Friday, November 27, 2009

பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம்கள் தரப்பு நியாயங்கள் (பாகம் இரண்டு)

இந்தப் பதிவில் முஸ்லிம்களின் தரப்பு வாதங்களாக த .மு.மு.க. சார்பில் பேரா.ஜவாஹிருல்லாவும் ஆர்.எஸ்.எஸ் சார்பாக சண்முகராஜனும் விவாதிக்கின்றனர். விவாதம் பழையது என்றாலும் அதிலுள்ள நியாயங்கள் நிதர்சனமான உண்மை .






அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?


‘பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமாதித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.



அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவாறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.



குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதிகளை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படுகின்றனர்.



கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.





‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?



இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?



இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.



கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக்களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.



குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.



அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.



கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?



இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ்கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.



மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.



துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.



இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.



இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.



இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.



200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ராஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடரவில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற்றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.



பாபர் கோவிலை இடிப்பவரா?



இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப்பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.



கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?



மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?



பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.



இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?



பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.



கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.



பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.



கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.



அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.



வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.



1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக்கவில்லை.



இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.



1949ல் சங்பரிவாரங்கள் புளுகு மூட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.



இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.





(கட்டுரை ஆதாரம் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் )





Thursday, November 26, 2009

பாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம்கள் தரப்பு நியாயங்கள் (1)



சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத படுகொலை மகாத்மா காந்தி என்றால் இரண்டாவது பயங்கரவாத நிகழ்வு பாபர் மசூதி இடிப்பு தான். இரண்டையுமே இந்துத்துவ காவி சிந்தனைக் கொண்ட சங்பரிவார கும்பல்கள் தான் செவ்வனே செய்தன. உலக அரங்கில் மதசார்பற்ற நம் தேசம் தலை குனிந்து நின்ற அவல நிலைக்கு தள்ளியவர்கள் இவர்களே.

பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் கோவில் இருந்தது, அது இடிக்கப்பட்டுத் தான் மசூதி எழுப்பப்பட்டது என்று வாதிடும் இந்த சங்பரிவாரங்கள் அதற்கான ஆதாரங்களை வைத்து அறிவுபூர்வமான விவாதத்திற்கு தயாராகாமல், மத உணர்வுகளைத் தூண்டி விட்டு நீதி மன்றங்களையே மிரட்டி வருகின்றன. இனி... இது தொடர்பான முஸ்லிம்களின் நியாயங்களைப் பார்ப்போம்.




1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.




‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.

ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.

இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.

இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.

கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.

இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.

‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.

”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
(கட்டுரை ஆதாரம் தமிழ்நாடு தவ்கீது ஜமாஅத் )



Saturday, November 14, 2009

திரிக்கப்பட்ட முஸ்லிம் படையெடுப்புகளும், மறைக்கப்பட்ட இந்து படையெடுப்புகளும்..


பொதுவாகவே.. நம் பள்ளிகளில் படிக்கும் வரலாற்றுப் பாடபுத்தகங்களில் முஸ்லிம் மன்னர்களை பற்றி சித்தரிக்கும்போது அவர்கள் நாடு பிடிக்க வந்தவர்கள் என்ற உண்மையை உரத்து சொன்னாலும், தங்களது மதத்தைப் பரப்ப வாளேந்தினார்கள் என்றும் பொய்யுரைத்திருப்பார்கள். இந்தியாவை வெற்றி கொண்ட முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக்க வேண்டும் என்று ஒருபோதும் நாடியதில்லை. ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் முழுமையாக இஸ்லாத்தை தங்களது வாழ்வில் கடைபிடித்ததில்லை. இஸ்லாத்தை முழுமையாக தன் வாழ்வில் ஒழுகாத அவர்கள் எப்படி இந்தியாவை இஸ்லாமாக்க விரும்பியிருப்பார்கள் என்ற நியாயமான வினா எழுகிறது?

ஆனால் படையெடுப்பு என்று வந்தால் இதில் யாரும் விதிவிலக்கில்லை. வெற்றியா தோல்வியா அதுதான் முக்கியமாகப்பட்டிருக்கிறது. ஜெயித்தால், தோற்ற மன்னனுக்கு சொந்தமான அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இதில் அவனது அரண்மனை, அவன் கட்டிய வழிபாட்டு தலங்கள், அவனது மனைவிமார்கள் என்பதும் அடக்கம். இங்கே வெற்றிக்கொள்வது என்பது தோற்கடிக்கப்பட்டவனின் சின்னங்களை அழிப்பதுமாகும். இதில் தான் இப்போதைய வகுப்புவாதிகள் தங்களது நோக்கத்தை நிறைவேற்ற மத சாயம் பூசி மக்களின் மனங்களை பிளவு படுத்துகின்றனர். நாடு பிடிக்க வந்த முஸ்லிம் மன்னர்களைப் போலவே இந்து என்று இப்போது பொதுவாக அழைக்கப்படும் சமயத்தை(ஏனென்றால் இந்து என்று அப்போது வழக்கில் இல்லை) சார்ந்த மன்னர்களும் எல்லா கொடுஞ்செயல்களையும் செய்துள்ளார்கள். எனவே இனி....ஒரு விசாலமான வரலாற்றுப் பார்வை.

uthayam


இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும். ஆ.சிவசுப்பிரமணியன்.
(மதுரை பாரதி புக் ஹவுஸ், 'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூல் . அந்நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.) நன்றி : தட்ஸ் தமிழ்



நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"பொன்னின் ஆகும் பொருபடை யப்படைதன்னில் ஆகுந் தரணி தரணியிற்பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே "(செய்யுள்: 1923)பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும்.

ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" (புறம் 76: 12)என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்கொள்ளை மேவலை யாகலின்"என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான்.

சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)

இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும்.


கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது."அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது."தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.

1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.

திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.

அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.

சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்."திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான்.இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)

ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்குயாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்திஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக்கொடு இருந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்திநிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோரசமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடிஇவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டுபாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்றுதேவன் திருவுளமாய் ஏவ,விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்கனும்,சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில்வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமாநல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு,சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும்சேந்தமங்கலத்தே எடுத்து விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாகதேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியைஎழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது "

சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது).


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).

தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) . ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர். இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா? படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்.

முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.

தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை. இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர். இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார்.


சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும்.

அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ,
அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,
அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள்.இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல.


வாளால் பரப்பப்பட்டதா இஸ்லாம்? பார்க்க விடியோ

தொடர்பான பதிவு. http://meiyeluthu.blogspot.com/2010/08/blog-post_08.html


Wednesday, November 4, 2009

வந்தே மாதரம் தேசபக்தியின் மாய பிம்பம்

ஜமாத் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 10,000 மேற்பட்ட மதகுருமார்கள், மத அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் அமைப்பு 2006ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதைப் பாடக் கூடாது என்று முஸ்லீம்களுக்கு பத்வா (தடை) பிறப்பித்தது. அந்தத் தடை சரியானதே.நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மதத்துக்கு எதிரானது.மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது.

இதனால் அதைப் பாட முடியாது. வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல் பிரச்சனையை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை. மதத்தை காரணம் காட்டி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மிக மிக தவறான செயல். இதனால், எல்லா வகையான தீவிரவாத்துக்கும் எதிராக பதவா பிறப்பிக்கிறோம். தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரான செயல். அதை ஆதரிக்கவோ அதற்கு உதவி புரியவோ கூடாது.மதரஸாக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸா வாரியம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மதரஸாக்களை நாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்வோம்.சச்சார் கமிஷன் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்று என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆதாரம் "தட்ஸ் தமிழ்

மேற்கண்ட செய்தியை வாசித்ததும் "வந்தே மாதரத்தின்" ரிஷிமூலம் நதிமூலம் ஆராய வேண்டும் போல தோன்றியதால் தான் இந்த பதிவு. "வந்தே ஏமாத்துறோம்" என்று பழைய கருணா நிதியால் பரிகாசம் செய்யப்பட்ட பாடல் என்ன தேசபக்தியின் குறியீடா? சரி.. இதன் வரலாறு தான் என்ன?

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?
1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.


1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.
முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?


வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.
நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.
வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

நன்றி "புதிய ஜனநாயகம்"

தேசிய கீதம் இசைக்கப்படும் போது கூட எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. வந்தே மாதரம் பாடலை ஏன் இவ்வளவு தூரம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதன் உள் நோக்கம் என்ன? மத சார்பற்ற ஒரு நாட்டில் தேசிய கீதமில்லாத ஒரு துவேஷமும் வன்மமும் கொண்ட மத வெறி பாடலை, படைத்தவனை தவிர படைப்புக்களை வணங்காத இஸ்லாமியர்கள் பாடாமல் புறக்கணிப்பது ஒன்றும் அரசியல் சட்டத்திற்கு எதிரான செயல் அல்ல. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே ஆதாரம்..

இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குகூட இந்தியக் குடிமகன் மறுப்பதற்கான உரிமைகள் அரசியலைமைப்புச் சட்டத்தில் உண்டு. இதற்கு உதாரணமானது தான் கேரளத்தில் நடந்த பிஜோ இம்மானுவேல் வழக்கு.

கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் தேசிய கீதம் பாடும் வேளையில் எல்லாரையும் போல் எழுந்து நின்று பாடாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாய் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவ மதப்பிரிவான 'ஜெவோகா விட்னஸ்' பிரிவைச் சேர்ந்தார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் ஸ்லோகங்களைத் தவிர வேறெதையும் பாடக்கூடாது. ஆனால், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 25வது ஷரத்தின்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். 19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

ஆகவே.. இனி இந்துத்துவாவின் பயங்கரவாதிகள் இதை ஈரைப் பேனாக்கி பேனை பெருச்சாளிக்கியானாலும் அது இன்னொரு ராமஜென்ம பூமி விவகாரம் போல பிசுபிசுத்து போகும்.இந்த பாடலை பாடித்தான் ஆக வேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவது தான் இந்துத்துவ திமிர் அல்லது தீவிரவாதமாகும்.

கொல்கத்தாவில் ஒரு முறை வந்தே மாதரம் பாடலைப் பாடிய் கவி தாகூரே இந்தப் பாடலை தேசிய கீதமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுபாஸ் சந்திர போஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்:
"வந்தே மாதரம் பாடலின் மையப்பகுதி அது தேவி துர்கையைத் துதிக்கும் பாடலாக இருப்பதுதான். இது மிகவும் தெளிவாக உள்ளது. இதில் வேறு கருத்துக்கே இடமில்லை. துர்காவும் வங்காளமும் ஒன்றுதான் என்பதாகத்தான் பங்கிம் சந்திரர் கடையில் காட்டுகிறார். ஆனால் தேசப்பற்று என்ற ரீதியில் பத்து தலை கொண்ட துர்கையை 'ஸ்வதேஷ்' (தேசம்) என்பதாக எந்த முசல்மானும் ஒத்துக்கொள்ள மாட்டார் என்பது தெளிவு. இந்த ஆண்டு, துர்கா பூஜைகளையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களிலெல்லாம் வந்தே மாதரம் பாடலில் இருந்து மேற்கோள்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல் துர்கையைக் குறிப்பதுதான் என்பதாக பத்திரிக்கையாசிரியர்களும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. 'ஆனந்தமடம்' என்பது ஒரு இலக்கியப் படைப்பு. அதில் அப்பாடல் இடம் பெறுவது பொருத்தமானதே. ஆனால் பாராளுமன்றம் என்பது எல்லா மதக்குழுக்களும் இணைந்து செயல்படும் ஒரு இடமாகும். எனவே அங்கே அந்தப்பாடல் பொருத்தமானதாக இருக்க முடியாது. வங்காள முஸ்லிம்கள் தங்களது அடிப்படைவாதத்தில் பிடிவாதமாக இருக்கும்போது, அது நமக்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆனால் அவர்களையே பிரதியெடுத்த மாதிரி, நாமும் அவர்களைப் போலவே பிடிவாதமாக பாடித்தான் ஆகவேண்டும் என்று சொல்வோமேயானால், அது நம்மை நாமே தோற்கடிப்பதாக இருக்கும்"
என்று எழுதிய அவர் அக்கடிதத்தின் பின்குறிப்பில்....


"வங்காள ஹிந்துக்கள் இந்த விஷயத்தில் கோபமாக இருக்கிறார்கள். ஆனால் இது ஹிந்துக்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய விஷயமல்ல. இரண்டு பக்கமும் வலுவான உணர்வுகள் இருப்பதால், நடுநிலையான தீர்ப்பு அவசியமாகிறது. அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் இவைகளை நோக்கித்தான் நமது அரசியல் நகர்வு இருக்கிறது. ஒரு குழுவின் கோஷங்களை மட்டும் கவனிப்பதால் முடிவற்ற போராட்டம்தான் தொடரும். இது நமக்கு வேண்டாம்."
என்று முடிக்கிறார்
.
(கடித எண் 314, Selected Letters of Rabindranath Tagore, edited by K. Datta and A.Robibson, CUP).
வந்தே மாதரம் பாடலைப் பாடக்கூடாதென்று சீக்கியர்களும் முடிவெடுத்தார்கள். சீக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜதேதார் அவ்தார் மக்கார் சீக்கியர்களால் நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்பாடலைப் பாடவேண்டாமென்றும் அதற்கு பதிலாக குரு கோபிந்த் சிங்கின் பாடலைப் பாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ( நன்றி நாகூர் ரூமியின் திண்ணை பதிவு)


இந்த ‘ஆனந்த மடம்’ நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியை - ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து - ஆங்கிலேயர்களின் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக் கருத்து.வைணவ இந்து இளைஞர்கள் - ஆயுதம் தாங்கிப் போராட வேண்டும் என்பதே கதையின் கரு. இந்த வைணவர்களின் தலைவராக சுவாமி சத்யானந்தா என்று ஒரு துறவியும் - அவரது சீடராக குரு. கபவானந்தா என்ற வீரமிக்க இளைஞரும் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். இந்த பவானந்தா - இந்து இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு முஸ்லிம்களை எதிர்த்துப் போராட ஆயுதப் பயிற்சி அளிக்கிறான். (இவைகள் வரலாறு அல்ல; கதையில் வரும் கற்பனை)பவானந்தா - அப்படி திரட்டும் இளைஞர்களிடம் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’. இதன் பொருள் இதுதான்.

“நம்முடைய நோக்கம் நமது தாய் நாட்டை விடுவிப்பதேயாகும். நம்முடைய இனம், மதம், பண்பாடு, பெருமை ஆகிய அனைத்துமே முஸ்லிம்கள் ஆட்சியில் பேராபத்துக்கு உள்ளாகிவிட்டது. நாம் முஸ்லிம்களை ஒழிக்காவிட்டால், நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை. ஏழு கோடி இந்துக்களாகிய நாம் வாளேந்தி களத்தில் குதித்தால்... அது ஒன்றே போதும் நமது மண்ணின் பெருமையை மீட்க” - இதுதான் ‘வந்தே மாதரம்’ பாடலின் பொருள்.ஆனந்த மடத்துக்குள் ‘விஷ்ணு’வின் மடியில் பலவீனமாக இந்திய மாதா படுத் திருக்கும் படத்தைப் பார்த்து - வைணவ இளைஞர்கள் ‘வந்தே மாதர’த்தை முழங்கி - முஸ்லிம்கள் மீது ஆயுதமேந்தி போரிடுகிறார்கள். பல முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு காளிதேவியின் முன் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

“நாம்தான் முஸ்லிம்களை ஒழித்துவிட்டோமே, ஆனாலும் இந்துராச்சியம் வரவில்லையே! ஆங்கிலேயர்கள் அல்லவா தொடர்ந்து நம்மை ஆளுகிறார்கள்?” என்று இளைஞர்கள் சத்யானந்தாவிடம் கேட்க - அவர் கூறுகிறார்: “இப்போது நமக்கு எதிரிகள் யாருமில்லை. ஆங்கிலேயர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் தங்கள் அதிகாரங்கள் அனைத்தையும் விஷ்ணு கடவுளுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார்கள்” என்கிறார். சத்யானந்தாவின் இந்தப் பேச்சோடு கதை முடிகிறது.

காங்கிரசில் உள்ள இந்து வெறி பார்ப்பன சக்திகள் - காங்கிரஸ் கூட்டங்களில் இந்தப் பாடலைப் பாடி வந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது. 1905-ல் வங்காளம் பிரிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் இந்தப் பாடல் முக்கியத்துவம் பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தப் பாடலுக்கு தடை விதித்தது.முஸ்லீம்களைப் புண்படுத்தும் பாடலாக இருந்ததால், காந்தியாரும் இந்தப் பாடல்களைப் பாட அனுமதிக்க மறுத்து வந்தார்.
1946 - 47-ல் ‘வந்தே மாதரத்தை’ தேசிய கீதமாக்க முயற்சி நடந்தும், முஸ்லிம்கள் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.கவிஞர் இக்பாலுடைய ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்ற - இந்தியா முழுவதும் உணர்ச்சிகரமாகப் பாடப்பட்ட பாடலை, தேசிய கீதமாக வைப்பதற்கு ‘இந்து’க்கள் எதிர்த்தார்கள். காரணம் - எழுதிய கவிஞர் ஒரு முஸ்லிம் என்பதால்.

பிறகுதான் ‘ஜனகனமண’ பாடல் தேசிய கீதமானது.முஸ்லிம்களை எதிர்த்து ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து இந்து ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டது தான் ‘வந்தே மாதரம்’, அது ஆங்கிலேயரை எதிர்த்த தேச பக்திப் பாடல் அல்ல; அதன் காரணமாகத்தான், ‘ஆனந்த மடம்’ ஏனைய மொழிகளில் மொழி பெயர்க்கப்படவில்லை; பாடத் திட்டங்களில் இடம் பெறவில்லை. திரைப்படமாகவில்லை; தொலைக்காட்சித் தொடராகவும் உருவாகவில்லை. ( ஆதாரம் "பெரியார் முழக்கம் )

பரந்த உலகில் சிறந்தது எங்கள் இந்தியா எங்கள் இந்தியா-
இந்த இந்திய பூந்தோட்டத்தின் பறவைகள் நாங்கள்
அதன் மடியில் விளையாடும் ஆயிரமாயிரம் நதிகள்
இதன் மணமும் குணமும் எங்கள் உயிர் மூச்சை போன்றதாகும்
வானத்தின் நிழலாய் உன் கரையோரம் நாங்கள் நின்றோமே
அந்த நாளை எண்ணிப்பார் நீண்டு நிமிர்ந்த கங்கையே
எங்கள் பாரதம் தான் எங்கள் அரவனைப்பும் பாதுகாப்பும்
எங்களுக்கு இது எந்த பேதத்தையும் கற்பிப்பதில்லை
இங்கு வாழும் மனிதர்கள் நாங்கள்! எங்கள் நாடே இந்தியா
(ஸாரே ஜஹான் சே அச்சா என்ற அல்லாமா இஃக்பால் பாடலின் தமிழாக்கம் )