Tuesday, August 28, 2012

குர்-ஆனை பொய்யாக்க அவன் ஏன் முஸ்லிமாகவில்லை?

சமீபத்தில் எனக்கு மின்மடலில் அனுப்பப்பட்ட ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆக்கத்தை எழுதியவருக்கு (யாரென்று குறிப்பிடபடவில்லை) நன்றி. இதற்கு பொருத்தமாக மில்லரின் இணைய முகவரி சுட்டி மட்டுமே நான் இட்டது.

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதிய
ாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.

நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்

நபி ஈசா (அலை) JESUS அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)

என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.

இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்:" இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது." டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்


இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)

1973 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை

‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)

நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்


“இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)


என்று கூறும் குர்ஆன், ”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது.

ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?

டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர்.

அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.

அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை.



லண்டன் பி.பி.ஸியில் தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு ஆய்வு தொடர்.



உலகப் புகழ் பெற்ற ஊடகமான பி.பி.ஸி. யின் தமிழ் பிரிவில், நெடுங்காலமாகவே "தமிழோசை" என்ற பெயரில் தமிழ் வானொலி ஒலிபரப்பப்பட்டு வருவது நாமெல்லாம் அறிந்ததே. அதில் கடந்த நான்கு வாரகாலமாக "தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு ஆய்வு தொடர்" ஒலிபரப்பாகி வருகிறது. தமிழக முஸ்லிம்களின் சமூக, அரசியல் மற்றும் வாழ்வியல் அம்சங்களை பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்து பதியப்பட்ட கருத்துக்களை, பி.பி.ஸி.யின் தமிழக நிருபர் கோபாலன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட முஸ்லிம் அன்பர்களை சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டியும், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் கருத்துக்களும்
இடம் பெற்று வருகிறது.

இன்றைய இந்தியச் சூழ்நிலைகளில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டியும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் துல்லியமாக எடுத்துரைத்த நிலையில் மத்தியரசு அவ்விரு நீதிபதிகளின் பரிந்துரைகளின் மேல் என்ன நடவடிக்கை எடுத்தது?

மதசார்பற்ற இந்திய அரசின், அரசியல் சாசன அமைப்பு சட்டம் முஸ்லிம்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியிருந்தாலும் யதார்த்த நிலையில், உரிமைகளுக்கு போராடும் பரிதாப சமூகமாகவே முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அல்லது இருக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி பதவியோ அல்லது துணை ஜனாதிபதி பதவியோ அல்லது இது போன்ற அதிகாரமற்ற அலங்கார பதவிகளில் முஸ்லிம்களை அமர்த்தி விட்டு அவர்களின் ஓட்டுக்களை வேட்டையாடும் அரசியல் நடந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு அரசியலில் உரிய இடம் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு வைக்கப்படும் போது, கவனமாக முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட ஜனாதிபதி பதவிகள் சுட்டிக்காட்டப்பட்டு அந்த வாதத்தை முறியடிக்கும் செயல் நடைபெறுகிறது.

வறுமைக்கு வாக்கப்பட்டவர்களாக இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள் என்றால், அசிம் பிரேம்ஜி என்ற பணக்காரரை கை காட்டுகிறார்கள். அவர் முசல்மானா இல்லையா என்பதே பலருக்கு தெரியாது. முஸ்லிம்களுக்கு எவ்வித உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு விட கூடாது என்றே ஒரு வகுப்புவாத கூட்டம் தொடை தட்டி தடையாக இருக்கிறது.

மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த பிரபல ஆலிம் பி.ஜெயினுல் ஆபிதீன், மனித நேய மக்கள் கட்சியின் முனைவர்.ஜவாஹிருல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் பாக்கர், முஸ்லிம் லீக்கின் பாத்திமா முசாபர் போன்றோர்களும் தங்களது கருத்துகளை சொல்லி வருகின்றனர். பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாமான்ய முஸ்லிம்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பாகி வருகிறது.


கீழேயுள்ள சுட்டியில் சுட்டுங்கள்.




Sunday, August 26, 2012

பாரிஸில் தமிழ்க்கடைகள் ஒரு சிறப்புப்பார்வை!



பாரிஸ் நகரில் தமிழர்களின் முக்கிய வியாபார கேந்திரமாக இருக்கும் பகுதி "லா செப்பல்". இந்தியா, இலங்கைமற்றும் சிலஆப்ரிக்கநாடுகளிலிருந்தும்இறக்குமதி
செய்யப்பட்ட வணிகப்பொருட்கள் வியாபாரம் செய்யப்படும் மையப்புள்ளியாக இந்த இடம் திகழ்ந்து வருகிறது.

தமிழர்கள் விரும்பி பாவிக்கும் அனைத்து சாமான்களையும் தருவித்து வாடிக்கையாளர்களுக்கு கடை விரித்து வருகிறார்கள் தமிழ் வணிகர்கள். இந்த "லா செப்பல்" பகுதியை ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்று சொல்லுமளவிற்கு இங்கு புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்ளின் வியாபார பங்களிப்பு குறிப்பிடும்படியாக இருக்கிறது.

இங்குள்ள தமிழர்களைப் பற்றி எழுதும் போது இலங்கை மிழ் மக்களின் உழைப்பை பற்றி குறிப்பிடாமல் இருப்பது நேர்மையாக இருக்காது. அகதிகளாக வெற்றுக்கைகளுடன் வந்தவர்கள் இன்று பாரிஸின் ஒரு பகுதியையே வணிக மையமாகக் கொண்டு வியாபார வெற்றியை வரலாற்றில் பதித்து வருகிறார்கள்.

பிரான்ஸிற்கு சில பல நாடுகளிலிருந்தும் அகதிகளாக சனங்கள் வந்துள்ளனர். ஆனால் அவர்களையெல்லாம் மெத்ரோக்களில் பிச்சையெடுப்பவர்களாகவும், களவு செய்யும் களவாணிகளாகவும், குப்பையை கிளருபவராகவுமே காணக்கிடைக்கிறார்கள். ஆனால் எமது தமிழ் மக்கள் தஞ்சமடைய வந்த நாட்டில் கூட காசு பஞ்சமிருந்தாலும் பொது இடங்களில் கைகளை ஏந்தி யாசகம் கேட்டதில்லை. கடுமையாக உழைக்கிறார்கள்.

பிரான்ஸுக்கு புதிதாக வரும் பாஷை றியாத புலம் பெயர் இலங்கை தமிழர்கள் வேலைக்கு ஐக்கியமாகும் இடம் "ரெஸ்தோராண்ட்". இதோ ஒரு இலங்கை தமிழர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் வாசியுங்கள்..

அப்பாடா........ஒருவழியாக வேலை கிடைத்து விட்டது.ஒரு இத்தாலியன் ரேஷ்தோரந்தில் கோப்பை கழுவும் வேலை.கஷ்டப்பட்டு வேலை செய்யும் அனுபவம் இப்போதுதான் ஆரம்பம் என்பதால்,முதுகு தண்டு ஏகத்துக்கும் செமையாக வலிக்கின்றது.

கோப்பைகளை தேய்த்து தேய்த்து கைகள் சிலநேரங்களில் உதறத்தொடங்கிவிடும்.ஒரு வேலை முடிந்துவிட்டால்..அப்பாடா என்று இருந்து விட முடியாது அதற்குள் வேறு வேலை வந்து விடும்.அதைசெய்,இதைசெய் என்று ரேச்டோரந்த் உரிமையாளர் எதாவது ஒருவேலையை சொல்லிவிடுவார்.

வேலையை ஒழுங்காக செய்யாவிட்டால்சிலநேரங்களில் திட்டுக்கூடகிடைக்கும்.எக்கு பிரெஞ்சு சுத்தமாகத்தெரியாது என்பதால் அவர் என்ன திட்டுகின்றார்,ஏன் திட்டுகின்றார் என்பதே பல சமயங்களில் புரிவதில்லை.சிதம்பரச்சக்கரத்தை பேய் பார்த்தமாதிரி பார்த்துக்கொண்டு இருப்பேன்.இருந்தாலும் அவருக்கு என்னை பிடித்திருக்கின்றது என்பது மட்டும் எனக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது.சற்சமயங்களில் அவர் என்னிடம்வந்து எப்படி இருக்கின்றாய்?...உடம்பிற்கு வலிக்கின்றதா?
என்று கேட்டு குடிப்பதிற்கு எதாவது ஒரு பானத்தை கொண்டு வந்து தருவார்.

வேலை தெரியவிட்டாலும் சொல்லித் தருவார்.காலை பத்தரை மணிக்கு வேலை தொடங்கினால் ராத்திரி பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை மணி வரை வேலை நீளும்.இடையில் இரண்டுமணித்தியாலம் brake தருவார்கள்.வீட்டுக்கு
போய்விட்டு வரலாம்தான்,ஆனால் எதற்காக டிக்கெட்டை வெஸ்ட் செய்ய
வேண்டும் என்று கடையிலேயேஇருந்து ஒருஓரமாகப்போய் நான் வழமையாகக்கொண்டுசெல்கின்ற புத்தகங்களில் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பித்து விடுவேன்.

கடைக்குள் நுழைந்ததுமே....முதல் வேலையாக தும்புத்தடியை எடுத்து கடை முழுவதையும் கூட்டவேண்டும். ஒரு கஞ்சல் கீழே இருக்ககூடாது.இருந்தால் முதலாளி திட்டுவார்.கூட்டி முடித்தபின் மோப் பண்ண வேண்டும். கக்குஸ் உட்பட.கடையைக்கூட ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் மோப் செய்கின்றேன்.ஆனால்கக்கூசை இரண்டு தடவை மோப் செய்கின்றேன்.ம்ம்ம்....என்ன செய்வது,வெளிநாடு என்று வந்து விட்டேன்.....இனி கக்குஸ் ஓட்டைக்குள் கையை விட்டுழுவு என்று சொன்னாலும்.....கழுவித் தான்ஆகவேண்டும்.(சிறிலங்காவில் இருக்கும் போது பட்டத்து ராஜா மாதிரி காசாளர் பட்டறையில் இருந்தேன்.அங்கே எனக்கு சாப்பாடு வாங்கித்தரவென்றே ஐந்தாறு பேர் இருந்தார்கள்.அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் கண்கள் கொஞ்சம் நனையத்தான் செய்கின்றது.)

அதை கழுவி முடித்த பின்,எதாவது கீரைகள்,கரட்டுகள்,தக்காளிகள் என்பவற்றை நறுக்கி வைக்க வேண்டும்.அதன் பின்னர் தான் தொடங்குகின்றது என் கோப்பை கழுவும் வேலை.கழுவ ஆரம்பித்தால் கழுவு.......கழுவு ......கழுவு .......கழுவு ........கழுவு ..........கழுவு ........என்று கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.

நின்று கொண்டே கழுவ வேண்டும் என்பதால் கால்கள் பயங்கரமாய்....வலிக்க ஆரம்பிக்கும்.அங்கே....இங்கே ..என்று நடந்து கொண்டிருந்தாலும்
கால் வலி பெரிதாகத்தெரியாது.இது அப்படி இல்லை.ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்க வேண்டும்.வலி காலிலிருந்து அப்படியே சுர்ரென்று.....முதுகிற்கு ஏறும்.கை மூட்டுகள் எல்லாம் பயங்கர அவஸ்தை கொடுக்கும்.எப்படா...வேலை முடியும்,வீட்டுக்குப் போய் பெட்ஷீட்டை போர்த்தி தூங்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு கடுப்பாக இருக்கும் .மணியை பார்த்தால்,அன்று ஏதோ காய்ச்சல் வந்த மாதிரி ரொம்ப மெது....மெதுவாகத் சுத்திக் கொண்டு இருக்கும்.

ஒருகணம் தூக்கி அப்படியே உடைத்து விடலாமா.....என்று தோன்றும்.இவற்றை எல்லாம் செய்து விட்டு நடுநிசி வரும் போது, அய்யய்யோ....டைம் ஆகிவிட்டதே,சீக்கிரமாகமுடித்தால் தானே....ட்ரைன் பிடிக்கலாம் என்று எல்லா வற்றையும்அவசரம் அவசரமாக செய்தால்....கை தவறியோ...அல்லது தட்டுப்பட்டோ எதாவது ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்து விடும்.நாசமாப் போக..........என்று வாயில் வந்த
படி எனக்குள் நானே திட்டி விட்டு,தலையில் அடித்து நொந்து விட்டு.....சிதறிப் போய் இருந்த கண்ணாடி துண்டுகளை கூட்டி,குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு,கடகட .....என்று மோப் செய்து விட்டு..... டைம் பார்த்தால்...பன்னிரண்
டு தாண்டி இருக்கும்.

பின் நட நட என்று நடந்து ட்ரைன் ஸ்டேஷன் சென்றால்,பலநேரங்களில் ட்ரைன் கிடைக்காது.நேரம் ஒன்றை தாண்டி விட்டால்,நைட் பஸ்தான் எடுக்க வேண்டும்.
இதில்,இங்கே நான் எனக்கு சம்பளம் கொடுக்கும் என் முதலாளியை பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும்.இப்படிஒரு முதலாளியை நான் இது வரை பார்த்ததில்லை. இவர்தான் குக்.

கிச்சனில் முழு வேலைகளையும் இவர்தான் செய்வார்.பிட்சா போடுவதிலிருந்து தொடங்கி,கடைசி அடுப்பு கழுவும் வரை எல்லா வேலைகளையும் இவர்தான் செய்வார்.மற்றவர்கள் வந்து.....விடுங்கள் நான் செய்கின்றேன் என்று சொன்னாலும்,இல்லை......என்னுடைய வேலைகளை நான் தான் பார்க்க
வேண்டும் என்று கூறிவிட்டு,தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பார்.


எனக்கு சரி இரண்டு மணித்தியாலம் ஓய்வு.ஆனால் அவர் அப்படி இல்லை ஓய்வே எடுக்க மாட்டார்.காலை பத்து மணிக்கு கடைக்கு வந்து வேலையை ஆரம்பித்தார் .......என்றால் அப்படியே தொடர்ச்சியாக பன்னிரண்டு மணிவரை வேலை செய்து கொண்டே இருப்பார்.

கேட்டால் என் கடையில் நான் செய்யாமல் வேறு யார்... செய்வது என்பர். எழுவது சதவீதமான வேலைக்கு தன்னையும் தன் பலத்தையும் மட்டுமே நம்பி இருக்கின்றார்.மீதி முப்பது சதவீதமான வேலைகளுக்கு மட்டுமே தொழிலாளிகளை நம்பி இருகின்றார்.(இதே சிறிலங்காவில் என்றால் முதலாளி என்பவன் அடுப்பறை பக்கமே வரமாட்டான்.வந்தால் அவன் கு.................தொடக்கம் முகம் வரை புகை அப்பி விடுமாம்.)அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது.அவர் என்னை பார்க்காதபோது,அடிக்கடி அரைப் பார்த்து அவர் செய்யும் வேலைகளையும்,அதில் தெரியும் சுத்தத்தையும் பார்த்து வியந்த கொள்வேன்.இத்தனைக்கும் அவருக்கு எத்தனை வயது என்று நினைகின்றீர்கள்.கல்யாணம் கட்டி ஆறு வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கின்றது.கணவர் கடைப்பக்கம் அடிக்கடி வர மாட்டார்.எப்போதாவது வருவார்.ஆம்......... என் கடை முதலாளி முப்பத்தைந்து வயதை தாண்டிய ஒரு பெண்.


ஆனால் தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்தால் ஐரோப்பிய சூழ்நிலைகளையும் மீறி தொழிலாளர்களை பிழிந்து எடுத்து விடுகிறார்கள் என்கிறார்கள். "வெள்ளை தோல்" ட்ட இருக்கும் நேர்மையும்
நியாயமும் நம்மவர்களிடம் இல்லை என்று விமர்சிக்கிறார்கள். தமிழர்களின் உழைப்பை பாராட்டும் அதே நேரத்தில் சில தமிழ் முதலாளிகளில் நம்மவர்களின் உழைப்பை சுரண்டும் சுரண்டல்வாதிகளும் இருக்கிறார்கள்.


பாரிஸின் தமிழ் பகுதியான " லா செப்பலில்" வியாபாரங்களினால் ஏற்படும் அரசியலும், அரசியலினால் மாறுபடும் வியாபாரத்தையும் பற்றி இந்த "யாழ்" குழுமத்தில் விவாதிப்பதை அவதானித்தால் இன்னொரு கோணமும் இதிலிருப்பதை அறிய ஏலும். கீழே தொடந்து வாசியுங்கள்...


பிரான்சில் சாராசரியாக எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு அண்ணளவாகத் தெரியாது. புதுவைத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும் ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சம் பேருமாக 4 இலட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.புதுவைத் தமிழர்களில் ஒரு இலட்சத்தக்கு அதிமானோர் பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான றியூனியன் தீவில் வாழ்கிறார்கள்.புதுவைத் தமிழர்கள் பிரான்சுக்கு வந்து 150 வருடங்கள் ஆகின்றது.ஈழத்தமிழர்கள் வந்து35 வருடங்கள் ஆகின்றன.

1990 களின் நடுப்பகுதியல் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில்Gare de nord தொடரூந்து நிலைத்துக்கு அண்மையில் பாரிஸ் 10 நிர்வாகப் பிரிவிலுள்ள La Chapelle பகுதி Quartier Tamoul (தமிழர் பகுதி) என்று அழைக்கப்பட்டு வந்தது.
லண்டனிலே பிரமாண்டமான இந்திய கடைத்தொகுதிகள் இருந்தாலும் அங்கு குஜராத்தி மற்றம் சீக்கியர்கள் என்று வட இந்தியர்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் கடைகள் சிறுபான்மையாகவுமே இருக்கின்றன.
லா சப்பல் மட்டும் தான் ஐரோப்பாவில் தமிழர்களுடைய பெரிய வணிகப் பகுதியாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள இடமாக லா சப்பல் திகழ்கிறது.ஆனால் அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் பங்களாதேஷ் மற்றும் கேரள மாநிலத்தவர்களின் வணிக முயற்சிகள் அதிகளவுக்கு தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

பாரிசில் மானுடவியல் தொடர்பான ஆய்வு கற்கையை மேற்கொள்ளும் இத்தாலி நாட்டு இளைஞர் ஒருவர் இது பற்றி ஆராய்ந்திருக்கிறார்.அவர் தனது ஆய்வில் இந்த வணிக நிறுவனங்கள் லா சப்பல் பகுதியில் வருவதை ஊக்குவிக்குப்பதில் சிறீலங்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகளின் மறைகரம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக லா சப்பலிலுள்ள வணிகர்கள் சிலரை வினவிய போது அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

பாரிசிலே எவரும் எந்த இடத்திலும் எவரும் வணிகம் செய்லாம் அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும் சீனர்கள் ஆபிரிக்கர்கள் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு என்று பாரிசிலே வணிக பகுதிகள் இருக்கின்றன.அது போலவே தமிழர்களுக்கு என்று பிரான்சினுடைய சமத்துவம் சகோதரத்தவம் விடுதலை என்கிற அடிப்படை கோட்பாடுகளுக்கு விரோதமில்லாவகையில் லா சப்பல் பகுதி இருப்பதை தடுக்க முடியாது.

