Sunday, August 26, 2012

பாரிஸில் தமிழ்க்கடைகள் ஒரு சிறப்புப்பார்வை!



பாரிஸ் நகரில் தமிழர்களின் முக்கிய வியாபார கேந்திரமாக இருக்கும் பகுதி "லா செப்பல்". இந்தியா, இலங்கைமற்றும் சிலஆப்ரிக்கநாடுகளிலிருந்தும்இறக்குமதி
செய்யப்பட்ட வணிகப்பொருட்கள் வியாபாரம் செய்யப்படும் மையப்புள்ளியாக இந்த இடம் திகழ்ந்து வருகிறது.

தமிழர்கள் விரும்பி பாவிக்கும் அனைத்து சாமான்களையும் தருவித்து வாடிக்கையாளர்களுக்கு கடை விரித்து வருகிறார்கள் தமிழ் வணிகர்கள். இந்த "லா செப்பல்" பகுதியை ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்று சொல்லுமளவிற்கு இங்கு புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்ளின் வியாபார பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருக்கிறது.

இங்குள்ள தமிழர்களைப் பற்றி எழுதும் போது இலங்கை மிழ் மக்களின் உழைப்பை பற்றி குறிப்பிடாமல் இருப்பது நேர்மையாக இருக்காது. அகதிகளாக வெற்றுக்கைகளுடன் வந்தவர்கள் இன்று பாரிஸின் ஒரு பகுதியையே வணிக மையமாகக் கொண்டு வியாபார வெற்றியை வரலாற்றில் பதித்து வருகிறார்கள்.

பிரான்ஸிற்கு சில பல நாடுகளிலிருந்தும் அகதிகளாக சனங்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களையெல்லாம் மெத்ரோக்களில் பிச்சையெடுப்பவர்களாகவும், களவு செய்யும் களவாணிகளாகவும், குப்பையை கிளருபவராகவுமே காணக்கிடைக்கிறார்கள். ஆனால் எமது தமிழ் மக்கள் தஞ்சமடைய வந்த நாட்டில் கூட காசு பஞ்சமிருந்தாலும் பொது இடங்களில் கைகளை ஏந்தி யாசகம் கேட்டதில்லை. கடுமையாக உழைக்கிறார்கள்.

பிரான்ஸுக்கு புதிதாக வரும் பாஷை றியாத புலம் பெயர் இலங்கை தமிழர்கள் வேலைக்கு ஐக்கியமாகும் இடம் "ரெஸ்தோராண்ட்". இதோ ஒரு இலங்கை தமிழர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் வாசியுங்கள்..

அப்பாடா........ஒருவழியாக வேலை கிடைத்து விட்டது.ஒரு இத்தாலியன் ரேஷ்தோரந்தில் கோப்பை கழுவும் வேலை.கஷ்டப்பட்டு வேலை செய்யும் அனுபவம் இப்போதுதான் ஆரம்பம் என்பதால்,முதுகு தண்டு ஏகத்துக்கும் செமையாக வலிக்கின்றது.

கோப்பைகளை தேய்த்து தேய்த்து கைகள் சிலநேரங்களில் உதறத்தொடங்கிவிடும்.ஒரு வேலை முடிந்துவிட்டால்..அப்பாடா என்று இருந்து விட முடியாது அதற்குள் வேறு வேலை வந்து விடும்.அதைசெய்,இதைசெய் என்று ரேச்டோரந்த் உரிமையாளர் எதாவது ஒருவேலையை சொல்லிவிடுவார்.

வேலையை ஒழுங்காக செய்யாவிட்டால்சிலநேரங்களில் திட்டுக்கூடகிடைக்கும்.எக்கு பிரெஞ்சு சுத்தமாகத்தெரியாது என்பதால் அவர் என்ன திட்டுகின்றார்,ஏன் திட்டுகின்றார் என்பதே பல சமயங்களில் புரிவதில்லை.சிதம்பரச்சக்கரத்தை பேய் பார்த்தமாதிரி பார்த்துக்கொண்டு இருப்பேன்.இருந்தாலும் அவருக்கு என்னை பிடித்திருக்கின்றது என்பது மட்டும் எனக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது.சற்சமயங்களில் அவர் என்னிடம்வந்து எப்படி இருக்கின்றாய்?...உடம்பிற்கு வலிக்கின்றதா?
என்று கேட்டு குடிப்பதிற்கு எதாவது ஒரு பானத்தை கொண்டு வந்து தருவார்.

வேலை தெரியவிட்டாலும் சொல்லித் தருவார்.காலை பத்தரை மணிக்கு வேலை தொடங்கினால் ராத்திரி பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை மணி வரை வேலை நீளும்.இடையில் இரண்டுமணித்தியாலம் brake தருவார்கள்.வீட்டுக்கு
போய்விட்டு வரலாம்தான்,ஆனால் எதற்காக டிக்கெட்டை வெஸ்ட் செய்ய
வேண்டும் என்று கடையிலேயேஇருந்து ஒருஓரமாகப்போய் நான் வழமையாகக்கொண்டுசெல்கின்ற புத்தகங்களில் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பித்து விடுவேன்.

கடைக்குள் நுழைந்ததுமே....முதல் வேலையாக தும்புத்தடியை எடுத்து கடை முழுவதையும் கூட்டவேண்டும். ஒரு கஞ்சல் கீழே இருக்ககூடாது.இருந்தால் முதலாளி திட்டுவார்.கூட்டி முடித்தபின் மோப் பண்ண வேண்டும். கக்குஸ் உட்பட.கடையைக்கூட ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் மோப் செய்கின்றேன்.ஆனால்கக்கூசை இரண்டு தடவை மோப் செய்கின்றேன்.ம்ம்ம்....என்ன செய்வது,வெளிநாடு என்று வந்து விட்டேன்.....இனி கக்குஸ் ஓட்டைக்குள் கையை விட்டுழுவு என்று சொன்னாலும்.....கழுவித் தான்ஆகவேண்டும்.(சிறிலங்காவில் இருக்கும் போது பட்டத்து ராஜா மாதிரி காசாளர் பட்டறையில் இருந்தேன்.அங்கே எனக்கு சாப்பாடு வாங்கித்தரவென்றே ஐந்தாறு பேர் இருந்தார்கள்.அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் கண்கள் கொஞ்சம் நனையத்தான் செய்கின்றது.)

அதை கழுவி முடித்த பின்,எதாவது கீரைகள்,கரட்டுகள்,தக்காளிகள் என்பவற்றை நறுக்கி வைக்க வேண்டும்.அதன் பின்னர் தான் தொடங்குகின்றது என் கோப்பை கழுவும் வேலை.கழுவ ஆரம்பித்தால் கழுவு.......கழுவு ......கழுவு .......கழுவு ........கழுவு ..........கழுவு ........என்று கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.

நின்று கொண்டே கழுவ வேண்டும் என்பதால் கால்கள் பயங்கரமாய்....வலிக்க ஆரம்பிக்கும்.அங்கே....இங்கே ..என்று நடந்து கொண்டிருந்தாலும்
கால் வலி பெரிதாகத்தெரியாது.இது அப்படி இல்லை.ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்க வேண்டும்.வலி காலிலிருந்து அப்படியே சுர்ரென்று.....முதுகிற்கு ஏறும்.கை மூட்டுகள் எல்லாம் பயங்கர அவஸ்தை கொடுக்கும்.எப்படா...வேலை முடியும்,வீட்டுக்குப் போய் பெட்ஷீட்டை போர்த்தி தூங்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு கடுப்பாக இருக்கும் .மணியை பார்த்தால்,அன்று ஏதோ காய்ச்சல் வந்த மாதிரி ரொம்ப மெது....மெதுவாகத் சுத்திக் கொண்டு இருக்கும்.

ஒருகணம் தூக்கி அப்படியே உடைத்து விடலாமா.....என்று தோன்றும்.இவற்றை எல்லாம் செய்து விட்டு நடுநிசி வரும் போது, அய்யய்யோ....டைம் ஆகிவிட்டதே,சீக்கிரமாகமுடித்தால் தானே....ட்ரைன் பிடிக்கலாம் என்று எல்லா வற்றையும்அவசரம் அவசரமாக செய்தால்....கை தவறியோ...அல்லது தட்டுப்பட்டோ எதாவது ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்து விடும்.நாசமாப் போக..........என்று வாயில் வந்த
படி எனக்குள் நானே திட்டி விட்டு,தலையில் அடித்து நொந்து விட்டு.....சிதறிப் போய் இருந்த கண்ணாடி துண்டுகளை கூட்டி,குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு,கடகட .....என்று மோப் செய்து விட்டு..... டைம் பார்த்தால்...பன்னிரண்
டு தாண்டி இருக்கும்.

பின் நட நட என்று நடந்து ட்ரைன் ஸ்டேஷன் சென்றால்,பலநேரங்களில் ட்ரைன் கிடைக்காது.நேரம் ஒன்றை தாண்டி விட்டால்,நைட் பஸ்தான் எடுக்க வேண்டும்.
இதில்,இங்கே நான் எனக்கு சம்பளம் கொடுக்கும் என் முதலாளியை பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும்.இப்படிஒரு முதலாளியை நான் இது வரை பார்த்ததில்லை. இவர்தான் குக்.

கிச்சனில் முழு வேலைகளையும் இவர்தான் செய்வார்.பிட்சா போடுவதிலிருந்து தொடங்கி,கடைசி அடுப்பு கழுவும் வரை எல்லா வேலைகளையும் இவர்தான் செய்வார்.மற்றவர்கள் வந்து.....விடுங்கள் நான் செய்கின்றேன் என்று சொன்னாலும்,இல்லை......என்னுடைய வேலைகளை நான் தான் பார்க்க
வேண்டும் என்று கூறிவிட்டு,தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பார்.


எனக்கு சரி இரண்டு மணித்தியாலம் ஓய்வு.ஆனால் அவர் அப்படி இல்லை ஓய்வே எடுக்க மாட்டார்.காலை பத்து மணிக்கு கடைக்கு வந்து வேலையை ஆரம்பித்தார் .......என்றால் அப்படியே தொடர்ச்சியாக பன்னிரண்டு மணிவரை வேலை செய்து கொண்டே இருப்பார்.

கேட்டால் என் கடையில் நான் செய்யாமல் வேறு யார்... செய்வது என்பர். எழுவது சதவீதமான வேலைக்கு தன்னையும் தன் பலத்தையும் மட்டுமே நம்பி இருக்கின்றார்.மீதி முப்பது சதவீதமான வேலைகளுக்கு மட்டுமே தொழிலாளிகளை நம்பி இருகின்றார்.(இதே சிறிலங்காவில் என்றால் முதலாளி என்பவன் அடுப்பறை பக்கமே வரமாட்டான்.வந்தால் அவன் கு.................தொடக்கம் முகம் வரை புகை அப்பி விடுமாம்.)அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது.அவர் என்னை பார்க்காதபோது,அடிக்கடி அரைப் பார்த்து அவர் செய்யும் வேலைகளையும்,அதில் தெரியும் சுத்தத்தையும் பார்த்து வியந்த கொள்வேன்.இத்தனைக்கும் அவருக்கு எத்தனை வயது என்று நினைகின்றீர்கள்.கல்யாணம் கட்டி ஆறு வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கின்றது.கணவர் கடைப்பக்கம் அடிக்கடி வர மாட்டார்.எப்போதாவது வருவார்.ஆம்......... என் கடை முதலாளி முப்பத்தைந்து வயதை தாண்டிய ஒரு பெண்.


ஆனால் தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்தால் ஐரோப்பிய சூழ்நிலைகளையும் மீறி தொழிலாளர்களை பிழிந்து எடுத்து விடுகிறார்கள் என்கிறார்கள். "வெள்ளை தோல்" ட்ட இருக்கும் நேர்மையும்
நியாயமும் நம்மவர்களிடம் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். தமிழர்களின் உழைப்பை பாராட்டும் அதே நேரத்தில் சில தமிழ் முதலாளிகளில் நம்மவர்களின் உழைப்பை சுரண்டும் சுரண்டல்வாதிகளும் இருக்கிறார்கள்.


