Thursday, December 1, 2011

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!



முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.

இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை.
இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான்.

 இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.


ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும், இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும், இவர்கள் எப்பகுதியிலிருந்து வந்தார்களோ அப்பகுதிகளை இவர்களின் எதிரிகள் கைப்பற்றி விட்டதால் அவை இவர்களின் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என்பதையும், இவர்கள் அவற்றோடு போரிட்டார்கள் என்பதையும், இவர்கள் இங்குள்ள செல்வத்தை (ஆங்கிலேயர் போல) தங்கள் மூதாதையர் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை என்பதையும், இங்குள்ள செல்வத்தை இந்நாட்டின் வளத்திற்கே உபயோகித்தார்கள் என்பதையும், இவர்கள் இங்கிருந்த பிற மன்னர்களை வென்றது தான் நாட்டின் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தது என்பதும் சொல்லப்படுவதில்லை.

ஆம். கோரி முகம்மது கூர்ஜர – பிரதீஹரர்கள் நாட்டை, கன்னோசி நாட்டை வென்றது படையெடுப்பாக சொல்லப்படுகிறதேயல்லால், அதனால் கூர்ஜர பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு என்பது மறைந்து டெல்லியை தலைநகராகக் கொண்ட அரசோடு அவை இணைந்து இந்தியா என்றொரு நாடு உருவாக அவர் வித்திட்டார் என சொல்லப் படுவதில்லை.

அவ்வாறே இல்டுட்மிஷ் ஒரு படையெடுப்பாளனாக சொல்லப் படுகிறாரேயல்லாமல் டெல்லி பேரரசிற்கு அப்பால் இருந்த பகுதிகளை வென்று இந்திய டெல்லி பேரரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர் என்பதும் சொல்லப்படுவதில்லை. அவ்வாறே அலாவுதீன் கில்ஜியும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தான் முதல் வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக வென்று டெல்லியை தலைநகராகக் கொண்ட இந்திய அரசோடு இணைத்து, தன் ஆட்சியின் கீழ் ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி கொண்ட இந்தியா என்று திகழச் செய்தவர்.

எனினும் முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் என்று பாட நூல்கள் கூறுகின்றனவேயல்லால் அவர்கள் தங்கள் ரத்தம் சிந்தி, சிறிதும் பெரிதுமான நாடுகளை வென்று, மத்திய அரசோடு இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி தங்கள் உதிரத்தால் அது சிந்தாமல் சிதறாமல் கட்டிக்காத்தவர்கள் என்று சொல்லப்படுவதில்லை. ஆனால் உண்மை நீண்ட நாட்களுக்கு உறங்காது.

அது விழித்தெழும் போது வீரிட்டு எழும். எனவே ஒன்றுபட்ட இந்தியா உருவாக காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வராமல் இருந்திருந்தால் ஒன்றுபட்ட இந்தியா உருவாகாமல் போயிருக்கக் கூடும். இந்தியாவை ஒன்று படுத்தியதோடு அதனை மிக நீண்டகாலம், சுமார் 500 ஆண்டுகள், ஒன்றாகவே கட்டிக் காத்தது தான் இந்தியன் என்ற உணர்வு வளர காரணமாயிற்று. இது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய மகத்தான தொண்டு.

இந்தியாவை பாதுகாத்தல்: 

ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அரும் பெரும்தொண்டென்றால், அவ்விந்தியாவை அவர்கள் மங்கோலியர் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தது இன்னும் சற்று உயரிய தொண்டாகும்.

ஆம் 13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் தங்கள் பேரரசை உருவாக்கி, இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவிலிருந்து வெகுண்டெழுந்த முரட்டு இனத்திரான மங்கோலியர்கள் தங்கள் மாபெரும் தலைவன் செங்கிஸ்கான் தலைமையில் டெல்லி பேரரசை போன்று பன்மடங்கு விரிந்த, பன்மடங்கு வலிமை பெற்றிருந்த பேரரசுகளான சீனப் பேரரசு, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா பகுதிகளை வென்றுக் கொண்டு இந்தியாவிற்கு அருகில் இருந்த மிக வலிமை பெற்ற குவாரசைம் பேரரசை நெருங்கியபோது அதன் வலிமை பொருந்திய மன்னன் அலாவுதீன் (டெல்லியின் அலாவுதீன் கில்ஜி அல்ல) மங்கோலியர் வலிமைக்கு அஞ்சி காஸ்பியன், பகுதிக்கு ஓடிவிட, குவாரசைம் அரசின் வாரிசு ஜலாலுத்தீன் பஞ்சாப் வந்து டெல்லியின் முஸ்லிம் மன்னன் இல்டுமிஷ்ஷிடம் அடைக்கலம் கோரியபோது, இல்டுமிஷ் மதியூகத்துடன் அதை நிராகரித்துவிட, ஜலாலுத்தீனை துரத்தி வந்த செங்கிஸ்கான் டெல்லியை தாக்காமல் திரும்பிச் சென்றார்.

இல்லையேல் இந்தியா மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு ஒரு மங்கோலிய காலனியாகியிருக்கும். இல்டுமிஷ்ஷின் மதியூகம் இந்தியாவை காத்தது.

மங்கோலிய படையெடுப்பு இல்டுமிஷ் காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. அது டெல்லி சுல்தான்கள் பால்பன், அலாவுதீன் கில்ஜி காலத்திலும் தொடர்ந்தது. மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் எல்லைப்புரத்தில் வலிமையான கோட்டைகளைக் கட்டி அதில் தீரமிக்க படையை நிறுத்தினான். இவரின் வல்லமை மிக்க ஆளுனன் ஷேர்கான் மங்கோலியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான்.

ஷேர்கானின் இறப்பிற்கு பின் மங்கோலியரிடமிருந்து இந்தியாவை காக்க பால்பன் தன் மைந்தர்கள் முகம்மது கான் மற்றும் புக்ராகானை எல்லைப்புற கவரனர்களாக நியமித்தான். வலிமையும் தீரமும்மிக்க முகம்மதுகான் மங்கோலியருடன் நடைபெற்ற யுத்தத்தில் மாண்டான். தன் 80வது வயதில் முதியோனாகிய பால்பனுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.

இந்தியாவை காப்பதில் தன் அன்பு மகனை பறிகொடுத்த பால்பன் தன் பணியில் சற்றும் தளர்ச்சியடையாமல், உடன் மேல் நடவடிக்கை எடுத்து மங்கோலியர்களை வென்று இந்தியாவை காத்தான், ஏனோ இந்திய பாடநூல்கள் இத்தியாகத்தை போற்றுவதில்லை.

அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.

அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று.

அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.



- பேரா. ஏ. தஸ்தகீர் –

 இது தொடர்பான கீழுள்ள சுட்டிகளையும் சுட்டுங்கள்.

1. திரிக்கப்பட்ட முஸ்லிம் படையெடுப்புகளும், மறைக்கப்பட்ட இந்து படையெடுப்புகளும்..




2. வரலாற்றுப் புரட்டுக்கள்!

Wednesday, November 23, 2011

மோடியின் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ரத்தக் கவுச்சி!!

குஜராத் மோடி அரசின் போலீஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.

 இதில் பெரும்பாலும் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்கள் போன்ற பொய்க் கதைகளை கூறி இவ்வளவு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.

 இந்த கொலைகள் எல்லாம் கடந்த 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே நடந்தவைகளாகும்.

  2002 அக்டோபர் 22-ஆம் தேதி சமீர்கான் பத்தான் என்பவரை கொலைச் செய்து குஜராத்தின் மோடி போலீஸ் போலி என்கவுண்டர் படுகொலைகளை துவக்கி வைத்தது. ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் சமீர் பத்தானை கத்தியால் குத்திய சம்பவத்தை நடித்துக் காட்டவேண்டும் என பொய் கூறி சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்விடத்தில் வைத்து போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து தப்பி ஓட முயன்ற பத்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்க் கதையை பரப்பினர். இதுத் தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.

 அஹ்மதாபாத் கேலக்ஸி தியேட்டருக்கு அருகே 2003 ஜனவரி 13-ஆம் தேதி ஸாதிக் ஜமால் மெஹ்தர் என்பவரை மோடியின் போலீஸ் போலி என்கவுண்டரில் படுகொலை செய்தது. மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளி என பொய் கூறி இந்த படுகொலை நிகழ்ந்தது. ஆனால் பாவ் நகரில் ஸ்கூட்டர் வியாபாரியாக வாழ்க்கையை ஓட்டியவர்தாம் ஸாதிக் ஜமால் மெஹ்தர்.

  2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், ஸீஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக் கொலைச் செய்தது. இவர்களை அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு விவசாய பண்ணையில் வைத்து கொலைச் செய்த பிறகு போலீஸ் அஹ்மதாபாத்திற்கு அருகே உள்ள நரோடா பகுதிக்கு இறந்த உடல்களை கொண்டுவந்து அதிகாலை நான்கு மணிக்கு போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றினர். இவர்களும் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளிகள் என மோடியின் போலீஸ் கூறியது.

 அதனைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது.

கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.

  2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி காந்தி நகர் போலீஸ் சவுராஷ்ட்ராவை சார்ந்த ரஹீம் காஸிம் ஸம்ராவை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தனர். 2006 மார்ச் 17-ஆம் தேதி வாத்வாவில் வைத்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர். கொலைச் செய்யப்பட்டது யார் என அடையாளம் காணப்படவில்லை.
-------------------------  source Thuuthuonline --------------




 மேலே கண்டது, காவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தையும் மீறி, வெளிவந்த சில சாம்பிள்கள். இன்னும் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.



அகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது. மத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.

ஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.

குஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா?

முஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா?

நாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது?

இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் "மதசார்பற்ற இந்தியா" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது? போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்?

மோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.



Monday, April 18, 2011

காவி பயங்கரவாதம் தேசத்திற்கு எதிரானப் போர். (குறும்படம்)

லக்னோ: ‘காவிப்போர் – தேசத்திற்கு எதிரான போர்’ எனும் தலைப்பில் பிஜேபி-யின் லோக் சபா எம்.பியும் கோரக்நாத் பீத்தின் வாரிசுமான யோகி ஆதித்யனாத்தின் தீவிரவாத அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம் உத்திரபிரதேச பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது. இந்த குறும்படம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள ஹிந்துத்வா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளை வெளிக்கொணரும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. படம் திரையிட்ட பின் நடந்த விவாதத்தில் சமூக சேவகர் டாக்டர்.சந்தீப் பாண்டே கூறியதாவது; உத்திர பிரதேசத்தின் கிழக்குப் பகுதி முழுவதும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதை உத்திரபிரதேச அரசு கவனிக்க தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார். யோகி ஆதித்யனாந்தும் அவரின் ஆதரவுடைய ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியும் தான் பல கலவரங்களுக்கும் படு கொலைகளுக்கும் காரணம் என தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் முஹம்மது சுஹைப் கூறுகையில்; “இந்த குறும்படம் ‘காவிப்போர்‘ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர் செய்யக் கூடிய தீவிரவாதத்தை மட்டும் காட்டாமல் எவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களும், ஹிந்து சமுதாயத்தின் பெண்களும், குழந்தைகளும் தீவிரவாதத்தின் பக்கம் இழுக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார். லக்னோ பல்கழைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாஜ்ஹியும், செயலாளரான பேராசிரியர் ரூப் ரேகாவர்மாவும் ஹிந்துத்வா தீவிரவாதம் உத்திர பிரதேசத்தின் கிழக்கு பகுதியை அச்சுறுத்துவதாக உள்ளது என தெரிவித்தனர். அயோத்யாவை சேர்ந்த கிஷோர் ஆதித்யநாத் இறையாண்மைக்கு எதிரான கலாச்சாரத்தை பரப்புவதாக தெரிவித்தார். மேலும் இந்த குறும்படம் உண்மை நிலையை விளக்குவதாக உள்ளது எனவும் கூறினார். சொராஹ்புதீன் என்னும் முஸ்லிம் இளைஞர் சிறிது நாட்களுக்கு முன்னர் காலிலாபாத் செல்லும் வழியில் ஆர்.எஸ்.எஸ்-ன் பெண்கள் அமைப்பான ஹிந்து யுவா வாகினியால் கொடூரமாக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த காவிப்போர் குறும்படம் ஹிந்தியில் ராஜீவ் யாதவ், ஷாநவாஸ் மற்றும் லக்ஷ்மன் பிரசாத் ஆகியோரால் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. செய்தி. தூது ஆன்லைன் .

Friday, March 25, 2011

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு!

1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.

இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.

விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.

1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.

இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.

காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.

திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.

முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்?
1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர்.

இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.

1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.

1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக்காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.

காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.

ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.

சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.

இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? .. இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.

“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”

என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.

மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமையை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.

‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.

மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.

தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.

திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.

இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள்:
முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?

கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார்.

சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.

1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கியமானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலைவனாக நினைத்தது.

கருணாநிதி தோல்வி பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப்பிடித்தது சமுதாயம்.

எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல்பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.

இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?


அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்
அமைப்பாக ஒன்றுதிரண்டு,அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதி யாக மாற்றினார்.

உதாரணமாக,
துறைமுகம் சட்டமன்ற தொகுதி :
1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)
1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் - (முஸ்லிம் லீக்)
1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) - வென்ற தொகுதி - காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.

1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.

1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கியரால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி - ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.

1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் - திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.

அதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப்பட்டார். 1996, 2001, 2006 என இன்றுவரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.

துறைமுகத்தை விட்டு வேறு தொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா? சேப்பாக்கம் தொகுதியை. அந்த தொகுதியின் கடந்த கால நிலை என்ன?

1977 ரகுமான்கான் திமுக
1980 ரகுமான்கான் திமுக
1984 ரகுமான்கான் திமுக
1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)
1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)

இப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.

‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத்தக்கன.

அடிமை இந்தியாவில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று சுதந்திர இந்தியாவில் தொலைத்துவிட்ட சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம்.

முஸ்லிம் பிரமுகர்களுக்கு திமுகவில் நேர்ந்த அவலங்கள்
அதிமுகவினால் தொடர் தோல்விகளை திமுக சந்தித்த நாட்களில் வெற்றி எம்.எல்.ஏ.வாக உலாவந்த ரகுமான்கானை அவர் தொடர்ந்து வென்ற சேப்பாக்கத்தை வழங்காமல் 2006ல் பூங்காநகரை அவருக்கு ஒதுக்கி உட்கட்சிப் பூசல்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களில் ரகுமான்கான், திமுகவை நியாயப்படுத்திப் பேசி மெஜாரிட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தனது உரை வீச்சால் வென்றார். சட்டமன்ற கதாநாயகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன-?

K.N. நேருவின் மச்சான் என்பதால் நாடாளுமன்றத் தொகுதி வழங்கி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நெப்போலியனின் தியாகத்தை (?) விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா? காரணம் அவர் ஒரு முஸ்லிம்.
முஸ்லிம் லீக்கின் தனித்தன்மையை ஒழித்தது
1962ல் காமராஜ் காலத்தில் உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக முதலிடத்தைப் பெற்றது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றது. இன்று என்ன நிலை-?
நகரங்களில் கணிசமாக வாழும் முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பரிதாபத்துக்குரிய நிலை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முஸ்லிம்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி& பேரூராட்சி சேர்மன்களாகவும் பதவி வகித்த முஸ்லிம்களுக்கு திமுக வழங்கியது துரோகமும், ஏமாற்றுமும் தான்.

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.

முஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது
1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைபடாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.


அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)

கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார்.
‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார்.

கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.

தொகுதிகளை கொடுத்து பறிக்கும் கருணாநிதி
2006ல் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் லீக்கிற்கு ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்ற நிலையில் தமுமுகவின் தலைவர்கள் கலைஞரிடம் பேசிய பிறகு மூனு சன்னு என்று எதுகை மோனையுடன் கூறி மூன்று தொகுதியும் உதயசூரியன் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் பாளையங்கோட்டை தொகுதியை பறித்து டி.பி.எம் மைதீன் கான் வசம் ஒப்படைத்தார் கலைஞர்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம் பற்றி லீக்கின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் தலைவர் பேரா.காதர் மொய்தீன் வேட்பாளராகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்ய, அவை செய்தித்தாள்களிலும் வந்தது.

இந்நிலையில் இரண்டே நாட்களில் பேரா.காதர் மொய்தீனை அழைத்து மிரட்டிய கலைஞரும், துரைமுருகனும் வேட்பாளர் காதர்மொய்தீன் இல்லை, துரை முருகனின் தொழில் நண்பர் துபாய் அப்துல் ரகுமான், என்றும், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்பார், ஏணி சின்னம் அங்கு போணி ஆகாது என்று கூறி அவமானப்படுத்தினார். கூனிக் குறுகி கருணாநிதி சொன்னதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறுவழியில்லை காதர்மொய்தீன் அவர்களுக்கு. ஏனென்றால், எதிர்த்தால் துபாய் அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு புதிய லீக் உதயமாகிவிடும் என்ற அச்சம்தான்.

வரும் 2011 சட்டமன்ற தேர்தலில், தொகுதிகள் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக நாகூரில் கூடியது முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு. இதில் மூன்று தொகுதிகளை பெறுவது என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும் போல தனது சிறுபான்மை பிரிவான லீக்கை மீண்டும், மூன்று தொகுதிகளுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும் பணிய வைத்தது.

இச்சூழ்நிலையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட தொகுதி பங்கீடு பிரச்சனையில் கொடுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை பிடுங்கி காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டது.

அதனை எதிர்த்து மாநில மகளிர் அணி தலைவியும், அப்துல் ஸமது சாகிப் அவர்களின் மகளுமான பாத்திமா முஸபர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடுமையாக திமுகவை விமர்சித்தும், லீக் தலைவரை மாற்ற வேண்டும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் எப்போதும் முஸ்லிம் லீக்கை பிரித்தும், உடைத்துமே வரலாறு படைத்த கலைஞர் முதல்முறையாக முஸ்லிம் லீகில் திருப்பூர் அல்தாப்பை அவரே தலைவர், அவரே தொண்டராய் உள்ள கட்சியான தமிழ்மாநில தேசிய லீக்கை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இணைப்பு விழா நடத்தினார். இது சமுதாயத்திலும், அரசியல் அரங்கிலும், பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தான் தெரிந்தது இதில் இருக்கும் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி.

1999ல் பி.ஜே.பியோடு கலைஞர் கூட்டணி வைத்தபோது லத்தீப் சாகிப்பிடம் இருந்து வெளியேறி தமிழ்மாநில தேசிய லீக் தொடங்கி திமுக, பி.ஜே.பி கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்தாப் செய்த துரோகத்திற்கு எந்த நன்றிக் கடனும் செலுத்தாமல், 2001&2006, இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாற்றி வந்தார். இம்முறை எப்படியேனும் ஒரு தொகுதியை திமுகவில் தருவது என்றும், திருப்பூர் அல்தாப்பை தன்னோடு திமுகவில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவாகியிருந்தது.

முஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதியை, கொடுத்து ஒன்றை பறித்த அதிருப்தியையும் சரிகட்ட மிகச்சிறந்த ராஜதந்திர சூழ்ச்சி செய்தார் கலைஞர். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அல்தாப்புக்கான நன்றி கடன் தொகுதி தருவது. இன்னொன்று முஸ்லிம்களிடம் நிலவும் தொகுதி பறிப்பு அதிருப்தியை சரி செய்வது. இதற்கான முடிவுதான் முஸ்லிம்லீக்கில், தமிழ் மாநில தேசிய லீக்கை இணைத்து, பறித்த தொகுதியைத் திருப்பி கொடுப்பது போல் அந்தத் தொகுதியை திருப்பூர் அல்தாப்புக்கு கொடுக்க வைத்தது.

ஒரு நேரத்தில் ராஜாஜி பற்றி அறிஞர் அண்ணா சொன்னார். உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனையெல்லாம் வஞ்சனை என்று. இது ராஜாஜிக்கு பொருந்தியதோ இல்லையோ கலைஞருக்கு அப்படியே பொருந்தும் வாசகம்.

கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்(!)
உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தேன் என்பார். ஒட்டுமொத்த சமுதாயமும் பின்தங்கி இருக்கும் நிலையில், இந்த சமூக நீதி காவலன்(!) உருதுபேசும் முஸ்லிம்களை மட்டுமே சேர்த்தது முஸ்லிம்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து அப்போதே முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தார். அதற்காக தமுமுக நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட கலைஞர் இது என்னுடைய ஆழ்மனதில் உள்ள உணர்வு. எங்களுடைய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் காட்டிய சமூக நீதி பாதை என்றெல்லாம் சொன்னார்.

அது உண்மையாக இருந்திருக்கு மேயானால் 1969ல் ஆட்சிக்கு வந்தபோதே கொடுத்திருக்க வேண்டும். 1971ல் இரண்டாவது முறையாக வந்தாரே அப்போது கொடுத்திருக்க வேண்டும். 1989ல் மூன்றாவதாக பதவியேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 1996ல் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 2006ல் ஐந்தாவதாக முதல்வர் பொறுப்பேற்று 2007ல் ஏன் கொடுத்தார். அது இந்த சமுதாயத்தை கீழ் நிலையிலிருந்து கைதூக்கி விடவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; தன்னையே நம்பிக் கிடக்கும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் அல்ல.

தமுமுகவின் 12 ஆண்டு போராட்டதைத் தொடர்ந்து கிடைத்ததே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு.

2006ல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்பேற்று காலம் கடத்தியதைப் பொறுக்காமல் ‘‘வீறுகொண்டு எழுவோம்...’’ என்ற தமுமுக பாபநாசம் பொதுக்குழுவின் எச்சரிக்கைதான் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வழிவகுத்து அதிலும் பல்வேறு குளறுபடிகள். முஸ்லிம்களுக்கான இடங்கள் சரியான முறையில் நிரப்பப்படுவதில்லை என்பதை எடுத்துச் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இதனைத் தவிர என்ன செய்தார் கலைஞர் சாதனையாகச் சொல்ல. முஸ்லிம் சமுதாயத்திற்கு எவ்வளவு செய்தாலும் கலைஞருக்காக இந்த சமுதாயம் இழந்ததை வைத்துப் பார்த்தால், இமயமலைக்கும், கூழாங்கல்லுக்கும் உள்ள வித்தியாசம் இருக்குமே அல்லாமல் சமன் செய்ய முடியாது.

திமுக உள்கட்டமைப்பில் முஸ்லிம்கள்
தனது தாய்ச் சபையைத் துறந்து, தனது அடையாளத்தை இழந்து கலைஞரின் தலைமையேற்ற முஸ்லிம் சமுதாயத்தின் நிலை இன்று திமுகவின் நிர்வாகப் பொறுப்புகளில் எப்படி உள்ளது.

தலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்மட்ட செயல்திட்டக் குழுவில் ஒரு முஸ்லிம் உண்டா? பெயருக்கேற்றார் போல வாழ்ந்து மறைந்த சாதிக் பாட்ஷா, மாநிலப் பொருளாளராக இருந்து மறைந்த பிறகு இதுவரை ஒருவரும் தலைமை நிர்வாகக் குழுவில் பொறுப்புக்கு வர முடியவில்லை.

அடுத்த அதிகாரம் பொருந்திய பதவியாக இன்று குறுநில மன்னர்களைப் போன்று அதிகாரம் செலுத்தும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளில் ஒரு முஸ்லிமும் இல்லையே ஏன்?

நீலகிரி முன்னாள் மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

வேலூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் முகம்மது ஷகிக்கு கட்சியில் என்ன மரியாதை-?

ஆயிரம் விளக்கு உசேன், துறைமுகம் காஜா போன்றவர்கள் திமுகவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏன் ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளுக்கு கூட முஸ்லிம்கள் நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப் படுகின்றார்கள். கலைஞரின் வாக்கு வங்கியாக மட்டும் வாழும் அடிமைகளா முஸ்லிம்கள்?

தமுமுகவை அடக்குமுறையால் ஒழித்துவிட நினைத்தது யார்?

முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அமைப்பாக ஒன்றுதிரள்வோம் என்ற முடிவை எடுத்து தமுமுகவை 1995ல் துவங்கினோம்.

1996ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்றார். டிசம்பர் 06 போராட்டம் என்றாலே காவல்துறை மூலம் அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. கவர்னர் மாளிகை மசூதியில் ஜும்மா தொழுகைப் போராட்டம் என்று அறிவித்தோம். இது ஓரு ஜனநாயக போராட்டம். ஆனால் கலைஞரோ சட்டமன்றத்தில், ‘‘மத தீவிரவாதிகள் கவர்னர் மாளிகையில் நுழைவதாக அறிவித்திருக்கின்றனர். காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறி, தீவிரவாதிகள் என்று பட்டம் வழங்கி முஸ்லிம்களை மிரட்டியதோடு நாடு முழுவதும் கைதுப் படலும் நடந்தன.
நாடு முழுவதும் அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளில் காவல்துறை புகுந்து படுக்கை அறை வரை சென்று கைது செய்து சிறைவைத்த கொடூரங்கள் நடந்தன. அதையும் மீறி ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு நந்தனம் கல்லூரி வளாகத்தில் சிறை வைக்கப்பட்டோம்.

1997 டிசம்பர் 6ல் சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மாநாடு என்று தமுமுக அறிவித்தது. கடற்கரை சீரணி அரங்கில் மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவையில் செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பேரணி மாநாட்டிற்கு திமுக அரசு, தடை விதித்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இதனையும் மீறி கொட்டும் மழையில் மக்கள் திரண்டனர். அனைவரையும் கைது செய்ய முடியாத சூழல் உருவாகியது.

1998 டிசம்பர் 6ல் மதுரையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் தொடர்பான பேரணி மற்றும் மாநாடு என்று தமுமுக அறிவித்தது. இம்மாநாடு நடைபெறுவதற்கு 15 தினங்கள் முன்பாகவே தமுமுக நிர்வாகிகளும் அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். மாநாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து முதல்வர் கலைஞர் வீடு முற்றுகை என்று அறிவித்தோம். மீண்டும் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் தூண்டி விடப்பட்டது.

டிசம்பர் 6 என்றாலே அனுமதி மறுக்கப்படுகிறது என்பதால் 1999 ஜூலை 4ல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்தது. அதனைத் தடுத்திட மே மாதம் கடைசி வாரத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட காவல்துறை ஆணையாளர் அலுவலகங்கள் அருகில் வெடிக்காத குண்டுகள் வைக்கப்பட்டதாகச் சொல்லி மாநாட்டுப் பணிகளில் இருந்த தமுமுகவினரை பல்லாயிரணக்கணக்கில் கைது செய்து சிறை வைத்தார் கலைஞர்.

அதன்பிறகே கருணாநிதியின் தொடர் அடக்குமுறையை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் செல்வி ஜெயலலிதாவை மாநாட்டிற்கு அழைப்பது என்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. பேரெழுச்சியோடு முஸ்லிம்கள் பங்குகொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமைந்தது. அதன்பிறகே கலைஞர் அரசின் அடக்குமுறை முடிவுக்கு வந்தது.

நாம் கேட்பது என்னவென்றால், இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்ட சமுதாயம் நீதி வழங்கக் கோரி அமைப்பு நடத்துவதை இயக்கத்தின் மூலம் ஒன்று திரள்வதை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

ஏன் அரசின் கொடுங்கரங்களால் ஏவி ஒழித்திட துடித்தார் என்றால் தனது நிரந்தர வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்து விடும் என்பதால்தான். இவர் தான் முஸ்லிம்களின் காவலரா?


கோவை கலவரம்: திமுக அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம்
கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சொந்தப் பகையை தீர்க்க ஒரு வன்முறைக் கும்பல் ஒரு காவல்துறை அதிகாரியை அமைச்சர்களுக்கு கண் எதிரிலேயே கொடூரமாகக் கொன்று தீர்த்தது. அது மிகப்பெரிய கொடூர நிகழ்வாக இருந்தும் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்காக ஒட்டுமொத்த காவல்துறையே கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த சமுதாயத்தை பழிதீர்க்கப் புறப்படவில்லை. ஆனால் 1997 நவம்பரில் கோவையில் காவலர் செல்வராஜ் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். கொலையாளிகள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என திட்டமிட்டு வேட்டையாடியது கலைஞரின் காவல்துறை. ஒரே நாளில் ஒரு படுகொலை நிகழ்வை மட்டும் காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயமே கோவையில் வேட்டையாடப்பட்டது திடீரென்று நிகழ்ந்த ஒன்றாகக் கருதிட முடியாது.

1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம்.

குதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர்.

ஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.

கூட்டணியில் இருந்து கொண்டே நாம் பெரும் போராட்டங்களை நடத்தி சிறைவாசிகளை விடுவித்தோம்.

பாளையங்கோட்டை அப்துல் ரஷீத் கொலை வழக்கும், கலைஞரின் மாற்றாந்தாய் மனப்பான்மையும்....
பாளையங்கோட்டையில் 1999ம் ஆண்டு நிகழ்ந்த தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டிய கலைஞரின் காவல்துறை, அப்துல் ரஷீதின் மகனையே கைது செய்து சிறையில் அடைத்தது.

அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், அப்பாவியான அவர் மகனை விடுவிக்கக் கோரியும், அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் தொடர்ச்சியான போராட்டங்களை தமுமுக நடத்தியது-. தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு இழப்பீடு பெற்றுத்தர முடிந்ததே தவிர இன்றும்கூட உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.


ம.ம.க.வினரை நோக்கி கொலைவெறி கூட்டத்தை ஏவிய திமுக
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினர் செய்த அராஜகங்களையும் கள்ள ஓட்டுபோட்ட இழிசெயலையும் தட்டிகேட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திமுக கொலைவெறி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கடுமையான ரத்தக் காயங்களோடு பொறுமை காத்த நம் மீது அடக்கு முறையும் அராஜக தாக்குதலையும் ஏவியது கலைஞர் அரசு.

காதியானிகளை ஆதரிக்கும் கலைஞரின் காவல்துறை
காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து. ஆனால் காதியானிகளை விமர்சித்து ஜும்ஆவில் பேசினார்கள் என்பதற்காக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உலமாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தது கலைஞரின் காவல்துறை. இதுமட்டுமின்றி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து மேலப்பாளையத்தில் கடந்த மார்ச் 13 அன்று காதியானிகளின் பொய் முகத்தை கிழிக்க நடத்திய மாநாட்டிற்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைத் தந்ததும் கலைஞர் காவல்துறை தான்.


திருமணப் பதிவுச் சட்டத்தில் துரோகம்
திமுக அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த திருமணப் பதிவுச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் முஸ்லிம் தனியார் சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என்று கூறி ஜமாஅத்துல் உலமா தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் அரசிடம் முறையிட்டன. மார்ச் 6, 2010ல் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி எத்தகைய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. திருத்தத்தை உடனடியாக செய்வதாக சட்ட அமைச்சர் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் ஒப்புக் கொண்டார். ஆனால் பெயரளவிற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டு முஸ்லிம் அமைப்புகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது.


இதே நேரத்தில் இந்து கோயில்களில் நடைபெறும் திருமணம் அப்படியே பதிவு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. காலங்காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் ஜமாஅத்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டுமென்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதேபோன்ற வாதங்களை அதிமுகவை நோக்கியும் வைக்க முடியும் என்ற சிந்தனை பலருக்கு இருக்கலாம். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை அதன் தலைமை செய்தது முழுக்க முழுக்க சரியன்றோ, அவர்கள் தவறே செய்யாதவர்கள் என்றோ நாம் சொல்லவில்லை.


அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போட்ட காவல் அதிகாரிக்கு பொறுப்பு
திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா?

திமுக மட்டுமே முஸ்லிம்களின் செல்வாக்கு மிகுந்த கட்சி என்றொரு மாயையை திமுக விதைத்து வந்தது. இதைப் போர்வையாக வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான துரோகங்களும் தொடர்ந்தது. அதனை அம்பலப்படுத்தி மக்களை விழிப்படைய வைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

அதிமுகவின் தவறுகள் பூதாகரமாக்கப்படுவதும், திமுகவின் தவறுகள் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் அளவு சிறியதாக்கப்படுவதும் சமுதாயத்தின் உண்மையான நிலையான அரசியல் எழுச்சிக்கு உகந்ததாக இருக்க முடியாது.


-ப.அப்துல் சமது

Source: TMMK website.

Sunday, March 20, 2011

5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ

ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியத் தலைவர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குஜராத் சமாஜம் கெஸ்ட் ஹவுஸில் கூடிய கூட்டத்தில் இதற்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

முஸ்லிம்கள் அதிகமாக திரளும் வழிப்பாட்டுத் தலங்களைத்தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்களை சேகரிப்பதற்கான பொறுப்பு கல்சங்கரா மற்றும் லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் ஜோஷிக்கு நிதியை திரட்டுவதற்கான பொறுப்பு. ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி கலவை வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா, மலேகான் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.


Source: Thoothuonline

Friday, March 18, 2011

நீதிபதிகள் அணிவது கறுப்பு அங்கியா? காவி உடையா? ... தமிழேந்தி

*

2003 நவம்பர் : மராட்டிய மாநிலம் பர்பானி முகமதிய மசூதியில் ஆற்றல் வாய்ந்த ஒரு குண்டு வெடித்துப் பலர் படுகாயம்.

* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் ஜல்னா குவாதிர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பின் போது பலருக்குக் காயம்.

* 2004 ஆகஸ்டு : மராட்டிய மாநிலம் நந்தேடு என்ற இடத்தில் இரண்டு பஜ்ரங்தளத் தொண்டர்கள் ஒரு குழாய் வெடிகுண்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தவறுதலாய் அந்தக் குண்டு வெடித்ததில் அவ் இருவரும் உயிரிழப்பு, விசாரணையில் அந்தக் குண்டு உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட வீடு ஓர் ஆர்.எஸ்.எஸ். தொண் டருடைய வீடு எனக் கண்டுபிடிப்பு.

* 2006 சனவரி : அதே மராட்டிய மாநிலம் தானே நகரின் கட்கரி அரங்கில் நேர்ந்த குண்டு வெடிப்பு. அதில் ஈடுபட்ட அனைவரும் ஜன்ஜக்ரான் சமிதி என்கிற இந்துத் தீவிரவாத அமைப்பினர் என்கிற உண்மை வெளிப்பாடு.

* 2006 செப்டம்பர் : மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமியர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியான பிக்குசவுக் என்ற இடத்தில் ஆற்றல் வாய்ந்த நான்கு குண்டுகள் தொடர்ந்து வெடித்ததில் ஐவர் உயிரிழப்பு. பலர் படுகாயம்.

* 2007 பிப்ரவரி : புதுதில்லிக்கும் லாகூருக்கும் இடையே அரியானா மாநிலம் பானிப்பட்டு அருகே ஓடும் சம்ஜவ்தா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடித்துப் பலர் சாவு.

* 2007 மே : ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் குண்டு வெடிப்பு.

* 2007 நவம்பர் : இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் இரம்சான் நோன்பின் போது குண்டு வெடிப்பு.

* 2008 செப்டம்பர் : மராட்டிய மாநிலம் அதே மலேகான் நகரில் மீண்டும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஏராளமானோர் உயிரிழப்பு. பலருக் குப் படுகாயம். பலகோடி ரூபாய் பொருள் இழப்பு.

நாட்டின் பல பகுதிகளில் நடந்த இத்தகைய தொடர் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்துத்துவ வெறிக்கு ஆட்பட்ட எல்லோரும் பச்சையாய்ப் புளுகினார்கள். பாகிஸ்தானின் தூண்டுதல்தான் காரணம் என்ற அவர்களின் கூற்றை நாளேடுகளும் ஊடகங்களும் ஊதிப்பெருக்கின. ‘சிமி’ அமைப்பைச் சேர்ந்த பல அப்பாவி இசுலாமிய இளைஞர்கள் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; வன்கொடு மை செய்யப்பட்டார்கள்.

அஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இசுலாமிய அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மைய மாநில அரசுகளின் இத்தகைய கண்மூடித்தனமான செயல்களுக்குத் தம் கடுங்கண்டனத்தைத் தெரிவித்தனர். “அரசும் காவல்துறையும் ‘இசுலாமியக் குழுக்கள் மட்டுமே இவற்றைச் செய்திருக்க வேண்டும்’ என்ற முடிவுக்கு வருவது முட்டாள்தனமும் மோசடித்தனமான கற்பனையும் ஆகும். இசுலாமியர்கள் மட்டுமே அடர்த்தியாக வாழக்கூடிய இடத்தில் இரமலான் நோன்பு பிறக்கும் காலமும், தொழுகை நடைபெறும் நேரமும் பார்த்து ஏன் இவர்கள் இந்தக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த வேண்டும்?” என்கிற அவர்களின் பொருள் பொதிந்த வினாவை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

ஆனால் உண்மையைப் பல காலம் பூட்டி வைக்க முடியுமா? பொய்யும் புனைசுருட்டும் வெளிப்படாமலா போகும்? 2008 செப்டம்பர் 29 அன்று மலேகான் நகரில் இரண்டாவது முறையாய் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப்பின், அக்டோபர் 23 அன்றே பிரக்கியாசிங் தாகூர் என்கிற பெண் துறவியையும், அவருடைய இரண்டு உதவியாளர்களையும் காவல்துறை கைது செய்கிறது. அதற்குப் பிறகேனும் அரசும் காவல்துறையும் புலனாய்வுத் துறையை முழு வீச்சில் முடுக்கி விட்டு உண்மைகளை விரைவில் வெளிக்கொணர்ந்து இருக்கலாம்.

