரு மாதங்களில் கலெக்டராக பதவி உயர்வு என குதூகலத்தில் இருந்த ஜவஹர் சாந்தகுமாருக்கு, கடந்த 23-ம் தேதி இரவில்தான் துப்பாக்கி லைசென்ஸ் வடிவில் விதி வந்து விளையாடிவிட்டது. அன்று மாலை வரை தனது அதிகாரத்தால் அத்தனை பேரையும் ஆட்டுவித்த அந்த அதிகாரி, இப்போது சிறைக்குள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.


கரூர் மாவட்டம் பெரிய வடுகப்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார், தனது துப்பாக்கி லைசென்ஸைப் புதுப்பிக்க இந்த அதிகாரியை நாடியிருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் அது புதுப்பிக்கப்படாததால் அதற்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டிருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், விஷயத்தை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.


லஞ்சம் கேட்கும் அதிகாரியை பொறி வைத்துப் பிடிக்க நினைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், கரூருக்கு வந்து செல்வகுமாரைச் சந்தித்து இதற்கான திட்டத்தைத் தீட்டியிருக்கின்றனர்.ஆனால், அன்று ஜவஹர் சாந்தகுமார், திங்கட்கிழமை அரவக்குறிச்சி அருகே மயானப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காகச் சென்றுவிட்டதால், அன்று திட்டம் நிறைவேறவில்லை. செவ்வாய்க்கிழமை குளித்தலையில் மனுநீதி நாள் முகாமுக்குச் சென்று மாலையில்தான் திரும்பியிருந்தார். இனியும் காத்திருக்க முடியாது என முடிவெடுத்து, செல்வகுமாரை லஞ்சப் பணத்தோடு உள்ளே அனுப்பி வைத்துவிட்டு வேட்டி கட்டி, துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு அதிகாரியைப் பார்த்து மனு கொடுக்க வந்த ஏழை விவசாயிகளின் கெட்டப்பில் வெளியே காத்திருந்தனர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதியும் ஓர் இன்ஸ்பெக்டரும்.செல்வகுமாரிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற ஆறாயிரம் ரூபாயில் ஆயிரத்து ஐநூறை, தனது அலுவலக உதவியாளரான ஆனந்தசேகருக்குக் கொடுத்திருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார். லஞ்சப் பணம் பாக்கெட்டிற்குப் போவதற்குள் வெளியே விவசாயி கெட்டப்பில் இருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தொடர்ந்து ஜவஹர் சாந்தகுமாரின் அலுவலகம் முழுக்க ரெய்டு நடத்திய அதிகாரிகள், கரூரில் அவர் தங்கியிருந்த அரசு வீடு மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளிலும் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இந்த ரெய்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை, பணம், சொத்து ஆவணங்களோடு விதவிதமான வெளிநாட்டு மதுவகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.


இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, கதை கதையாகச் சொல்லி அதிர வைத்தார் அவர்.``லஞ்சம் வாங்குவதிலும் இதைப் பாதுகாப்பதிலும் வல்லவர் இவர் என்பது, இவரைப் பற்றி நாங்கள் விசாரிக்கத் தொடங்கியபோதே தெரிந்து கொண்டோம். தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்கி வந்த இவர், ஆளுங்கட்சிப் பிரமுகர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. காரியம் சாதித்துக் கொண்ட மற்றவர்களைவிட, இவரை சிக்க வைக்க தருணம் பார்த்துக் காத்திருந்ததே அவர்கள்தான். ஆனால், சின்னத் தொகையில் சிறுபிள்ளைத்தனமாக சிக்கிக் கொண்டார் சாந்தகுமார்.



ஏற்கெனவே திருவள்ளூரில் ஆர்.டி.ஓ.வாக இருந்த காலத்தில் லஞ்ச வழக்கில் மாட்டிக் கொண்ட இவர்மீது, வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. போதிய ஆதாரம் இல்லை எனக் காரணங்காட்டி, அந்தத் தீர்ப்பு தனக்குச் சாதகமாக அமையும் பட்சத்தில், ஓரிரு மாதங்களில் தனக்கு கலெக்டராக பதவி உயர்வு கிடைத்துவிடும் என தனது நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறார்.அதே போல கரூர் - அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக சாலையின் இருபுறங்களிலும் நில ஆர்ஜிதம் செய்த வகையில் குறிப்பிட்ட அந்த நில உரிமையாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள் வருவாய்த்துறையினர். அதற்காக ஒதுக்கப்பட்ட இருபது கோடி ரூபாய்க்கான 600 காசோலைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காமல், கடந்த சில மாதங்களாக தனது பாதுகாப்பிலேயே வைத்திருக்கிறார் ஜவஹர் சாந்தகுமார்.


தங்கள் நிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பத்து சதவிகிதத்தை கமிஷனாகப் பெற்றுக்கொண்டு சிலருக்கு மட்டுமே காசோலைகளை வழங்கியிருக்கிறார். மீதமுள்ள காசோலைகளை நாங்கள் கைப்பற்றி அத்துறை தாசில்தாரிடம் ஒப்படைத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கச் சொல்லியிருக்கிறோம். அவரது வீட்டில் இருந்து இருநூறு பவுனுக்கு மேற்பட்ட நகைகள், நாலு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துப் பத்திரங்கள், விதவிதமான வெளிநாட்டு மது பாட்டில்கள், மூட்டை மூட்டையான தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் என ஏறத்தாழ ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன!'' என்றார் அவர்.


இது ஒருபுறமிருக்க, அரசு அதிகாரிகள் சிலரும் அவரோடு நெருங்கிப் பழகும் சிலரும் அவரைப் பற்றி காமக் கதைகள் சொல்லியும் அதிரவைக்கிறார்கள்.``ஐம்பத்தைந்து வயதைத் தாண்டிய இந்த அதிகாரி, எப்போதுமே முப்பது வயது வாலிபருக்குண்டான மிடுக்குடனும் தோற்றத்துடனும்தான் இருப்பார். மாலை மயங்கினால் மதுவோடும் மாதுவோடும் மயக்கத்தில்தான் இருப்பார். இவர் தனது குடும்பத்தைச் சென்னையில் வைத்துவிட்டு, தான் மட்டும் இங்கே தனியாக இருப்பதால் இவரது `ஆட்டங்கள்' எல்லாவற்றுக்கும் வசதியாகப் போய்விட்டது.


ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவரை இவர் தனது இன்பச் சுரங்கமாகவே வைத்திருந்தார். பல குடும்பப் பெண்களைக் கூட காரியம் சாதித்துக் கொள்ள இவர் பயன்படுத்தி வந்திருக்கிறார். குறிப்பிட்ட சில ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து இவரது காமப்பசிக்கு தீனிபோட தினமும் இளம் பெண்களை சப்ளை செய்திருக்கிறார்கள் சில உரிமையாளர்கள். அதே போல நில புரோக்கர்கள் சிலர் இவருக்கு பலவித புரோக்கர்களாகவும் செயல்பட்டிருக்கிறார்கள்!'' என்கிறார்கள் அவர்கள்.


பணிக் காலம் முழுக்க கைநிறையச் சம்பளம், ஓய்வுக்குப் பிறகு அதில் பாதி, பணிக் காலத்தில் இறந்தால் வாரிசுக்கு வேலை, பிராவிடண்ட் ஃபண்ட் என லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுத்தாலும், ஏழைகளின் வயிற்றில் அடிப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் எத்தனையோ அதிகாரிகளில் ஒருவர்தான் இப்போது மாட்டியிருக்கிறார். மற்றவர்களும் மாட்டும் நாள் எப்போதோ, அப்போதுதான் மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.


Thanks to Kumudam Reporter.

Thursday, December 25, 2008

ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்!

யார் தீவிரவாதி?

ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்! என்ற பெயரில் "அவுட்லுக் இந்தியா" இதழில் திருமதி. ஸ்மிதா குப்தா ஆங்கிலத்தில் எழுதிய செய்திக் கட்டுரை!


இக்கட்டுரையின் சாரம்சம் - அவுட்லுக் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள்:
கடந்த 2006ம் ஆண்டில் Nanded இல் நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது பஜ்ரங்தள்தான் என்பது மஹாராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புத்துறை (ATS) நடத்திய புலனாய்வில் வெளியானது.
பஜ்ரங்தள்ளின் முக்கியக் குறி பள்ளிவாசல்களாக இருந்தன. கடந்த 2003-லும் மூன்று பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் ATS & CBI இனரால் திட்டமிட்டு கைவிடப்பட்டது.


கடந்த ஆகஸ்ட் 2008 இல் கான்பூரில் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக வெடித்து இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இறந்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா உட்பட உலகமே அதிரும் வகையில் பல்வேறு இடங்களில் வண்டி வண்டியாக வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன.
பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகரங்களில் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளினால் உலகமே உறைந்து போயிருந்தது.


இதில் பாதிப்புக்குள்ளானவர்கள், வெடிகுண்டுகளில் இறந்து போனவர்களும் அவர்தம் உறவினர்கள் மட்டுமல்ல; இந்திய முஸ்லிம்களும் அடக்கம். இன்று வரை எந்த ஓர் இஸ்லாமிய இயக்கமோ, குழுவோ இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்காத சூழலில் இப்பழி இந்திய முஸ்லிம்களின் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டது இந்திய முஸ்லிம்கள் என்றால், நன்மையடைந்தது?
வேறு யார்? பிஜேபிதான்.

இல்லாத இயக்கங்கள் பெயரை உருவாக்கி பாமரன் கூட "முஸ்லிம்கள் தான் செஞ்சாங்களாம்" என்று முணுமுணுக்க வைத்தது பிஜேபியின் ஒரு வெற்றிகரமான போர் தந்திரம் என்றால் அது மிகையில்லை.
இந்திய சட்டதிட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகங்களைக் கொன்றொழிக்கவென்றே பிரத்யேகமான இராணுவ பயிற்சி முகாம்களை பகிரங்கமாக நடத்திவரும் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP)இன் இளைஞர்களுக்கான பிரிவாகச் செயல்பட்டு வரும் பிரிவு என்பது
அனைவரும் அறிந்த ஒன்று.


இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் அனைத்திற்கும் பின்புலமாகச் செயல்படுவது பஜ்ரங்தள் என்பது காவல்துறையினரின் புலனாய்விலிருந்து வெளிப்படும் விஷயங்கள்.
இங்கே கூறப்படும் எவையும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.
உதாரணத்திற்கு, மஹாராஷ்ட்டிராவின் தீவிரவாதத் தடுப்புத்துறையின் புலனாய்வில் வெளியான உண்மைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்:


ஓய்வு பெற்ற PWD பொறியாளரான எல்.ஜி. ராஜ்கொண்டுவார், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராவார். கடந்த ஏப்ரல் 2006 இல் மஹாராஷ்ட்ராவின் Nanded பகுதியில் உள்ள இவரது வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இவர் பலியானார். இவருடன் இறந்தவர் ஹெச்.பான்ஸே. காயமடைந்தவர்கள் எம்.கே.வேக், ஒய்.தேஷ்பண்டே, ஜி.ஜே.துப்தெவார் மற்றும் ஆர்.எம்.பாண்டே ஆகியோர்.இவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் அமைப்பின் கட்டளையைச் செயல் படுத்திக் கொண்டிருந்தவர்கள்.


பதிவான FIR அறிக்கையில் "சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியதால் அசம்பாவிதம் ஏற்பட்டது" என்று பஜ்ரங்தள் கூறியிருந்தது.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்த விசாரணையில் திடுக்கிடும் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாயின. அவற்றில் ஒன்று, மஹாராஷ்ட்ராவில் சில பள்ளிவாசல்களைக் குறி வைத்து நிகழ்த்த இருந்த பெரும் குண்டு வெடிப்புகளுக்கான தயாரிப்புப் பணியில் பஜ்ரங்தள் உறுப்பினர்களான மேற்கண்ட நபர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், வெடிகுண்டுகளை இடம் மாற்றும்போது தவறுதலாக வெடித்திருக்கிறது. ஆனால், அதிர்ச்சியில் உறைய வைத்த காவல்துறையின் ஜோடனையில், அனைத்து குண்டு வெடிப்புக்களையும் முஸ்லிம்கள் செய்ததாகக் காண்பிக்கும் வண்ணம் "உருவாக்கப்பட்ட தடயங்கள்" பதிவான FIR அறிக்கை அவசர அவசரமாக மாற்றி எழுதப்பட்டது.


புத்தம் புதிய FIR அறிக்கை, "இஸ்லாமியத் தீவிரவாதி"களே இதனைச் செய்ததாகக் கூறியது. தீவிரவாத அமைப்புக்கு பேரும் சூட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 16 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கையில் மேற்படி நடந்த குண்டு வெடிப்புக்கான வரைபடங்கள், பொருட்கள் இருந்ததாகவும் இவர்களே இதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்கள் என்றும் ரிமாண்ட் விண்ணப்பத்தில் எழுதப்பட்டபின் செய்தியாளர்களை அழைத்து, அழுத்தம் திருத்தமாக செய்தி கொடுக்கப்பட்டது.


கடந்த மே 4, 2006இல், இந்த வழக்கு ATS இன் கைக்கு மாறியது.அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதியில் ATSஇன் முதல் குற்றப்பத்திரிகையின்படி பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் பயங்கரவாதப் பின்னணி முழுமையாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது:இந்தியாவில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் முஸ்லிம்களே வைத்துக் கொண்டதுபோல் உருவாக்கப்பட்டு உலகத்தை உலுக்கிய, பேரிழப்பை உண்டாக்கியவர்கள் பஜ்ரங்தள் குழுவினர்.


இவர்கள் நிகழ்த்திய சில பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் பின்வருமாறு:
பர்பானி பகுதியில் உள்ள முஹம்மதியா பள்ளிவாசல் (நவம்பர் 2003)
ஜல்னா பகுதியில் உள்ள காதிரியா பள்ளிவாசல் (ஆகஸ்ட் 2004)
பர்பானி மாவட்டத்தில் உள்ள பூர்ணா நகரத்தின் மெராஜுல் உலூம் பள்ளிவாசல் / மதரஸா (ஆகஸ்ட் 2004)


அவுரங்காபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பெரும் குண்டு வெடிப்பினை நிகழ்த்துவதற்காக பஜ்ரங்தள் குழுவினால் தயாரிக்கப்பட்ட குண்டே தவறுதலாக வெடித்துள்ளது. இதில் பன்ஸே மற்றும் வேக் ஆகியோர் கடந்த மே மாதம் 2004 இல் அவுரங்கபாத் பள்ளிவாசலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட குறிப்புகளும், குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு அவ்விருவரும் கலந்தாலோசனை செய்து பேசிய பேச்சுகள் பதிவாகிய செல் போன்களும் சிக்கியுள்ளன.


இந்து இளைஞர்களைக் கவரும் வகையில் உடற்பயிற்சி மையத்தைத் துவங்கிய பன்ஸே மற்றும் பாண்டே, முஸ்லிம் எதிர்ப்பு வெறியை இந்துக்களுக்கு ஊட்டப் பல்வேறு செமினார்கள் / வகுப்புகளை நடத்தினர். அதில் குறிப்பாக முஸ்லிம்கள் என்றாலே இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் முஸ்லிம்களை அழித்து ஒழிக்க "ஏதாவது" செய்தே ஆக வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு இரத்தம் சூடேற்றும் பாடங்கள் எடுக்கப் பட்டன.


புனே, கோவா மற்றும் நாக்பூர் போஸ்லாவில் உள்ள இராணுவப் பயிற்சிக் கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியினை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் இவர்கள். மேற்கண்ட நகரங்களில் உள்ள RSS முகாம்களில் கராத்தே, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தவறுதலாக நடந்த குண்டு விபத்தில் பலியான ஹெச்.வீ.பன்ஸேவின் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒட்டு தாடி, ஒட்டு மீசை மற்றும் முஸ்லிம்கள் அணியும் உடைகள் ஆகிய பொருட்கள் கிடைத்தன.


இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் நோக்கம் என்ன?
எங்குப் பார்த்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்கள் சமூகத்தில் இருந்து அப்புறப் படுத்தப் படவேண்டும். அமைதி மார்க்கம் என்ற எண்ணம் கொண்டு இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை, இத்தகைய நிகழ்வுகள் மூலம் பெருமளவு குறைக்கப் படல் வேண்டும். மொத்தத்தில் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு நாடெங்கிலும் நிலவ வேண்டும் என்பதே இந்த சதித் திட்டத்தின் நோக்கம் என்பதை, கிடைத்துக் கொண்டு வரும் ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன.


ATS இன் புலனாய்வு அறிக்கை இவ்வாறு முடிகிறது:
பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் குறி மஹாராஷ்ட்ராவின் முஸ்லிம்களே!மஹாராஷ்ட்ரா முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பங்களில் மேற்கூறிய இரு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்."குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியது முஸ்லிம்களே!" என்று உலகிற்குக் காண்பிக்கும் வகையில் முஸ்லிம்களில் ஒருபிரிவினர் இன்னொரு பிரிவினருக்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக குண்டு வைத்ததாக ஜோடிக்கப் பட்டது
ATS துப்புத் துலங்கவும் அதன் புலனாய்வில் பல்வேறு உண்மைகளை உடைத்து வெட்ட வெளிச்சமாக்கவும் உதவிய, தான் எழுதிய Communalism Combat என்ற நூலை எழுதிய தீஸ்ட்டா செட்டால்வாட் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.


"ATSஇன் இந்தப் புலனாய்வு இந்திய மண்ணில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில் அதன் பங்கு மிக முக்கியமானதாகவும் உள்ளது. ஹிந்துத்துவாவின் சாயம் வெளுத்த நிமிடத்தில் இருந்து ATS மீது விழுந்த கனத்த அழுத்தம் காரணமாக அதன் அறிக்கைகளில் யூ-டர்ன் அடிக்க ஆரம்பித்தன. இதில் CBI இன் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாகும். இந்த வழக்கினை வலுவிழக்கச் செய்யும் அனைத்து அயோக்கியத் தனங்களையும் CBI செய்தது"ATI இன் புலனாய்வின் மூலம் வெளிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்ட பஜ்ரங்தள்ளும் அதைப் பின்னணியில் இருந்து கொண்டு இயக்கிய சங் பரிவார் ஆகியன CBI யின் குற்றப்பத்திரிகையில் மாற்றி எழுதப் பட்டன. அதாவது, வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது இறந்தவர்களுக்கும் எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் தொடர்பு இல்லை என்ற தொனியில் வழக்கின் போக்கினை CBI மாற்றியமைத்தது. (The CBI chargesheet, which Setalvad procured on an RTI application, reveals that the agency simply diluted the ATS's charges of criminal conspiracy involving terrorist acts.) இதன் மூலம் மஹாராஷ்ட்டிராவில் உள்ள எந்தவொரு பயங்கரவாத அமைப்பினையும் தொடர்பு படுத்தி விசாரிக்க வழியில்லாமல், தனிப்பட்ட வழக்காக CBI மாற்றி அமைத்தது.


இதன் மூலம் பஜ்ரங்தளுக்கோ சங் பரிவாரத்தின் எந்தவொரு குழுவுக்கோ வெடிகுண்டுகள் தயாரித்து நாட்டை நிர்மூலமாக்கும் மிகப் பெரிய சதித்திட்டத்தில் எந்த விதச் சம்பந்தமும் இல்லை என்று CBI கதை கட்டியது.கான்பூரில் கடந்த ஆகஸ்ட் 24, 2008இல் சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பஜ்ரங்தள் ஐச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ரா மற்றும் புபிந்தர் சிங் ஆகிய இருவரும் உடல் வெடித்துச் சிதறி இறந்தார்கள்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கான்பூர் மண்டல ஐ.ஜி.ப்பி. எஸ்.என்.சிங், "உத்தரபிரதேசத்தின் Special Task Force சிறப்புப் படையினர் நடத்திய புலனாய்வில் நாட்டையே சுடுகாடாக்கும் பெரும் வெடிகுண்டுகளுக்கான திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளியாகியுள்ளது" எனக் கூறியிருந்தார்.

பஜ்ரங்தள் தயாரித்த வெடிகுண்டுகளில் உள்ள கிரானேடுகள் இராணுவப் படையில் பயன்படுத்தும் இரகங்களைச் சார்ந்தவை என்று வெளியான தகவல் இன்னும் சந்தேகங்களைக் கூடுதலாக்குகிறது.இறந்துபோன பஜ்ரங்தள் புபிந்தர் சிங்கின் லாஜ்பட் நகரில் உள்ள ஸ்டுடியோவையும் அவனது வீட்டையும் காவல் துறையினர் சோதனையிட்டபோது அதிர்ந்து போயுள்ளனர்!. அங்கே சிக்கிய புபிந்தர் சிங்கின் டயரியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் ஃபெரோஜாபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் கடுமையான உயிர்ச்சேதம் விளைவிக்கும்படியாகக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்காக வைத்திருந்த குறிப்பேடுகள் சிக்கின. இதில் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதத்தில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தன என்பதைக் கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.கான்பூர் வெடிகுண்டு சம்பவத்தில் பஜ்ரங்தள்தான் குற்றவாளிகள் என்ற ரீதியில் வலுவான ஆதாரங்களுடன் வழக்கு சென்று கொண்டிருக்கும் சூழலில், அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் ஒரிஸா, கர்நாடகா, கேரளா என்று மாநில வாரியாக கிறித்துவர்கள் மீது வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறது பஜ்ரங்தள்.

மனிதம் எனும் உணர்வை ஆழமாகக் குழி தோண்டி புதைத்து, மதத்தினைக் காரணம் காட்டி, தொடர்ந்து இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் ஹிந்துத்துவா எனும் தீய சக்தி நாட்டில் திகிலைத் தொடர்ந்து கிளப்பி வருகிறது.


இந்திய நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வரும் இந்திய மக்களுக்கு, இத்தகைய ஆதிக்க சக்திகளை அடியோடு வேரறுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே ஆறுதலாய் இருக்கும்.


பஜ்ரங்தள் : பின்னணி என்ன?
ராம் ஜானகி யாத்ராவின் பாதுகாப்பிற்கு ஒரு குழு என்ற பெயரில் கடந்த 1984 இல் விஷ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கிய அமைப்பே பஜ்ரங்தள் ஆகும்.அதன் பின் கடந்த 1993 இல் உத்தரபிரதேச எல்லையைத் தாண்டி மிகப் பெரிய அளவில் விஸ்தீரணம் செய்யப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங்தள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.வருடங்கள் உருண்டோட, ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளின் பக்கம் பஜ்ரங்தள்ளின் கவனம் திரும்பியது. பிரச்னை தீர்க்க 'அவதாரம் எடுத்ததாக' அதன் தலைவர் ப்ரகாஷ் ஷர்மாவினால் வர்ணனை செய்யப்பட்டது.
"பசுக்களை கொல்பவர்களையும், ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என்று நாங்கள் அடையாளம் காட்டும் முஸ்லிம்களையும் இந்திய அரசு தண்டிக்காவிட்டால், அரசின் அப்பணிகளை நாங்களே கையில் எடுத்துக் கொள்வோம்!" - உத்தரபிரதேசத்தின் வி.ஹெச்.ப்பி தலைவரான ருக்குன் சிங் பாயல் பஜ்ரங்தள் பற்றிக் கூறிய வாக்கு இது!


இந்தியாவின் குருட்டுப் பார்வை!
குற்றமிழைத்தவர் சிறுபான்மையினர் என்றால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் இந்திய மாநிலங்கள், சங்பரிவாரங்கள் சட்டத்தை மீறுகையில் சும்மா இருப்பதேன்?


அவுட்லுக் இதழின் கேள்விக்கு சிலரின் பதில்கள்:
"கர்நாடகா மற்றும் ஒரிஸ்ஸாவில் பஜ்ரங்தள் மேற்கொண்டு வரும் வெறியாட்டங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் அரசு இயந்திரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன!. கிறித்துவர்கள் ஓட்டுவங்கிகளாக இல்லை என்பது அரசின் நினைப்பாக இருக்கலாம்."
-டொமினிக் இம்மானுவேல், டெல்லி கத்தோலிக் சர்ச் செய்தித் தொடர்பாளர்


"இது இந்திய முஸ்லிம்களின் அழிவுக்காலம் என்று சொல்லலாம். ஏனெனில் அநீதியான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று காண்பிப்பதன் மூலம் தேசிய அளவில் ஒரு நபர் புகழ் பெறுகிறார்
-ஷாஹித் சித்திக்கி, ஆசிரியர் - நயி


மாநில அளவில் நடந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. இதில் சிறுபான்மையினரைக் குற்றம் சொல்வது தவறு."
-குர்சரன் தாஸ், பத்திரிகையாளர்


ஹிந்துத்துவக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும்போது மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவதற்கு என்ன காரணம்?
ஆம்
இல்லை
அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த நோக்கம்தான் காரணம்
81%
19%
நடவடிக்கை எடுத்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதால்...
68%
32%
காவல்துறையில் பெரும்பாலோனோர் ஒருமதச் சார்புடன் நடப்பதால்...
55%
45%
இந்திய அரசு பஜ்ரங்தள்ளைத் தடை செய்ய வேண்டுமா?
69%
27%
பஜ்ரங்தள்ளின் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகள், பயங்கரவாதத்தில் சேருமா?
70%
27%

thanks to : அவுட்லுக், And Taminadus.blogspot.com

Tuesday, December 23, 2008

அரசியல்வாதிகளில் அந்துலே என்றொரு மானஸ்தன்

நாடாளுமன்றத்தில் நெறிக்கப்படும் உரிமைக்குரல்

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ.ஆர் அந்துலே, மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யும் அளவுக்கு நிர்பந்திக்கப்பட்டார்.

இந்துத்துவ பாசிச சக்திகள் கர்கரேயின் மரணத்தால் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மகிழ்ச்சியில் மண் அள்ளிப்போடும் ஒரு கேள்வியைத் தான் அந்துலே எழுப்பினார். மராட்டிய மாநிலத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஸ்ரீ காந்த் புரோகித் என்ற ராணுவ அதிகாரி, அமிர்தானந்தா என்ற ஆண் சாமியார், பிரக்யாசிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் உட்பட 10 இந்துத்துவ தீவிரவாதிகளின் கூட்டுச் சதியைக் கண்டறிந்து கர்கரே தேசத்துக்கு வெளிப்படுத்தினார். இது, தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்கள் என்று கூறிவந்த இந்துத்துவ பாசிஸ்டுகள் வயிற்றில் சயனைடை கரைத்தது.


முஸ்லிம்களின் கணக்கில் வரவு வைத்த சாமியார்களின் குண்டுவெடிப்புகளை சல்லடை போட்டு அலசியவர் என்பதால் கர்கரேயின் திடீர் மரணம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் தந்தது. தில்லி ஜாமியா நகர் துப்பாக்கி சூட்டில் முஸ்லிம் இளைஞர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என்று கூறப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சர்மாவின் சடலப் பரிசோதனை காவல்துறை அறிவித்த தகவலை புரட்டிப் போட்டது அனைவரும் அறிந்ததே. பின் மண்டையில் சுடப்பட்டு முன் நெற்றி வழியே துப்பாக்கி ரவை வெளியேறியதாக மருத்துவ அறிக்கை கூறியது.


இச்சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், காவல்துறை அதிகாரிகளை தீவிர வாதிகள் மட்டும் கொல்வதில்லை என்ற பூடகமான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. இந்துத்துவ சக்திகளால் கடுமையாக கண்டிக்கப்பட்ட கர்கரே தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறியிருந்தார். இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் மும்பை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை சாதகமாக்கிக் கொண்டு வேறு சக்திகள் கர்கரேயை கொன்றிருக்க முடியுமோ என்ற சந்தேகம் பரவலாக உள்ளது. இதையே அந்துலேயின் கேள்வியும் உறுதி செய்கிறது. மக்கள் மனதில் உள்ள எண்ணங்களையே தனது கேள்வி வெளிப்படுத்தியதாக அந்துலே கூறியுள்ளார்.


மும்பை நகரத்தை பயங்கரவாதிகள் தாக்கிக் கொண்டிருந்த போது அந்த பயங்கரவாதிகள் சுடும் இடத்தை நோக்கி மூன்று முக்கிய அதிகாரிகளை வழி நடத்தியது யார் என்று தான் நாடாளுமன்றத்தில் அந்துலே கேள்வி எழுப்பினார். இக்கேள்வியை எதிர்கொண்ட நேரத்தில் ஜனநாயகத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆவேசக் குரல் எழுப்பினர், வெளிநடப்பு செய்தனர். அவையில் குளறுபடி செய்ய இதனை ஒரு வாய்ப்பாக்கினர். தாவூத் இபுராஹிம், ஐ.எஸ்.ஐ. யின் கைப்பாவை என்றும் அந்துலேயை அவமானப்படுத்தினர். அந்த நேரம், லல்லு பிரசாத்தை தவிர வேறு யாரும் ஆதரவாக பேசவில்லை. காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மௌனிக்க, அதிலும் ஒரு கூட்டம் அந்துலேவுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியது.


பிரதமர் மன்மோகன் சிங் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். தனது கட்சியை சார்ந்த ஒருவர் அதுவும் குறிப்பாக, சிறுபான்மை நலத்துறை சார்ந்த அமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இருக்கும் உரிமை குறித்து பிரதமர், சபாநாயகர் முதலானோர் பேசாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. தனது கட்சியே தனக்கு ஆதரவளிக்காததும், அதில் இருந்தே எதிர்ப்புக் குரல் எழுந்ததும், பிரதமரே மௌனமாக இருந்துள்ளதும், அந்துலே தனது பதவியை சுய இழப்பு (ராஜினாமா) செய்யக் காரணமாக அமைந்தது. கர்கரேயின் திடீர் மரணத்தால் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியில் குறைபாடு வந்து விடுமோ என்ற ஆதங்கம் சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கு ஏன் வரக் கூடாது? இதைக்கூட கேட்காமல் பின்னர் எதற்காக அவர் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்க வேண்டும். அதே நேரம் கர்கரே பற்றி நரேந்திர மோடி கூறிய விமர்சனம் விவாதிக்கப்படுவதில்லை என்பதையும் கவனிக்க. மோடி விமர்சித்த காரணத்தால் அவர் வழங்கிய நிவாரண தொகையை கர்கரே மனைவி வாங்க மறுத்தது பற்றி விவாதிக்கப்படுவதில்லை.


பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்படக்கூடாது என்பதற்காகவே இந்த வருடம் டிசம்பர் 6க்கு பிறகு நாடாளுமன்றத்தை கூட்டியிருக்கும் காங்கிரஸிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அமரும் பொதுக்கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை, மனக்குறைகளை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் தனது அமைச்சர் பொறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்ட அமைச்சர் அந்துலே பாராட்டுக்குரியவர்.சிறுபான்மை நலனுக்காக கேள்வி கேட்க முடியாத ஒரு பதவி தனக்குத் தேவையில்லை என்று பதவியை இழக்க முன்வந்துள்ளார் அந்துலே.


குலாம் மஹ்மூது பனாத்வாலா போன்ற உறுதிமிக்க அறிவுசார் முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய தருணங்களில் எல்லாம், பல கட்சியினர், அவர்களது உரையின் குரல்வளையை நெறிக்கப்பார்ப்பார்கள். இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக் கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே சிறுபான்மை உறுப்பினர்கள் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். அதனால் அதிர்வுகள் அதிகரிக்கின்றன. அதே நேரம், கேள்வி கேட்டும் உரிமைகள், முஸ்லிம் சமூகத்திற்கு நாடாளுமன்றத்திலும் மறுக்கப்படுகிறது என்ற உண்மை அந்துலே வழியாக வெளிப்படுகிறது. அந்துலேவுடன் இணைந்து குரல் கொடுக்கவும் வெளிநடப்பு செய்யவும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்திருக்குமானால் பாசிஸ்டுகளின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும். நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கப்படுவதற்கு எதிராக முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற வேண்டும்

Thanks to TMMK website.

Thursday, December 18, 2008

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?

நாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் கேள்வியை என்னிடம் கேட்டான். சரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.
"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ!' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.


'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப்படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை. சில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.
நான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: "எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது. ஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர்".


மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலைகுனியச் செய்கின்றன. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது!
ஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.


ஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கல்ல; மாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும். முதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும். ஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.


தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளை கொல்லும்படி போதிக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.
இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை. 1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.


சமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது. மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர். ஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.


பாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர். இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது!.


ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.


'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? இந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.


தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது. ஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை. "தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மை பாராட்டுவார்கள்" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள். சமீபத்திய டெல்லி தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
மத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது. மதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும். அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.


-ஃபிரோஸ் பக்த் அஹமது (http://www.twocircles.net/2008dec14/sir_why_are_all_terrorists_muslims.html)
(கட்டுரையாளர் விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார்).

Thanks to Satyamargam.com

Tuesday, December 16, 2008

ஆப்கான் தீவிரவாதிகள் பிரான்ஸுக்கு மிரட்டல்




கடந்த நவம்பர் மாதம் தாலிபானின் ராணுவ தளபதி "பிரெஞ்சு துருப்புக்கள் ஆப்கானை விட்டு வெளியேறாவிட்டால் இதன் எதிரொலி பாரிஸில் கேட்கும்" என்று சொன்னதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டது.



"ஆப்கான் புரட்சி முன்னணி" என்ற பெயரில் பிரெஞ்ச் செய்தி ஏஜென்ஸிக்கு அனுப்பப்பட்ட ஒரு மிரட்டல் கடிதத்தில் "ஆப்கானில் இருந்து பிரெஞ்சு ராணுவம் வரும் பிப்ரவரி 2009 க்குள் திரும்ப வேண்டும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிஸில் உள்ள மிகப் பிரமாண்டமான "ப்ரெந்தாம்" என்கிற கடையில் பல இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது டிசம்பர் 17,புதன்கிழமை வெடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கவே பரபரப்பானது பாரிஸ் நகரம்.



அது போல் அந்த குறிப்பிட்ட கடையின் ஆண்கள் பிரிவில் உள்ள டாய்லெட் பகுதியில் குண்டு கண்டெடுக்கப்பட்டது. அது இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால் அவர்களின் நோக்கம் மிரட்டல் அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Wednesday, December 10, 2008

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?

யூ ட்யூபில் பாபர் மசூதி பற்றி மேய்ந்துக் கொண்டிருந்த போது கிடைத்த விடியோ தான் இது. கேள்வியும் பதிலும் சுவாரஸ்யமாக இருந்ததால் பதிவிட்டுள்ளேன்.


இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான். தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது. மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

வஞ்சிக்கப்பட்டு, அபகரிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட அந்த நிகழ்வுக்குப் பின் தான் இந்தியாவில் பயங்கரவாதத்தின் துன்பப் பயணம் தொடருகிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படுவதற்கு சமமே. சிறுபான்மை சமூகத்திற்கு அனீதம் இழைப்பது ஒரு ஜன நாயக நாட்டிற்கு அழகல்ல.

Saturday, December 6, 2008

அத்வானியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்: பாக். அரசியல்வாதிகள் கோரிக்கை


தாவூத் இப்ராகிமை ஒப்படைக்கக் கோரும் இந்தியா முதலில் அத்வானி உள்ளிட்டோரை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என லஷ்கர் இ தொய்பா அமைப்பும், சில பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் குதர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் இந்தக் கோரிக்கையை அரசியல்வாதிகள் சிலர் வைத்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள், தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவர், ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோருவது போல, எல்.கே.அத்வானி போன்றோரை நாமும் கேட்க வேண்டும்.இவர்கள் பாகிஸ்தானின் மோஸ்ட் வான்ட்டட் பட்டியலில் உள்ளவர்கள். இவர்களை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்தியா முன்வர வேண்டும் என்று கோரினார்களாம்.

இருப்பினும் பெரும்பாலான தலைவர்கள் இந்தியாவுடன் அமைதியாக போகலாம். இந்தியத் தரப்பில் நிலவும் கோபத்தைத் தணிக்க தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் இன்னொரு முகமான ஜமாத்துல் தாவா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா முஜாஹித் மற்றும் அந்த அமைப்பின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,எல்.கே.அத்வானி மற்றும் இந்துத் தீவிரவாதிகளை நாடு கடத்தக் கோரும் உரிமை பாகிஸ்தானுக்கு சட்டப்படி உள்ளது.லஷ்கர் இ தொய்பா தலைவர் சயீத் ஒரு மதத் தலைவர். அவர் எந்த நேரத்திலும், எப்போதும், தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. அதுபோன்ற செயல்களிலும் அவர் ஈடுபட்டதில்லை.அவர் எந்தக் குற்றத்தையும் செய்ததில்லை. பாகிஸ்தானிலும் சரி, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் சரி அவர் எந்தவிதமான தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்று கூறியுள்ளார்.

ஏன் அத்வானியை கேட்கிறார்கள்?:

அத்வானியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் பாகிஸ்தான் தரப்பில் கோரப்படுவது இது 2வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.தாவூத், சயீத், மசூத் அஸார் ஆகியோர் உள்ளிட்ட 20 பேரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு விடுத்த கோரிக்கைக்குப் போட்டியாக அத்வானி உள்ளிட்ட சிலரின் பட்டியலை கடந்த 2001ம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியாவிடம் தந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், கராச்சி போலீஸ் ஆவணங்களின்படி அத்வானி உள்ளிட்ட 12 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்.1947ம் ஆண்டு பாகிஸ்தானின் தந்தையான முகம்மது அலி ஜின்னா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களைக் கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.இதுதொடர்பாக ஜாம்ஷெட் குவார்ட்டர்ஸ் காவல் நிலையத்தில் அத்வானி உள்ளிட்டோர் மீது 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் முதல் தகவல் அறிக்கை எண் 4/47 ஆகும்.முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தவர் இன்ஸ்பெக்டர் தூத்தி ராம். அத்வானி உள்ளிட்ட 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.அவர்கள் மீது, முகம்மது அலி ஜின்னா, பிரதமர் லிகாயத் அலி கான், காஜா நசிமுதீன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டனர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 6 பேரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்றார் அவர்.

அத்வானியை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதை விட முக்கியமான பிரச்சினைகள் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது

News source. Thatstamil

Wednesday, December 3, 2008

தினமலருக்கு எனது கண்டனம்

பயங்கரவாதிகள் இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்: இந்திய கோரிக்கையை நிராகரித்து அதிபர் சர்தாரி திமிர் பேச்சு

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2423&cls=row3

.மேற்கண்ட தலைப்பில் தினமலர் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் இந்திய முஸ்லிம்களை தவறாக சித்தரித்து தன் வழமையான பாணியை (முஸ்லிம் வெறுப்புணர்வு) கையாண்டிருக்கும் அவ்விதழை கண்டிக்கிறேன். அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.....





""பார்லிமென்ட் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாக்.கிற்க்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் முஸ்லிம்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்றும் மத்திய அரசு அஞ்சிகிறது. அதனால் என்ன நடவடிக்கை என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.""

இந்த வரிகளை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வரிகளின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?


இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை விரும்பவில்லை என்கிறீர்களா? அல்லது கார்கில் போரை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையா,? அல்லது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் அபிமானியாக இருக்கிறார்கள் என்கிறீர்களா,? மும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியாக தெரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் மத்திய அரசுக்கு நெருக்கடியே தவிர நீங்கள் சொல்வது போல அல்ல.


ஊடகங்கள் மூலமாக இதுபோல பொத்தாம்பொதுவாக இந்திய முஸ்லிம்களைச் சாடுவதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் செய்தியை படிக்கும் வாசகனின் மனதில் தோன்றும் முதல் எண்ணமே பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய முஸ்லிம்கள் தான் தடையாக உள்ளது போல சித்தரித்துள்ளீர்கள்.

மாலேகானில் குண்டு வெடித்த போதும் இதே பத்திரிக்கை மசூதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தாக கற்பனையான ஒரு புலனாய்வை எழுதி யாரையோ திருப்தி படுத்தினார்கள். பின்னர் நடந்த விசாரணையில் அது சங்பரிவாரங்களின் செயல் என்பது நிரூபனமாகி வருகிறது.


தினமலர் திருந்த போவதில்லை; நாம் தான் புறக்கணிக்க வேண்டும்.

Thursday, November 27, 2008

மும்பை தாக்குதலில் "மாலேகான்" ஹேமந்த் கொலை-- பலன் யாருக்கு?


மும்பை: மிக நேர்மையான அதிகாரியாக அறியப்பட்ட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மிகத் திறமையாக விசாரித்து வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே (54), நேற்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியாகி விட்டார். தாஜ்ம ஹால் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அடக்கும் முயற்சியில் போலீஸ் படை இறங்கியபோது, தலையில் ஹெல்மட், மார்பில் புல்லட் புரூப் ஜாக்கெட்டுடன் நேரடியாக களம் இறங்கினார் ஹேமந்த் கர்கரே. அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கர்கரேவின் பெயர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானது. அனைவருமே முஸ்லீம் தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, இதில் இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற பயங்கர உண்மையை வெளிக்கொணர்ந்தது கர்கரே தலைமையிலான ஏ.டி.எம். குழு.


அதன்பின்னர் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் என அடுத்தடுத்து அதிரடியான கைதுகள் நடந்தன. மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்களையும் ஏ.டி.எஸ். வெளியிட்டு வந்தது. நேற்று காலையில் கூட பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூரை, போலீஸ் காவலில் அனுமதிக்க மும்பை கோர்ட் அனுமதிக்க மறுத்தது குறித்து கவலை தெரிவித்திருந்தார் கர்கரே. பிரக்யா சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மையான தகவல்கள் கிடைக்கும், விசாரணையும் விரைவாக நடக்கும் என அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இரவே அவரது மூச்சை நிறுத்தி விட்டனர் தீவிரவாதிகள்.
1982ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர் கர்கரே. இந்திய அரசின் உளவுப் பிரிவான 'ரா' வில் முன்பு இருந்தவர். அப்போது ஆஸ்திரியாவில் 9 ஆண்டுகள் பணியாற்றினார். மிகவும் நேர்மையான, கட்டுப்பாடான, ஸ்ட்ரிக்ட்டான அதிகாரி என பெயரெடுத்தவர் கர்கரே. இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அவர் தனது ரா பணியை முடித்து விட்டு மகாராஷ்டிரா திரும்பினார். உடனடியாக அவரை மகாராஷ்டிர அரசு ஏ.டி.எஸ். தலைவராக நியமித்தது. இதைத் தொடர்ந்தே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. தானேவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கர்கரேதான் தீவிரமாக செயல்பட்டு துப்பு துலக்கினார். அதேபோல பான்வேல், வாஷி குண்டுவெடிப்புச் சம்பவங்களிலும் கர்கரே தலைமையிலான டீம்தான் துப்பு துலக்கியது. ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்தான் கர்கரேவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது. தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம், நாம் போலியான சாட்சியங்களை, ஆதாரங்களை உருவாக்கக் கூடாது. நமது கடமையை நாம் செய்வோம். நீதி்மன்றம் மற்றதை முடிவு செய்யட்டும் என்பாராம். கடைசியாக அவர் என்டிடிவிக்கு அவர் பேட்டியளித்தார். நேற்று அவர் அளித்த பேட்டியின்போது பிரக்யா சிங்கை துன்புறுத்தியதாக அத்வானி குற்றம் சாட்டுவது குறித்து கேட்டபோது, எங்கள் மீது புகார் கூறப்படும்போது அதைக் கேட்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். ஆனால், சாத்வி பிரக்யா சிங் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை. சட்டவிதிப்படியே நாங்கள் செயல்படுகிறோம். கோர்ட் எப்போதெல்லாம் உத்தரவிடுகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் குற்றவாளிகளை முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறோம். துன்புறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். கர்கரேவின் மரணம், மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நிச்சயம் மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.
விஜய் சலஸ்கர்
அதேபோல 75 கிரிமினல்களை சுட்டு வீழ்த்தி என்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்தவரான விஜய் சலேஸ்கரும் நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்டார். மும்பையை நடுங்க வைத்த பல குற்றவாளிகளையும், கிரிமனல்களையும் போட்டுத் தள்ளியவர் சலேஸ்கர். சில காலம் அமைதியாக இருந்து வந்த இவரது காவல்துறை வாழ்க்கை சமீபத்தில் மீண்டும் சூடு பிடித்தது. சமீபத்தில்தான் குற்றப் பிரிவு, கடத்தல் தடுப்புப் பிரிவில் இவர் பணியில் சேர்ந்தார். அதேபோல கூடுதல் காவல்துறை ஆணையரான அசோக் காம்தேவும் நேற்று உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர காவல்துறையில் முக்கியமான அதிகாரிகளில் இவரும் ஒருவர். ஒரே நாளில் மூன்று முக்கியமான காவல்துறை அதிகாரிகளை பறி கொடுத்து விட்டு மகாராஷ்டிர அரசும், காவல்துறையும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.


News source: Thatstamil

Saturday, November 22, 2008

இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா கண்டனம்

இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா


புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 13:18 IST )

மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.


டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிரவின் சர்மா, மேலும் கூறியதாவது " பா.ஜனதா கட்சி இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு மீண்டும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது.முன்னர் அந்த கட்சி ராம ஜென்ம பூமி பிரச்சனையை கிளப்பி அரசியல் ஆதாயம் அடைந்தது.தற்போது மாலேகாவ் குண்டு வெடிப்பு மற்றும் அது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து தலைவர்களை பற்றிய உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது. பா.ஜனதா மற்றும் சங் பரிவார் ஆகிய அமைப்புகள் இந்துக்களை ஏதாவது ஒரு பிரச்சனையை முன்பவைத்து இந்துக்களை முட்டாளாக்கி வருவது எங்களை சோர்ந்து போகச் செய்துவிட்டது. இப்போது அவர்கள் மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு சட்ட உதவி அளிப்பதாக கூறி மக்களிடமிருந்து நிதி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.மாலேகாவ் குண்டு வெடிப்பையோ அல்லது இதர பயங்கரவாத செயல்களையோ அகில இந்திய இந்து மகாசபா ஆதரிக்கவில்லை.இதுவரை இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும் நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்று பா.ஜனதா, விஎச்பி, பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ் மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை கேளுங்கள்" என்றார்.இதனிடையே இந்து மகாசபாவின் இந்த குற்றச்சாற்று குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேதக்ரிடம் கேட்டபோது, " காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாற்றுகளை கூறியிருந்தால் நாங்கள் அதற்கு பதிலளித்திருப்போம்.இவர்களுக்கு ( இந்து மகா சபா ) பதிலளித்து என்ன பயன் ஏற்படப்போகிறது ? என்ன அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது ? " என பதிலளித்தார்.


இந்துத்துவ பயங்கரவாதிகளை இந்து சமூகமே அடையாளம் கண்டுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பா.ஜ.க வின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை இனிமேலும் அனுமதியோம். இந்துக்களை ஒன்றுப்படுத்த இஸ்லாமியர்களை விரோதியாக்கப் பார்க்கும் இந்த கேவலமான அனுகுமுறையையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். இந்து மகா சபை இதை உணர்ந்து அறிக்கை விட்டது மிகவும் பாராட்டுக்குரியது.

உதயன்

Friday, November 21, 2008

ஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்!

ஐ.பி!

* நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா?

* புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பின்னணியில் ஐயத்திற்கிடமாக ஏதும் இருக்கிறதா?

* முக்கிய அரசியல் தலைவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளையக் கூடிய சாத்தியம் நிலவுகிறதா?

* உள்நாட்டில் தீவிரவாதம்/குழப்பம் உருவாகக் கூடிய சாத்தியமுள்ள இடங்கள், சூழ்நிலைகள் யாவை?

ஆகியவை குறித்துத் தகவல்கள் சேகரிப்பது ஐபி என்று சுருக்கி அழைக்கப் படும் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ (Intelligence Bureau) ஏஜென்ஸியின் வெளிப்படையான நடவடிக்கைகளாகும்.
ஆனால், இந்திய உளவுத்துறைக்குத் தகவல் சேகரித்து அனுப்பும் நிறுவனமான இந்த இரண்டெழுத்து நினைத்தால் தனியொரு மனிதனுடைய வாழ்க்கையைத் தடம் புரள வைக்கலாம்; வளர்ந்து வரும் ஓர் அமைப்பு/கட்சியை இரண்டாக உடைக்கலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் ஆட்சியைக் கலைத்து விடலாம்; இல்லாத ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்து, அதுதான் இயல்பான உண்மை என்பதுபோல் மக்கள் மத்தியில் உலா விடலாம். இவற்றுள் எதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்வது யார் என்று வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது அத்துணை எளிதன்று.

இன்றைக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. அரசு 1990இல் கலைக்கப் பட்டதன் பின்னணியில் இருந்தது ஐபிதான். அனைத்து அரசு இயந்திரங்களையும் கையில் வைத்துக் கொண்டு அன்றைக்கு(ம்) இயக்கிக் கொண்டு முதல்வர் பதவியிலிருந்த கருணாநிதிக்கே அப்போது இந்த உண்மை தெரியாது!

அரசியல் கட்சிகள், அதீத வளர்ச்சியைப் பெறும் சமுதாய அமைப்புகள் அடிக்கடி உடைகின்ற செய்தியைப் படிக்கும்போது, தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றுதான் சாதாரண மக்கள் நினைப்பார்கள். ஆனால், அத்தனை கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியத்தை ஐபி செய்யும் இரகசியம் வெளியே யாருக்கும் தெரியாது. உயர் மட்டத் தலைவர்கள் காதில் ஊதப் படும் செய்திகளை உருவாக்குவது மட்டுமின்றி, 'ஆசிரியருக்குக் கடிதம்' எழுதுவதுவரை அத்தனை சேவை(!)களையும் செய்பவர்கள் ஐபியின் ஐப்பீஎஸ் ஆஃபிஸர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஐபி உருவாக்குவது போலிக் கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல; போலித் தீவிரவாதிகளையும்தான் என்பதே சான்றுகளால் நிறுவப் பட்ட இத்தலையங்கத்தின் கரு. அது, இறுதியில் சொல்லப் பட்டுள்ளது. ஐபி என்ற புலிவாலைப் பிடித்தவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் கேரளாவும் காஷ்மீரும் ...

"கஷ்மீரில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் மலையாளிகளும் அடக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசும் காவல்துறையும் கேரளத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காட்டு தர்பார், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்" எனப் பிரபல கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கப் பட்டவர்களாக காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நெருங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலாபம் அடைய இந்த என்கவுண்டரைப் பயன் படுத்திக் கொள்வதற்கு இடதுசாரிகளும் சங் பரிவாரமும் முயல்கின்றன. கஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காகச் சென்றவர்களுள் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குக் கூச்சப் படாத கொச்சியிலுள்ள கிரிமினல் குண்டர் குழுவில் இருந்த சிலரும் அடக்கம் என்பதே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல்களாகும். இதிலிருந்து தெளிவான திட்டத்துடன் பணம் கொடுத்து, ஏதோ ஓர் ஏஜன்ஸி குற்றப்பின்னணியுடைய மலையாளி இளைஞர்களைத் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காக உருவாக்குகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்த ஏஜன்ஸி, அரசின் ஐபியோ சங் பரிவார தனி அமைப்புகளோ காஷ்மீர் அமைப்புகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதுமுள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்தால் அதன் பலனை அடைந்து கொள்வது ஆர்.எஸ்.எஸ்ஸாகும். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதே இவர்களின் இலட்சியமாகும். இக்காரணத்தினாலேயே இச்சம்பவங்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக நான் அவர்களைச் சந்தேகிக்கிறேன்.

இந்தியாவில் ஐபியே நேரடியாகக் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. ஜாமிஆ சம்பவத்தில் காவல்துறையின் பொய்முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே?.

'ஃபாயிஸின் தாய் தேச விரோதியான மகனின் உடலைக்கூடப் பார்க்க மறுத்ததைப் பலரும் பெரிய தேசப்பற்றாக உயர்த்திக் காட்டுகின்றனர். பிறந்த ஊரில் இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ள எளிய தாயொருத்தி, நிர்பந்திக்கப் பட்டச் சூழலில் கூறிய வாசகங்களாகும் அவை. கஷ்டப்பட்டுப் பெற்ற எந்த ஒரு தாயும் தன் மகனைப் பற்றி மனப்பூர்வமாக இவ்விதம் கூறமாட்டாள்.

நேற்று வரை கிறிஸ்தவனாகவும் ரவுடியாகவும் வாழ்க்கை நடத்திய வர்கீஸ், திடீரென யாசிராக மாறி கஷ்மீரில் கொல்லப்பட்ட உடன், அதன் முழுப் பொறுப்பையும் இஸ்லாம் ஏற்றெடுக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. கொச்சியில் தம்மனம் ஷாஜி உட்பட எல்லா குண்டர்களும் கஷ்மீரில் என்றல்ல, எங்கு போய்க் கொல்லப்பட்டாலும் மக்களிடையே எவ்வித எதிர்ப்புகளும் உருவாகப் போவதில்லை.


கிரிமினல்களை மதம் மாற்றி, தீவிரவாதச் செயல்பாடுகளில் பங்கு கொள்ள வைத்து, ஒரு மதத்துக்குக் களங்கம் உண்டாக்குவதற்கானக் கூட்டுசதி வரை நடக்கலாம் என நான் சந்தேகப் படுகிறேன். காவல்துறையும் ஊடகங்களும் கூறுவது எதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. காவல்துறையும் ஊடகங்களும், "மஅதனி சிறையிலிருந்து வெளியானால் நாட்டில் கலவரம் உருவாகும்" என அச்சுறுத்தி வந்தனர். பின்னர் அது என்ன ஆனது?" என்று பாலசந்திரன் கேள்வி எழுப்பினார்.


"கஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட கேரள முஸ்லிம்களை, காஷ்மீருக்குக் கடத்திக் கொண்டு போய்ச் சேர்த்ததன் பின்னணியில் ஐபி செயல்பட்டுள்ளது" என்றும் "இது நாட்டில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி" என்றும் இந்திய தேசிய லீக்கின் அகில இந்தியத் தலைவர் பேரா. முஹம்மது சுலைமான் குற்றம் சாட்டியுள்ளார்.

"சிறிய கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்திச் சிறை வைப்பதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கிறது. போலித் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர். பின்னர், தாக்குதலில் 'முஸ்லிம் தீவிரவாதி'கள் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான தங்களின் பிரச்சாரங்கள் சரியானவைதாம் என்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே திணிப்பதற்காகக் காவல்துறையும் இராணுவமும் இணைந்து என்கவுண்டர் நாடகங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் மதசார்பின்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய உளவுத்துறைகூட, மக்களிடையே அச்சத்தையும் மனக் கலவரத்தையும் விதைத்து, நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றது. காஷ்மீருக்குக் கேரளத்திலிருந்து இளைஞர்களைக் கடத்தி, அங்கு வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஐபிதான் செயல்பட்டுள்ளது" எனக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கக் கேரளத்திற்கு வந்த பேரா. முஹம்மது சுலைமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட, காவல்துறையும் ஹிந்துத்துவ சக்திகளும் இணைந்து போலித் தீவிரவாதிகளை உருவாக்குகின்றன என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கதை-வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் என்பது நாடகம்/திரைப்படங்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல; அவை ஐபிக்கும் சொந்தமானவைதாம் என்பது வெள்ளிடை மலையாகி விட்டது.

டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் மற்றும் மத்திய உளவுத்துறையின் இன்டலிஜன்ஸ் பியூரோ (ஐபி) என்றழைக்கப் படும் நுண்பிரிவு ஆகியவற்றால், "இன்ஃபார்மர்" என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் உளவாளியாக நீண்ட காலம் புலிவாலைப் பிடித்த கதையாகச் செயல்பட்ட இர்ஷாத் அலி என்பவர் திகார் சிறையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியக் கடிதத்தில் இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்கள் அடங்கியுள்ளன.

காஷ்மீரில் இயங்கும் லஷ்கரே தொய்பாவில் சேர்ந்து கொள்வதற்கும் பாகிஸ்தான் எல்லையில் அதற்கான பயிற்சி மையத்தில் இணைவதற்கும் கட்டாயப் படுத்திய ஐபியின் கட்டளைகளுக்கு இணங்காததால் இர்ஷாத் அலி என்பவரும் அவரின் நண்பர் நவாப் கமர் என்பவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐபிக்கு உதவா விட்டால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் நீண்ட நாள்களாக ஐபியின் உளவாளிகளாகச் செயல்பட்ட அவ்விருவரும் சிறையில் தள்ளப் பட்டதற்கான காரணம், ஐபியின் சதிக்குத் தற்போது அவ்விருவரும் இணங்க மறுத்ததுதான் என அவர்களின் வழக்கறிஞரான சுஃப்யான் சித்தீக் கூறுகிறார்.

இர்ஷாதுக்கு ஐபியால் அன்பளிப்பு(!)ச் செய்யப் பட்ட 9873303646 என்ற மொபைலுக்கு ஐபியின் அலுவலகத் தொலைபேசியில் இருந்து 56 முறை ஓர் ஐபி அதிகாரி தொலைபேசியுள்ளதன் மூலம் இர்ஷாத் அலியும் கமரும் ஐபியின் இன்ஃபார்மர்களாகச் செயல் பட்டவர்கள்தாம் என்பதையும் சிபிஐ உறுதி செய்துள்ளது.

இரு இன்ஃபர்மர்களோடும் தொடர்பிலிருந்த ஐபி ஆஃபிஸர்கள்:
பெயர்
மொபைல்
சஞ்சீவ் யாதவ்
9810058002
லலித் மோகன்
9811980604
ஹர்தேவ் பூஷான்
9811980601
மாஜித் (எ) காலித்
9810702004
அஃப்தாப்
9810702004

தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுத் திகார் சிறையில் அடைத்துள்ளதாகவும் இதுவரை எவ்வித விசாரணையும் இன்றித் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும் இதனை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் பிரதமருக்கு இர்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.ஐ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், ஐபி அதிகாரி முஹம்மது காலித், டெல்லி ஸ்பெஷல் செல்லிலுள்ள லலித், பூஷண் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து இர்ஷாதையும் நவாப் கமரையும் கடத்திச் சென்றனர் என்பதைச் சான்றுகளுடன் ஸி.பி.ஐ வெளிக் கொண்டு வந்துள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் 'தீவிரவாதத் தாக்குதல்'களில் முஸ்லிம் 'தீவிரவாதிகள்' கொல்லப்படுவது எப்படி? என்பதைப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி தெளிவு படுத்தியுள்ளார். காவல்துறையின் முக்பிர்(உளவாளி)ஆகச் செயல்பட்ட தனது சொந்த அனுபவத்தை, திகார் சிறையின் 8ஆம் எண் வார்டிலிருந்து விவரிக்கும் இர்ஷாதின் கடித வரிகள்:

"இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் ஓரளவு அறிவுள்ள, தாடியும் தலைப்பாகையும் அணிந்த ஓர் உளவாளி முல்லாவை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் குடியமர்த்துவதே ஐபியின் முதல் நடவடிக்கையாகும். பெரும்பாலும் பள்ளிவாசலின் அண்மையில் உள்ள வாடகைக் கட்டிடங்களிலோ பள்ளிவாசலிலேயோ உளவாளியின் வசிப்பிடம் அமையும். உறுதியான இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணுவதும் வசீகரிக்கும் படியான அவரது பழக்கவழக்கங்களும் நாட்கள் செல்லச் செல்ல இளைஞர்களை இவரோடு நெருங்க வைக்கும். அவர்களுள் உறுதியானவரும் மிகுந்த நம்பிக்கையாளருமான இளைஞர்களையே முல்லா குறி வைப்பார்.

தம்மிடம் நெருங்கிப் பழகும் இளைஞர்களிடம், "இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமைக்கு ஜிஹாத் மட்டுமே ஒரே தீர்வு" என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வெறியூட்டுவார். தன்னோடு தொடர்ந்த தொடர்பிலிருப்பவர்களுள் நம்பிக்கையானர்வகளிடம், தான் ஒரு லஷ்கரே தொய்பா கமாண்டர் என்று மெதுவாக உளவாளி முல்லா அறிமுகம் செய்து கொள்வார்.

ஐபி சொல்லிக் கொடுத்தபடி அவர்களுக்குச் சிறிய அளவிலான ஆயுதப் பயிற்சியும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் கற்றுக் கொடுப்பார். அதற்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களையும் உபகரணங்களையும் ஐபியே ஏற்பாடு செய்யும். அதன் பின்னர், யாராவது ஒருவரை அல்லது கோயில் போன்ற பொது இடத்தை இலக்காக்கித் தாக்குவதற்கான திட்டத்தை ஐபியின் உத்தரவுப்படி ஐபி உளவாளி முல்லா தயாராக்குவார்.

முன்னரே தீர்மானித்தபடி சம்பவ இடத்திற்கு முல்லா மூலம் ஐபி வழங்கிய ஆயுதங்களுடன் வரும் இளைஞர்களை, ஐபி உளவாளி முல்லா ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைவாகக் காத்திருக்கும் காவல்துறை, ஐபியின் திட்டப்படி உருவாக்கப் பட்ட இளைஞர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும்; அல்லது தாக்குதலில் தீர்த்துக் கட்டும். இதற்குப் பின்னணியில் செயல்பட்ட முல்லாவைக் குறித்து, அதன் பின்னர் எவ்வித விவரங்களும் வெளியாவதில்லை" என இர்ஷாத் அலி தனது கடிதத்தில் கூறுகிறார்.


'ஆபரேஷன் முல்லா' மூலம் கைது செய்யப்படும் இளைஞர்களை மறைமுகமாக வைக்க, டெல்லி காவல்துறைக்கு விசாலமான 'ஃபாம் ஹவுஸ்கள்' உண்டு. மனித உரிமை கமிஷன்கள் எதுவும் அந்தப் பக்கம் தலை காட்ட முடியாது. பொய் என்கவுண்டர்களில் கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பாதுகாப்பதும் அங்குத்தான். மாதக்கணக்கில் சில 'கைதிகள்' அங்குக் காக்க வைக்கப் பட்டு, தேவைப்படும் வேளைகளில் கொலை செய்யப் படுவர். பின்னர் மீண்டும் ஒரு என்கவுண்டர் நாடகம் மூலம் அவர்களது உடல்கள் மீண்டும் அவ்விடத்திற்கே கொண்டு வரப்படும். இவ்வாறு கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கக் காவல்துறையோ ஊடகங்களோ முயல மாட்டார்கள். அவர்களின் தாய், தந்தையரோ, தங்களுக்கே தெரியாமல் திடீர்த் 'தீவிரவாதி' ஆகிபோன மகனின் உடலைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள்.

'முஸ்லிம் தீவிரவாத'த்தைக் குறித்தத் தங்களின் பிரச்சாரம் சரிதான் என்பதை நிறுவுவதற்குக் காவல்துறை செய்து கொண்டிருக்கும் சதிகளில் தங்களுக்கும் பங்குண்டு என்பதால் இவ்விவரங்களை வெளி உலகத்திற்குத் தெரிவிப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்ததுதான் இக்கடிதம் எழுதுவதற்கான காரணம் எனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இர்ஷாத் அலி குறிப்பிட்டுள்ளார்.

"நமது நாட்டின் பாதுகாப்பு ஏஜன்ஸிகள் நாட்டைப் பதுகாப்பதற்கு மாறாக, மக்களின் மனங்களில் கலவரத்தையும் அச்சத்தையும் விதைத்து, குழப்பத்தையே உருவாக்குகின்றன. தீயைக் கொண்டு தீயை அணைக்க இயலாது. தீயை அணைப்பதற்குத் தேவை தண்ணீர்தான். ஆனால், நமது பாதுகாப்பு ஏஜன்ஸிகள், பெட்ரோல் ஊற்றித் தீயை அணைக்க முயல்கின்றன" - எனக் குறிப்பிட்டிருப்பதோடு, தங்களின் விஷயத்தில் தலையிட்டு, நியாயமான விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் எனப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி கோரிக்கை வைத்துள்ளார்.

***
புலி வாலைப் பிடித்த கதையாக, உருவாக்கப் படும் உளவாளிகளால் ஒரு காலகட்டத்துக்குமேல் அதிகப் பயனேதுமில்லை என்று அறிய வரும்பொழுதோ தாங்கள் செய்யும் சட்டவிரோதத் செயல்கள் உளவாளி இன்ஃபார்மர்கள் வழியாக வெளியாக வாய்ப்புள்ளது எனத் தெரிய வரும்போதோ உளவாளிகள் காவல்துறையினால் 'தீவிரவாதிகளாக' மாற்றப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்படுவர்; அல்லது சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் படுவர் என்பதற்கு அண்மையில் கஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஃப்சல் குருவும் திகார் சிறையிலிருந்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள இர்ஷாத் அலியும் அவரது கூட்டாளியும் மிகச் சிறந்த உதாரணங்களாவர்.

தென்காசி, நான்டட், கான்பூர், மாலேகோன், கண்ணூர் என "தேசப்பற்றாளர்கள் முகமூடி" அணிந்து உல்லாசமாக உலாவந்த இந்துத் தீவிரவாதிகளின் பொய் முகங்களும் இந்துத் தீவிரவாதமும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்.....
நாட்டில் தீவிரவாதமாம்; காரணம் முஸ்லிம் தீவிரவாதிகளாம்!அசத்துகிறது ஐபி!
ஜெய் ஹிந்த்!

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

Saturday, November 15, 2008

'சிமி' யை ஒழித்துக் கட்டவே மாலேகாவ் குண்டு வெடிப்பு

பெங்களூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 11:24 IST )

நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ' சிமி' இயக்கத்தை ஒழித்துக் கட்டவே, மாலேகாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக, கைது செய்யப்பட்ட ராணுவ உயரதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடத்தப்பட்ட 'நார்கோ அனலைஸிஸ் ' ( ஆழ்நிலை மயக்க நிலை விசாரணை ) சோதனையில் இதனை தெரிவித்துள்ள அவர், நாட்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் தமக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் மற்றும் துறவி தயானந்த பாண்டே ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே தாம் இதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாலேகாவ் குண்டுவெடிப்பை எப்படி நிகழ்த்துவது என்பதற்கான சதித்திட்டத்தை தாமும், ( புரோஹித்), பெண் சாமியார் பிரக்யா, தயானந்த் பாண்டே ஆகியோர் தயாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டில் நான்டட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் பாண்டேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புரோஹித் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அஜ்மீர் குண்டுவெடிப்பும் தயானந்த் பாண்டேவால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட சுமார் 500 பேருக்கு அகமதாபாத் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் புரோஹித் தெரிவித்ததாக காவல் துறையை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)


இந்துத்துவ பயங்கரவாதம் என்னும் நச்சு நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி, தற்போது ராணுவத்திலும் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடியாதகவே இருக்கப்போகிறது என்பது கவலை தரும் விஷயம். இந்த மாதிரியான பயங்கரவாத கும்பல்களை பாதுகாத்து அரவணைக்கத் துடிக்கும் பால் தக்கரே போன்ற தீவிரவாதிகளை தடுக்க முனையாமல் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் தெரிகிறது. 'சுரனையற்ற இந்தியா' என்று கட்டுரை எழுதிய பாசிஷ்டுகள் இப்பொது என்ன செய்கிறார்கள்.? தெகல்கா, குஜராத் இன கலவரத்தைத் தோலுரித்துக் காட்டியும் இந்தியாவில் எவ்வித சலனமுமில்லை, குண்டு வெடித்தவர்கள் இந்துதுவா அமைப்பினர் என்ற போதும் நாட்டில் பெரியளவு எதிர்ப்புமில்லை எனும் போது, நிச்சயமாக தெரிகிறது இது 'சுரனையற்ற இந்தியா'.

"சிமி" அமைப்பினைச் சார்ந்தவர்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்றால் அந்த அமைப்பினர் எத்தனைப் பேர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்?

"சிமி" தடைச் செய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் போது எப்படி செயல்படுகிறது.? இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது,?

மும்பை குண்டுவெடிப்பையும், கோவை குண்டுவெடிப்பையும் தவிர எந்த குண்டு வெடிப்புகளையும் யார் செய்தார்கள்? என்ன விசாரணை எதுவரை நடந்து வருகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கைது செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா ? தடா, பொடா சட்டங்கள் இருந்த காலத்திலும் பயங்கரவாத்தை தடுக்க முடியவில்லை எனும் போது குற்றவாளிகள் ஆட்சி,அதிகாரங்களில் தான் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது. இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளையும் அதன் விசாரணை விவரங்களையும் வெள்ளை அறிவிக்கையாக மத்திய அரசு வெளியிட்டால் பல மர்ம முடிச்சுக்கள் அவிழும். இல்லையென்றால் வழக்கம் போல் முஸ்லிம்களை குற்றம் சுமத்தி இந்துத்துவாவையும் அதன் பயங்கரவாத்தையும் வளர்க்கும் வேலையைத்தான் அரசு செய்யும்.

Tuesday, November 11, 2008

'குண்டு வெடிச்சுருச்சா?.. பழியை, முஸ்லீம் மேல போடு!'

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு வியூகம் என்பது இரட்டைப் போக்காகவும், நேர்மையற்றதாகவும் இருக்கிறது. விவேகமற்ற முறையில், மதத்தின் மீது அது தொடுக்கும் தாக்குதல், பயங்கரவாதத்தின் வேர்களையும் அதன் போக்கையும் பலப்படுத்துவதற்கு மட்டுமே உதவும்முஸ்லீம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, பாரதீய ஜனதா கட்சி பலத்த குரலில் ஆதாரமற்று எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளுக்கு உடன்பட்டுப்போகும் மொன்னைத்தனத்தையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைக்கொண்டு வருகிறது. 'பயங்கரவாதத்தை வேரறுக்கும் திராணியற்றவர், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். அந்தப்பதவிக்கு பொருத்தமற்றவர். பதவியிலிருந்து அவர் விலகவேண்டும்' என்று 'காவித்தனமாய்' அவை வைக்கும் கோரிக்கைகளால் உசுப்பேற்றப்படும் பாட்டீல், தனது பதவியின் புஜ பலத்தைக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி, குயுக்தியான நடவடிக்கைளுக்கு மூலகர்த்தா ஆகியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் அட்டை பெற்றிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் தலைவரான வீரப்பமொய்லியோ, இன்னும் ஒருபடி மேலேபோய், பாரதீய ஜனதா கட்சியின் ஊதுகுழலாகவே மாறிவிட்டிருக்கிறார். 'பயங்கரவாத ஒழிப்புச்சட்டம் கடுமையாக, புதிதாகக் கொண்டு வரப்பட வேண்டும்' என்று, அவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில், திருவாய் மலர்ந்து அரசுக்கு பரிந்துரை செய்கிறார். அந்தப்பரிந்துரை பாரதிய ஜனதா கட்சியின் முக்கியக் கோ¡¢க்கைகளில் ஒன்றான கொடிய 'பொடா' சட்டத்தைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பதை ஒத்தே இருக்கிறது. போலீஸ் சொல்லும் செய்தியை அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்கா¢த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவரது பா¢ந்துரை வலியுறுத்துவதாக இருக்கிறது.இதனடிப்படையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சமீபத்திய பயங்கரவாத ஒழிப்பு நட வடிக்கைகள் அமைந்து வருகின்றன என்பது, தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.


தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 13 ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பின், இஸ்லாமிய சமூகத்துக்கு நெருக்கடியும், வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையும் அதிகா¢த்து வருகிறது. அதன் ஒருபடிதான், செப்டம்பர் 19ம் தேதியின் பட்டப்பகலில், டெல்லி ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் முன்பு, அரசு தன் கோரமுகத்தைக் காட்டியதும்!டெல்லி போலீஸின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப்பி¡¢வு, ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் குடியிருந்த மொகம்மத் அதீப் அமீன் மற்றும் மொகம்மத் சாஜித் ஆகிய இரு இளைஞர்களை பயங்கரவாதிகளாகக் குற்றம்சாட்டி சுட்டுக்கொன்றது. மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக வும் இரண்டுபேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ்தரப்பில் தொ¢விக்கப்பட்டது.


'இவர்கள்தான் நாட்டில் நடந்த, சமீபத்திய அனைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் திட்டமிட்டு நடத்தியவர்கள்' என்று அது வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் 'தனிப்பட்ட கவனத்தின்' போ¢ல் நடந்தேறியதாகச் சொல்லப்படுகிறது.இரு இளைஞர்களைச் சுட்டுக்கொன்ற இந்தச்சம்பவம், ஊழல் மன்னனும் பெரும் பிளாக் மெய்லருமான ரஜ்பீர் சிங்கை, அன்ஸல் பிளாஸாவில் வைத்து, கொடூரமாகச் சிதைத்துக் கொன்ற என்கவுண்டரை போலவே இருக்கிறது.இதற்குமுன்பு, 35 பேரை என்கவுண்டா¢ல் 'போட்டு'த் தள்ளியதில் புகழ்பெற்ற 'இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மாவை, இந்த இருஇளைஞர்கள் சுட்டுக்கொன்றதால், அதன்போ¢ல் நடத்தப்பட்ட என்கவுண்டர் தாக்குதல் சம்பவம் இது' என்று போலீஸ¥ம், அரசும் ஒரேகுரலில் பொய்யாய்ப் புனைந் துரைக்கின்றன. 'நல்லதொரு போலீஸ் அதிகா¡¢யையே சுட்டுக்கொன்றுவிட்டார்கள்' என்று அரசின் நடவடிக்கைளுக்கு, பா¢தாபத்தை சம்பாதித்துக்கொள்ள முயன்ற அவர்களது புழுகுமூட்டை யுக்தி, தற்போது அவிழ்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகாரவர்க்கம் வெளியிடும் அறிக்கைகள், முற்றிலும் கட்டுக்கதைகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.


அதிகாரவர்க்கம் வெளியிட்டிருக்கும் இன்னொரு கேலிக்கூத்து அறிக்கையைப் பார்ப்போம். வாரணாசி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அஹமதாபாத் ஆகிய இடங்களில் சமீபத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. அதில் பாவப்பட்ட... ஒன்றுமறியாத அப்பாவி மக்களே பெரும்பாலும் உயி¡¢ழந்தனர். இந்தச்சம்பவங்களை நடத்தியது, இந்தியன் முஜாஹிதீனின் முக்கியத்தலைவரான அதீப் அமீன் என்கிறது, டெல்லி போலீஸ். ஆனால் மும்பை போலீஸோ, அதற்கு முற்றிலும் மாறாக... அனைத்துச் சம்பவங்களும் - டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் உட்பட - நான்குபேருடன் கைது செய்யப்பட்டுள்ள மொகம்மத் சாதிக் ஷேக்கின் திட்டமிடலின்படியே நடந்தேறியது என்று சாதிக்கிறது.இந்த முரணான அறிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பேரும் தவறாகப் பிடிக்கப்பட்டு, வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ எனும் ஐயத்தை உருவாக்கியுள்ளது. ஜூலை மாதம் மும்பையில் நடந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக, பலர் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதன் அடிப்படையில்தான் என்று எண்ணவும் தோன்றுகிறது.

டெல்லி போலீஸ் சொல்லும் அறிக்கைகளுக்கு எதிரானவையாகவே உள்ளன, வாரணாசி, ஜெய்ப்பூர், அஹமதாபாத் போலீஸ் சொல்லும் தகவல்கள். அந்தச்சம்பவங்களை முறையே வலியல்லாஹ், ஷாபாஜ் ஹ¥சைன், அபு பஷீர் மற்றும் அப்துல் சுபான் குரேஷி என்ற தவ்கீர் ஆகியோர் நடத்தியதாகச் சொல்கின்றன. இதில் தவ்கீர், மத்திய புலானாய்வுத்துறையினரால் 'சதித் திட்டங்களை தீட்டியவர்' என்ற வர்ணிப்புடன் பிரபல்யமாக்கப்பட்டவர்.இதில் அதீப் அமீனுக்கு, பஷீர் என்று இன்னொரு பெயரும் இருப்பதாக போலீஸ் திட்டமிட்டுச் சொல்லி வருகிறது. இதனை அதீப் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் அப்படி ஒருபெயர் அவருக்கு இருந்ததில்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர். இங்கு அதீப்பின் அடையாளத்துடன் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட இல்லாத நபரை அரங்கேற்றும் போலீஸின் அரக்கத் தன்மை காணக் கிடைக்கின்றது.


டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன்பு, அஜாம்கா¡¢லுள்ள யூனியன் பேங்க்கிலிருந்து அதீப் அமீன் 3 கோடி ரூபாயை எடுத்தாகவும், அதைக்கொண்டுதான் நிழல் நடவடிக்கைகளையும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியதாகவும் காட்சிப்படுத்துகிறது. ஆனால் ஊடகங்களின் விசாரணை, போலீஸின் பொய்யுரைகளை தண்டவாளத்தில் ஏற்றுகின்றன. ஜூலை மாதத்திலிருந்து செயல்படுத்தப்படாமலிருக்கும் அதீப் அமீனின் வங்கிக்கணக்கில் இருப்பதோ வெறுமனே 1,400 ரூபாய் தானாம்!ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 -ல் சமீபத்தில் குடிவந்த மொகம்மத் அதீப் அமீன், அதற்கு முறையாக பத்திரம் பதிவு செய்திருக்கிறார். அதை போலீஸ் ஆய்வு செய்திருக்கிறது. போலீஸால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் அவர்கள், உண்மையிலேயே பயங்கர வாதிகளாக இருந்தால், வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் செயல்படுவார்களா என்ன?ஜாமியா நகர் என்கவுண்டர் சம்பவத்துக்கு ஒருவாரம் முன்பிருந்தே அந்தப்பகுதி, போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நடஜூலை 26 ம் தேதி அஹமதாபாத் குண்டு வெடிப்புச்சம்பவத்தில், குண்மாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பே 'குண்டுவெடிப்புச் சம்பவங்களின் மூளை இவர்கள்' என்று, திட்டமிட்டு என்கவுண்டர் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. டுகளை வைத்ததாக போலீ ஸால் குற்றம்சாட்டப்பட்டு, அதீப் அமீனின் கூட்டாளியாக வர்ணிக்கப்படும் சாகிப் நிஸார், ஜூலை 22 ம் தேதியிலிருந்து 28 ம் தேதிவரை டெல்லியில் எம்பிஏ தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.

என்கவுண்டர் சம்பவத்தை நோ¢ல்கண்ட பல சாட்சிகள், போலீஸ் வெளியிட்டிருக்கும் பொய் அறிக்கைகளைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர். தி¡¢க்கப்பட்டுள்ள அந்தஅறிக்கையில், எதுவுமே உண்மையில்லை என்று அப்பட்டமாகியிருக்கிறது.சம்பவம் நடந்த அன்று, அதீப் அமீன் குடியிருந்த ஜாமியா நகா¢ன் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் போலீஸ் நுழைகிறது. நான்காவது தளத்திலிருக்கும் அந்தவீட்டிலிருந்து இரண்டுபேரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வருகிறது. கிட்டத்தட்ட நூறுபடிகளுக்கும் மேலான அந்த குறுகலான நடைபாதையில் 'தரதர'வென்று இழுபட்டு வந்த அவர்கள், தரைப்பகுதியில் குவிந்திருக்கும் போலீஸ் முன்னால் நிறுத்தப்படுகின்றனர்.

பெரும் ஆயுதப்படையுடன் போலீஸ் அங்கே குவிக்கப்பட்டிருந்தது. அதில் முக்கிய நபராக, 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவும் இருக்கிறார்.போலீஸ் காட்டிய வலுப்பிரயோகத்தில் இழுபட்டபோது நைந்து போயிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் நிற்கவே திராணியற்றவர்களாக இருந்தார்கள். அந்தப்பகுதியையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போலீஸ், நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இருவரையும் மேலும் நையப்புடைத்துத் தள்ளியது. போலீஸ் கும்பல் சுற்றிநின்றுகொண்டு 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் தலைமையில் அவர்களை வெளுத்துக் கட்டும்போது, போலீஸ்காரன் ஒருவனின் துப்பாக்கி ஒன்று, கூட்டத்தில் முழங்குகிறது. அதிலிருந்து வெளிப்பட்ட குண்டுகள் 'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவைத் தாக்குகிறது. ஷர்மா தரையில் வீழ்கிறார்.அதன்பின்பே கண்மூடித்தனமாக அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் எதிர்ப்பு காட்ட முடியாத point - blank range ல் சுட்டிக் கொல்லப்படுகின்றனர்.

சவக்குழியில் வைக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சாகிப் நிஸா¡¢ன் புகைப்படத்தில் தோளிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்த பெருந்துவாரங்கள் காணப்படுகின்றன. தலையின் முன்பகுதியில் குண்டுதுளைத்த நான்கு ஓட்டைகள் இருந்தன. தலையில் ஒருகுண்டு புகுந்தாலே உயிர்போய்விடும் என்று அறிவியலே சொல்லும்போது, அடுத்தடுத்து குண்டுகளை தலையில் செலுத்தியிருப்பது, போலீஸின் கடைந்தெடுத்தக் கோழைத்தனத்தையும் காட்டு மிராண்டித்தனத்தையும் ஒருசேர நமக்கு புலப்படுத்துகிறது.


'என்கவுண்டர் புகழ்' மோகன் சந்த் ஷர்மாவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை, ஹெட் லைன்ஸ் நியூஸ் சானலுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த அறிக்கையை அந்த சானல் வெளியிட்டிருக்கிறது. அதில், நேருக்கு நேரான என்கவுண்டர் மோதலில் துப்பாக்கியால் அவர் சுடப்படவில்லை என்றும் அவருக்கு பின்புறத்திலிருந்து வந்து துளைத்த குண்டுகள், பக்கவாட்டில் வெளியேறியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ¥ம், அரசும் பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள் அவர் நுழைந்தபோது, அங்கிருந்த அதீப் அமீனும், சாகிப் நிஸாரும் சரமா¡¢யாகச் சுட்டதில் அவர் உயி¡¢ழந்ததாக பா¢தாபக் கதையை உருவாக்கி உலவவிட்டிருந்தது. அதுபோல அவர் மீது இளைஞர்கள் இருவரும் பலமுறை சுட்டதில் வயிற்றிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்ந்ததாகச் சொல்லப்பட்ட இட்டுக்கட்டலும் பொய்யாகியுள்ளது.


இந்தச்சம்பவத்தில் உயி¡¢ழந்த மோகன் சந்த் ஷர்மா உள்ளிட்ட மூவா¢ன் சடலங்களும் தடய அறிவி யல் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதுபோலவே பாட்லா ஹவுஸ் எண்: எல்.18 க்குள்ளி ருந்த ஐந்துபோ¢ல் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுவது, மிகப்பொ¢ய புனைக்கதை! ஏனென்றால், தப்பி ஓடிச்செல்லுமளவுக்கு அங்கே விசாலமான வழி ஏதும் இல்லை. உள்ளே செல் வதற்கும் வெளியே வருவதற்கும் மிகக் குறுகலான ஒரே பாதைதான் உள்ளது.நேர்மைக்குப் புறம்பான போலீஸின் செயல்பாடுகளும், அதன் அறிக்கைகளும், மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் கடப்பாடற்ற நடவடிக்கைகளும் நீசத்தனத்துடன் இருப்பதால், அரசையும் நம்பும்படியாக இல்லை. பாமர மக்கள் கூட அதை ஏற்கஇயலாது, வாழ்தலுக்கான நிச்சயமற்றத் தன்மையை உணர்ந்துள்ளனர். நடந்து முடிந்துள்ள கொடூரத்தை, கண்ணியமற்றச் செயல்களை சுதந்திரமான... நேர்மையான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தி, 'போலீஸ் சொல்வது சா¢தானா... அல்லது பொய்யா...' என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

சமீபத்திய சம்பவங்களால் ஒன்றுபட்டிருக்கும் இந்துத்துவ 'பயங்கரவாதி'களான பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகள், தங்களை சுத்த சுயங்களாக்கிக் கொண்டுள்ளதாக வேடம் போடுகின்றன. சிறுபான்மையினத்தவருக்கு எதிரான வன்முறையையும் பயங்கரவாதத்தையும் அவைதான் அடையாளத்துடனேயே நடத்துகின்றன. அதற்கு போலீஸ¥ம் தேசிய பாதுகாப்பு நிறுவனங்களும் குடைபிடிப்பதுதான் கொடுமை!


இந்த இந்துத்துவ பயங்கரவாதிகள்தான், சிறுபான்மைக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அசுர அட்டகாசத்தை, கொலைவெறியை, தீ வைப்பை, கற்பழிப்பை, சொத்துகள் சூறையாடலை ஒ¡¢சாவிலும், கர்நாடகத்திலும், மத்திய பிரதேசத் திலும், கேரளத்திலும் நடத்தியவை. அரசுகளின் ஒத்துழைப்பும் சதித் திட்டமுமின்றி இவற்றைச் செய்திருக்கவே முடியாது. பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாட்டில், இந்துக்கள் அல்லாத அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்ததை ஒத்துக்கொண்டிருக்கும் அவர்களை, இந்துத்துவ பயங்கரவாதிகள் என்ற வார்த்தைக் கொண்டு யாரும் விளிப்பதே இல்லை. மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நடத்தியவர்களை, தமிழ்நாட்டில் தென்காசியில் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்களை, உத்தரபிரதேச மாநிலம் கான்பூ¡¢ல் குண்டுகளை விதைத்த காவிக்கும் பலை இந்துத்துவ பயங்கரவாதிகள் என்று அழைக்காமல், வேறு எப்படி அழைக்கமுடியும்?

சிறுபான்மை இனத்துக்கு எதிரானக் கொடூரங்களில் ஈடுபடும் பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்த் பா¢ஷத், சிவசேனா உள்ளிட்ட ஆஷாட பூதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அடையாளங்கண்டு கைது செய்யப்படும் சம்பவங்கள், எப்போதாவது அத்திப்பூத்தாற் போல நடந்து விடுகிறது. ஆனால் அவர்கள் தண்டனைக்குள்ளாவது, இந்தியாவில் மிகச் சொற்பமாகவே நடந்துள்ளது.அதேவேளையில், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று மதச் சிறுபான்மையினரை, சந்தேகத்தின் அடிப்படையில் கருணையற்ற முறையில் பிடித்துச்சென்று மிரட்டுவதும், அவமானப்படுத்துவதும், சட்ட விரோதமாகத் தண்டிப்பதும், சித்ரவதைக்கு உள்ளாக்குவதும், பல நேரங்களில் விசார ணையின்றி தண்டனை வழங்குவதும், கொல்லப்பட்டு விடுவதும் கூட வாடிக்கையாக உள்ளது.


பயங்கரவாதம் குறித்த சொல்லாடல் வெளிப்படும்போதெல்லாம், அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் இரட்டைத்தன்மை முறையை கையாளுகின்றனர். பயங்கரவாதம் என்ற சொல், சிறுபான்மையினருக்கு எதிராகவே பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான பார்வையையே அது கொண்டிருக்கிறது. நீண்டகாலமாகவே இந்தப்பார்வை இருந்து வருகிறது. அரசும், போலீஸ¥ம், புலனாய்வு நிறுவனங்களும் அதைத் திரும்பத் திரும்ப பிரசாரம்செய்து, பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள் என்று அர்த்தம் கற்பித்து ஸ்திரப்படுத்திவிட்டது.அதைத் தெளிவுபடுத்துவதுபோல, கடந்த செப்டம்பர் 22 ம் தேதி, இந்திய ஊடகங்கள் அனைத்துமே பயங்கரவாதிகள் என்று 'கெப்•பியா' என்ற துணியால் அரேபியர்கள்போல முகம் மூடப்பட்ட மூன்று போ¢ன் புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அப்படி முகம் மூடி, துணி அணியச்சொல்லி அழைத்து வந்தது, டெல்லி போலீஸ். முகம் மறைக்கப்பட்ட மூவரும் பயங்கரவாதத்தை அரங்கேற்ற தேவையான பொருட்களை வாங்கி சேகா¢த்துத் தந்தவர்களாம். இந்த இடத்தில் பயங்கரவாதம் என்றால் முஸ்லீம்கள். முஸ்லீம்கள் என்றால், சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஒசாமா பின்லேடனின் சொல்லை இங்கே நிறைவேற்றுபவர்கள் என்ற சமன்பாட்டை நிறுவ அரசு முயலுகிறது. ஒரு அரசுநிறுவனத்தால் குறிப்பிட்ட சமூகத்தை, அதன் வளமையை, தொன்மையை சிதைக்க முடியும் என்பதற்கு இதைவிட வேறு எந்த சாட்சியமும் தேவையில்லை.


குண்டுவெடிப்பு சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தவுடன், சம்பவத்தை நோ¢ல் பார்த்த சாட்சியங்கள் சொல்லும் குறிப்பின்படி வரையப்பட்ட சிலபடங்கள் ஊடகங்களில் வெளியாகும். அவற்றின் கீழே அரபி வார்த்தையுடன் கூடிய ஒருபெயர் இருக்கும். அடுத்த சிலநாட்களில், அந்தப் பெயருக்கு¡¢யவர் கைது செய்யப்பட்டதாக செய்திவரும். இப்போது இடம்பெற்றிருக்கும் படத்திலிருப்பவர், 'கெப்•பியா' வோ... ஸ்கார்ப்போ... அல்லது பத்துரூபாய்க்கு விற்கும் பிளாட்பாரத்துண்டால் முகம் மூடியவராக இருப்பார். படத்தில் வரையப்பட்டவர் பிடிபட்டிருந்தால், அதை ¨தா¢யமாக... வெளிப்படையாக... 'அவர் தான், இவர்' என்று பகிரங்கப்படுத்தலாமே. புனைந்துரைக்கும் அரசு நிறுவனத்தால் அது ஒரு போதும் முடியாது. ஏனென்றால், படத்திலிருந்தவர் ஒருவராக இருப்பார். அவர் பெயா¢ல் பிடிக்கப் பட்டு வந்தவர் வேறு ஒருவராக இருப்பார். தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டிய முக்காட்டை, பிடித்துக்கொண்டுவந்த அப்பாவியின் மீது போலீஸ் போடுகிறது. அவ்வளவுதான்! ஏனென்றால், இந்திய அரசு சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் பாதுகாக்கத் தவறிவிட்டது. பெரும்பான்மைக் குழுக்களை காப்பதிலேயே அது கவனம்செலுத்தி வருகிறது. சிறுபான்மையினர் உ¡¢மை இழந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகளின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்ட அறிவு முகமையின் பெருந்தலைகள் உள்ளன.


இந்துத்துவ பயங்கரவாதச் சாயத்தை தங்கள் மீது ஊற்றிக் கொண்டிருக்கும் அவர்கள், முன்பெல்லாம் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற அந்த அமைப்புதான் இதைச் செய்தது ... அதைச் செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது அதிலிருந்து மாறி சுதேசிகளாகி விட்டனர். 'குண்டு வெடிச்சுருச்சா? ஏன் கவலைப்படுற? பழியைத்தூக்கி முஸ்லீம்க மேல போடு!' என்பதாக எல்லா குண்டு வெடிப்பு சம்பவங்களையும் இந்துத்துவ கண்ணாடி மூலம் பார்த்து, முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் என்பதும், வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள Delhi's Special Cell, Maharastra's Anti - Terrorism Squad, Special Task Forces, உள்ளிட்ட அமைப்புகள் அந்தந்த மாநிலத்தில் சகல அதிகாரங்களையும் படைத்ததாக இருக்கின்றன. அதனாலேயே ஊழலும், சட்டத்துக்கு புறம்பான குற்றங்களும், வரம்புமீறிய செயல்களும் செய்பவர்களாக இந்த அமைப்புகளில் பணிபு¡¢பவர்கள் இருக்கின்றனர். தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொல்லி பொதுமக்களின் சொத்து களையும், பொதுச் சொத்துகளையும் சீரமைக்க முடியாத அளவுக்கு சேதத்தை விளைவித்து உள்ளனர். அதுபோல மனிதஉ¡¢மை மீறல்களையும் நீதிக்குப்புறம்பான செயல்களையும் செய்துள்ள அவர்கள், அரசுப்பணத்தில் பெருமளவு சொத்துகளை வாங்கியும் குவித்துள்ளனர்.இந்த சம்பவங்களுக்குப் பின்பு, சிறுபான்மையின முஸ்லீம்களுக்கு எதிரான சமூக, பொருளாதாரத் தடைகள் அதிகா¢த்து வருகின்றன.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவத்துக்குப் பின்பு, தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணம் வசூலிக்க அந்தப்பகுதிக்கு அனுப்புவதில்லை. பிஸ்ஸா டெலிவா¢ செய்யும் பையன்கள் அந்தப்பகுதிக்குள் செல்லவே பயப்படுகின்றனர். அந்தளவுக்கு போலீஸ், பல்வேறு பயங்கர மலிவான கதைகளைப் பரப்பிவருகிறது.பொதுச் சமூகத்திலிருந்து பிளவுபடுத்தப்பட்டுள்ள ஜாமியா நகர்வாசிகளுக்கு, டெல்லி நகராட்சியின் அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! இது மேலும்மேலும் மன வேறுபாடுகளுக்கே வழிசெய்யும். குறைகளையும் நீதிக்குப்புறம்பானவற்றையும் சீர்படுத்திவிடவேண்டும். இல்லாவிட் டால், சமூக இணக்கம், சகிப்புத்தன்மை, மனித உ¡¢மைகளை இழந்தவர்களாகி, நாகா£கமான நாடு என்ற சொல்லிலிருந்து விலகி, வெகுதூரம் வந்துவிடுவோம்.அதற்கான விலையை, நம்மால் கொடுக்க முடியாது!

- எஸ். அர்ஷியா (arshiyaas@rediffmail.com)Thanks to www.keetru.com

Monday, November 10, 2008

ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!

இது குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்துத்துவ பயங்கரவாத சாமியாரிணி கும்பல் கைது செய்யப்படுவதற்கு முன் வெளியான கட்டுரை!


டெல்லி காவல்துறை குண்டுகள் வெடிக்கும் 'மர்மத்தை கண்டு பிடித்து' விட்டதால் நான் எனது சுய வாக்குமூலத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். சந்தேகப்படுவது இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை அல்ல என்றாலும் செழிப்பான ஜனநாயக அமைப்பிலிருந்து பிரிக்க முடியானதொரு அங்கம் அது. நமது உளவுத்துறை அமைப்புகளின் அஸ்திவாரம் சந்தேகப் படுவதில்தான் இருக்கிறது எனலாம். எனவே, யார் மேல் வேண்டுமானாலும் சந்தேகப்படும் உரிமை நிச்சயமாக நம் உளவுத் துறையினருக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சந்தேகப்படும் உரிமை சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இருப்பதையும் யாராலும் மறுக்கவியலாது. சமத்துவம் ஜனநாயகத்தின் அடையாளமல்லவா?


கேள்விகள் கேட்டு பதில் விளக்கங்கள் பெற வாய்ப்பில்லாத ஓர் அரசாங்க அறிக்கை வேதவாக்குப் போலக் கருதப்படும்போது என்னுள் இருக்கும் 'பத்திரிக்கையாளனுக்கு' எரிச்சல் ஏற்படுகிறது. தீர்மானமான முடிவுகளுக்கு வருவது ஊடகவியலாளர்களின் பணி அல்ல. ஒரு சமுதாய வட்டத்திற்குள் நிகழ்பனவற்றை அந்த வட்டத்திற்கு வெளியில் நின்று விருப்பு வெறுப்பின்றி ஊடகத்தில் பதிவுசெய்வதுதான் அவரது பணியாக இருக்க வேண்டும். ஒரு பத்திரிக்கையாளர் அந்த வட்டத்திற்குள் நுழைந்தால் அவரும் அந்த நிகழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விடுகிறார். ஒரு தரப்பினருடன் நெருக்கமாக இருப்பது சார்பு நிலையைத் தோற்றுவிக்கும். சார்பு நிலை மறுதரப்பினரின் நியாயங்களைப் பார்க்க முடியாத குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஓர் உண்மையான பத்திரிக்கையாளர் இது போன்றதொரு கருத்துக் குருடராக இருக்கவே கூடாது.


மக்களிடையே பொதுவான அபிப்ராயங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதானால், அவற்றிடையே 'கருத்துக் குருட்டுத் தன்மை' நிலவுவது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்தியறிக்கையும் பொது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நாட்டின் அரசியலமைப்பில் 'நான்காம் தூண்' என்று கருதப்படும் ஊடகங்கள், ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் 'நான்காம் தவறு' என்று சொல்லத்தக்க விதத்திலேயே செய்திகளை வெளியிடுகின்றன. குண்டு வெடித்தது மக்கா மசூதியாக இருந்தாலும், தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்ட மாலேகானாக இருந்தாலும், சந்தேக முள் தானாகவே சாய்வது முஸ்லிம்கள் பக்கம் தான். ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் அலைக்கழிக்கப்படுவதும் முஸ்லிம்கள்தான். ஒரு புறம் குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயங்கரவாதிகள், மற்றொரு புறம் உளவுத் துறை அமைப்புகள் என இருபுறமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலையில் முஸ்லிம்கள். இந்த இரு தரப்பினருமே முஸ்லிம்களை நம்புவதில்லை என்பதுதான் பரிதாபம். அன்றாட வாழ்க்கைப் பாட்டை தீர்ப்பதற்கே போராடும் முஸ்லிம்களுக்கு குண்டுகளைப் பற்றி சிந்திப்பதற்குக்கூட நேரம் கிடையாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதேயில்லை.


ஒவ்வொரு குண்டு வெடிப்பும் இஸ்லாம் எனும் 'பச்சைக் கண்ணாடி' கொண்டே பார்க்கப் படுகிறது. ஆனால், 'இந்துத்துவ காவி' இந்தியாவை 'சிவப்பாக' மாற்றுவதில் சற்றும் சளைத்ததல்ல. குண்டுகள் வெடிப்பதற்கான காரணங்களுள் ஒன்று, இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பற்ற அச்ச உணர்விலேயே நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பதுதான். உண்மையான போர் துவங்குமுன் மனதளவில் எதிர்தரப்பினரை வலுவிழக்கச் செய்யும் உத்தி இது.


இந்திய முஸ்லிம்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் தீவிரவாதிகளாக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம். அதே போன்று இந்துக்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் அதிதீவிரவாதிகளாக இருப்பதும் உண்மையே! சிமி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை தத்தம் சமுதாயங்களை பிரதிநிதிப்பதாக சொல்லிக் கொண்டாலும் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட அடையாளங்களை கொண்டவை. செயல்வடிவிலான அதிதீவிரவாதத்தை இவ்வாறு ஒரு வரியில் சுருக்கிச் சொல்லலாம்: "உனது தீவிரவாதத்தை விட எனது தீவிரவாதம் சிறந்தது!"


ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை குண்டுவெடிப்புகளில் ஈடுபடும்போது இந்திய ஊடகங்கள் 'அடக்கி வாசிப்பதை'க் காண்கிறோம். அதே சமயத்தில் ஒரு வழக்கில் சிமி-யின் பெயர் அடிபட்டால் 'பத்திரிக்கைத் தர்மம்' உச்ச வேகத்தில் வெளிப்படுவதையும் காண்கிறோம். இந்த இரண்டு வித்தியாசமான அணுகுமுறைகளுக்கும் காரணம் வியாபாரம்தான். எந்தப் பத்திரிக்கை முதலாளியும் பெரும்பான்மையான இந்து வாசகர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார். ஊடகங்கள் தங்களை தேசிய சிந்தனை கொண்டவர்களென உரிமை கொண்டாடினாலும், நடைமுறையில் அவை பெரும்பான்மையினரை திருப்திப் படுத்தும் நோக்கம் கொண்டவைதான்.


காவல்துறை 'குற்றம் சாட்டப்பட்ட' நபர்களின் பெயர்களை திடீர் திடீரெனெ மாற்றுவது, ஒரு பத்திரிக்கையாளனின் கண்ணோட்டத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக இருக்கிறது. ('குற்றம் சாட்டப்பட்டவர்' என்ற பெயர்ச்சொல் இந்திய ஊடகங்களில் மிக அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் வார்த்தைகளுள் ஒன்று!). குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி என முதலில் சொல்லப்பட்ட பெயர் அப்துல் சுப்ஹான் குரேஷி; அதுவே பிறகு போலி 'என்கவுண்டரில் கொல்லப்பட்ட' அதிப் என மாற்றப் பட்டது.


அஹமதாபாத் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று காவல்துறையினர் சொல்லும் முப்தி அபுல் பஷர்தான் டில்லி குண்டு வெடிப்புகளுக்கும் காரணகர்த்தா என்று சொல்லப்படுவதை ஒரு பத்திரிக்கையாளனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பஷர் உண்மையிலேயே டில்லி குண்டு வெடிப்புகளுடன் சம்பந்தப் பட்டிருந்தால் அது நிகழ்ந்திருக்கவே செய்யாது. ஏனெனில், அந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பஷர் காவல்துறையின் பாதுகாப்பில்தான் இருந்தார். மதரஸாவில் மார்க்கக் கல்வி பயின்ற ஒரு ஏழையான பஷர் எப்படி அஹமதாபாத் குண்டுவெடிப்பை அவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு நடத்தியிருக்க முடியும்? இந்திய மதரஸாக்கள் எப்போதிலிருந்து இதுபோன்ற 'தொழில்நுட்ப வல்லுனர்'களை உற்பத்தி செய்யத் தொடங்கின? அவ்வாறு நடக்குமானால் அது இந்திய அரசிற்கு மிக மகிழ்வைத் தரும் ஒன்றாக இருக்கும். மதரஸாக்களை மேம்படுத்த வேண்டிய தேவை மத்திய மதரஸா வாரியத்திற்கு இனி இருக்காது.


'நன்கு படித்த முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்புகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் காவல்துறையினர் சொன்னாலும், 'படித்தவர்கள்' என்று எவ்வகையிலும் சொல்ல முடியாதவர்களைத்தான் அவர்கள் கைது செய்கிறார்கள். முப்தி பஷர் இதற்கு சரியானதொரு உதாரணம்.


இந்திய ஊடகத்துறையில் ஒரு பகுதியினர் உளவுத்துறை அமைப்புகளின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். காவல்துறையினரின் அறிக்கைகளை புலனாய்வுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிடுகின்றனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவர் உளவுத்துறைக் குறிப்பு போன்றதொரு தகவலை வெளியிட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'நாடெங்கிலும் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காக 2001-ம் ஆண்டு சிமி அமைப்பு 200 இளைஞர்களை பணியிலமர்த்தியது' என்பதுதான் அந்த தகவல். இது உண்மையென்றால் நமது உளவுத்துறை அமைப்புகள் கடந்த 8 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தன?


முறையான விசாரணகள் நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை பதியப்படுமுன்னரே, காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் 'தீவிரவாதிகள்' என முத்திரை குத்தப்படுகின்றனர். சட்டமும் நீதிமன்றமும் அதன் பணியைத் தொடங்குமுன்னரே ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்றன. உதாரணமாக, "கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தீவிரவாதி சைஃப் ஒரு போலி வாக்காளர் அட்டை வைத்திருந்தான்" (டைம்ஸ் ஆஃப் இந்தியா, செப் 21, பக்கம் 1, டெல்லி பதிப்பு).

ஊடகங்களின் 'முன்முடிவுத் தீர்ப்பு'களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமல்லவா?

இந்த அநீதிகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, முஸ்லிம்களோ அச்சத்தால் சூழப்பட்டவர்களாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். "அரசு என்பது ஒருங்கமைக்கப்பட்ட வன்முறை" என்று சொன்னார் காந்திஜி. டெல்லி ஜாமியா நகரில் நிகழ்த்தப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவம், சில குழப்பமான கேள்விகளை எழுப்புகிறது. 'இந்த சம்பவமே சந்தேகத்திற்கிடமானது' என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் இல்லாமலில்லை. உள்ளூர்வாசியான சகோதரி ஒருவர் சொன்னார், "எதிர் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதை யாரும் பார்க்கவில்லை. காவல்துறையினர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்கள். எதிர்தரப்பினர் சுட்டதை யாராவது பார்த்ததாக எந்தப் பத்திரிக்கையிலாவது செய்தி வந்ததா?" அவர் மேலும் கேட்டார், "தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவ்வளவு காவலையும் மீறி எப்படி தப்பித்துச் சென்றார்கள்? அந்த வீட்டிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழிதானே இருந்தது? என்கவுண்டர் நடக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் அவர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்?"


அவர் மேலும் சொன்னது ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு பயங்கரமானதாக இருந்தது; "இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர்கள் (காவல்துறையினர்) யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். இன்று அந்த இளைஞர்களுக்கு நேர்ந்தது நாளை என் சகோதரனுக்கு நேரலாம். ஏதோ ஒரு உப்புப்பெறாத காரணத்திற்காக, தான் நிரபராதி என்று நிரூபிக்கக்கூட அவகாசம் தரப்படாமல் அவன் கொல்லப் படலாம். அவர்கள் உங்களைக் குற்றவாளி என்று சொன்னால் நீங்கள் குற்றவாளிதான். மறுபேச்சிற்கே இடமில்லை. இது என்னைக் கடும் கோபத்திற்குள்ளாக்குகிறது"


இந்திய முஸ்லிம்கள், அச்ச உணர்வு, பாதுகாப்பற்ற சூழ்நிலை, ஆட்சியாளர்களின் பாரபட்ச போக்கு ஆகியவற்றோடு தீவிரவாத முத்திரையையும் சுமந்தவர்களாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 'முஸ்லிம்கள்' என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறு கும்பல் அவர்களின் வாழ்க்கை மற்றும் மதநம்பிக்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. 'குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள்' என்று யாராவது சொல்லும்போது என்னுள் வெறுப்புணர்வுதான் ஏற்படுகிறது. 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அடையாளம் தெரியாத ஒரு அமைப்பு, இந்திய முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற ஒளிவுமறைவு 'ஜிஹாதை' நடத்துகிறதாம்.
ஓர் உண்மையான ஜிஹாத் போராட்டம் ஒளிவுமறைவாக நடக்கவே முடியாது. இஸ்லாமிய சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அநீதிக்கெதிரான ஜிஹாத் போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட முறையிலேயே வெளிப்படையாக நடத்தப்பட்டனவே தவிர, அவை அடையாளம் தெரியாத நபர்களால் ஒருபோதும் நடத்தப் பட்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.


கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நம் நாட்டில், நாட்டைக் கொலைக்களமாக மாற்றத்துடிக்கும் ஒரு சிறு கொலைகாரக் கும்பலை காவல்துறையினரால் வளைத்துப் பிடிக்க முடியவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. இந்திய உளவுத்துறையினரின் கைவசம் ஏராளமான தகவல் சாதனங்களும் துப்புகளும் இருந்தும், பயங்கரவாதச் செயல்களை முறியடிப்பதில் அவர்களின் செயல்பாடுகள் பூஜ்யமாகவே இருக்கின்றன.


இந்தியாவின் 16 கோடி சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இருக்கும் பிரச்னை ஒன்று; அச்சவுணர்வுதான் அது! அவர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கவும் யாரும் தயாராக இல்லை. இந்தியாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் முஸ்லிம்கள் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைக்கான தீர்வின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களேயல்லாது பிரச்னையின் ஒரு அங்கமாக அல்ல. இந்தியா அவர்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.


ஒரு முஸ்லிம் நண்பர் மூடி மறைக்காமல் சொன்னார், "கவி ரவீந்திரநாத் தாகூரின் 'மனம் அச்சமில்லாமல் இருக்கும்போது' எனும் கவிதை வரிகள் இப்போதெல்லாம் என் வீட்டுச்சுவரை அலங்கரிப்பதில்லை".


Mubasshir Mushtaq
(He is a freelance journalist. He specialises in law, journalism and current affairs.)

நன்றி: சத்தியமார்க்கம் இணையதளம்

Wednesday, September 10, 2008

ஆட்டோமொபைல் மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

"சார், என் பைக்கை நிறுத்திட்டு கடைக்குள்ள போயிட்டு வர்றதுக்குள்ள எவனோ திருடிட்டுப் போயிட்டான் சார். எப்படியாவது கண்டுபிடிச்சுக்கொடுங்க.."

தில்லாலங்கடி திருடர்களின் திருவிளையாடல்களால் தினசரி போலிஸ் ஸ்டேஷன் வாசலைத் தட்டும் இது போன்ற புகார்கள் பல. சைடு லாக்கையும் உடைத்துத் திருடும் கும்பல்களிடம் இருந்து பைக்குகளைக் காப்பற்றத்தான் "ரிமோட் லாக்கை" அறிமுகம் செய்தார்கள். ஆனால், அதன் மூச்சையும் நிறுத்திவிட்டு, திருடும் கும்பல்களை என்ன செய்வது,?


இதை தடுக்க ஒரு கருவி கண்டுபிடித்திருக்கிறார், தூத்துக்குடி மாவட்டம் அலங்காரத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி. இவர் இங்குள்ள சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ படிக்கிறார். " நான் வடிவமைத்திருப்பது மொபைல் போன் மூலமாகச் செயல்படும் ஒரு லாக். அதாவது, மொபைல் போன் மதர் போர்டில், லைப் டைம் சிம் கார்டு ஒன்றைப் பொருத்தி, அதனுடன் "ஆக்ஸிலேஷன் போர்டு" என்ற சர்க்கியூட்டையும் பைக்கின் சீட் அடியில் பொருத்தி இருக்கிறேன். இஞ்சினின் இயக்கத்தை எனது செல்போன் நம்பரில் இருந்து மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த போர்டிலிருந்து இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் லாக் செய்த பைக்கை, சைடு லாக்கை உடைத்தோ அல்லது கள்ளச்சாவி மூலம் திருட முயன்றால், அடுத்த வினாடியே உரிமையாளரின் செல்போனுக்கு தகவல் வரும் வகையில் இந்த சர்க்யூட் அமைக்கப்பட்டிருக்குது. பைக் திருடப்படுகிறது என்பதைத் தெரிந்துக்கொண்டு, போன் இணைப்பை கட் செய்துவிட்டு காரியத்தில் இறங்கும் வரை தொடர்ந்து பல முறை தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருக்கும். கிக்கரை உதைத்தோ வயரை கட் செய்துவிட்டோ தள்ளிவிட்டோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது. அதையும் மீறி தள்ளிக்கொண்டே சென்றுவிட்டால் சிம் கர்ட் மூலம் பைக் எந்த எல்லைக்குள் இருக்கிறது என்று காவல்துறை மூலம் தோராயமாகக் கண்டுபிடித்துவிடலாம். மேலும், லாக் செய்ய மறந்து நீண்ட தூரம் சென்றுவிட்டால் கூட, செல்போன் மூலம் லாக் செய்துகொள்ளலாம்" என்று தனது கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையுடன் கூறுகிறார் முனியசாமி.


"சோதனை முயற்சி என்பதால் இதற்கு 1,100 ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. அதே நேரம், இந்த உபகரணத்தை தற்காலிகமாக பைக்கில் பொருத்தியிருப்பதால் இந்த நிலையில் திருடர்கள் இந்த உபகரணத்தையும் செயலிழக்கச் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிலேயே, இதை சேதப்படுத்த முடியாத இடத்தில் பொருத்திவிட்டால், கண்டிப்பாக காலத்துக்கேற்ற சிறந்த பாதுகாப்பு கருவியாக இருக்கும்" என்கிறார்.


இந்த செல்போன் லாக் தயாரித்த பின்னணி பற்றி முனியசாமி கூறுகையில், " அப்பா மீன்பாடி வண்டி ஓட்டுறதால குடும்பம் வறுமையிலதான் ஓடுது. இந்த லாக் சிஸ்டத்தையே நண்பர்கள் தங்கமணி, கோமுசங்கர், ராபர்ட் மூணு பேரோட உதவியாலத்தான் செஞ்சேன்" என்று நண்பர்களின் உதவியை குறிப்ப்பிட்டவர்,"குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மட்டும் லாக் செய்யக்கூடிய, நடைமுறையில் இருக்கும் ரிமோட் லாக்கைவிட இது மிகவும் சிறந்தது" என்கிறார் நம்பிக்கையுடன் முனியசாமி.


நன்றி: மோட்டார் விகடன்.

Sunday, September 7, 2008

வெளிப்பட்டது தினமலரின் சுயரூபம்.


தமிழ் நாட்டில் ஒவ்வொரு தினசரிக்கும் ஒரு கேரக்டர் இருப்பது அதை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியும். ஒரு தினசரி பத்திரிக்கையின் பெயரை சொன்னவுடனே அதன் சார்பு என்ன, அதன் பின்புலம் என்ன, என்பது தமிழ் மக்கள் அறிந்ததே. அதனால் "தினமலர்" என்று சொன்னவுடன் அது உண்மையை நேர்மையுடன் வெளியிடும் நாளிதழ் என்றும் அதற்கு கட்சி சார்போ, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக அல்லது எதிராக எழுதாத பத்திரிகை என்று வக்காலத்து வாங்க மாட்டீர்கள் என்று தெரியும்.

தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் கேட்டால் "தினமலர் எங்கள் சமுதாயத்தை குற்றப்பரம்பரையாக்க திட்டமிட்டே விஷம பிரச்சாரம் செய்து வருகிறது" என்கிறார்கள். இணையத்தில் எழுதும் தமிழ் முஸ்லிம் பதிவர்களின் பதிவுகளில் ஒரு பதிவாவது தினமலரை கண்டித்து இல்லாமல் இருக்காது.

இந்த வருடம் இஸ்லாமியர்களின் புனித மாதமான "ரம்லான்" துவங்கிய நாளில் அவர்கள் பெரிதாக மதிக்கும் இறைத்தூதர் முகம்மது அவர்களின் கார்டூனை வெளியிட்டது. அந்த கார்ட்டூன் ஏற்கனவே டென்மார்க் நாட்டின் ஒரு பத்திரிகையில் வெளிவந்து உலக முஸ்லிம்களின் கண்டனத்திற்குள்ளானது.
இதை மீள்பிரசுரம் செய்தது ஏன்? இவர்களின் உள்னோக்கம் என்ன?

தினமலரின் தரப்பில் இந்த சம்பவத்தை கவனக்குறைவு காரணமாக நடந்ததாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது பச்சை பொய் என்பது கடந்த வருடம் அக்டொபர் மாதம் தினமலரின் இதழ்களை புரட்டினால் தெரிந்து கொள்ளலாம். சம்பந்தமில்லாத ஒரு கட்டுரையில் அந்த கார்டூனை சாமர்த்தியமாக நுழைத்து விட்டது. இதுவும் புனித ரம்லான் மாதம் தான் நடந்தது. ஆனால் அந்த நிகழ்வு யார் கவனத்திற்கும் வராமல் போனது.

ஏற்கனவே "வினாயகர் சதுர்தி" காலங்களில் பதற்றமாக இருந்து வரும் தமிழகத்தில் மேலும் இது போன்ற செயல்கள் மூலம் தினமலர் அமைதியின்மையை ஏற்படுத்தி எதை சாதிக்கப்போகிறது.

நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நாளேடு அல்ல என்றும் ஒரு மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை சன் டிவி யும் தினகரனும் உலகம் முழுவதும் கொண்டு சென்றது என்றும் இப்போது நீதிமன்றத்தின் படியேறிக்கொண்டுள்ளனர்.

வினை விதைத்தால் அறுத்து தானே ஆக வேண்டும்.

Wednesday, August 27, 2008

அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மோடி அரசு............... அம்பலப்படுத்தியது தெஹல்கா

எங்கள் ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிமாக இருப்பது மட்டுமே


முஃப்தி அபுல் பஷர் காசிமியின் தந்தை அபூபக்கர் இஸ்லாஹி




(அஹ்மதாபத்தில் சமீபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர் என்று கூறி குஜராத் காவல்துறையினர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இளம் இஸ்லாமிய அறிஞரை கைது செய்துள்ளார்கள். இவர் சிமி அமைப்பின் முக்கியத் தலைவர்கüன் ஒருவர் என்றும் ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவரது பின்னணி என்னவென்பதை தெஹல்காவின் ஆசிரியர் அஜித் சாஹி புலனாய்வு செய்து தெஹல்கா ஆகஸ்ட் 30 தேதியிட்ட இதழில் எழுதியுள்ளதை நன்றியுடன் இங்கே தமிழாக்கம் செய்து தருகிறோம்)

முஃப்தி அபுல் பஷர் காசிமி குடும்பம்

கடந்த ஆகஸ்ட் 14 அன்று எனது இரண்டாவது மகனுக்கு மணமுடிப்பதற் காக ஒரு அழகான பெண் இருப்பதாகக் கூறி இருவர் தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்ததை நினைவு கூர்ந்தார் மவ்லானா அபூபக்கர் இஸ்லாஹி. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தட்டுத்தடுமாறி இந்த வார்த்தைகளை என்னிடம் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயினால் பாதிக்கப் பட்ட அபூபக்கர் இஸ்லாஹி ஐம்பது வயதைத் தாண்டிய மதரசா ஆசிரியர் ஆவார். வந்தவர்களை ஒரு தள்ளாடும் கட்டிலில் அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து அவரது மூத்த மகன் 23 வயதான முஃப்தி அபுல் பஷர் காசிமி அங்கு வந்து பேச்சு வார்த்தையில் சேர்ந்து கொண்டார்.




ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணமான முஃப்திக்கு மும்பையில் மருந்து கடையில் வேலை செய்யும் தனது தம்பிக் கும் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்ற ஆவல் இருந் தது. ஆனால் சில நிமிடங்கüல் சம்பந்தம் பேசவந்த அந்த இருவர் முஃப்தியை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே அநேகமாக ஓடினார்கள் என்றே சொல்ல வேண்டும். சுமார் 100 மீட்டர் தாண்டி ஒரு ஸ்கார்பியோவும் மாருதியும் அங்கே திடீரென்று வந்தன. காவல்துறையினர் சூழ்ந்துகொள்ள, மாருதி வாகனம் முஃப்தியை ஏற்றிக் கொண்டு நொடிப் பொழுதில் பறந்து சென்றது. பறவை பறப்பது போன்று அவர்கள் பறந்து சென்று விட்டனர் என்கிறார் அபூபக்கர் இஸ்லாஹி. நொண்டி அடித்துக் கொண்டு தொடர்ந்து வந்த அவருக்கு இந்தக் காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின.





முஃப்தி அபுல் பஷர் காசிமி
இரண்டு நாட்கள் கழித்து அஹ்மதா பாதில் 55 நபர்களின் உயிரிழப்புக்கு காரணமான ஜூலை 26 தொடர் குண்டு வெடிப்புகüன் மூளையாக செயல் பட்டவர் முஃப்தி அபுல் பஷர் காசிமி தான் என்று குஜராத் காவல்துறை இயக்குனர் பி.சி.பாண்டே அறிவித்தார். (ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்./வி.ஹெச்.பி/பஜரங்தளம்/பா.ஜ.க தலைமையில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட குஜராத் கலவரத்தில் அந்த அமைப்பு களுக்கு உறுதுணையாக இருந்தார் என்று பலமுறை சுட்டிக்காட்டி குற்றஞ் சாட்டப்பட்டவர் தான் இந்த பி.சி. பாண்டே. இந்தக் கலவரத்தில் பெரும் பகுதி பாண்டேயின் மேற்பார்வையில் அவர் அஹ்மதாபாத் காவல் ஆணை யாளராக இருந்தபோது நடைபெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. காவல் ஆணையாளராக இருந்த போது பலமுறை கடமை தவறிய அவர், முன்னாள் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரியிட மிருந்து, தன்னைக் காப்பாற்ற வருமாறு வந்த அவசரகால அழைப்பையும் புறக்கணித்தவர் இந்த பி.சி.பாண்டே. இதன் காரணமாக ஜாஃப்ரி யும் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த 30 நபர்களும் இந்துத்துவ கும்பலால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட னர். பின்னர் பி.சி. பாண்டே விற்கு பதவி உயர்வு அüக்கப்பட்டது.)



முஃப்தி அபுல் பஷர் மற்றும் அவரது கூட்டுச் சேர்ந்து சதி செய்தவர்கள் என்று அஹ்மதாபாத் மற்றும் வடோதராவில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி கடந்த ஆகஸ்ட் 16 அன்று தான் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் பி.சி. பாண்டே விவரித்தார். அப்போது அவர், ''அஹ்மதாபாத் குண்டுவெடிப்புகள் எங்கு, எப்படி, யாரால் திட்டமிடப்பட்டன என்பது குறித்த முழு விபரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன'' என்று முகமலர்ச்சியுடன் பாண்டே அறிவித்தார்.
கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது முஃப்தி காசிமி யின் கிராமம். இங்கு வாழும் மக்கüடம் அவரைப் பற்றி விசாரித்த போது, அவர் அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடி யவர் என்றும், வெட்க சுபாவம் உடைய வர் என்றும் அவரது கிராமத்தினர் குறிப்பிட்டார்கள். ஆனால் காவல் துறையினர் அவர் சிமியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்றும், குஜராத்தில் 2002ல் நடைபெற்ற படுகொ லைகளுக்கு பழிவாங்கும் உணர்வு கொண்ட ஜிஹாதி என்றும் அவரை வர்ணித்தனர்.




அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு களுக்கு இரண்டு மூன்று தினங்கள் கழித்து சூரத் நகரத்தில் மரங்கüலும், கடைகüன் ஷட்டர்கüலும், விளம்பரப் பலகைகüலும் தொங்கிய 29 குண்டு களையும் வைத்தவர்கள் இவரது கும்பல் தான் என்றும் பாண்டே செய்தியாளர் கüடம் கூறினார். (ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இந்த குண்டுகளில் ஒன்றுகூட வெடிக்கவில்லை. இந்த குண்டுகள் வெடித்து எவருக்கும் காயம் ஏற்படுத்தவில்லை. தனி நபர்கள் இந்த குண்டுகள் அனைத்தையும் எதார்த்தமாக கண்டுபிடித்தார்களாம்.) முஃப்தி காசிமி கைதான பிறகு செய்தி ஊடகங்கள் மிக வேகமாக, பெயர் வெüயிடப்படாத காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அவர் நாடு முழுவதும் பயங்கர வாத இணைப்பை உருவாக்குவதற்காக பயணம் மேற்கொண்டதாகவும், கேரளாவில் ஆட்களுக்கு பயிற்சி அüத்ததாக வும், குஜராத்தில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு குண்டுகளைத் தயாரித்த தாகவும் செய்திகளை வெüயிட்டன.




ஆதாரங்கள் எங்கே?
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே உள்ளது? இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை (சிமி) சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீது நாடு முழுவதும் காவல்துறையினர் இது வரை போட்டுள்ள பொய் வழக்குகüன் வழியில் வழக்கம் போல் முஃப்தி காசிமி கைது செய்யப்பட்ட ஒருநாள் கழித்து அவர் மீது குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. காவல்துறை யினரிடம் இருக்கும் ஒரே ஆதாரம் கைது செய்யப்பட்ட பிறகு முஃப்தி காசிமி அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே. கடந்த 3 வாரங்களாக சிமி மீதான பொய் வழக்குகள் குறித்து தெஹல்கா அம்பலப் படுத்தி வந்தபோது குறிப்பிட்டது போல் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் துறை அதிகாரி முன்பு ஒருவர் அüக்கும் வாக்குமூலம், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது தள்ளுபடி செய்யப் படும். ஏனெனில் இந்திய சாட்சியச் சட்டம் காவல்துறை அதிகாரியிடம் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிடுகின் றது. (மராட்டிய மாநிலத்தில் அமலில் இருக்கும் திட்டமிட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (எம்.சி.ஒ.சி.ஏ.) மற்றும் காலாவதியான பொடா சட்டம் போன்றவை கொடூரமான சட்டம் என்பதால் அவை காவல்துறை அதிகாரி யிடம் அüக்கப்படும் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுகின்றன. மராட்டிய சட்டம் போன்ற சட்டம் தனது மாநிலத்திற்கும் வேண்டும் என்று மோடி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இதன் மூலமாக கைது செய்யப்பட்டவர் கள் அüக்கும் ஒப்புதல் வாக்குமூலங் களை வைத்து, அவர்கள் பிறகு இதனை வாபஸ் பெற்றுக் கொண்டாலும் சரியே... அவர்களைத் தண்டிக்க இயலும்)
சிமியைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பிசுபிசுத்தது போல் காவல்துறை பின்வரும் ஆதாரங்களை எடுத்துரைக்காவிட்டால் முஃப்தி காசிமி மீது போடப்பட்ட வழக்குகளும் பிசுபிசுத்து விடும்,


*மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கும் சஃப்தர் நாகூரிக்கு இவர் எழுதிய கடிதத்தைப் பற்றிய ஆதாரம்.


*பயங்கரவாத நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்காக நாடு முழுவதும் இவர் பயணம் செய்தார் என்பதை நிரூபிக்கும் பயணச் சீட்டுகள் மற்றும் வாடகை ரசீதுகள்.


*இவரது வீட்டிலிருந்து அல்லது வேறு இடத்திலிருந்து குண்டுகளைத் தயாரிப்பதற்காக இவர் பயன்படுத்திய கருவிகள். இவை இவருடன் தொடர்பு டையது என்பதை காவல்துறை சுயாட்சியான சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனின் நீதிமன்ற விசாரணையின் போது இந்த சாட்சியங் கள் நிராகரிக்கப்படும்.


*கேரளா மற்றும் குஜராத்தில் பயங்கரவாத முகாம்கள் நடைபெற்றன என்பதற்கான ஆதாரங்கள்.


கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது காவல் துறையினரால் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க இயலாது, 14 நாள் விசாரணைக் கைதிகளாக காவல்துறை வசம் இருக்கும் காசிமியும் இன்னும் 9 பேரும் நீதிமன்றத் திற்கு மீண்டும் கொண்டு வரப்படும் போது தாங்கள் ஒப்புதல் வாக்குமூலம் அüத்ததை மறுப்பார்கள் அல்லது வற்புறுத்தி தங்கüடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டதாகச் சொல்வார்கள்.




காசிமி வீட்டில் நகைகளைத் திருடிய காவல்துகறை
காசிமியை பிடித்துச் சென்ற இரு தினங்கள் கழித்து ஆகஸ்ட் 16 அன்று வெறும் செங்கல்களுடன் சிதிலமடைந்த நிலையில், உடைந்த பாத்திரங்கள் உள்ள எவ்வித வருமானத்திற்கும் வழியின்றி இருக்கும் முஃப்தியின் வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து முஃப்தியின் ஐந்து தம்பிகளில் ஒருவ ரான, மதரசாவில் பயிலும் மாணவர் அபூ ஜைத் தெஹல்காவிடம்: '''30 காவலர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை வெüயேற்றினர்'' என்று தெரிவித்தார்.




சட்டப்படி சாட்சிகளாக உள்ளூர் மக்களை காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையின் போது வைத்திருக்க வேண்டும். ஆனால் துப்பாக்கி முனை யில் யாரையும் அவர்கள் நெருங்க விடவில்லை. முஃப்தியின் தந்தை தனது மருமகüன் தங்க நகைகளைக் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். தனது வீட்டில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்தின் ஒரு பாக்கெட்டையும், இரும்பினால் செய்யப்பட்ட சுத்திகரிப்பு கருவியையும் காவல்துறையினர் எடுத்துச் சென்று விட்டதாகக் குறிப்பிட்டார். தனது மகனைக் குற்றவாüயாக ஆக்குவதற் காக இந்தப் பொருட்களெல்லாம் குண்டுகளைத் தயாரிக்க உதவக்கூடி யவை என்று காவல்துறையினர் பிரகடனம் செய்து விடுவார்களோ என்று காசிமியின் தந்தை தனது அச்சத்தைத் தெரிவித்தார்.




முஃப்தி காசிமியின் குடும்பத்தினரும் அவரது அண்டை வீட்டார்களும் அவர் சிமியின் உறுப்பினர் என்ற குற்றச் சாட்டை வலிமையாக மறுக்கின்றனர். மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள பிரபல இஸ்லாமிய சர்வ கலாசாலையான தாருல் உலூம் தேவ்பந்தில் கடந்த ஆண்டு 2 ஆண்டு மேற்பட்டபடிப்பான முஃப்தி பட்டத்தை காசிமி பெற்றார். இவர் மீது எந்தவொரு வழக்கும் முன்னெப்போதும் காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் இவர் வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் இவரது குடும்பத்தினர் ஏதோ ஒரு வன்முறைக் கும்பல்தான் இவரைக் கடத்திச் செல்கின்றது என்று எண்ணி யுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். பிறகு முதல்வர் மாயாவதிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அவர்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர். ஆனால் இவர்கüடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.




காவல்துறையின் அராஜகப் போக்கு


தெஹல்கா நடத்திய மூன்று மாத புலனாய்வு, ஒரு உண்மையைப் புலப் படுத்தியது. சில வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்ட முஸ்லிம்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய ஒரு முஸ்லிமை அவர் மீது முன்பு வழக்குகள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட அவர் களைக் குற்றவாளியாக்கும் போக்கு அதிகமாக இருப்பதை அறிய முடிந்தது. முஃப்தியின் குடும்ப நண்பரான ஆஜம்கரைச் சேர்ந்த, தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் அப்துல் அலீம் இஸ்லாஹி நடத்தி வரும் மதரசாவில் கடந்த பிப்ரவரி மாதம் முஃப்தி காசிமி பாடம் நடத்தினார். ஹைதரபாத் காவல்துறையினரால் பல பொய் வழக்குகüல் கைது செய்யப்பட்ட முஹ்தசீம் பில்லாஹ்வின் தந்தைதான் அப்துல் அலீம் இஸ்லாஹி ஆவார். இந்த ஹைதராபாத் மதரசாவில் ஒரு மாதம் மட்டுமே முஃப்தி காசிமி பணியில் இருந்தார். பிறகு பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட தனது தந்தை மற்றும் மூட்டு வலியினால் அவதிப்பட்ட தனது தாயாரை கவனிப்பதற்காக அவர் ஊர் திரும்பிவிட்டார்.
முஃப்தியின் அண்டை வீட்டுக்காரர்கள் அவர் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளை நம்புவதற்கு மறுக்கின்றனர். அவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்றும், கடந்த ஏப்ரல் 2006ல் முதன்முறையாக அவர் ஒரு இஸ்லாமியக் கருத்தரங்கில் பங்குகொண்டு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை பலராலும் பாராட்டப்பட்டதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர். ஹைதரா பாத்தில் இருந்து திரும்பிய பிறகு முஃப்தி காசிமி வேலை தேடியதாகவும், தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாகவும் அவரது தம்பி கூறினார்.
அண்டை வீட்டார் தான் இந்தக் குடும்பத்தினருக்கு உணவüத்து வந்துள் ளனர். ''அல்லாஹ் எங்களுக்கு நீதியை அளிப்பான்'' என்று கோபத்தை தணித்துக் கொண்டு தழுதழுத்த குரலில் சொன்னார் அபூ ஜைத். ''எங்களது ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதுதான்'' என்று முஃப்தியின் தந்தை முடித்துக் கொண்டார்.



Thanks to TMMK.