Saturday, January 15, 2011
காவி பயங்கரவாதிகளுக்கு டிஆர்பி மதிப்பீடு இல்லை!
இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள காவி பயங்கரவாதம், குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டவுடன் எப்படி மூடி மறைக்கப்பட்டது அல்லது எப்படி திசை திருப்பப்பட்டது என்பதை அறிய, பழைய அதாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்த அன்றைய தினங்களில் வெளிவந்த ஊடகங்களின் கட்டுரைகளைப் படித்தால் விளங்கும். இந்துத்துவாவின் ஊடக தீவிரவாதிகள் எல்லா பத்திரிகைகளும் ஊடுருவியுள்ளாதால் அவர்களின் கற்பனைக்கு வந்ததை எல்லாம் எழுதி வைத்திருந்ததைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி!
அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்ததை முஸ்லிம்களோடு தொடர்பு படுத்தி எழுதிய ஒரு கட்டுரையாளர் " முஸ்லிம்களின் ஒரு பிரிவினரான வஹ்ஹாபிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பவர்கள் அவர்கள் தான் இதனை செய்துள்ளனர்" என்று தன் கற்பனையை விவரித்துள்ளார்.
சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பை செய்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று சத்தியம் செய்யாத குறையாக எழுதியவர்களும் உண்டு. இவர்கள் எல்லாம் தன்னை உற்பத்தி செய்த சங்பரிவருக்கு விசுவாசமாக உழைத்துள்ளார்கள். ஆனால் காலம் எல்லா கேள்விகளுக்கும், பொய் குற்றச்சாட்டிற்கும் பதில் சொல்லி விட்டது. இனி... என்ன செய்யப்போகிறது அரசாங்கம்.?
(அப்போதைய ப்ரண்ட்லைன், அவுட்லுக் இதழ்களின் கட்டுரையை இங்கு படித்துப்பார்போம்...)
காவி பயங்கரவாதத்தின் கதை:
மகாராஷ்ட்ரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் 2002 முதல் 2008 வரை பல குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவற்றுக்கு, இந்து தீவிரவாத அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டாலும் ‘உறுதியான ஆதாரம்’ இருக்கவில்லை. இதன் பிறகு 2008, செப்டம்பர் 29ல் மாலேகான் குண்டு வெடிப்பு நடந்தது.
முஸ்லிம்களை அடர்த்தியாகக் கொண்ட இப்பகுதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு 6 பேர் பலியாயினர். மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்புப் படை சந்தேகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து இறுதியில் இந்து அடிப்படை வாதத்திற்கும் குண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினர். இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலருக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் முறியடித்து ‘இந்து அரசாங்கத்தை’ உருவாக்குவது அவர்கள் திட்டம்.
ஜவுளி நகரமான மாலேகானின், மக்கள் நெருக்கமான பிகு சவுக் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த சில வாரங்களுக்குள் ஏ.டி.எஸ். 11 பேரை கைது செய்தது. அவர்களில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் முக்கியமானவர். இவர்களுக்கு வேறு சில குண்டு வெடிப்புகளிலும் தொடர்பிருந்திருக்கிறது. அவற்றில் நான்டெட், பிரபானி, ஜால்னா உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் உண்டு. இவற்றில் அவர்களின் தொடர்பு குறித்து காவல்துறை இன்னும் இறுதியான முடிவுக்கு வரவில்லை.
2010, ஜூலை 19ஆம் தேதி, மும்பை நீதிமன்றம், ஒருங்கிணைந்து செய்த குற்றங்களுக்கான மகாராஷ்ட்ரா மாநில கட்டுப்பாட்டு சட்டப்படி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கலோனியில் ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் சிலர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
தேச விரோத செயல்களுக்காகவும், குண்டு வெடிப்புகளுக்காகவும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் குற்றம் சாட்டப்பட்டது இதுவே முதல் முறை. பாபர் பனி (2003), ஜால்னா (2004), பூர்ணா (2004) ஆகிய நகரங்களின் பள்ளிவாசல்களில் குண்டுகள் வெடித்தபோது இந்துத்துவா அமைப்புகள் மீது சந்தேகம் வலுத்த போதிலும், 2006ஆம் ஆண்டில் நான்டெட் நகரில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது வெடித்தது. இச்சம்பவம் இந்து தீவிரவாதிகள் மீதான சந்தேகத்தை உறுதிபடுத்தியது. தொடர்ந்து மாலேகான் குண்டுவெடிப்பு அவ்வமைப்புகளின் மறைமுக செயலை உறுதி செய்தது.
2009 அக்டோபரில் கோவாவில், மர்ம கோவா பகுதியில் இரண்டு நபர்கள் வெடிகுண்டை எடுத்துச் செல்லும் வழியில் அது வெடித்து இருவரும் பலியானார்கள். விசாரணையில் அவர்கள் இருவரும் சனதன் சாஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் என தெரிய வந்தது. கோவாவின் சன்காவோல் பகுதியில் சோதனையிட்டபோது காவல்துறை வெடிக்காத இரண்டு ஐ.ஈ.டி. வகை குண்டுகளை கண்டெடுத்தனர். இவை, சன்ஸ்தா அல்லது அது போன்ற அமைப்புக்கு உரியதாக இருக்கும் என்று காவல்துறை நம்பியது.
குற்றப் பத்திரிக்கை
இந்து தீவிரவாதம் தொடர்பாக விரிவான ஆய்வுகள் செய்த கே.பி. ரகுவன்ஷி தலைமையிலான புலனாய்வுக் குழு 4,528 பக்கம் கொண்ட குற்ற அறிக்கையை, மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு எதிராக தாக்கல் செய்தது.
குற்றவாளிகளுக்கு இடையே பல மணி நேர தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளதற்கான குறிப்புகள், குண்டு வெடிப்பு தகவல்களின் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தொகுக்கப்பட்டது.
11 குற்றவாளிகள்:
1. சாத்தி பிரக்யா சிங் தாகூர்
2. ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்
3. சுதாகர் திவேதி என்ற தயானந்த பாண்டே
4. ராகேஷ் தாவேதி
5. சமீர் குல்கர்னி
6. சுதாகர் சதுர்வேதி
7. ஷிவ் நாராயண் கல்சங்கரா
8. ஷியாம் சாகு
9. மேஜர் ரமேஷ் உபாத்யாய் (ஓய்வு ராணுவம்)
10. அஜய் ராகிர்ஜர்
11. ஜகதீஷ் மாத்ரா
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள்
1. ராம்ஜி
2. சந்தீப் விஷ்வாஷ் டாங்கே
3. பிரவீன் முத்தலிக்
இவர்களில் ராம்ஜி கைது செய்யப்பட்டால் இக்குழுவின் பல்வேறு நடவடிக்கைகளின் புதிர்கள் அவிழ்க்கப்படும் என்கிறது காவல்துறை.
//சுவாமி அஸிமானந்த் என்றழைக்கப்படும் மற்றுமொரு சந்தேகத்திற்குரிய நபரும் தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் கைதானால் தான் மேற்படி குண்டு வெடிப்புகளில் இவ்வமைப்புகளுக்கான தொடர்பு வெளிச்சத்துக்கு வரும் என்கிறது காவல்துறை.//
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிகப் பெரிய சதிகளைச் செய்ய திட்டமிட்டிருந்ததை குற்றப் பத்திரிக்கை சுட்டிக்காட்டுகிறது. மாலேகான் அவர்களின் முதலாவதும் மிகப் பெரியதுமான திட்டம். முஸ்லிம்களை மிக அடர்த்தியாகக் கொண்ட நகரம் மாலேகான் என்பதால் அவ்வூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், 2006ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டு வெடிப்புக்கு சிமி அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது என வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த குண்டு வெடிப்பு (2008ல்) விசாரணையையும் புலனாய்வுத் துறை சிமியை நோக்கியே நகர்த்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.
குற்றப் பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி உரையாடல்களை பார்க்கும்போது, மாலேகான் குண்டு வெடிப்பு சேதம் குறித்து சாத்வி ஏமாற்றம் அடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
குற்றவாளிகளில் ஒருவரிடம் சாத்வி தொலைபேசியில் பேசியபோது,
‘‘ஏன் மிகவும் சொற்பமான அளவில் மக்கள் பலியாகியுள்ளனர். ஏன் நீங்கள் கூட்ட நெரிசலான பகுதியில் (வாகனத்தை) நிறுத்தவில்லை’’
என்று கேட்டுள்ளார்.
ஐபியின் தலையீடு:
மகாராஷ்ட்ரா காவல்துறையின் முன்னாள் ஐ.ஜி.பி. யான எஸ்.ம். முஷ்ரிஃப், கார்கரேயை கொன்றது யார்- என்ற நூலை எழுதினார். இந்துத் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் ஐபியின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். ஐபி என்ற புலனாய்வு அமைப்பு பிராமணர்களின் பிடியில் உள்ளதாகவும், குறிப்பாக நான் அவர்களை இந்துக்கள் என்று அழைக்கமாட்டேன் என்றும் கூறுகிறார். இந்தியாவில் பிரபலமான ஊடகங்கள், காவல்துறை, அரசுகள் என அனைத்தும் அவர்களது பிரச்சாரங்களுக்கு பலியாகியிருப்பதாகவும் முஷ்ரிஃப் கூறுகிறார்.
ஊடகங்களின் ஒருதலைபட்சம்:
ஊடகங்களும் எப்போதும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கின்றன. குண்டு வெடிப்பு நடக்கும் போதெல்லாம் அதே நாளில் சில முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களோடு ஊடகங்கள் வெளிப்படுகின்றன. ஒரு சமூகத்தைப் பற்றிய தப்பெண்ணம் உருவாகவே ஊடகங்கள் வேலை செய்கின்றன. முஸ்லிம் தீவிரவாதிகள், தாலிபான்களை காட்சிப்படுத்தும் போது தங்களது டிஆர்பி மதிப்பீடு உயர்வதாகவும், அதுவே இந்துத் தீவிரவாதிகளுக்கு டிஆர்பி மதிப்பீடு இல்லை என்பதையும் பிரபல ஆங்கில மற்றும் பல்மொழி ஊடகங்கள் ஒத்துக் கொள்கின்றன.
எனவே, முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக பிடிக்கப்படும்போது, அவர்கள் நிரபராதிகள் என்று தெரிய வரும் வரை நாம் அவர்களை குற்றவாளிகளாகவே கருத வேண்டியுள்ளது என்கிறார் வரலாற்றாசிரியர் கிறிஸ்டோப் ஜெபர் லாட்.
இவை தான் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் காவி பயங்கரவாதம்.
நன்றி: பிரெண்ட் லைன் 2010, ஆகஸ்ட் 13
அவுட் லுக் 2010, ஜூலை 19
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
காவி ஊடகங்கள்..!
வெறும் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காகவா இப்படி செய்தி சொல்கிறார்கள்..?
அடப்பாவிகளா..!
எனினும் தெஹல்கா, தேஜஸ் போன்று சிலர் ஏதாவது உண்மையை சொன்னால்தான் ஆச்சு என்றாகிறது. இல்லையேல்...
ஹூம்... எங்கே போகிறது ஊடகவியல் தர்மம்?
யார் யார் இவ்வளவு பிரச்சினைகளூக்கும் முக்கிய காரணம் என்பது உலகிற்கு தெரிந்த பிறகும் நீதிமன்றங்களும் அரசாங்கங்களும் வாய்மூடி இருப்பது அவர்களும் அதற்கு துணை என்பதை உறுதிப்படுத்துவதாகத் தான் பார்க்க வேண்டும்.
Post a Comment