போலிப் பெண் துறவியான பிரக்கியா தாகூர் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. யிலும் (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) விசுவ இந்து பரிசத்தின் பெண்கள் பிரிவான துர்கா வாகினிப் படையிலும் தீவிர உறுப்பினராக இருந்தவர். இந்தக் கைது நடவடிக்கைகள் நிகழ்ந்த போதெல்லாம் இந்தியா முழுவதிலும் உள்ள இந்துமதவெறி அமைப்புகள் இது இந்து மதத்தை அழிக்கச் செய்யும் சதி என்று கூச்சல் போட்டு மதக்கலவரங்களைத் தூண்டிவிட்டன.

ஆனால் பெருச்சாளி கட்டுச் சோற்றிலிருந்து வெளிப்பட்ட கதையாக, இந்த மதவெறிக் கூட்டத்தின் சதிகாரக் கூட்டு இப்போது வெளிப்பட்டுவிட்டது.

2007ஆம் ஆண்டு மே மாதம் ஐதராபாத்தில் நடந்த மெக்கா மசூதி குண்டு வெடிப்புத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அசிமானந்தர் என்பவர் தானாக முன்வந்து அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் எல்லா உண்மைகளையும் கக்கிவிட்டார்.

நவகுமார் சர்க்கார் என்பது இவருடைய இயற்பெயர். இயற்பியலில் முதுகலைப்பட்டம் முடித்தவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கக் கொள்கைப் பரப்புநராக அந்தமான் நிக்கோபர் தீவுகள் போன்ற பல இடங்களுக்கு அனுப்பப்பட்டவர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகமிக நெருக்கமானவர். பல நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்து ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டவர்.
மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மட்டு மின்றி இராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மலேகான் குண்டு வெடிப்பு, புதுதில்லி - லாகூர் சம்ஜவ்தா தொடர் வண்டிக் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அத்தனைக்கும் தானும் தான் சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் காரணம் என்று மனந்திறந்து அவர் சொல்லிவிட்டார்.

இவ்வாறு இவரை மனந்திறக்க வைத்த நிகழ்ச்சி எது தெரியுமா? கீழ்க்காணும் இவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படித்தால் உண்மை புரியும். “மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி நான் ஐதராபாத்துச் சிறையில் இருந்தேன். என்னுடன் சிறையில் இருந்தோரில் கலீம் என்னும் 21 வயது இளைஞனும் ஒருவன். அவனும் அதே மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைப் பட்டிருந்தான். நான்காண்டுகளுக்குப் பிறகும் அவனுக்குப் பிணை கிடைக்கவில்லை. அவன் என்மீது மிகவும் அன்புகாட்டினான். எனக்கு உணவு தண்ணீர் எடுத்துவர உதவினான். இஃது என் மனச்சான்றை உறுத்தியது. நான் செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடவே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் தர முடிவு செய்தேன். இதனால் எனக்குச் சாவுத் தண்டனை கிடைக்கலாம் என்பதையும் நான் அறிவேன்”.

கல்லும் கரையும்படி, இப்படியான ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு மதவெறிக் கொலைஞன் வழங்கும் இதேநேரத்தில், 1999ஆம் ஆண்டு ஒரிசா மாநிலத்தில் கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலியப் பாதிரியாரும் அவரின் இரண்டு மகன்களும் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக, தில்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது வெந்த புண்ணில் வேல் கொண்டு பாய்ச்சுவதுபோல் உள்ளது.

1999 சனவரி 22ஆம் தேதி நள்ளிரவு ஒரிசாவில் உள்ள மனோகர்பூர்ச் சிற்றூரில் கிருத்துவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்சும் அவருடைய இருமகன்கள் பிலிப் (9), திமோதி (6) ஆகிய மூவரும் நடுங்கும் குளிரில் ஒரு வல்லுந்தில் (ஜீப்) உறங்கிக் கொண்டிருந்தனர். அம்மூவரையும் அங்கே திரண்ட ஓர் இந்துப் பாசிச மதவெறிக் கும்பல் உயிரோடு கொளுத்திச் சாம்பலாக்கியது. இப்படுகொலையைத் தாராசிங் என்ற கொடியவன் தன் கூட்டாளிகளுடன் முன்நின்று நடத்தினான்.

ஈவிரக்கமற்ற இந்த ஈனச் செயலை இந்துப் பயங்கரவாத அமைப்பான பஜ்ரங்தளம்தான் நடத்தி இருக்க வேண்டுமென நாடு முழுமையிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அப்போதைய நடுவண் உள்துறை அமைச்சரான எல்.கே. அத்வானி “பஜ்ரங்தள்
அமைப்பினரைப் பற்றி நான் நீண்டகாலமாக நன்றாக அறிந்து வைத்திருப்பவன். அவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க வேமாட்டார்கள்”
என உறுதிபடக் கூறினார்.

பா.ஜ.க. கூட்டணி அரசின் நடுவண் அமைச்சர்களான முரளி மனோகர் ஜோஷி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், நவீன்பட் நாயக் ஆகிய மூவரும் கொலை நடந்த இடத்தை 27.1.1999 அன்று பார்வையிட்டபின் இதில் இந்து அமைப்புகளின் பங்கு எதுவும் இல்லை என்று கை விரித்தனர். இப்படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி டி.பி. வாத்வா குழுவும் கண்துடைப்பான ஓர் அறிக்கையை அரசுக்கு அளித்துவிட்டுத் தன் கடமையை முடித்துக் கொண்டது.

இந்தியா முழுவதும் இருந்த மதச்சார்பற்ற அமைப்புகளும், மனித உரிமைப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தாராசிங் உள்ளிட்ட கொடியவர்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். வழக்கை நடத்திய குர்தா குற்றவியல் நீதிமன்றம் தாராசிங்கிற்குத் தூக்குத் தண்டனையும், மற்ற பன்னிருவர்க்கு வாழ்நாள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் சென்றது. அங்கு தாராசிங்கின் தூக்கு, வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் வாழ்நாள் தண்டனை பெற்ற 12 பேரில் மகேந்திரா ஹெம் ப்ராம் என்பவனின் தண்டனை மட்டும் உறுதி செய்யப்பட்டு மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நடுவண் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இவ் வழக்கை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. இதன்மீது கடந்த 21.1.2011 அன்று தீர்ப்புரைத்த பி. சதாசிவம், டாக்டர் பி.எஸ். சௌகான் ஆகிய இருவர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது.

இவ்விரு நீதிபதிகளும் “ஸ்டெயின்சும் அவருடைய இரு பிஞ்சு மகன்களும் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தாலும், மதப் பரப்புரை என்கிற பெயரில் ஏழைப் பழங்குடி மக்களைக் கிருத்துவத்திற்கு மதமாற்றம் செய்து கொண்டிருந்த ஸ்டெயின்சுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் எதிரிகளின் நோக்கமாக இருந்தது” எனப் பச்சையானதோர் இந்துப் பாசிச வெறித் தீர்ப்பை வழங்கினர்.

“அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே சாவுத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அஃதும் அந்நிகழ்வின் போதிருந்த உண்மை நிலை, சூழல் ஆகியன பொறுத்தே அது அமைய வேண்டும்” என்று கூறித் தாராசிங் தண்டனைக் குறைப்பை அவர்கள் ஞாயப்படுத்தினர்.
‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்னும் கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற நீதிபதிகளின் கருத்தானது, ‘கிருத்துவ மிஷனரிகள் மருத்துவமனைகள் கட்டியும், கல்விச்சாலைகள் அமைத்தும் கபடமான முறையில் பழங்குடி மக்களை மதமாற்றம் செய்கிறார்கள்’ என்கிற காவிக் கும்பலின் அப்பட்டமான மொழி பெயர்ப்பாகவே உள்ளது.

ஒரிசாவில் ஸ்டென்ஸ் பாதிரியாரும் அவருடைய இரு மகன்களும் கொல்லப்பட்ட அதே காலக்கட்டத்தில்தான் குசராத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிருத்துவத் தேவாலயங்கள் மீதும் பாதிரிகள் மற்றும் கன்னிமார்கள் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடந்து வந்தன. அப்போதைய பிரதமர் வாஜ்பேயி ‘மதமாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் தேசிய விவாதம் நடத்த வேண்டும்’ என்று கூறி இந்துமத வெறி அமைப்புகளை உசுப்பேற்றினார். “மதமாற்றம் மூலம் ‘பாரத தேசத்தில்’ இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. முசுலீம்களின், கிருத்து வர்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாகப் பெருத்து விட்டது” என்கிற கோயாபல்சு புளுகைக் காவிக் குண்டர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் உண்மைநிலை என்ன?

ஸ்டென்ஸ் கொலை வழக்கில் கண் துடைப்புக்காக அமைக்கப்பட்ட நீதிபதி வாத்வா குழுவும் ‘படுகொலை நடந்த கியோஞ்சர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றும் கிருத்துவர்களின் எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை’ என்பதை மறைக்காமல் ஒப்புக் கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையும் இந்நாட்டில் வாழும் இசுலாமிய மக்களின் அவலம் மிக்க வாழ்நிலையை ஓரளவுக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஆனால் இந்துத்துவ சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட இந்திய நீதித்துறை எந்த ஒன்றையும் காதில் போட்டுக் கொள்வதில்லை.

குசராத்தில் கோத்ரா தொடர்வண்டிப் பெட்டிகள் எரிக்கப்பட்டதற்கு எதிர்வினையாகப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்களைப் படுகொலை செய்த நரேந்திரமோடியும், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்துள்ள இதே முத்துக்களைத்தான் தனது பாணியில் அப்போது உதிர்த்தார்.

அரிதினும் அரிதான வழக்குகளில்தான் சாவுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இந்த நீதிபதிகள் கதையளக்கிறார்கள். தொழுநோய்ப் பீடித்த ஏழைப் பழங்குடி மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய எங்கிருந்தோ வந்த ஒரு பாதிரியாரும், அவருடைய இரண்டு பிஞ்சுக் குழந்தைகளும் உயிரோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்ட கொடுமை இவர்களின் இந்துத்துவக் கண்களுக்கு அரிதினும் அரிதான வழக்காகத் தெரியவில்லை. ஆனால் உயிரற்ற ஒரு நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மட்டும் உடனே தூக்குத் தண்டனையை இந்நீதிபதிகள் தூக்கிக் கொடுத்துவிடுவார்கள்.
அறத்தைக் கொன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு நாடு முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகள் எழுந்தன. நீதிக்கே நீதிமன்றம் சவக் குழி தோண்டலாமா என்று பல பேர் நெஞ்சங் கொதித்தார்கள்.

தன்நெஞ்சே தன்னைச் சுட்டதோ என்னவோ? தீர்ப்பு வழங்கிய நாளுக்கு (21.1.2011) நான்கு நாள் கழித்து அந்த இரு நீதிபதிகளும், தாம் வழங்கியிருந்த தீர்ப்பின் வரிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர்.

‘வலுக்கட்டாயமாகவோ, ஆசை காட்டியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்ததென்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களின் நம்பிக்கையில் தலையிடுவதை ஞாயப்படுத்தவே முடியாது’ என்ற முன்னர்ச் சொன்ன கருத்தை ‘மற்றவர்களின் மத நம்பிக்கையில் எந்த வழியில் தலையிடுவதையும் ஞாயப்படுத்த முடியாது’ என்று மட்டும் மாற்றி இருக்கிறார்கள்.

இதுவுங்கூட ஒப்புக்குச் சப்பாணியான ஒட்டு வேலைதான். இப்படி மாற்றியதால் ‘தாராசிங்கின் குற்றச் செயலுக்குச் சாவுத் தண்டனை ஏன் வழங்கவில்லை?’ என்ற வினா எழுந்துவிடுமோ என்ற எண்ணத்தில், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்துவிட்ட தால் ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வாழ்நாள் சிறை தீர்ப்பை மாற்றத் தேவையில்லை” என்று கூறி இரண்டு நீதிபதிகளும் மல்லுக்கட்டி இருக்கிறார்கள்.

முன்னாள் பிரதமர் இராசிவ்காந்தி கொலை வழக்கில் நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவில் கீழமை நீதிமன்றத்தால் 26 பேருக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இறுதியில் அவர்களில் 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய தோழர்கள் கடந்த 20 ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடிகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களில் நளினிக்கு மட்டும் தூக்குத்தண்டனை, பின்னர் வாழ்நாள் சிறையாக மாற்றப்பட்டது.

