கடந்த 2008&ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாள் நிகழ்ந்த மும்பை தாக்குதல் சம்பவ வழக்கு விசாரணையை மேற்கொண்ட சிறப்புநீதி மன்றம் அவ்வழக்கில் தீர்ப்பளித்த போது, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் படுகொலை தொடர்பாக கூறியவற்றை நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் இருட்டடிப்பு செய்துவிட்டன.
கடந்த மே மாதம் 6ம் நாள் மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.எம்.எல்.தஹ்லியானி அளித்த தீர்ப்புரையில் பாகிஸ் தானியரான அஜ்மல் அமீர் கசாபுக்கு வழங்கப் பட்ட தூக்கு தண்டனையை மட்டுமே ஊடகங்கள் செய்தியாக்கி மற்றவைகளை இரு ட்டடிப்பு செய்தன என்று "ஹார்டு நியூஸ்" பத்திரிகை கூறியுள்ளது.
கொலைக் குற்றம், நாட்டிற்கு எதிரானப் போர், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டங்களின் கீழான குற்றங்கள் என்பவைதான் கசாபின் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் ஆகும்.
"ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்கரேயின் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள் யாருடைய துப்பாக்கியிலிருந்து வெளி வந்தவை என்பதை தடய அறிவியல் வல்லுநர்கள் ஏன் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை?" என்று தனது தீர்ப்புரையில் மும்பை போலீசை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி தஹ்லியானி.
ஹேமந்த் கர்கரே, விஜய் சாலஸ்கர் மற்றும் அசோக் காம்தே ஆகியோர் கொல்லப்பட்டதை நேரில் கண்ட சாட்சியான போலீஸ் கான்ஸ்டபிள் ஜாதவ் தனது வாக்கு மூலத்தை மாற்றி சாட்சியமளித்தையும் நீதிமன்றம் வன்மையாக கண்டித்திருக்கிறது.
உயர் போலீஸ் அதிகாரிகளாக இருந்த இவர்களின் படுகொலைகளை நேரில் கண்ட ஒரே ஒரு சாட்சியான மேற்படி ஜாதவ் தன் வாக்கு மூலத்தையும் சாட்சியத்தையும் பலமுறை மாற்றி மாற்றிக் கூறியுள்ளார். எனவே, ஜாதவின் முரணான சாட்சியத்தையும் வாக்கு மூலங்களையும் வைத்து இந்த உயர் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட காமா மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ள இயலாது என்றும், கர்கரேயை கொன்றவர்கள் கசாபும், இஸ்மாயீலும் அல்ல என்றால் வேறு யார்தான் அதை செய்தார்கள்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கடந்த 2008&ம் ஆண்டில் மாலேகான் குண்டு வெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை கண்டுபிடித்துக் கூறியவர் கர்கரே. இதைத் தொடர்ந்து இந்துத்துவத்தின் பல முனைகளிலிருந்தும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களையெல்லாம் திட்டமிட்டு நிகழ்த்திக் கொண்டிருப்போர் இந்துத்துவ தீவிரவாதிகள் தான் என்பதை முதன் முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இந்த கர்கரே.
அஜ்மீர் தர்கா மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியோர் இந்துத்துவா சக்திகள் தான் என்கிற உண்மையும் இப்போது வெளிவந்துள்ளது.
கர்கரேயின் புல்லட் புரூஃப் ஜாக்கட் (குண்டு துளைக்காத கவச சட்டை) மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற முக்கிய சான்றாவணங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் காணாமற் போயிருந்தன. கர்கரேயின் மனைவி கவிதாவும், காம்தேவின் மனைவி வினீதாவும் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பயனாகத்தான் இத் தகவல்கள் வெளிவந்தன.
அதுபோல, கர்கரேயின் சடலத்திலிருந்து இரண்டு தோட்டாக்கள் எடுக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், அவை என்னவாயின என்பது பற்றியோ, அவரது உடலில் பாய்ந்திருந்த மற்ற மூன்று தோட்டாக்களை பற்றியோ எங்கும் குறிப்பிடப்படவே இல்லை என்றும் "ஹார்டு நியூஸ்" பிரசுரித்துள்ள செய்தியில் கூறப் பட்டுள்ளது.
நாசகாரிகளான இந்துத்துவ சக்திகள் நாடெங்கிலும் திட்டமிட்டு நடத்தி வருகின்ற பேரழிவு செயல் களுக்கு அரசின் ஆசியுடன் நிதி &நிர்வாகம்&காவல்துறைகளில் இருந்தும், ஊடகத்துறையிலிருந்தும் கிடைத்து வருகின்ற அபாயகரமான ஆதரவையும்&பாதுகாப்பையும் எண்ணிப் பார்க்கும் போது எதிர்கால இந்தியா என்னாகுமோ என்கிற அச்சமும், பீதியும் உண்மையான நாட்டுப்பற்றாளர்களை பிடித்து உலுக்குகிறது.
-ஊடகன்
நன்றி.த.மு.மு.க.
No comments:
Post a Comment