ஆனால் தமிழர்களுக்கென்று அப்படி ஒரு பகுதி இருக்க கூடாது என்ற அடிப்படையில் சிறீலங்கா இந்திய அதிகாரிகள் காய் நகர்த்தினால் அது பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு முறியடிக்கப்படவேண்டும்



பாரிஸின் தமிழ்க்கடைகள் தமிழர்களை தங்களுடைய கலாச்சாரங்களோடும் தங்களுடைய நாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வினை ஊட்டும் வகையில் தாய் நாட்டின் அனைத்துப் பொருட்களையும் கொண்டு வந்து தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகின்றனர் என்பது ஐயமில்லை.

இந்த தமிழ்க்கடைகளை வலம் வந்தால் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டில் கூட தமிழ் பண்பாட்டை கட்டிக்காத்து வருகிறார்கள் என்பதும் பண்பாட்டு அடையாளத்தை தொலைத்த சமூகமாக இல்லை என்பதும் விளங்கும்.




















Sunday, August 19, 2012

தீண்டாமைக்கு இது தான் தீர்வு.. இது மட்டுமே தீர்வு. (காணொளி)


அமீர் கானின் சத்யமவே ஜெயதே நிகழ்ச்சியில் "தீண்டாமை" பற்றிய அந்த காட்சிகள் என்னை உறைய வைத்தது. அன்றிரவு தூங்கவே கஷ்டமாக இருந்தது. ஏன் இப்படி? சக மனிதனிடம் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள்? என்று எனக்குள் ஆயிரம் கேள்விகள். இதற்கு தீர்வே இல்லையா?

இதற்கான தீர்வை இணையத்தில் தேடிய போது தான் இந்த காணொளி கிடைத்தது. தீண்டாமைக்கு இது தான் சிறந்த தீர்வாக இருக்க வேண்டும். சாதிய இழிவில் தொடங்கிய இவரது வாழ்க்கை சகோதரத்துவத்தில் தொடர்கிறது.

தீண்டாமைக்கு இது தான் தீர்வு..இது மட்டுமே தீர்வு.












Tuesday, August 14, 2012

சுதந்திர போராட்டத்திற்கு அள்ளிக் கொடுத்த முஸ்லிம்கள்



"கீழ்க்கோடி இந்தியரில் ஆயிரக்கணககான பேர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்து விட்டு, கையில் தம்படிகூட இல்லாமல் ராணுவத்தில் குடும்ப சகிதமாகச் சேர்ந்து, தாய் நாட்டுக்காகப் பக்கிரிகளாக ஆனதை என் கண்களால் நானே பார்த்திருக்கிறேன்". - INA கேப்டன் ஷா நவாஸ்கான்.

ஸேவக் கி ஹிந்த் 1943 ஜுலை 2 – ஆம் தேதி சிங்கப்பூரில் ‘ஆஸாத் ஹிந்த் சர்க்கார்’ (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்காலச் சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும்: ‘ஆசாத் ஹிந்த் பவுச்’ என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் ரிஸர்வ் பேங்க் ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் உன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடிஇருந்த அந்நகரத்து வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது,

“தேசவிடுதலைக்காகப் போராடும் நம் இந்திய தேசிய ராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்” – என்று வேண்டுகோள் விடுத்தார். 

வருகைதந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பேசி, “எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்”என்று அறிவித்தனர்.

இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன், தாய்நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் 10 சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் நிதி வழங்க பார்க்கின்றிர்களே ! என்று பேச, கூட்டத்திலிரந்து தலையில் தொப்பி, தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கி வருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்ன தான் எழுதப்பட்டிருந்தது?

"ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்” – என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன.அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முகம்மது ஹபீப் என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக, இவர் தான் ஸேவக் கி ஹிந்த் (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.

 …இந்திய தேச பக்தர்கள் பலர் தங்களுடைய சொத்துக்களைச் சுதந்திர இந்திய அரசாங்கத்திற்கு அர்ப்பணம் செய்தனர். ஸ்ரீஹபீப், ஸ்ரீகன்னா முதலிய பிரமுகர்கள் சுதந்திரப் போருக்கு உதவியாக லட்சக்கணக்கான தொகையை வாரி வழங்கினர். சில நாட்களில் இந்திய தேசிய வங்கியில் 25 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்துவிட்டது. -ஜெயமணி சுப்பிரமணியம்.

இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பிண்ணனியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முகம்மது ஹபீப் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். (* ஜெயமணி சுப்பிரமணியம், நேதாஜியின் வீரப்போர் இரண்டாம் பாகம், பக்கம் 181) – (** கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86.)

நேதாஜியின் மாலைக்கு மூன்று லட்சம்பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நேதாஜியின் ‘இளமையின் கனவு’, ‘நேர்வழி’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து தேசிய உணர்வால் தூண்டப்பட்டு தனது 21 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் எம்.கே.எம்.அமீர் ஹம்சா.

எண்பது வயது முதியவராக இன்று சென்னையில் வாழ்ந்து வரும் இத்தியாகச் செம்மல் பல லட்சங்களைத் துணிச்சலுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு வாரி வழங்கியவராவார்.பிரிட்டீஷாரால் நாடுகடத்தப்பட்ட வங்கத்தைச் சார்ந்த ராஷ்பிஹாரி போஸ் ஆரம்பித்த ‘இந்திய சுதந்திர லீக்’ அமைப்பில் தன்னை முதல் நபராகப் பதிவு செய்தார். பின்னர் நேதாஜிபுரட்சிப் படைக்குத் தலைமை ஏற்ற போது அதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியதற்காகப் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் விதித்த மரண தண்டனையிலிருந்து தப்பியவர்.

1943 – இல் நேதாஜி ரங்கூனுக்கு முதலில் சென்றபோது நடந்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளைப் போராட்ட நிதிக்காக ஏலம் விட்டனர். அம்மாலைகளில் ஒன்றை மூன்று லட்சம் ரூபாக்கு ஏலத்தில் எடுத்தார்.இந்திய தேசிய ராணுவத்தில் அமீர் ஹம்சா பணியாற்றியதைப் பாசத்தின் காரணமாக அவரது தந்தை விரும்பவில்லை. இரண்டு நாள் அவரை வீட்டில் பூட்டிவைத்துவிட்டார். இதனை அறிந்த நேதாஜி அமீரையும் அவரது தந்தையையும் அழைத்து வரச்செய்தார். நாடு சுதந்திரம் அடைய வேண்டிய அவசியத்தை உணர்ச்சிப் பொங்க எடுத்துரைத்தார். நேதாஜியின் உரையாடலைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட இவரது தந்தையார், தனது சட்டைப் பையிலிருந்த காசோலைப் புத்தகத்தை எடுத்து இரண்டு லட்சத்து முப்பதாயிரத்துக்கான ஒரு காசோலையை எழுதி நேதாஜியிடம் கொடுத்ததோடு தன் மகனையும் முழுமையாக நேதாஜியிடம் ஒப்படைத்தார்.

23-01-1944 – இல் நேதாஜின் 47 – வது பிறந்த நாளின் போது ஒரு லட்சத்துக்கான காசோலையை இவர் நேதாஜிடம் வழங்கியதோடு, தனது வைர மேததிரத்தை நேதாஜிக்கு பிறந்த நாள் பரிசாக அணிவித்தார். அமீர் ஹம்சாவுக்கும் அவரது தந்தையாருக்கும் நேதாஜி புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார்.

23-01-1944 இல் நேதாஜியின் 47-வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜுப்ளி அரங்கில் நடைபெற்றது. பர்மா வாழ் தமிழர்கள் நேதாஜிக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தனர்.எதிர்பார்த்ததை விட மூன்று மடங்கு அதிகமாகத் தங்கமும் நகைகளும் குவிந்தன. – அமீர் ஹம்சா.

தனது செல்வத்தை எல்லாம் நேதாஜியின் சுதந்திரப் பணிக்கு வழங்கிவிட்டு, நேதாஜி தனக்கு வழங்கிய சட்டைத் துணியை இன்றளவும் பாதுகாத்தவராக, பழைய தியாக நாட்களை நினைவில் பசுமையுடன் ஏந்தியவராக இன்றும் சென்னையில் வாழ்ந்து வரும் இப்பெருமகனை, இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் யார் கௌரவித்தார்?  (அமீர் ஹம்சா, ‘நேதாஜியின் மாலைக்கு ரூ. 5 லட்சம்’ , தினமணி சுதந்திர பொன் விழா மலர்,பக்கம் 69.)

மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர்தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 – ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். 

பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார்.

 காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது.
பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பட்டுள்ளார்.

அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, “அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?”என்று காந்திஜி கேட்டார். அதற்கு “என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது” – என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.

அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக் கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 

1921 அக்டோபர் 9 – ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?  (* நிஜாமுத்தீன் ஜமாலி, ‘ஒரு துணி வியாபாரியின் கதை,’ சிந்தனைச்சரம் நவம்பர் 1997., பக்கம்32-33.)

வ.உ.சி – யின் நேசர் உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோமபை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் கோம்பை எனப்பெயர் பெற்றது. இயற்கையின் அடிவாரமாக மட்டுமல்லாமல், தேசிய விடுதலை எழுச்சியின் அடிநாதமாகவும் இவ்வூர் திகழந்திருந்தது. வ.உ.சி – யைப் பற்றிப்பேசும் போதெல்லாம் உச்சரிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரர் இவ்வூரில் வாழ்ந்த உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிப். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச்செட்டியா, மகாகவி சுப்பிரமண்ய பாரதி போன்ற சுதந்திரப் போராளிகளின் உற்ற நண்பராக விளங்கியவர்.

1905 – இல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.1907 – இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்றார்.

1908 – இல் பிரிட்டீஷ் அரசு தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது.தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். வ.உ.சி., சுப்பிமண்ய சிவாவோடு தலைமறைவுக்கு பாதுகாப்பு தேடி முஹைதீன் பிள்ளையை நாடி வந்த போதுதான் கைது செய்யப்பட்டு கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில்தான் அவர் செக்கிழுத்த கொடுமை நடைபெற்றது. இந்த வெஞ்சிறைக் கொடுமையைக் கேள்விப்பட்ட பாரதியார்,

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்நூலோர்கள் சேக்கடியில் நோவுவதும் காண்கிலேயோ!

- என்ற பாடல் வரிகளை முஹைதீன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தீட்டி தன் வருத்தத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

1908 – இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்… முதல் நபர் முகம்மது யாசின் என்ற இளைஞராவார். – தனது ‘சுயசரிதை’ யில் வ.உ.சி.

வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். அந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான். முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களக்கு எழுதிய கடிதங்கள் பல. (* மதிநா, டிசம்பர் 1986., ஜனவரி 1987)

சுதேசி ஸ்டீம் நேவிகேசன்இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ – என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 – இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவா ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட் ஆவார்.

ரூபாய் இரண்டு வட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனை பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர் (பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார். - என்று 20-10-1906 – இல் எழுதியதை சீனிவிஸ்வநாதன் தனது ‘சுதேசியத்தின் வெற்றி’ நூலில் எடுத்தாண்டுள்ளார்.

*இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை – தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)


நன்றி - pfitrichy.blogspot.com