12 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் சாவுத் தண்டனை தேவையில்லை என்று தாராசிங் வழக்கில் சட்டம் பேசும் நீதிபதிகள் தமிழ்நாட்டுக் கைதிகளுக்கு அதனைப் பொருத்தக்கூடாதா?
ஆக, கொல்லப்பட்டவன் ஒரு கிருத்துவனாகவோ, இசுலாமியனாகவோ இருந்தால் அவன் உயிர் கிள்ளுக்கீரை! அவனே, இந்துவாகவோ, பார்ப்பானாகவோ இருந்துவிட்டால் அந்த உயிர் மட்டும் அச்சு வெல்லமா?

இந்திராகாந்தியின் கொலைக்கு எதிர்வினையாகத் தலைநகர் தில்லியில் பல்லாயிரம் சீக்கியர் படுகொலை செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பையொட்டி எழுந்த கலவரங்களின் போதும், ‘கோத்ரா‘ இரயில் எரிப்பைத் தொடர்ந்தும் இந்நாட்டின் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக் கணக்கில் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டனர். என்ன செய்து கிழித்துவிட்டது நீதித்துறை?

1992 திசம்பர் 6இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ‘அதற்குமுன் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோயில் இருந்தது; கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் இந்த இடத்தில் மசூதி கட்டினார்’ என்கிற ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாட்டையே சுடுகாடாக்கினர் காவிக் கள்வர்கள். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லுமாறு உச்சநீதிமன்றத்தை நடுவண் அரசு அணுகியபோது ‘இஃது எமது ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டது’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்தது உச்சநீதிமன்றம்.

ஆனால் அந்த வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மூவரும் 60 ஆண்டைய வழக்கில், “மசூதி கட்டப்பட்டிருந்த மொத்த இடமும் இந்துக்களுக்கு உரியதுதான். இங்குதான் இராமன் பிறந்தான். அந்த நம்பிக்கையோடுதான் நீண்ட காலமாக இந்நாட்டு இந்துக்கள் அங்கே வழிபாடு நடத்தி வருகிறார்கள். கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது” என்று சொல்லித் தற்போது இராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப் பகுதியை இந்துக்களுக்கே தாரைவார்த்துவிட்டார்கள். இந்திய அரசின் மதச்சார்பின்மைத் தத்துவத்தையும், நீதித்துறையின் நேர்மையையும் தமது தீர்ப்பின் மூலம் நார்நாராகக் கிழித்துப் போட்டார்கள்.
உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு என்பவர் 2010 நவம்பர் 26 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பின் போது, “அலகாபாத் உயர்நீதிமன்றமே அழுகி நாறத் தொடங்கியுள்ளது. இங்குப் பணியாற்றும் நீதிபதிகள் சிலர் மீதே புகார்கள் வருகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன். அந்நீதிபதிகளின் உறவினர்கள் தவறான வழிகளில் பொருளீட்டித் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பெருக்கிக் கொண்டு, சொகுசு வாழ்க்கையில் திளைக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அலகாபாத் மற்றும் இலக்னோ நீதிமன்ற அழுக்குக் கறைகளை எந்த வழலைப் (சோப்பு) போட்டேனும் கழுவித் துடைத்தாக வேண்டும். இதற்கு அங்குள்ள தலைமை நீதிபதி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும்” என்று பரிந்துரைத்தார் (தி இந்து 9.12.2010).

நாறுவது இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்கள் மட்டுந்தானா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் மட்டுமென்ன ஒழுக்கமானவர்களா? அவர்களைக் நோக்கி வினவவே ஆளில்லையா?
பசித்தவன் வயிறு விசைத்தெழுந்தால்

பொசுங்கிப் போகும் இரும்பும் - இப்
புவியில் மிஞ்சாது துரும்பும்!

Thanks.
Source: keetru

Friday, February 18, 2011

குஜராத்தில் முஸ்லிம்களின் அடையாளத்தை அழிக்கும் மோடி அரசு!

நூற்றுக்கணக்கான இடங்களில் அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன்(AMC) என்பதை அமதாவாத் முனிசிபல் கார்ப்பரேஷன் என்று மாற்றப்பட்டுள்ளது.



வெளிப்படையாகவே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அகற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது. அஹமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் பா.ஜ.க அரசாங்கத்தால் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று அஹமதாபாத் நகரம் தோன்றப்பட்டு 600 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால் AMC இதை நினைவு கூறும் விதமாக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை. 1411 ஆம் ஆண்டு முஸ்லிம் மன்னர் அகமது ஷா என்பவர் இந்த நகரத்தை தோற்றுவித்தார் என்று ஆதாரப்பூர்வமான வரலாறு கூறுகிறது.



விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இன்னும் பல முக்கிய இடங்களில் உள்ள பெயர் பலகையில் அஹமதாபாத் என்பதை அழித்து அமதாவாத் என்று ஒரே இரவில் மாற்றப்பட்டுள்ளது. நகராட்சியின் அடையாள குறியீட்டில் கூட அஹமதாபாத் என்ற பெயர் அழிக்கப்பட்டு அமதாவாத் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படியாக நிறைய இடங்களில் இவ்வாறு மாற்றப்பட்டு வருகிறது. ஒரு ஆங்கில நாளிதழ் தவிர மற்ற அனைத்து நாளிதழ்களும் இதை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.



ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிர உறுப்பினரான இந்த நகரத்தின் மேயர் அசிட் வோரா இதற்கான எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வேண்டுமென்றே முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களை இந்நகரத்தை விட்டு ஒதுக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் 600 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த நகரத்தின் பெயரை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது பா.ஜ.க அரசு.



20 சதவிகிதம் முஸ்லிம் மக்கள் தொகையை கொண்ட அஹமதாபாத் நகரம் ஜவுளி பாரம்பரியத்தில் தலைசிறந்து விளங்க கூடிய ஒரு நகரமாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமால் வெள்ளையர்களுக்கு எதிராக தனது அறப்போராட்டத்தை துவக்கிய மஹாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இந்நகரத்தில்தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



1987 ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தை கைப்பற்றிய ஹிந்துத்துவவாதிகள், அன்றிலிருந்து இதன் பெயரை மாற்றவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். அவர்களோடு தொடர்புடைய அமைப்புகளான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஏனைய அமைப்புகள் ஒன்று சேர்ந்து நகரத்தின் பெயரை கர்னாவதி என்று மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மஹாபாரதத்தின் கதாபாத்திரமான கர்ணன் தான் இந்நகரத்தை தோற்றுவித்தார் என்று நம்புவதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் இந்த கூற்று ஒரு உறுப்படியான காரணம் இல்லை என்றும், முஸ்லிம்களை எதிர்ப்பதற்க்காகத்தான் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று நடுநிலையான இந்துக்கள் கூட கருதுவார்கள்.ஆனால் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசுக்கு அதிக ஆதரவு இருப்பதாலும், வலுவான சக்திமிக்க‌ சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இல்லாததால் இதனை எதிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.



2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் முஸ்லிம்களை கருவருத்த நரேந்திர மோடி தற்போது முஸ்லிம்களின் பாரம்பரியத்தை அழிக்கவும் அவர்களை நகரத்தை விட்டு வெளியேற்றவும் தந்திரமாக செயல்பட்டு வருகிறார் என்பது பட்டவர்த்தனமாக விளங்குகிறது, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் அஹமதாபாத் என்ற பெயரே உபயோகப்படுத்தப்பட்டாலும், பா.ஜ,க அரசு அஹமதாபாத்தில் வசிக்கும் மக்களின் எண்ணங்களில் அமதாவாத் என்ற பெயரையே பிரபலமாக்கி வருகிறது.



இதனை விமர்சித்த மக்களின் குடியியல் விடுதலை சங்கத்தின் (PUCL) தலைவர் ஜே.எஸ்.பந்துக்வாலா கூறுகையில், "இத்தகைய செயல் பா.ஜ.க மற்று ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் விரோத போக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். முஸ்லிம் பெயரையோ அல்லது முஸ்லிம் பெயர்களில் இருக்கும் பாரம்பரியத்தையோ ஒருபோதும் இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆனால் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடிய இரண்டாவது மிகப்பெரிய சமூகம் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து ஒரு போதும் வெளியேறமாட்டோம்! நாம் இங்கே வசிப்பதற்க்காக‌த்தான் இருக்கின்றோம். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதற்கு காவிகளிடமிருந்து நன்மதிப்பு தேவை என்ற எந்த அவசியமும் இல்லை" என்று மேலும் அவர் கூறினார்.



ஜாபிர் மன்சூரி என்ற சமூக ஆர்வலர் கூறும் போது, "இத்தகைய வகுப்புவாத செயல்கள் நாட்டின் முன்னேற்றத்திற்க்கு பெறும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.முஸ்லிம் பெயர்களை மாற்றுவதினால், முஸ்லிம்களை நகரத்திலிருந்து வெளியேற்றிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள். இத்தகைய செயல்களினால் முஸ்லிம்கள் வெளியேறப்போவதுமில்லை, அவர்களுக்கும் இந்நகரத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்துவிடப் போவதுமில்லை என்று கூறினார்.ஆயிரக்கணக்கான அடையாள சின்னங்கள், மஸ்ஜிதுகள் மற்றும் இந்நகரத்தை தோற்றுவித்த அகமது ஷா அவர்களால் கட்டப்பட்ட கோட்டைகள் உள்ளது. இத்தகைய வரலாற்று சின்னங்களை இவர்களால் ஒருபோதும் அழித்துவிட முடியாது" என்று கூறினார்.




Source: paalaivana thoothu


http://www.twocircles.net/2011feb16/bjp%E2%80%99s_bid_rename_ahmedabad_%E2%80%98amdavad%E2%80%99.html



Monday, January 31, 2011

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியின் மனதை மாற்றிய முஸ்லிம் பேசுகிறார்!!


ஹைதராபாத்,

ஜன.31:சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.
செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்து தளர்ந்துபோன அப்துல்கலீம் சமீபத்தில் விடுதலையான பொழுது தனது அனுபவத்தை நினைவுக் கூறுகிறார்:
"சஞ்சல்குடா சிறையில் நான் 'அங்கிள்' என்றழைத்த அஸிமானந்தாவின் மனமாற்றம், நான் மற்றும் அப்பாவிகளான இதர முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக நிரூபிக்க உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை."
ஷேக் அப்துல் கலீம் என்ற 19 வயது இளைஞர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்படுகிறார். 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை சேகரித்ததாகவும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டை பரிமாறினார் எனவும் போலீஸ் அப்துல் கலீம் மீது குற்றஞ் சுமத்தியது.தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அப்துல் கலீமுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. நிரபராதி என நீதிமன்றம் கூறிய பொழுதும் உள்ளத்தில் ஏற்பட்ட ஆறாத காயக்களுடன் அப்துல் கலீம் சிறையிலிருந்து விடுதலையானார்.
கடுமையான நிராசை, உதவுவதற்கு எவருமில்லாத சூழல் என்ற அப்துல் கலீமின் நிலைமை அஸிமானந்தாவின் உள்ளத்தை உருக வைத்தது.செர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரன் காஜாவுக்கு மொபைல் ஃபோனை கொண்டு கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டி மீண்டும் 2010 ஆம் ஆண்டு அப்துல் கலீம் சிறையிலடைக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டி காஜாவை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால், சிறையில் போலீசாரே மொபைலைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு தன் மீது பொய்வழக்குப் போட்டதாக கூறுகிறார் அப்துல் கலீம்.என்னவாயினும், சஞ்சல்குடா சிறையில் என்னை அடைத்தது ஒருவகையில் எனக்கு அருள்தான் என அப்துல்கலீம் கூறுகிறார்.ஆறுமாத காலமாக நீண்ட இச்சிறை வாழ்க்கையின் போதுதான் அஸிமானந்தாவை அப்துல் கலீம் சந்தித்தார். சிறையில் வைத்து எப்பொழுதாவது முகமன் கூறுவதன் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.அஸிமானந்தாவுக்கு உணவும், குடிநீரும் கொண்டு கொடுத்துவிட்டு சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுக் கொண்டு தனது கதையை கூறியுள்ளார் அப்துல் கலீம்.
அஸிமானந்தாவை அப்துல் கலீம் 'அங்கிள்' என அழைத்துள்ளார்.மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அப்துல் கலீமும் கைதுச் செய்யப்பட்டார் என அஸிமானந்தா அறிந்தபொழுது, அப்துல் கலீமின் வீட்டுச்சூழல் மற்றும் அவரது வாழ்க்கையைக் குறித்து விசாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அஸிமானந்தா.முஸாராம்பாகிலிருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தானும் இதர முஸ்லிம் இளைஞர்களும் கைதுச் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து கூறத் துவங்கினார் அப்துல் கலீம். அங்கிருந்து ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றது, அங்கு வைத்து நான்கு தினங்களாக கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியது, இரண்டுமுறை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியது பின்னர் தான் உயிருள்ள சடலமாக மாறிய சூழல் வரை அனைத்தையும் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார் அப்துல் கலீம்.
இதனைக் கேட்டு தலையை அசைத்துள்ளார் அஸிமானந்தா. பின்னர் கைதுச் செய்யப்பட்ட இதர இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப சூழல்களை குறித்து கேட்டறிந்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தையும் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் போவதாக ஒருமுறை அஸிமானந்தா கூறியுள்ளார்.குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தனது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள்தான் என அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை ஒரு சிறை அதிகாரி மூலமாக அறிந்துள்ளார் அப்துல்கலீம்.
"என்னைப் போன்ற நிரபராதிகளான இளைஞர்கள் பொய் வழக்குகளிலிருந்து விடுபட வழிவகுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் இதற்கு காரணமல்ல, அல்லாஹ்தான் காரணம். என்னை நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கலாம். ஆனால், தீவிரவாதி என்ற முத்திரை எப்பொழுதும் எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்"- தழுதழுத்த குரலில் கூறுகிறார் அப்துல்கலீம்.
செய்தி:தேஜஸ் நன்றி: பாலைவன துது

Sunday, January 30, 2011

நீதியின் பாதையை அழிக்கும் நீதிமன்றங்கள்!!

சொத்து தகராறாகத் தொடங்கி, பிறகு முழுமையான அரசியல் மற்றும் மத ரீதியான மோதலாக உருவெடுத்த, 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியின் மீதான கிரிமினல் தாக்குதலையும், சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதும், அவர்களின் உடைமைகளுக்கு எதிரான குறிவைத்த தாக்குதலையும் நியாயப்படுத்தி இருக்கிறது, பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு.

இவ்வழக்கில் செப்டம்பர் 30, 2010 அன்று வெளியிடப்பட்ட தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறது. இத்தீர்ப்பு, ஏற்றுக் கொள்ளப்படாத மத நம்பிக்கைகள் மற்றும் மறுக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையில் எல்லையற்று அமைந்திருக்கிறது.

‘சஹ்மத்' (SAHMAT), ‘சப்ரங் அறக்கட்டளை' (Sabrang Trust), ‘சோஷியல் சயின்டிஸ்ட்' (Social Scientist) ஆகிய அமைப்புகள், இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விளைவுகள் குறித்து முழுமையாக ஆராய, கல்வியாளர்கள், நீதிபதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து, புது தில்லியில் மூன்று நாள் (6, 7, 8 டிசம்பர் 2010) கருத்தரங்கை நடத்தின.

டிசம்பர் 6, 1992 இன் 18 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் அயோத்தி தீர்ப்பின் அனைத்து விளைவுகள் குறித்தும் புரிந்து கொள்ள கூடினர்.

கருநாடகம், மகாராட்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி, கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் உள்ள பாபா போதாங்கிரி வழிபாட்டுத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் சுவாமி ஆதித்தியானாத் என்பவர், மக்களை பிளவுபடுத்தும் வகையில் மோசமாக பேசியதற்கு எதிரான போராட்டம் மற்றும் இதுபோன்ற பல போராட்டங்கள் இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.

கருத்தரங்கில் மூன்று நாட்களாகப் பேசிய பல பேச்சாளர்கள், அண்மையில் வெளியிடப்பட்ட அயோத்தி தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் அடிப்படைக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைத்தனர்.

நீதிபதிகள் பி.பி. சாவந்த், ஹோஸ்பட் சுரேஷ், ஷா ரசா, ராஜிந்தர் சச்சார், பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், வரலாற்று அறிஞர்கள், பேராசிரியர் இர்பான் அபீப், பேராசிரியர் சிரீன் மூஸ்வி ஆகியோர் ‘மத நம்பிக்கை மற்றும் உண்மை', "அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் ஜனநாயகம்",என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் உரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பின்வரும் கருத்துகள் விவாதிக்கப்பட்டன :

கிரிமினல் நீதித்துறையின் தொடர்ச்சியான தோல்வி,
december 23, 1949 அன்று இரவில் பாபர் மசூதி மீது ஏவப்பட்ட தாக்குதல் தொடர்பான காவல் துறையின் முதல் தகவலறிக்கை மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காதது,
1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் கிரிமினல் சூழ்ச்சியினை தூண்டிய கயவர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது,
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் முன் அயோத்தியா வழக்கு நிலுவையில் இருந்தபோது சாட்சியம் அளித்த வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் மீது பழிசுமத்தி, திட்டமிட்டு இழிவுபடுத்தியது உள்ளிட்டவை.

கருத்தரங்கின் தொடக்க நிகழ்வுகள் :
அதிகாரம், அச்சுறுத்தல், வன்முறை அடிப்படையிலான அரசியல் தலையீடின்றி ஜனநாயக அமைப்புகள் நீதி பிறழாமல் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியத்தை பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் வலியுறுத்தினார். முதிர்ச்சியான ஜனநாயகத்தில் நீதிமன்றங்களின் மீது செல்வாக்கு செலுத்தி, நீதி வழங்கப்படுவதை மாற்றும் செயல்பாடுகளின் மீதிருந்து நீதித்துறை தள்ளி நிற்க வேண்டும்.

தவறான வரலாற்று ஆய்வு, தவறான தொல்பொருள் ஆய்வு :
அயோத்தி தீர்ப்பில் நீதிபதி அகர்வாலின் 5000 வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை விமர்சிக்கும் 96 பக்க விமர்சனக் கட்டுரையை ‘ராம ஜென்ம பூமியின் தீர்ப்பும் வரலாறும்' என்ற தலைப்பில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் மூத்த வரலாற்று அறிஞரும், பண்டைய இந்திய வரலாற்றில் உலகப் புகழ் பெற்ற நிபுணருமான பேராசிரியர் இர்பான் அபீப் எழுதிய விமர்சனக் கட்டுரையை, ‘அலிகார் வரலாற்று அறிஞர்கள் கழகம்' சிறு நூலாக வெளியிட்டுள்ளது.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், ‘பாபர் மசூதி 1528 இல் பாபரின் ஆட்சியின்போது கட்டப்படவில்லை ஆனால், 1707 ஆம் ஆண்டு பிறந்த அவுரங்கசீப் ஆட்சியில் கட்டப்பட்டது'என்று நிறுவ முனைகிறார். சிறிதளவே அறியப்பட்ட ஜோசப் டிபன்தேல் என்ற பாதிரியார் மற்றும் பயணி, அயோத்திக்கு 1740 லிருந்து 1765 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வருகை புரிந்ததை வைத்துக் கொண்டு, ஜோசப் டிபன்தேலின் எழுத்துகளிலிருந்து ‘ராம்கோட்' என்கிற இடிக்கப்பட்ட கோட்டையின் மீது ஒரு மசூதி கட்டப்பட்டது என்று கூறி, நீதிபதி அகர்வால் மசூதியில் உள்ள எழுத்துகளின் ஆதாரத்தைப் புறக்கணிக்கிறார்.

மசூதியில் உள்ள எழுத்துகளை நீதிபதி அகர்வால் போலியானவை என்று கூறி, 1760 மற்றும் 1810 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மசூதியில் இந்த போலி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நீதிபதி அகர்வால், இந்த எழுத்துகள் உண்மையானவை என்று ஏறக்குறைய ஒவ்வொரு வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளரும் கருதியிருப்பதை புறந்தள்ளுகிறார்.

இந்திய தொல் பொருள் ஆய்வுக்கழகம், 1965 இல் கல்வெட்டு ஆய்வு நூல் ஒன்றை அரேபிய மற்றும் பாரசீக துணைக் கையேடாகப் பதிப்பித்தது. நீதிபதி அகர்வால் அவருடைய நீளமான தீர்ப்பில் இக்கையேட்டை கடுமையான சொற்களைப் பயன்படுத்தி புறந்தள்ளுகிறார். ‘மன்னர் பாபரின் கல்வெட்டுக் குறிப்புகள்' குறித்து இந்த அதிகாரப்பூர்வ கையேட்டின் சாட்சியம், நீதிபதி அகர்வாலால் புறக்கணிக்கப்படுகிறது. இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் பாரசீக மற்றும் அரேபிய கல்வெட்டு குறிப்புகளின் தலைவராகப் பணியாற்றியவரும், அரேபிய மற்றும் பாரசீக கல்வெட்டு ஆய்வாளர்களில் தலைசிறந்தவருமான டாக்டர் இசட்.ஏ. தேசாய் என்பவரால் இக்கையேடு தொகுக்கப்பட்டது.

இக்கல்வெட்டுக் குறிப்பு, டிசம்பர் 6, 1992 அன்று கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்து தள்ளும் வரை, மசூதியின் நுழைவு வாயிலில் காணப்பட்டது. இக்கல்வெட்டு குறிப்பு இப்பொழுது இல்லையென்றால், அதற்கு காரணம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் செயல்தான். டிபன்தேலின் எழுத்துகளில் இந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து எதுவுமில்லாதது குறித்து கூறவேண்டுமென்றால், வரலாற்றில் இத்தகைய பயணிகளின் எழுத்துகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை.

இன்னொரு எடுத்துக்காட்டினை கூறவேண்டுமென்றால், தலைசிறந்த அறிஞர் என்றும் பன்மொழிப் பாவலர் என்றும் கருதப்படும் மார்க்கோ போலோ, சீனப் பெருஞ்சுவர் பற்றி தனது எழுத்துகளில் குறிப்பிடாமல் விட்டதைச் சொல்ல வேண்டும். நீதிபதி சுதிர் அகர்வால் தனது வாதத்தில் பயன்படுத்தியிருக்கும் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தினால், சீனப்பெருஞ்சுவர், மார்க்கோ போலோவின் பயணங்களுக்குப் பிறகு கி.பி. 1300 க்கு பிறகு கட்டப்பட்டது என்று தவறாக கூற வேண்டியிருக்கும்!

நீதிபதி அகர்வால் இன்னொரு உண்மையையும் மறந்து விடுகிறார். 1965 இல் கல்வெட்டுக் குறிப்புகளின் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் அரேபிய மற்றும் பாரசீக ஏடு பதிப்பிக்கப்படுவதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர், பாபர் மசூதி கதவு மற்றும் மேடையில் அமைந்திருந்த கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ‘அவுத் மாநிலத்தின் கெஸட்டியர்' என்ற பெயரில் பென்னட் என்பவர் தொகுத்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு 1877 – 78 ஆண்டில் பதிக்கப்பட்டு, மேற்கூறிய குறிப்பு அதன் முதல் இதழில் 6 மற்றும் 7 ஆவது பக்கங்களில் காணப்படுகிறது. படம் ஒன்று மற்றும் படம் இரண்டு என்ற தலைப்பின் கீழ் பாபர் மசூதி கல்வெட்டு குறிப்புகள் மற்றும் கட்டப்பட்ட நாள் என்ற தலைப்பின் கீழ் இக்குறிப்பு காணப்படுகிறது.

பாபர் மசூதியின் இரண்டு இடங்களில் அது கட்டப்பட்ட ஆண்டு கி.பி. 1528 ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டு, பாபர் மாமன்னரின் புகழ் கூறும் மற்ற வாசகங்களோடு பொறிக்கப்பட்டுள்ளது. இது, இதற்குமுன் கூறப்பட்ட ஆண்டைவிட பழமையானது. ஆனால், இந்த செய்தி நீதிபதி அகர்வாலின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்த சுருக்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பென்னட்டின் குறிப்பு எச்.ஆர். நெவில் என்பவர் தொகுத்த ‘பைசாபாத் மாவட்ட கெஸட்டியர்' என்ற 1905 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் 179 ஆம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

“மசூதியில் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று மசூதிக்கு வெளியே உள்ளது. மற்றொன்று மசூதியின் மேடையில் அமைந்துள்ளது. இந்த கல்வெட்டுக் குறிப்புகள் 935 ஹிஜ்ரி (கி.பி.1528) என்ற தேதியை கொண்டுள்ளன.'' இந்த கல்வெட்டுக் குறிப்புகளின் நம்பகத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பாபர் மசூதியின் வெளி வாயில் மற்றும் மேடை ஆகியவற்றில் உள்ள கல்வெட்டு குறிப்புகள், பாபர் மசூதி கட்டப்பட்ட ஆண்டாக 935 ஹிஜ்ரி (கி.பி.1528) இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதை, இரண்டு அரசாங்க அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த ஆண்டு, பாபர் ஆட்சியின் கீழ் வருகிறது. இந்த அரசாங்க அறிக்கைகள், இக்கல்வெட்டு குறிப்புகளின் சந்தேகமற்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன".

