Wednesday, October 6, 2010

காவிக்கு பணிந்த நீதி!

இயர்லி இந்தியா புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர் சமீபத்தில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது எனக் கூறி தீர்ப்பிற்கு தனது கடும் எதிர்ப்பை ஆதாரத்துடன் விவரித்துள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பு நீதிமன்ற சட்டத்தில் எங்கும் இல்லாத புதிய வழிமுறையை வகுத்துள்ளது, அதாவது இனிமேல் யார் வேண்டுமானாலும் இந்த இடம் இந்த கடவுள் அல்லது கடவுள் தன்மையுள்ள ஒருவர் பிறந்த இடம் எனக்கு கூறி ஆதாரம் ஏதும் காட்டாமல் நிலத்தை உரிமை கொண்டாட இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது எனக் கூறி தீர்ப்பின் கோமாளித்தனத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னனி ஆங்கில நாளேடான தி ஹிந்து இதை விரிவாக விளக்கியுள்ளது.
தி ஹிந்து வின் ஆங்கிலச் செய்தி:
Historical evidence ignored, say historians
The verdict is a political judgment and reflects a decision which could as well have been taken by the state years ago. Its focus is on the possession of land and the building a new temple to replace the destroyed mosque. The problem was entangled in contemporary politics involving religious identities but also claimed to be based on historical evidence. This latter aspect has been invoked but subsequently set aside in the judgment.
The court has declared that a particular spot is where a divine or semi-divine person was born and where a new temple is to be built to commemorate the birth. This is in response to an appeal by Hindu faith and belief. Given the absence of evidence in support of the claim, such a verdict is not what one expects from a court of law. Hindus deeply revere Rama as a deity but can this support a legal decision on claims to a birth-place, possession of land and the deliberate destruction of a major historical monument to assist in acquiring the land?
The verdict claims that there was a temple of the 12th Century AD at the site which was destroyed to build the mosque — hence the legitimacy of building a new temple.
The excavations of the Archaeological Survey of India (ASI) and its readings have been fully accepted even though these have been strongly disputed by other archaeologists and historians. Since this is a matter of professional expertise on which there was a sharp difference of opinion the categorical acceptance of the one point of view, and that too in a simplistic manner, does little to build confidence in the verdict. One judge stated that he did not delve into the historical aspect since he was not a historian but went to say that history and archaeology were not absolutely essential to decide these suits! Yet what are at issue are the historicity of the claims and the historical structures of the past one millennium.
A mosque built almost 500 years ago and which was part of our cultural heritage was destroyed wilfully by a mob urged on by a political leadership. There is no mention in the summary of the verdict that this act of wanton destruction, and a crime against our heritage, should be condemned. The new temple will have its sanctum — the presumed birthplace of Rama — in the area of the debris of the mosque. Whereas the destruction of the supposed temple is condemned and becomes the justification for building a new temple, the destruction of the mosque is not, perhaps by placing it conveniently outside the purview of the case.Has created a precedent
The verdict has created a precedent in the court of law that land can be claimed by declaring it to be the birthplace of a divine or semi-divine being worshipped by a group that defines itself as a community. There will now be many such janmasthans wherever appropriate property can be found or a required dispute manufactured. Since the deliberate destruction of historical monuments has not been condemned what is to stop people from continuing to destroy others? The legislation of 1993 against changing the status of places of worship has been, as we have seen in recent years, quite ineffective.
What happened in history, happened. It cannot be changed. But we can learn to understand what happened in its fuller context and strive to look at it on the basis of reliable evidence. We cannot change the past to justify the politics of the present. The verdict has annulled respect for history and seeks to replace history with religious faith. True reconciliation can only come when there is confidence that the law in this country bases itself not just on faith and belief, but on evidence.


(Romila Thapar is a distinguished historian of Early India.)

கட்டுரையாளர்: பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.

நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.

ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.

ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.

நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.

இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.

நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும்.

தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?

வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.

இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.

நன்றி:தி ஹிந்து, தேஜஸ், பாலைவனத் தூது.

இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒரு வரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: “இந்த நாட்டின் இரண்டாம் தர குடிமகனாக உணர்கிறேன்”.

இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லிம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டின் முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ் எஸ்.ன் இலட்சியமும் ஆகும்.

மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சிதிலங்களின் கற்களில் விஸ்வஹிந்து பரிசத்தால் கண்டெடுக்கப்பட்டது எனக்கூறப்படும் பழங்கால கல்வெட்டுகள் திட்டமிட்டே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் சமர்ப்பித்தது.ராம்சாபுத்ரா எனக்கூறப்படும் இடத்திற்கு கீழ் செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் பாபரால் தகர்க்கப்பட்ட ராமர்கோயில் என்ற கண்ணை மூடிக்கொண்ட முடிவுக்கு வந்துள்ளது நீதிமன்றம்.ஆனால், செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்த கட்டிடக்கலை மொகாலாயர்களின் வருகையின் மூலமே இந்தியாவிற்கு வந்தது என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பழங்கால ஹிந்துக் கோயில்கள் இம்மாதிரியான கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்படவில்லை. ஏறத்தாழ சம அளவிலான கட்டிகளை பயன்படுத்தி இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் கூறப்பட்டாலும், அதன் சுவர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுக் குறித்து அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் விவரிக்கப்படவில்லை. ஆனாலும், அது ஒரு முக்கிய கட்டிடம் என அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையில் கூறப்படுகிறது.கட்டிடத்திற்கு கலைநயம் மிகுந்ததாக அஸ்திவாரம் இருந்ததாக கூறும் அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் அந்த கலை நயம் எத்தகையது என்பதுக் குறித்து கூறவில்லை. இவ்வாறு இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர்.

மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.

சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார்.

திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது.

மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார்.

வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

No comments: