கடந்த நவம்பர் மாதம் தாலிபானின் ராணுவ தளபதி "பிரெஞ்சு துருப்புக்கள் ஆப்கானை விட்டு வெளியேறாவிட்டால் இதன் எதிரொலி பாரிஸில் கேட்கும்" என்று சொன்னதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டது.
"ஆப்கான் புரட்சி முன்னணி" என்ற பெயரில் பிரெஞ்ச் செய்தி ஏஜென்ஸிக்கு அனுப்பப்பட்ட ஒரு மிரட்டல் கடிதத்தில் "ஆப்கானில் இருந்து பிரெஞ்சு ராணுவம் வரும் பிப்ரவரி 2009 க்குள் திரும்ப வேண்டும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிஸில் உள்ள மிகப் பிரமாண்டமான "ப்ரெந்தாம்" என்கிற கடையில் பல இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது டிசம்பர் 17,புதன்கிழமை வெடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கவே பரபரப்பானது பாரிஸ் நகரம்.
அது போல் அந்த குறிப்பிட்ட கடையின் ஆண்கள் பிரிவில் உள்ள டாய்லெட் பகுதியில் குண்டு கண்டெடுக்கப்பட்டது. அது இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால் அவர்களின் நோக்கம் மிரட்டல் அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment