பயங்கரவாதிகள் இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்: இந்திய கோரிக்கையை நிராகரித்து அதிபர் சர்தாரி திமிர் பேச்சு
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2423&cls=row3
.மேற்கண்ட தலைப்பில் தினமலர் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் இந்திய முஸ்லிம்களை தவறாக சித்தரித்து தன் வழமையான பாணியை (முஸ்லிம் வெறுப்புணர்வு) கையாண்டிருக்கும் அவ்விதழை கண்டிக்கிறேன். அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.....
""பார்லிமென்ட் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாக்.கிற்க்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் முஸ்லிம்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்றும் மத்திய அரசு அஞ்சிகிறது. அதனால் என்ன நடவடிக்கை என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.""
இந்த வரிகளை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வரிகளின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?
இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை விரும்பவில்லை என்கிறீர்களா? அல்லது கார்கில் போரை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையா,? அல்லது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் அபிமானியாக இருக்கிறார்கள் என்கிறீர்களா,? மும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியாக தெரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் மத்திய அரசுக்கு நெருக்கடியே தவிர நீங்கள் சொல்வது போல அல்ல.
ஊடகங்கள் மூலமாக இதுபோல பொத்தாம்பொதுவாக இந்திய முஸ்லிம்களைச் சாடுவதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் செய்தியை படிக்கும் வாசகனின் மனதில் தோன்றும் முதல் எண்ணமே பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய முஸ்லிம்கள் தான் தடையாக உள்ளது போல சித்தரித்துள்ளீர்கள்.
மாலேகானில் குண்டு வெடித்த போதும் இதே பத்திரிக்கை மசூதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தாக கற்பனையான ஒரு புலனாய்வை எழுதி யாரையோ திருப்தி படுத்தினார்கள். பின்னர் நடந்த விசாரணையில் அது சங்பரிவாரங்களின் செயல் என்பது நிரூபனமாகி வருகிறது.
தினமலர் திருந்த போவதில்லை; நாம் தான் புறக்கணிக்க வேண்டும்.
1 comment:
READ
http://vanjoor-vanjoor.blogspot.com/2008/12/blog-post_19.html
ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?
Post a Comment