பாபர் மசூதி பின்னர் கட்டப்பட்டது என்ற தவறான முடிவுக்கு வருவதற்காக நீதிபதி சுதிர் அகர்வால், கட்டுமான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பாணி போன்ற மசூதி கட்டப்பட்ட ஆண்டோடு நெருங்கிய தொடர்புடைய கருத்துகளைப் புறக்கணிக்கிறார். ஒரு நீதிபதி தனது அய்ந்தாயிரம் வார்த்தைகள் கொண்ட தீர்ப்பினை, மத நம்பிக்கையின் மிகக் குறுகிய அடிப்படையில் அமைத்திருப்பதோடு, வரலாற்று மற்றும் தொல்பொருள் சாட்சியங்களை தவறாக சித்தரித்து, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்து மதவெறி அமைப்புகள் குறி வைத்து தாக்குகின்ற பண்டைய இந்திய வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளார் என்று அலிகார் வரலாற்று அறிஞர்கள் பதிப்பித்துள்ள விமர்சனக் கட்டுரையில் தெரிய வந்துள்ளது.

பண்டைய இந்திய வரலாறு குறித்த நீதிபதி அகர்வாலின் தவறான புரிதல், பாபர் பற்றிய அவரது குறிப்பிலிருந்தும் மற்றும் அவருடைய தீர்ப்பிலிருந்தும் தெரிய வருகிறது. பாபரை ‘ஒரு முழுமையான இஸ்லாமிய நபர்' என்றும் ‘அவர் சிலைகளை வணங்குபவர்களை சகித்துக் கொள்ளவில்லை' என்றும் பாபரை நீதிபதி அகர்வால் வர்ணிக்கிறார்.

மேலும், தனது தீர்ப்பில் நீதிபதி அகர்வால் பின்வருமாறு கூறுகிறார் : “இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியத் துணைக் கண்டம் மீது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வெளியாட்களின் தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஏவப்பட்டிருந்ததோடு, இந்த வெளியாட்களால் இந்தியத் துணைக் கண்டம் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டும் வந்தது. மிக அதிகளவிலான செல்வம் இந்நாட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டது.''
மேற்கூறப்பட்டுள்ள வரி, பண்டைய இந்திய வரலாற்றின் ஒருதலைப்பட்சமான புரிதலை வெளிப்படுத்துகிறது. பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியா வெளியிலிருந்தா ஆட்சி செய்யப்பட்டது? இந்த வெளியிடத்திற்கு செல்வம் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டதா?

யார் கொள்ளையடித்திருந்தாலும், அது சுல்தான்களாக இருந்தாலும், அரசர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவுக்குள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் செல்வமும் இந்தியாவிற்குள்தான் தங்கியது.

டாக்டர் எஸ். அலி நதீம் ரசாவீ, பல நூற்றாண்டுக் கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் மசூதி கட்டுமானப் பாணியின் பரிணாம வளர்ச்சியை மிகத் தெளிவாக விளக்கி, பாபர் ஆட்சிக் காலத்திற்கும் அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திற்கும் இடையே கட்டுமான பாணியில் இருந்த வேறுபாடுகளை விளக்கினார். கட்டுமான பாணி மற்றும் முறையை வைத்தே ஒரு கட்டடம் மொகலாயர் ஆட்சிக்கு முன் கட்டப்பட்டதா அல்லது மொகலாயரின் தொடக்க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா அல்லது பிற்கால மொகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதா என்பதை எளிதாக அறிய முடியும்.

பாபரி மசூதி, ஷர்கி கட்டுமானப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது ஜான்பூரில் காணப்படுகிறது. இந்த கட்டுமானப் பாணியில் வெளிவாயிலுக்கு ஒரு தனித்துவமான வடிவமைப்பு தரப்பட்டு, மசூதியின் குவிந்த கூரை பெரிதாகவும் கனமாகவும் காணப்படும். இந்த கட்டுமான பாணி பின்னர் வழக்கொழிந்து போனது. அவுரங்கசீப் காலத்திற்கு முன்னதாகவே கனமில்லாத குவிந்த கூரைகளும் தனியாக நிற்கும் மெல்லிய உயரமான கோபுரங்களும் மசூதியின் தனித்துவக் கூறுகளாயின.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் முக்கியமான தோல்விகளை டாக்டர் சிரீன் முஸ்வி எடுத்துரைத்தார். குறிப்பாக, வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் அறிஞர்கள் ஆகியோரது சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக ஆக்கப்பட்டதை டாக்டர் முஸ்வி விளக்குகிறார். வரலாற்று அறிவியல் மற்றும் தொல்பொருள் ஆய்வுக்கூற்றுகள் இரண்டு வாக்கியங்களிலாவது விளக்கப்பட வேண்டியவை. ஆனால், இத்தகைய சாட்சியங்களை ‘உண்டு' அல்லது ‘இல்லை' என்று ஒரே சொல் மூலம்தான் வரலாற்று மற்றும் தொல்பொருள் ஆய்வு சாட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என்று வரையறுத்ததன் மூலம், தேர்ந்த நிபுணர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் முறை கேலிக்குரியதாக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிமினல் சட்டத்தில், ஒவ்வொரு சாட்சியாளரும் விளக்கங்களைக் கூற, அடிப்படை சட்ட உரிமை உள்ளது. இந்த அடிப்படை சட்ட உரிமையை மறுத்ததன் மூலம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நீதியின் பாதையையே அழித்திருக்கிறது. தொல்பொருள் ஆய்வாளர் டி. மண்டல் எழுதிய ‘இடிப்புக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு'; ‘தோண்டுதலுக்குப் பிறகு தொல்பொருள் ஆய்வு' ஆகிய இரு நூல்களும் அயோத்தி தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற பெஞ்சினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்திருக்கின்றன. இது, சுதந்திரமான வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆகியோரது ஆய்வு சிந்தனைகளையும், கருத்து சுதந்திரத்தையும் திட்டமிட்டு உயர் நீதிமன்றம் முடக்கும் செயலாகும்.

இது, வாக்குகளுக்காக பெரும் உணர்ச்சிகரமாக தூண்டப்பட்ட ஓர் அரசியல் மதவெறி மோதலுக்காக செய்யப்படுவதும்; ஒரு பழமையான காலனியாதிக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைப் பயன்படுத்தி செய்யப்படுவதும்; அயோத்தி வழக்கில் நீதித்துறை சீரழிவு மற்றும் நீதியின் அழிவுக்குப் பின்னால் உள்ள கொடூரமான அரசியலையும் சுட்டிக்காட்டுகிறது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையேற்று நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அமைக்கப்பட்ட – பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு காணப்பட்ட விலை மதிப்பற்ற மசூதியின் பாகங்களை அழித்த – தொல்பொருள் ஆய்வுக் குழுவை, நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் வெகுவாகப் பாராட்டுகிறார். மதவெறி கட்சியான பா.ஜ.க. வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆணையிட்ட தொல்பொருள் அகழாய்வுக்குப் பின்னால் உள்ள அரசியலை, நீதிபதிகள் ஆய்வு செய்ய மறந்துள்ளனர். தனது ரத்த வெறி மிகுந்த ரத யாத்திரையை நடத்தி, பிறகு இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஆன எல்.கே. அத்வானியும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியும் – மதவெறி பா.ஜ.க. நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்தனர்.

இவ்வாறு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் நடந்த உள்நோக்கம் கொண்ட அகழாய்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை கேள்வி கேட்காத நீதிபதிகள், தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் தவறான – ஜோடிக்கப்பட்ட அறிக்கையின் மீது முழு நம்பிக்கையை வைக்கின்றனர். இந்த ஜோடிக்கப்பட்ட அறிக்கை, இன்னும் அறிஞர்களின் ஆய்வுக்காக முழுமையாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் ஆட்சியும், ஜோடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வறிக்கையை உறுதிப்படுத்தியதில் சமபங்கு வகித்திருக்கிறது என்று பேராசிரியர் இர்பான் அபீப் குற்றம் சாட்டினார்.

1949 – 1992 சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களுக்கு, இந்தியத் துறைகளின் மோசமான பதில் நடவடிக்கைகள் :
டிசம்பர் 23 1949 அன்றிரவு, பாபர் மசூதிக்குள் கிரிமினல் தாக்குதலாக நுழைந்து ராமன் சிலைகளை வைத்து, சட்டத்திற்குப் புறம்பாக செய்யப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிராக அயோத்தி வழக்கின் வரலாறு ஒன்றும் செய்யாமல் தோல்வியடைந்திருப்பதை, லிபரான் ஆணையத்தின் பல்லாண்டு கால வழக்குரைஞரான அனுபம் குப்தா உணர்ச்சியுடன் எடுத்துரைத்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, காவல் துறை அதிகாரி கே.கே. நய்யார் என்பவருக்கு கடிதங்கள் மற்றும் ஆணைகள் பிறப்பித்தும் கூட, மேற்கூறிய டிசம்பர் 23, 1949 அன்றிரவு நடைபெற்ற குற்றச் செயல் மாற்றப்பட முடியவில்லை. இந்த காவல் துறை அதிகாரி, இப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி அகர்வால் தன்னுடைய தீர்ப்பில் ராமனின் பிறப்பு குறித்த புராணக் கதைகளுக்கு அய்ந்தாயிரம் பக்கங்கள் ஒதுக்கியுள்ள அதே நேரத்தில், 1949 மற்றும் 1992 இல் நடந்த பாபர் மசூதி மீதான கிரிமினல் தாக்குதல்களுக்கு எந்தவொரு கவனத்தையோ, இடத்தையோ ஒதுக்கவில்லை. மசூதிக்குள் கிரிமினல் முறையில் நுழைந்ததற்கான முதல் தகவல் அறிக்கை, மிகுந்த தயக்கத்துடன் வேண்டா வெறுப்பாக காவல் துறை கண்காணிப்பாளரால் பதிவு செய்யப்பட்டதும், பின்னர் மசூதி இடிப்புக்கான அரசியல் வெறித்தனத்தில் பங்கேற்ற மாவட்ட நீதிபதி பி.பி. பாண்டேயின் நடத்தையும் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை அனுபம் குப்தா சுட்டிக் காட்டினார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங்கால் தரப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டு, டிசம்பர் 6, 1992 அன்று மிகுந்த விளம்பரத்துடன் பலரும் பார்க்க செய்யப்பட்ட கரசேவையில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தலைமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வெறித்தனமானது, அங்கிருந்த சந்தன் மித்ரா மற்றும் சுவபன்தாஸ் குப்தா போன்ற பத்திரிகையாளர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், மசூதி இடிக்கப்பட்ட போதும் 1949 இல் மசூதிக்குள் வைக்கப்பட்ட சிலைகள் இடிக்கப்படவில்லை. அவை கவனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு, மசூதி இடிப்பு முடிவடைந்த பிறகு மீண்டும் அந்த சிலைகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன.

அப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவ், சம்பவ இடத்திற்கு மத்திய துணை ராணுவப்படைகளை அனுப்பியிருந்தும் அவை ஒன்றும் செய்யாமல் – வெறிக்கூட்டம், கிரிமினல் தாக்குதல்களை மசூதி மீது ஏவிவிட்டதை வேடிக்கை பார்த்ததும், இதில் நரசிம்மராவ் பங்கு குறித்தும் பேச்சாளர்கள் தங்கள் கருத்தினை தெரிவித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் திட்டமிட்டு நீர்த்துப் போக செய்யப்பட்டதை பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா விரிவாக விளக்கினார். மசூதி இடிப்பு நடைபெற்ற நேரத்தில் 49 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன; இவற்றில் 47 பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பானதாகும். மீதம் இருக்கும் 2 முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று, மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கிரிமினல் சூழ்ச்சி மற்றும் வெறிக் கூட்டத் தாக்குதல் பற்றியதாகும். இதில் எல்.கே. அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் வெறிக்கூட்டத் தாக்குதலின் முதன்மையான சூழ்ச்சியாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டாவது முதல் தகவல் அறிக்கை எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களால் மசூதி இடிப்புக்கு முன்னும், மசூதி இடிப்பின்போதும், மசூதி இடிப்புக்குப் பின்னும் பேசப்பட்ட வெறித்தனமான வெறுப்பைக் கக்கும் பேச்சுகள் தொடர்பானவையாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அய்ந்தாண்டு ஆட்சியில் மத்திய அரசு திட்டமிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உச்சத் தலைவர்கள் மசூதி இடிப்பின் தலைமை சூழ்ச்சியாளர்களாகப் பதிவு செய்யப்பட்டதை நீக்கினர். இதை செய்து, ஏதோ தலைமை இல்லாத வெறிக்கூட்டம் மசூதி இடிப்பை செய்ததாக பொய்யாக வாதிட்டனர். அந்த இரண்டு வழக்குகளும் இப்போது தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவ்விரு வழக்குகளும் மத்திய அரசின் மேற்கூறப்பட்டுள்ள பாரபட்ச தலையீட்டால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் பா.ஜ.க. வின் உச்ச தலைமையும் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் கொடுத்த உறுதிமொழிகளை பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு வெட்கமின்றி மீறியும் கூட, உச்ச நீதிமன்றம் பா.ஜ.க.வினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்டவர்த்தனின் ‘ராம்கே நாம்' என்ற திரைப்படம், மக்கள் மத்தியிலிருந்தும் மற்ற கிரிமினல் சட்டத் துறை நடவடிக்கைகளிலிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்ட செய்திகளை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்தது. நீதிமன்றத்தால் சர்ச்சைக்குரிய இடத்திற்கு மத குருவாக நியமனம் செய்யப்பட்ட பாபா லால்தாஸ், 1993 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் திடீரென்று கொலை செய்யப்பட்டது, இந்த செய்திகளில் ஒன்றாகும். இதேபோன்ற இன்னொரு மர்மமான கொலை, பைசாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விலை மதிப்பற்ற ஆவணங்களை லிபரான் ஆணையத்திற்கு கொண்டு சென்ற ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி கொலை செய்யப்பட்டதாகும். இந்தக் கொலைக் குற்றங்கள் எவையும் விசாரிக்கப்படவில்லை.

பைசாபாத் மற்றும் அயோத்தியிலிருந்து குரல்கள் :ஜனநாயக எதிர்ப்பும் பல்மத வழிபாடும் அயோத்தியில் ஒடுக்கப்பட்டுள்ளது பற்றி ஆச்சாரிய ஜுகல் கிஷோர் சாஸ்திரியும் ‘மெக்செசே' விருதை வென்ற சந்திப் பாண்டேயும் விளக்கமாகப் பேசினர். டிசம்பர் 6, 1992 அன்று மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்ட 17 முஸ்லிம்கள் மற்றும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட 300 முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் குறித்து எந்த விசாரணையயும் நடத்தப்படவில்லை.

நீதித்துறையின் அரசியல்
உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி. சாவந்த், பம்பாய் உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெட் சுரேஷ், அலகாபாத் மற்றும் லக்னோ உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி எஸ்.எச்.ஏ. ரஸா ஆகியோர் உயர் நீதிபதிகள் வட்டாரத்தில் பாபர் மசூதி அயோத்தி பிரச்சனை குறித்து நிலவிவரும் அரசியல் பற்றியும், பெரும்பான்மை இந்துத்துவ அரசியல் நீதிபதிகள் மற்றும் அரசின் மீது செலுத்தும் செல்வாக்கு குறித்தும் விளக்கமாகப் பேசினர்.

1980–களின் இறுதியில், மகாராட்டிர பம்பாய் நீதிமன்றங்களிலிருந்து வந்த தேர்தல் தொடர்பான வழக்குகள் குறித்த விளைவுகளை ஆய்ந்த குழுவொன்று பின்வரும் செய்தியை தெரிவித்தது: இந்த வழக்குகளில் ஒன்றில் உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்துத்துவா அரசியல் மத இயக்கத்தை நியாயப்படுத்தி, அதை இந்து மதத்தோடு குழப்பி, அதன் மூலம் பெரும்பான்மை மதவெறி அரசியலுக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீதிமன்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இப்பெரும்பான்மை மதவெறி அரசியலின் வெளிப்பாடாகத்தான் பா.ஜ.க. தோன்றி, இந்திய நாடாளுமன்றத்தில் 90 இடங்களை வென்றது.

மாநிலத் தேர்தலின்போது சிவசேனா தலைவர்கள் சுபாஷ் தேசாய், ரமேஷ் பிரபு மற்றும் மனோகர் ஜோஷி ஆகியோர் பேசிய பேச்சுகள் – அரசியல் ரீதியான வெறித்தனம் மிகுந்த இந்துத்துவாவை வெளிப்படுத்தியதோடு, மதசிறுபான்மையினருக்கு எதிராக இழிவான வெறுப்பினையும் வெளிப்படுத்தின. இந்தப் பேச்சுகள் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் தன்மை கொண்டவையாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் இரண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தாலும், கெடுவõய்ப்பாக அப்போது நாடாளுமன்ற அவைத் தலைவராக ஆகிவிட்டிருந்த மனோகர் ஜோஷியின் தேர்தலை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

அதற்குப் பிறகு இருவேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா இயக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்பினை, அரசியல் சாசன அமர்வு (பெஞ்ச்) முன் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், இந்த வழக்குகளுக்காக பெரிய அரசியல் சாசன அமர்வுகளை ஏற்படுத்த உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. இந்த வழக்குகளில் ஒன்றை அரசியல் சாசன அமர்வுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்த மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் பி. ஏ. தேசாய் இக்கருத்தரங்கில் பங்கேற்று, இந்துத்துவா மற்றும் இந்து மதம் ஆகியவற்றிற்கு உள்ள வேறுபாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.

‘கம்யூனலிசம் காம்பட்' இதழின் இணை ஆசிரியரான தீஸ்தா செடல்வாட் தனது முடிவுகளை – ‘வெறித்தனமான வெறுப்புப் பேச்சும் இந்திய நீதிமன்றங்களும்' என்ற கட்டுரையாகப் படித்தார். அதில் பொதுவாக நீதித்துறை குறிப்பாக உயர் நீதிபதிகள் வெறித்தனமான வெறுப்பு பேச்சு குறித்த சட்டவரையறைகளை தெரியப்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்து வருவதாகக் கூறினார். இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் பிரிவுகள் 153 ஏ, 153 பி, 505 மற்றும் 295 ஆகியவை மக்களில் ஒரு சாராருக்கு எதிராக வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையில் எழுதுவது மற்றும் பேசுவது குறித்ததாகும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற வன்முறையின் போது பால்தாக்கரே தனது ‘சாம்னா' இதழில், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வெறித்தனமான வெறுப்புப் பேச்சை பம்பாய் உயர் நீதிமன்றம், ‘இந்த வார்த்தைகள் தேசத்திற்கு எதிரான முஸ்லிம்களை நோக்கி பயன்படுத்தப்பட்டன' என்ற அடிப்படையில் நியாயப்படுத்தியதை இந்திய உச்ச நீதிமன்றம் சரி செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து 30 ஆயிரம் கையெழுத்துகள் கொண்ட தேசிய இயக்கம் நடத்தப்பட்ட போதும் உச்ச நீதிமன்றம் அதை கண்டு கொள்ளவில்லை. மே 2007 வருண் காந்தி உத்தரப் பிரதேச தேர்தலின் போது விஷத்தனமான பேச்சுகளை பேசிய பிறகு, அதற்கெதிராக குடிமக்களால் இயக்கம் நடத்தப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேட்பாளர் உத்தரப்பிரதேச மாநிலம், பில்பிட் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, அரசியல் வர்க்கமோ, அரசோ, நீதித்துறையோ, தலைமை தேர்தல் ஆணையரோ விஷமத்தனமான பேச்சுகளை 2007 தேர்தலின் போது பேசிய வேட்பாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய விஷயங்களில் நீதித்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், பம்பாய் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் மிஹிர் தேசாய், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ரவி கிரண் ஜெயின் ஆகியோர் விளக்கமாகப் பேசினர்.

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த பிறகு பா.ஜ.க. அரசுகள் மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்த வழக்கில் – 1994 இல் 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், மதச்சார்பின்மையே இந்திய அரசியல் சாசனத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறாக இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இந்த முக்கியத் தீர்ப்பு ஓராண்டுக்குப் பிறகு 1995 இல் உச்ச நீதிமன்றத்தில் வெளிவந்த, இந்துத்துவாவை நியாயப்படுத்திய தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டது.

மதவெறி அரசியலின் விளைவுகள் :

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த துடிப்பான பேச்சாளர் குழுக்கள், மதவெறி அரசியலால் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து இத்தெளிவான புரிதலை ஏற்படுத்தினர்.

கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா போதாங்கிரி கோயில் தொடர்பான ஆபத்தான மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் ‘கர்நாடகா மத நல்லிணக்க அமைப்பு' துடிப்பான பங்கினை வகித்தது. பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் திரட்டிய வன்முறை கும்பலுக்கெதிராக மாவட்டத்தில் மக்களை திரட்டி மேற்கூறிய அமைப்பும் ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' என்ற அமைப்பும் செயல்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வமைப்புகள் உள்ளூரில் நடந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

உச்ச நீதிமன்றம் இச்சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு எதிராக தடை விதித்தாலும், அதன் பிறகு கர்நாடக அரசின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள் நீதிமன்றத்தை அவமதித்திருந்தாலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேற்கூறப்பட்டுள்ள பிரச்சனையோடு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட மற்ற வழக்குகள் ஒரு தெளிவான சட்ட வரையறையை வெளிப்படுத்த தவறியுள்ளது மட்டுமின்றி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் கிரிமினல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ தயங்குகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. நாடு முழுவதும் மதச் சிறுபான்மையினர் கோயில்களாக அல்லது பன்மத வழிபாட்டுத் தலங்களாக இருக்கும் 30 ஆயிரம் கோயில்களை சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்றுவதற்கு – பாரதிய ஜனதா கட்சியும் வி.எச்.பி.யும் திட்டமிட்டுள்ளன என்பதை மே 2003 இல் ‘கம்யூனலிசம் காம்பட்' இதழ் வெளிப்படுத்தி, அந்த 30 ஆயிரம் கோயில்களின் பெயர்களைப் பதிவு செய்ததை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டுப் பேசினார்.

பஜ்ரங்தள் மூலம் தனது அரசியல் வாழ்வை வளர்த்துக் கொண்ட பா.ஜ.க., நாடாளுமன்ற உறுப்பினர் வினய் கத்தியார், டிசம்பர் 29, 2002 அன்று வாரணாசியில் முஸ்லிம்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை வி.எச்.பி., பஜ்ரங் தள் அமைப்புகளிடம் கொடுத்து விடவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். அதற்குப் பிறகு மார்ச் 1, 2003 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் படோஹியிலும் அதே ஆண்டு மார்ச் 10 அன்றும், வி.எச்.பி.யின் சர்வதேச செயலாளர் பிரவின் தொகாடியா இதே மிரட்டல்களை மிகுந்த விஷத்தனமான வெறித்தனத்துடன் மீண்டும் வலியுறுத்தினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது பேச்சாளர் எம்.எஸ். வைத்யா மூலம் காசி மற்றும் மதுரா கோயில்கள் ‘விடுதலை' பெறுவதற்கான வி.எச்.பி.யின் விஷத் திட்டத்திற்கு, தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியது.

ராஜஸ்தானில் உள்ள பாபா ராம்தேவ் கோயில், வலதுசாரி பெரும்பான்மை இந்துத்துவ அரசியல், மதப் குழுக்களால் எடுத்து கொள்ளப்பட்டதை சிறந்த வரலாற்று அறிஞர் கே.எம். சிறீமலி விளக்கினார். இதேபோன்று குஜராத் மாநிலத்தில் உள்ள பியாரானா முஸ்லிம் தர்கா, இந்து மதவெறி அமைப்புகளின் பொறியில் சிக்கியிருப்பதை தீஸ்தா செடல்வாட் குறிப்பிட்டார்.

துடிப்பான குடிமக்கள் முனைப்பு, சிறுபான்மை மக்களிடமிருந்து வெளிப்பட்டு 2005 இலிருந்து கோரக்பூரில் சுவாமி ஆதித்யாநாத்தின் வெறித்தனமான பேச்சுகளை கட்டுப்படுத்தியிருக்கிறது. வழக்குரை ஞர்கள் ஆசாத் அயாத் மற்றும் பர்வேஸ் பர்வாஸ் ஆகியோர் ஆதித்யாநாத்திற்கு எதிராக, வெற்றிகரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு பெற்றதை குறிப்பிட்டனர். இந்த வெறித்தனமான மதகுரு, அதற்குப் பிறகு தடை உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்திற்கு ஓட வேண்டியிருந்தது.

வரலாற்று அறிவியல், தொல்பொருள் ஆய்வு, மனித உரிமைகள் முனைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை கோட்பாடுகள் என்று அறிவைத் தூண்டிய வளமான உரையாடல்கள் மூன்று நாட்கள் கருத்தரங்கில் இடம் பெற்றன. ராம ஜென்ம பூமி இயக்கத்தின் அரசியலுக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் ராமனுக்கு கோயில் கட்டுவது அல்ல. ஆனால், மதத்தின் மொழியையும், பிரசங்கத்தையும் தவறாகப் பயன்படுத்தி – இந்தியாவை அரசியல் ரீதியாக ஒரு பெரும்பான்மை சர்வாதிகார நாடாக ஆக்குவதே ஆகும்.

தமிழில் : இனியன் இளங்கோ
Thanks to keetru.com