பாரிஸின் தமிழ் பகுதியான " லா செப்பலில்" வியாபாரங்களினால் ஏற்படும் அரசியலும், அரசியலினால் மாறுபடும் வியாபாரத்தையும் பற்றி இந்த "யாழ்" குழுமத்தில் விவாதிப்பதை அவதானித்தால் இன்னொரு கோணமும் இதிலிருப்பதை அறிய ஏலும். கீழே தொடந்து வாசியுங்கள்...


பிரான்சில் சாராசரியாக எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு அண்ணளவாகத் தெரியாது. புதுவைத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும் ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சம் பேருமாக 4 இலட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.புதுவைத் தமிழர்களில் ஒரு இலட்சத்தக்கு அதிமானோர் பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான றியூனியன் தீவில் வாழ்கிறார்கள்.புதுவைத் தமிழர்கள் பிரான்சுக்கு வந்து 150 வருடங்கள் ஆகின்றது.ஈழத்தமிழர்கள் வந்து35 வருடங்கள் ஆகின்றன.

1990 களின் நடுப்பகுதியல் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில்Gare de nord தொடரூந்து நிலைத்துக்கு அண்மையில் பாரிஸ் 10 நிர்வாகப் பிரிவிலுள்ள La Chapelle பகுதி Quartier Tamoul (தமிழர் பகுதி) என்று அழைக்கப்பட்டு வந்தது.
லண்டனிலே பிரமாண்டமான இந்திய கடைத்தொகுதிகள் இருந்தாலும் அங்கு குஜராத்தி மற்றம் சீக்கியர்கள் என்று வட இந்தியர்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் கடைகள் சிறுபான்மையாகவுமே இருக்கின்றன.
லா சப்பல் மட்டும் தான் ஐரோப்பாவில் தமிழர்களுடைய பெரிய வணிகப் பகுதியாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள இடமாக லா சப்பல் திகழ்கிறது.ஆனால் அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் பங்களாதேஷ் மற்றும் கேரள மாநிலத்தவர்களின் வணிக முயற்சிகள் அதிகளவுக்கு தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

பாரிசில் மானுடவியல் தொடர்பான ஆய்வு கற்கையை மேற்கொள்ளும் இத்தாலி நாட்டு இளைஞர் ஒருவர் இது பற்றி ஆராய்ந்திருக்கிறார்.அவர் தனது ஆய்வில் இந்த வணிக நிறுவனங்கள் லா சப்பல் பகுதியில் வருவதை ஊக்குவிக்குப்பதில் சிறீலங்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகளின் மறைகரம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக லா சப்பலிலுள்ள வணிகர்கள் சிலரை வினவிய போது அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

பாரிசிலே எவரும் எந்த இடத்திலும் எவரும் வணிகம் செய்லாம் அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும் சீனர்கள் ஆபிரிக்கர்கள் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு என்று பாரிசிலே வணிக பகுதிகள் இருக்கின்றன.அது போலவே தமிழர்களுக்கு என்று பிரான்சினுடைய சமத்துவம் சகோதரத்தவம் விடுதலை என்கிற அடிப்படை கோட்பாடுகளுக்கு விரோதமில்லாவகையில் லா சப்பல் பகுதி இருப்பதை தடுக்க முடியாது.

ஆனால் தமிழர்களுக்கென்று அப்படி ஒரு பகுதி இருக்க கூடாது என்ற அடிப்படையில் சிறீலங்கா இந்திய அதிகாரிகள் காய் நகர்த்தினால் அது பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு முறியடிக்கப்படவேண்டும்



பாரிஸின் தமிழ்க்கடைகள் தமிழர்களை தங்களுடைய கலாச்சாரங்களோடும் தங்களுடைய நாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வினை ஊட்டும் வகையில் தாய் நாட்டின் அனைத்துப் பொருட்களையும் கொண்டு வந்து தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றனர் என்பது ஐயமில்லை.

இந்த தமிழ்க்கடைகளை வலம் வந்தால் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டில் கூட தமிழ் பண்பாட்டை கட்டிக்காத்து வருகிறார்கள் என்பதும் பண்பாட்டு அடையாளத்தை தொலைத்த சமூகமாக இல்லை என்பதும் விளங்கும்.




















No comments: