Thursday, January 5, 2012

காவி தீவிரவாதிகளின் கயவாளித்தனம்!



புது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்திய தேசத்தில் தேசபக்தியை மொத்தமாக ஏகபோக உரிமை கொண்டாடி வரும் சங்பரிவார அமைப்புகள் சும்மா இருப்பார்களா?  இந்த நிகழ்வை வைத்து கலவர விதையை தூவி முஸ்லிம்களை அறுவடை செய்ய மானாவாரியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

சங்பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் குதியாய் குதித்தன. கடையடைப்புக்கு பஜ்ரங் தள், வி.எச்.பி, போன்ற "உணர்ச்சிவயப்பட்ட தேசபக்தி" அமைப்புகள் அழைப்புகள் விடுத்தன. காவி பயங்கரவாதத்தின் அரசியல் உருவம் பா.ஜ.க. ஒரு படி மேலே போய், கொடி ஏற்றப்பட்ட இடத்தை கழுவி சுத்தம் செய்ததாம். (பாக்.கிலிருந்து வரும் சிந்து நதி நீரை எப்படி சுத்தம் செய்வார்கள்???)

அதன் பின், போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். நம்பித்தான் ஆகவேண்டும் விசாரணை செய்தவர்கள், மத அபிமானத்தை விடுத்து மனிதாபிமானத்தோடு விசாரித்ததில், இந்த செயலை செய்தவர்கள் ராமசேனா என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் மாணவர் பிரிவை சார்ந்த தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் கொடியை ஏற்றி பழியை முஸ்லிம்களின் மேல் சுமத்தி கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம்.இதே இயக்கம் தான் , கலவரத்தை தூண்டுவதற்கு "ரேட்" பேசி காசு வாங்கிய இயக்கம் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

காந்தியை கொன்ற கோட்ஸே என்ற ஆர்.எஸ்.எஸ். அபிமானியின் கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தது. காந்தியை  கொன்றது ஒரு முஸ்லிம் தான் என்று இந்திய முஸ்லிம்களின் மேல் பழியை போடுவதே நோக்கம். இன்றைக்கும் அந்த வழிமுறை தொடர்கிறது. கோட்ஸெவின் நீட்சியாக..

இந்த நிகழ்வை ஊடகங்கள் பரபரப்பாக்கவில்லை. ஏனென்றால் காவி தீவிரவாத்திற்கு மீடியாவில் டி.ஆர்.பி. ரேட்டிங் இல்லையாம்.

இதை மட்டும் முஸ்லிம்கள் செய்திருந்தால்...???? ( உங்கள் கற்பனைகள் வரவேற்கப்படுகின்றன)


Source: http://www.bbc.co.uk/news/world-asia-india-16424473


இது தொடர்பான பிற பதிவுகள்:

ராமசேனாவின் செயற்கை மதக்கலவரங்கள்! தெஹல்கா அம்பலம்.


4 comments:

suvanappiriyan said...

காவிகளின் உண்மை முகத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள். மீடியாவில் வெளி வராத செய்திகள்இன்னும் நிறைய உள்ளது.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.உதயம்,
இந்த நியூஸ் வந்த போதே எனக்கு இதெல்லாம் இவர்கள் வேலையாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன். பதிவுக்கு நன்றி சகோ.உதயம்.

//இதை மட்டும் முஸ்லிம்கள் செய்திருந்தால்...????//---அவர்கள் என்ன முட்டாள்களா/பயங்கரவாதிகளா இப்படி எல்லாம் செய்ய...?

ஹேமந்த் கார்கரேவின் நேர்மை இன்னும் சிலரிடம் வாழ்வது கண்டு மிகவும் மகிழ்ச்சி.

உயிரைப்பற்றி கொஞ்சமும் அஞ்சாது துப்பறிந்த உண்மையை ஊருக்கும் உலகுக்கும் உணர்த்திய அந்த உத்தமர்களுக்கு என் கோடி நன்றிகள்.

இறைவனுக்கே புகழனைத்தும்.

Nasar said...

// இந்த நிகழ்வை ஊடகங்கள் பரபரப்பாக்கவில்லை. ஏனென்றால் காவி தீவிரவாத்திற்கு மீடியாவில் டி.ஆர்.பி. ரேட்டிங் இல்லையாம். //
இது தான் வருணாசிரமத்தின் தர்மம் ......ஊடகங்களின் பாராபட்சம் .
வாழ்க ஜனநாயகம் !! வளர்க ஊடகத்தின் வருணாசிரம தர்மம் !!
// இதை மட்டும் முஸ்லிம்கள் செய்திருந்தால்...???? ( உங்கள் கற்பனைகள் வரவேற்கப்படுகின்றன) //
மீடியாவில் அடிக்கடி பிளாஷ் நியுஸ் போட்டு டி.ஆர்.பி. ரேடிங்கை
எங்கியோ ஏத்தி இருப்போமில்ல .....மண்ணள்ளி போட்டு விட்டார்களே
போலிஸ்காரங்க .....
பாகிஸ்தானிலிருந்து சிந்து நதி மட்டுமில்ல காற்று உட்பட எது வந்தாலும்
நீரினால் கழுவத்தான் செய்வோம் ஏன்னா அது எங்கள் மனுநீதி ,தர்மம்..etc

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

முதலில் மன்னியுங்கள் சகோ

உங்கள் லிங்கை இன்று தான் பார்க்கிறேன் கைசேதப் படுகிறேன் இந்த செய்தி முஹம்மத் அஷிக் பதிவு இன்று போட்ட பிறகு தான் தெரியும்
எவ்வளவு பலஹீனமாக இருக்கிறோம்

பகிர்வுக்கு நன்றி