Thursday, January 13, 2011

காங்கிரஸின் கரசேவை!! பறிக்கப்படும் பள்ளிவாசல்!!

ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகிலுள்ள ஜங்புராவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மஸ்ஜித் ஒன்றை டெல்லி வளர்ச்சி ஆணைய(டி.டி.எ) அதிகாரிகள் அநியாயமாக இடித்துத் தள்ளியுள்ளனர்.

இச்சம்பவத்தைக் கேள்விபட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த டி.டி.எ அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார்.

இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.டி.டி.எவின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க டி.டி.எ அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.

நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக டி.டி.எவின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார்.ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம் அஹ்மத் புகாரி தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்குள் டி.டி.எ இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுதும் மோதல் சூழல் நிலவுகிறது.

-நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆதாரம்: "மில்லி கேஜெட்"

1 comment:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

உங்களின் மில்லி கெஜட் சுட்டி மூலம் அங்கு சென்றால்... Jangpura Masjid: High Court did not order demolition --இதுதான் தலைப்பே...

டில்லி வளர்ச்சி ஆணையம்...
இவர்களுக்கு எனது வன்மையான கண்டனங்கள்.

முதலில் சாலைகளை மறைத்துக்கொண்டு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைக்கூட அப்புறப்படுத்த முடியுமா இவர்களால்? அவர்கள், கேட்பார்களே... 'எங்கே கட்டிக்கொடுத்திருக்கிறாய் எங்கள் பார்க்கிங்ஐ' என்று..!

நம் நாட்டில், நட்ட நடு சாலையில், முச்சந்திகளில், தெருக்களில், எத்தனையோ அரசு அலுவலக வளாகங்களில், பேருந்து நிலையம், இரயில் நிலையம் என்று எங்கு பார்த்தாலும் ஒரு கோவிலை கட்டி வைத்திருப்பார்களே...! டில்லியிலும் இதேபோல நான் பார்த்திருக்கிறேன். அவற்றில் எல்லாம் கைவைப்பார்களா இவர்கள்? கை கூப்பி அல்லவா கும்பிடுவார்கள்?

ச்சே... முஸ்லிம்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்றாகிவிட்டது. இப்போது இந்த செய்தி எந்த ஊடகத்திலும் வராமல் பார்த்துக்கொண்டது காங்கிரசின் கோர காவிமுகத்தை தெளிவாக காட்டுகிறது.

இதில்... மேலும் என்னவாகுமோ...! இறைவன்தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.