Sunday, August 29, 2010

பின்லேடன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட். பிடல் காஸ்ட்ரோ பகீர் தகவல்.


ஹவானா: ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அவரால் சிஐஏ ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன். இது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.


லிதுவேனியாவைச் சேர்ந்த எழுத்தாளர் காஸ்ட்ரோவை சந்தித்தார். அப்போது உடன் இருந்த பத்திரிக்கையாளர்களிடம் காஸ்ட்ரோ பேசுகையில், சிஐஏவால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்தான் பின் லேடன். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவே பின் லேடனை விலைக்கு வாங்கியது சிஐஏ.உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் புஷ்ஷின் பிரதான எண்ணம். அதற்கு வசதியாக அவர்கள் லேடனை பயன்படுத்திக் கொண்டார்.


தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை பின்லேடன் அறிவிப்பார். அவரைத் தொடர்ந்து புஷ் எச்சரிக்கும் வகையில் பேசுவார். இரண்டுமே திட்டமிட்ட நாடகங்கள். புஷ்ஷுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவர் லேடன். புஷ்ஷுக்குக் கீழ்ப்பட்டவராகவே அவர் இருந்து வந்தார்.லேடன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்பது ஆப்கன் போர் ரகசியம் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன என்றார் காஸ்ட்ரோ.


84 வயதாகும் காஸ்ட்ரோ சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். தற்போது அவர் நலமடைந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கும் போக ஆரம்பித்துள்ளார். வழக்கமான முறையில் செயல்பட ஆரம்பித்தது முதல் பரபரப்பு பேச்சாக பேசி வருகிறார் காஸ்ட்ரோ. ஈரானை அமெரிக்கா தாக்கினால் அணு ஆயுத யுத்தம் வரும் என்று சமீபத்தில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்த நிலையில் ஒசாமா பின்லேடன்,அமெரிக்காவின் ஏஜென்ட் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



1 comment:

nis said...

தகவலுக்கு நன்றி.அரசியல்ல இதெல்லாம் சகயமப்பா