Thursday, March 18, 2010

மோடியை பின் தொடரும் நீதியின் நிழல்!



2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், நெருப்பிலிட்டு கொளுத்தியும் கொல்லப்பட்டனர்.

கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள் இந்தக்காரியத்தை செய்து முடித்தனர். கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.
அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா செய்தியாளர்கள் வெளியிட்ட செய்திகள் உலகையே உலுக்கியது.

கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும். உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள் என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாகக் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.

ஏனென்று கேட்பார் யாருமற்ற நிலையில் முஸ்லிம்களின் அவலநிலை நீடித்தது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம் என்றான் ஒரு வெறிநாய்.

பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.

நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.

குறிப்பிட்ட நாளில் பயன்படுத்துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.

கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.
கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.

தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் மாளிகைக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார். காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார் முதலமைச்சர் மோடியை கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களைக்காப்பாற்றக் கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.

எத்தனைக்கெஞ்சியும், கதறியும் ஒரு நன்மையும் விளையவில்லை. இஹ்சன் ஜாஃப்ரி உள்பட 72 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். முதியவர் ஜாஃப்ரி துண்டு துண்டாகக் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது ஆணுறுப்பையும் வெட்டிச்சிதைத்து நெருப்பிலிட்டு கொளுத்தினர். இஹ் சான் ஜாஃப்ரி வாழ்ந்த குல்பர்க் சொஸைட்டி பங்களா மயான அமைதி குடிகொண்ட சாம்பல்மேடாக மாறி விட்டது.

குஜராத் இனப்படுகொலைகளில் குறிப்பாக இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட குல்பர்க் படுகொலைகளில் மோடியின் நேரடிசதி இருப்பதாகவும் மோடியின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்திய தண்டனைச்சட்டம் 120B 114r/w 302 IPC மற்றும் தவறாக தகவல்களை உருவாக்கி வழங்குதல் (177IPC) தவறான அறிக்கைகள், தவறான ஆதாரங்கள் கொடுத்தல் (199 IPC) குற்றம் இழைத்தவர்கள் குறித்த தவறான தகவல்களை வழங்குதல் (203 IPC), வழிபாட்டுத் தலங்களை சிதைத்தது தொடர்பான குற்றச் செயல் (295 IPC) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி உள்ளிட்ட 62 பேர் மீதும் சுமத்தப்பட்டன.

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி தலைநகரில் மோடி தலைமையில் கூடிய உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உத்தரவிடப் பட்டதை முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் 2005&ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்த பிரமாண வாக்குமூலம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரி தனது 100 பக்க குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுப்பட்டியலில் ஜாகியா ஜாஃப்ரி விடுத்திருக்கும் வினாக்கள் அனைத்தும் எரிமலை ரகத்தைச் சேர்ந்தவை.

கோத்ரா ரெயில் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உண்மை. அது மட்டுமின்றி பலியானவர்களின் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தும் எல்லா பிணங்களையும் வைத்து அகமதாபாத்தில் வெறியூட்டும் ஊர்வலம் நடத்தியது ஏன்? உள்ளிட்ட முக்கிய வினாக்களை ஜாக்கியா ஜாஃப்ரி தனது குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை மோடியின் வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். ஆனால் மோடியின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுத்தது.
மோடி, மீதான காவல்துறையின் புறக்கணிப்பைக் கண்டு சற்றும் அஞ்சாமல் ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றம் சென்றார். தனது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் ஜாகியாவின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்தது. இக்குழு மூன்று மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (ஷிமிஜி) தனது விசாரணையின் முக்கியப் பகுதியாக குஜராத் முதல்வர் மோடியை விசாரிக்க அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்திருக்கும் அழைப்பாணையை ஏற்று மோடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையின் முன்பு நேர் நிற்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரியே மோடி தான் என மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களிலும் போராட்டக்குரல் எழுப்பியபடி இருப்பினும் மோடி நல்லவர்போல் வேடமிட்டு தருக்குடன் நடமாடினார்.
மோடி ரொம்ப நல்லவர் என ஊடகங்கள் பல (தமிழ் நாட்டின் சில பத்திரிக்கைகள் உள்பட) வலிந்து பொய்ப்பிரச்சாரத்தை பரப்பின.
இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோடியை தங்கள் நாட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு மோடியை நேரில் ஆஜராக அழைப்பாணை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மோடி சிறப்பு புலனாய்வுக்குழு முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அது ஆணையிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவால் சம்மன் அனுப்பப்பட்ட மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.
இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுகளாகியும் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சருக்கு இனப்படுகொலைக் குற்றஞ்சாட்டி சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு இதுவே முதல் முறை. எனவே மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ்திவாரி தெரிவித்தார்.

மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.

-apuusaalih
Thanks to TMMK

1 comment:

உதயம் said...

மோடி, இந்திய மதசார்பின்மையை அழிக்க வந்த கிருமி, கிருமியாவது பொதுவானவர்களைக் கொல்லும் ஆனால் இது முஸ்லிம்களை மட்டுமே கொன்றொழிக்க தயார் செய்யப்பட்டது. மோடி, இந்திய அரசியலின் களங்கம், களங்கம் என்றாலும் துடைத்தெறிய முடியாத அசிங்கம். உன்னை வெறி பிடித்த இந்துத்துவாக்கள் தூக்கி பிடிக்கலாம், ஆனால் மனித உரிமையை மீறியதற்காக பிரிட்டனும், அமெரிக்காவும் உன்னை தூக்கி எறிந்தது. மத வெறியூட்டி உன்னால் வளர்த்து விடப்பட்ட ஒரு கூட்டத்திற்கு வேண்டுமானால் நீ அவதார புருஷன்; ஆனால் மதசார்பினமை இந்தியாவிற்கு நீ அகங்கார வில்லன். உன்னை ஆதரிக்கவும் உன் செயல்களை நியாயப்படுத்தவும் சிந்தை மழுங்கிய ஒரு கூட்டத்தினர் அதிகார மட்டத்திலும், நீதி மன்றங்களிலும் ஊடுருவி இருப்பதால் உன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது என்பது கானல் நீரே. நீ தண்டிக்கப்பட்டால் இந்தியாவில் நீதி மரிக்கவில்லை என்பது பொருளாகும்.