இறைவனைக் காணாத வரையில் அவன் இருப்பை நம்பப்போவதில்லை. என்றேன்.
அவன் படைத்தவைகள் சாட்சியாக இருக்க ஏன் படைத்தவனை நம்ப மறுக்கிறாய். என்றான்.
அவன் தான் படைத்தான் என்பதற்கு என்ன சாட்சி. என்றேன்.
அவன் படைக்கவில்லை என்பதற்கு உன்னிடமுள்ளதா அத்தாட்சி. என்றான்.
அத்தாட்சி உள்ளது; அது தான் விஞ்ஞானம். என்றேன்.
விஞ்ஞானமா அப்படியென்றால்.. என்றான்.
மதவாதி நீ; உனக்கு விஞ்ஞானம் புரியாது. என்றேன்.
விளக்கு விளங்கிக்கொள்வேன். என்றான்.
எதையும் பகுத்து அறிவது தான் விஞ்ஞானம். என்றேன்.
அப்படியா.. பகுத்து அறிந்தால் இறைவனை காணலாமா?.. என்றான்.
இல்லாதவற்றை எப்படி காண முடியும்?. என்றேன்.
அய்யோ.. அங்கே பார் புகை மூட்டம், தீ பரவுகிறது என நினக்கிறேன். வா.. ஓடி விடலாம். என்றான்.
இல்லை.. தீயை பார்க்காதவரையில் அது தீ என்று நான் நம்பப்போவதில்லை. என்றேன்.
ஒன்றைப் பார்த்து தான் நம்ப வேண்டுமென்றால், அதற்கு ஐந்தறிவு விலங்கு போதுமே..மூடனே.. ஒன்றிலிருந்து ஒன்றை விளங்குவதே பகுத்தறிவு. வா.. ஓடி விடலாம். என்றான்.
அவன் ஓடி விட்டான். நான் திடமாக நின்றேன். அட.. வந்தது தீ பிழம்பு தான். கருகிக்கொண்டே நம்பினேன். "இறைவன் இருக்கிறான் என்று".
உதயம்.
6 comments:
தோழர் உதயம் ...
நன்றிகள் முதலில் உங்கள் எதிர்-கவிதைக்கு ...
எனது ஆதார பிரச்சனை கடவுள் அல்ல தோழரே ...
மதங்கள் தாம் தோழர் ...
அவை உருவாக்கும் பிளவுகள் தான் தோழர் ...
அவை உருவாக்கும் வலிகளும் ரணங்களும் மரணங்களும் தான் தோழர் ...
அன்பை கருணையை அஹிம்சையை அமைதியை போதிக்காத மதமேதும் உலகில் உள்ளதா தோழர்?
உயிர்பலிகள் அனைத்தும் மதத்தின் குறைபாடல்ல என்று குழந்தைதனமாய் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தான் நாம் சொல்லிக் கொண்டிருப்பது ?
அடடே! சொன்ன விதம் சூப்பரா இருக்கே.
இது பற்றி நானும் எழுத நினைத்துக் கொண்டேஏஏஏஏஏஏஎ இருக்கிறேன்.
ஹூம் இரவில வாங்கிய சுதந்திரம் இன்னும் விடியவே இல்லை.
அசத்திடீங்க.
நன்றாக உள்ளது சகோதரரே.
NEO,அரபுத்தமிழன், ராஜவம்சம், அப்துல் குத்தூஸ், உங்களனைவருக்கும் என் நன்றிகள்.
சலாம்
நன்றாக உள்ளது பதிவு .......
கடவுள் இருக்கிறான் என்பதை பகுத்தறிவு மூலம் சொல்லிவிட்டீர்களே ...
Post a Comment