Friday, February 5, 2010

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

"குண்டு வெடிச்சிருச்சா பழியைத் தூக்கி முஸ்லிம்கள் மீது போடு" என்ற நிலையில் தான் ஊடகங்கள் பொறுப்பற்றத் தன்மையோடு இருக்கின்றன. முஸ்லிம்களின் மீது வெறுப்பு என்பது எல்லா துறைகளிலும் விதைக்கப்பட்டு வருகிறது. அதிலும் செய்தி ஊடகங்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லிம்களைக் குற்றவாளியென்றே தீர்ப்பும் எழுதி விடும் அராஜகப் போக்கில், தனித்து நின்று சங்பரிவார் பயங்கரவாத கும்பலின் கோரமுகத்தை தோலுரித்து வருகிறது "தெகல்கா".

இந்தியாவில் நடத்தப்பட்ட "மும்பை குண்டு வெடிப்பு", "கோவை குண்டு வெடிப்பு" தவிர வேறு எந்த குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டதாக தீர்ப்பு வந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் பல குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அதையெல்லாம் யார் செய்தார்கள்,? ஏன் செய்கிறார்கள் ? எப்படி மறைத்து திசை திருப்புகிறார்கள் ? இந்த்துத்துவ பயங்கரவாதம் மட்டும் ஏன் மறைக்கப்பட்டு வருகிறது?
உதயம் .
----------------------------------------------------------------------------------------------------------------------------
"ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி அமைப்புகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.

தெஹல்கா அவரைப் பேட்டிக்கண்டபோது, "குண்டுவெடிப்புகள் நடந்துள்ள நேரங்களை அவதானித்து, அதனை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
தெஹல்காவினுடனான அவரது பேட்டி சத்தியமார்க்கம் வாசகர்களுக்காக இங்குத் தமிழில் தரப்படுகிறது:


தெஹல்கா:
பாஜக பிரச்சனைகளைச் சந்தித்த போதெல்லாம் நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக நீங்கள் கூறியுள்ளீர்களே?

தி.வி.சிங்:
நான் என்ன கூறினேன் என்றால், "குண்டுவெடிப்புகள் நடைபெறும் நேரம் முற்றாகக் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை. எப்போதும்
பாஜக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வேளைகளில் மட்டும் மிகச் சரியாக நாட்டில் குண்டுவெடிப்புகள் நடைபெறுவது ஏன்? அவ்வழியில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்பதுவே என் கோரிக்கை. அல்லாமல் நான் யாரையும் குற்றப் படுத்தவில்லை.

தெஹல்கா:
"பாஜகவுக்குப் பிரச்சனைகள் ஏற்படும் போது" என்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?

தி.வி.சிங்:
பாஜகவுக்கு எதிரான தெஹல்காவின் வெளிப்படுத்தல்களைக் குறித்து மக்களவையில் சர்ச்சை செய்யப்பட்டபோது, மூன்று நாட்களுக்கு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் மக்களவையில் அது குறித்துச் சர்ச்சை செய்யப்பட்ட வேளையில் மக்களவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியும் முதலமைச்சரான
மோடி வெறும் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேளையில்தான் கோத்ரா சம்பவம் நிகழ்ந்தது. சமீபத்திய கர்நாடகா தேர்தலில், ஓட்டளிப்புக்கு முதல் நாளில் ஹூப்ளியில் குண்டுவெடித்தது. அதேபோன்று இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பு ஜெய்ப்பூரில் குண்டு வெடித்தது. நிச்சயமாக இது விசாரணை நடத்தப்பட வேண்டியதாகும்.

தெஹல்கா:
உங்களின் இந்தப் பதில், காங்கிரஸின் மீது சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியதற்கான எதிர்வினையா?

தி.வி.சிங்:
இல்லை. அதைக் குறித்த கேள்வியே தேவையில்லை. பாஜகவின் பிரச்சனைகளின்போது குண்டுவெடிப்புகள் நடந்து வருவதை நான் நீண்டகாலமாக கவனித்து வருகிறேன்.

தெஹல்கா:
ஆனால், சுஷ்மா சுவராஜ் காங்கிரஸின் மீது குற்றம் சுமத்தியது....

தி.வி.சிங்:
குண்டுவெடிப்புகளில் காங்கிரஸுக்கு நேரடியான பங்குண்டு என்றே சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். நான் அவ்வாறு கூறவில்லை. மேலும், அவரின் அந்தப் பேச்சில் ஏதாவது உண்மையுள்ளதா?
ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் குண்டுகள் தயாரிக்கின்றன என்பது உண்மை.

தெஹல்கா:
வெடிகுண்டுகள் தயாரிப்பில் பாஜக, வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றனவா?

தி.வி.சிங்:
ஆம். உண்மையில், 1992ஆம் ஆண்டு மத்தியபிரதேசத்திலுள்ள வி.ஹெச்.பி அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதில் ஒரு வி.ஹெச்.பி தொண்டர் பலியானார், இருவர் காயமடைந்தனர். இவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் எதிர்பாராத விதமாகக் குண்டு வெடித்தது. அதன் பின் 2002 ல், அதே மத்தியபிரதேசம் இந்தோர் மாவட்டத்திலுள்ள மோவில் கோவில் ஒன்றில் குண்டு வெடித்தது. தொடர் விசாரணையில் காவல்துறை விஹெச்பி தொண்டர்களைக் கைது செய்தது. அவர்கள், "வெடிகுண்டுகள்
உருவாக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராமல் குண்டு வெடித்ததாக" குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களின் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வீடியோ கேசட் ஆதாரம் என்னிடம் உள்ளது. மீண்டும் 2006 ல், நாண்டடிலுள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரின் வீட்டில் குண்டு ஒன்று வெடித்து இரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாகினர். அதன் பின் 2008 மார்ச்சில், தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. தொடர் விசாரணையில் இரு வி.ஹெச்.பி தொண்டர்களைத் தமிழக காவல்துறை கைது செய்தது. அவர்கள் தான் அக்குண்டுகளை வைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சூரத்தில் திடீரென மரங்களில் வைக்கப்பட்டிருந்ததாக 18 வெடிகுண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டறிந்ததே, அது எப்படி?

தெஹல்கா:
எனவே, சமீபத்திய தொடர்குண்டுவெடிப்புகளின் பின்னணியில் பாஜக உள்ளதாக நீங்கள் கூறுகிறீர்களா?

தி.வி.சிங்:
இல்லை, அவ்வாறு எதுவும் நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம், குண்டுவெடிப்புகள் நடைபெறும் வேளைகளில் நடந்துள்ள முக்கிய சம்பவங்கள் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை.
ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்பி தொண்டர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் அலுவலகங்களிலிருந்து குண்டுகள் தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன; தெளிவான மூன்று-நான்கு வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. எவருமே இவற்றைக் கவனிப்பதில்லையே ஏன்?

தெஹல்கா:
தீவிரவாதத்திற்கு எதிராக எல்லா கட்சிகளும் ஒன்றிணை வேண்டுமா?
தி.வி.சிங்:
நிச்சயமாக, ஆனால் முஸ்லிம்கள் மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் எனில், அது சரியல்ல.

தெஹல்கா:
பின்னர் ஏன், இந்தப் பழிசுமத்தும் விளையாட்டுத் தொடர்கிறது?

தி.வி.சிங்:
தேசியவாத சிந்தனை கொண்டோர் வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. பாஜக பிரிவினை அரசியலை நம்புகிறது. முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்காமல் அவர்களால் பிழைப்பு நடத்த முடியாது. ஏதாவது நடைபெறும் ஒவ்வொருமுறையும் அவர்கள் தங்களின் ஹிந்துத்துவ கனவுக்குள் திரும்பிச்செல்கின்றனர்.


தெஹல்கா Vol 5, Issue 33இலிருந்து
தமிழாக்கம் அல்-அமீன்

சத்தியமார்க்கம்.காம்-
-------------------------------------------------------------------------------------------------------------------------
எப்படி மததுவேசமும், வெறியும் ஊட்டப்பட்டு சங்க பரிவார பயங்கரவாத கும்பல் வார்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு அதிர வைக்கும் விடியோ ! குண்டு வெடிப்பினால் இவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ள முடிகிறது. இதோ பயங்கரவாதத்தின் நிஜ முகம். பார்க்க http://www.youtube.com/watch?v=zcgWxknfzcU

No comments: