Saturday, April 11, 2009

ஓரினச்சேர்க்கை: விரிவான மருத்துவ அலசல்.

ஓரினச்சேர்க்கை விரிவான மருத்துவ அலசல்
Dr.S.ஜீவராஜன் M.D.,D.V.,

ஓரினச்சேர்க்கை என்றால் என்ன ?ஆண், ஆணுடன் அல்லது பெண் பெண்ணுடன் உடல்உறவு வைத்துக் கொள்வது தான் ஓரினச்சேர்க்கை என்பர். இவர்களை ஆங்கிலததில் “கே” (Gay) என்பர். பெண் குணம் கொண்ட நபர்களும் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக மாற்றி வாழும் “அலிகளும்” ஓரினச்சேர்கையில் ஈடுபடு கின்றனர். “அலிகள்” என்று சொல்லும் போது பலருக்கு ஆண்குறியும் (Penis) விரைப்பையும் (Scrotum) இருக்கும். தன் வாழ்க்கையை பெண்மாதிரி பாவித்துக் கொண்டு உடல்உறவுக்கு அழைத்து, ஆணிடம் தன் ஆசனவாய் வழியே தான் உடல்உறவு வைத்துக் கொள்கின்றனர்.

சில அரவாணிகள், டாக்டர்களிடம் சென்று கொடூரமாக தனது ஆண்குறியையும், விரைப்பையையும் முழுவதுமாக வெட்டி சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு சிறு இடம் விட்டு தைத்துக் கொள்வர். இதில் 10 அலிகளுக்கு 8 அலிகள், பிறப்பு உறுப்பு பகுதியில் சீழ்வைத்து, உடல்நலம் கெட்டு இறந்து விடுவார்கள். ஒரு சிலர் பிழைத்து “நான் முழுவதுமாக” பெண்ணாகவே மாறி விட்டேன் என்று தன்னை அழைத்துக் கொள்வார். அவர்களுக்கு முறையான பெண்குறி இருக்காது. அந்த அலி தனக்கு பெண்குறி இருப்பதுபோல் நடித்து தன் வாடிக்கைக்காரர்களுடன் உடல்உறவு கொள்ள அழைத்து, பின் தனது ஆசனவாய் (Vagina) வழியில்தான் உடல்உறவு வைத்துக் கொள்வார்.

இப்படி ஆண் ஆணுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு பால்வினை நோய்கள் பல, விருந்து வைத்து விடுகின்றன. அதன்மூலம் HIV என்ற எய்ட்ஸ் பங்காளியையும் வரவழைக்க உதவுகின்றன.

இந்த ஓரினச்சேர்க்கை எங்கு எவரிடத்தில் அதிகம் நடைபெறுகின்றது?
1. ஒரே இடத்தில் தங்கி வாழும் ஹோட்டல் சர்வர்கள்.
2. ஹாஸ்டலில் ஒரே அறையில் பலபேர் தங்கிப் படிக்கும் மாணவர்கள்.
3. ஒரே ரூமில் தங்கி வாழும் பஸ் டிரைவர்கள் மற்றும் வேலையாட்கள்.
4. பெண்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பள்ளி கல்லூரி தோழிகள்.
5. நீண்ட தூரத்தில் ஒரே இடத்தில் தங்கி வாழும், மனைவியைப் பிரிந்து பணியாற்றும் காவலாளிகள், இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், ஆபீசர்கள், மருத்துவ பிரதிநிதிகள்.
6. ஒரே சிறையில் அடைபட்டு கிடக்கும் சிறைக்கைதிகள்.
7. மனைவி குழந்தை பெற்றுவிட்டால் இப்போது உடல்உறவு அவளுடன் கொள்ளக் கூடாது என்ற தப்பான எண்ணத்தில் தன்னுடன் ஆபீஸில் வேலைபார்க்கும் நண்பர்களுடன் உடல்உறவு வைத்துக் கொள்பவர்கள்.
8. ஆண் கலைஞர்கள் நடனம், நாட்டியம், டிஸ்கோ, பாட்டு என்று ஊர் ஊராய் சென்று ஒரே இடத்தில் தங்கி நிகழ்ச்சி நடத்துபவர்கள்.
9. பெரிய செல்வந்தார்கள் உயர் மட்டத்தில் வாழும் ஆண்கள், பார்ட்டி, டின்னர், சீட்டாட்ட ‘கிளப்பில்’ ஆடிவிட்டு அதன்பின் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் என இந்த ஓரினச்சேர்க்கை வட்டம் விரிவடைந்து வருகின்றது.

ஓரினச்சேர்க்கை இனத்தில இரண்டு வகை உண்டு.ஒன்று ஆசனவாயை உடல்உறவுக்கு கொடுப்பவர்கள். இவர்களை “பாசிவ் ஹோமோ (Pasive-Homo) என்பர்.இரண்டாவது வகை தன் உடல்உறவுக்கு தன் ஆண்குறியை செலுத்த மற்றவர் ஆசனவாயை பயன்படுத்துவர். இவரை “ஆக்டிவ் ஹோமோ (Active-homo) என்பர்.
இயற்கைக்கு மாறாக இப்படி ஒரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் வழியாக உலகம் ஒரு நாசத்தை நோக்கி அதாவது எய்ட்ஸ் என்ற நரகத்தை நோக்கி விரைந்து கொண்டு இருக்கிறது.

1. சிபிலிஸ் என்ற கிரந்திநோய் (Syphillis) :
இந்த நோயை தன்னிடம் வைத்து இருக்கும் ஒரு ‘கே’ யுடன் அதாவது ஓரினச் சேர்க்கையில் வாழும் ஒரு ஆணுடன், வேறுஒருவன் உடல்உறவை வைத்துக் கொள்ளும் போது அவனது ஆசனவாயில் 10 முதல் 90 நாட்களில் இந்த நோய் புண்களாகத் தோன்றும் இந்த நோய்க்குரிய கிருமியின் பெயர் டிரப்னிமா பாலிடம் (Treponema Palidum). இது மிக்க கொடிய நஞ்சுக்குணம் கொண்டது.ஆசனவாயின் உட்புறத்திலும் ரெக்டம் (Rectum) என்ற குதப்பகுதியிலும், புண்கள் தோன்றி இருக்கும். அதனால் மலம் கழிக்கும்போது வலி, எரிச்சல், சீழுடன் கூடிய திரவம் அல்லது ரத்தமும் வடிய ஆரம்பிக்கும். 6 மாதம் வரை வைத்தியம் மேற்கொள்ளாவிட்டால், இந்த வியாதி ஆசனவாயில் ஓரப்பகுதியிலும் காண்டிலோமோலேட்டா (Condylomata) என்ற கொடிய வியாதியை தோற்றுவிக்கும்.
இது புற்கள் மாதிரி முளைத்து வளர்ந்து இருக்கும்.வாய்வழிப்புணர்ச்சி இருந்தால் வாயிலும் புண்கள் தோன்றும். அரை இடுக்குகளில் வலிக்காத நெரிகட்டிகள் தோன்றும்.முறையான வைத்தியம் பார்க்கா விட்டால் இரத்தம் மூலம் உடலின் மற்ற இடங்களுக்கும் பரவி தோல் முழுவதும் தட்டையான கொப்பளங்கள், பத்துக்கள் தோன்றும். தீராத தொல்லைகளை கொடுத்து பரம்பரைக்கும் நோயை நீடிக்க வைத்துவிடும்.
பெண்கள் :
ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட பெண்களுக்கும், இந்த சிபிலிஸ் நோய் வரும்.ஆண்களுக்கு வரும் தொல்லைகள்மாதிரி இவர்களுக்கும் தோன்றி தொல்லை கொடுக்கும்.

2. கோனாரியா என்ற வெட்டை நோய் :
ஓரினச்சேர்க்கை மூலம் ஒருவனுக்கு கோனோரியா (Gonorheae) என்ற வெட்டை நோய் வரும். இதனால் ஆசனவாய் சுற்றி எரிச்சல், அரிப்பு அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலப்பாதையில் சீழ் திரவம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் மலம் வரும் பாதையில் கட்டிகள் தோன்றி மலப்பாதையை அடைத்து தொல்லை கொடுக்கும். ஆசனவாய் உளபகுதியை (Prostocopy) உருப்பெருக்கி கருவி கொண்டு சோதிக்கும் போது, மலக்குடல் பாதை சிவந்தும், புண்கள் தோன்றியும், புண்ணில் இருந்து சீழ் கோர்த்து இருப்பதும் தெரிய வரும். இரத்தமும் வடியும் நிலை இருக்கும். சீழ் திரவத்தை எடுத்து பரிசோதனை செய்யும்போது வெட்டை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்படும். கல்சர் டெஸ்ட் செய்யும்போது இந்த நோய் இருப்பது உறுதிசெய்யப்படும். வாய் வழி புணர்ச்சி கொண்டவனுக்கு தொண்டையில் இக்கிருமி பரவி தொண்டையில் புண் ஏற்பட்டு எச்சில் முழுங்க முடியாமை ஏற்படும். இப்படி பல தொல்லைகள் ஓரினச்சேர்க் கையில் ஏற்படும்.
பெண்கள் :
இது மாதிரி ஓரினச்சேர்க்கை கொண்ட பெண்ணுக்கும் ஆசனவாய் பாதையில் இந்த வெட்டை நோய் தொற்றி தொல்லை கொடுக்கும். ஆசனவாய்ப்பகுதி களில் கட்டிகள் தோன்றும், வெள்ளைபடும். (Trichomonas Vaginalis) நோயும் வெள்ளைபடும் நோயும் சேர்ந்து அவளுக்கு மிக துன்பம் கொடுக்கும். இரத்தமும் மஞ்சள் நிறத்திரவமும் ஆசனவாய் வழியே வடிய ஆரம்பிக்கும். முறையான பரிசோதனை செய்து தகுந்த மருந்து கொடுத்து நோயை குணமாக்க வேண்டும்.

3. ஹெர்பிஸ் என்ற அக்கிக் கொப்பளங்கள் :ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒரு Gay ஆசனவாயைச் சுற்றிலும், அதன் உட்புற பாதையிலும் புண்ணாக வெடிக்கும்.மலம் கழிக்கும்போது எரிச்சல், ஆசனவாயைச் சுற்றிலும் அரிப்பும் (Mucoid) ஏற்படும். மூக்காய்டு என்ற சளித்திரவம் ஆசனவாயில் இருந்து வடிந்து கொண்டு இருக்கும் இந்தப் புண்கள் வரக் காரணமான HIV ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் ஹோமினிஸ் என்ற நுண்கிருமி, கிருமியை சிநேகம் பிடித்து கூட்டிவரும்.வாய்வழிப்புணர்ச்சி கொண்ட நபருக்கு வாயில் உதட்டு ஓரங்கள் உதட்டின் உட்புறப்பகுதி, தொண்டைப்பகுதி என பல இடங்களிமல் இந்த நோய்க்கிருமி இடம் பிடித்து சிறு சிறு புண்களைக் கொடுக்கும். இந்த புண்கள் வலி கொடுக்கும் தொண்டை அழற்சி ஏற்பட்டு எச்சில் விழுங்க முடியாமல் அவதியுற நேரிடும். முறையாக வைத்தியம் மேற் கொள்ளாவிட்டால் இப்புண்கள் கடுகுகள் மாதிரி சிறு, சிறு புண்களாக பல மாதம், வருடங்கள் என திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டே இருக்கும். மிக கவலை தரும் நோயாக மாறும்.
பெண்கள் :
ஓரினச்சேர்க்ககையில் ஆசனவாய்ப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கு, ஆண்களுக்கு வருவது மாதிரியே இப்புண்கள் ஆசனவாயில் வாயின் உதட்டுப்பகுதி தொண்டைக்குழி முதலிய இடங்களில் தோன்றி அவதியு வைக்கும்

4. ஜெனிட்டல் வார்ட்ஸ் (Gental Warts) :ஓரினச்சேர்க்கையில் ஆசனவாய் புணர்ச்சி வைத்துக் கொண்ட ஒருவனுக்கு ஜெனிட்டல் வார்ட்ஸ் என்ற விஷப் பருக்கள், ஆசனவாய்ப் பகுதியில் உடல்உறவு வைத்துக் கொண்டு சில வாரங்களில், ஏன் சில மாதங்களில் தோன்றக் கூடும். இந்த நோய் கிருமியின் பெயர் ஹீயூமன் பாப்பில் பாமா வைரஸ் (Human/ Papilloma Virus) என்பதாகும். ஆசனவாயை சுற்றிலும் பெரினியம் என்ற ஆண்குறிக்கும் மலத்து வாரத்துக்கும் இடையில் உள்ள இடத்திலும் இப்பருக்கள் தோன்றும். ஆசனவாய் உட்புறத்திலும், இந்த விஷச் செடி முளைக்கும். மலம் வரும்போது வலியும், எரிச்சலும், இரத்தமும் கலந்து வடிந்து தொல்லை கொடுக்கும். வாய்வழிப் புணர்ச்சி கொண்டவர்களுக்கு வாயின் ஓரங்களிலும் தொண்டைக்குழியிலும் இப்படி பருக்கள்தோன்றி மிக எச்சில் விழுங்க முடியாமல் தொல்லை கொடுக்கும். முறையாக வைத்தியம் மேற்கொள்ளாவிட்டால் புற்றாகவும் (Cancer) மாறக்கூடும்.
பெண்கள் :
ஆசனவாய் வழிப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி கொண்ட பெண்களுக்கும் விஷப் பருக்கள் தோன்றி தொல்லை கொடுக்கும்.

5. மஞ்சள் காமாலை வியாதி :ஓரினச்சேர்க்கையர், ஆசனவாய் வழி உடல்உறவு வைத்துக் கொள்பவருக்கு “ஹெப்படைடிஸ் பி வைரஸ்” (Hepatitiis B) என்ற நுண்கிருமி இரத்தத்தின் வழியே உள்ளே நோயை உண்டாக்கி விடுகின்றது. இந்த நோய் கண்ட “அலிக்கு” உடல் சோர்வு, களைப்பு, வயிறு, வீக்கம் சிறுநீர் மஞ்சளாக போதல், கண்ணின் வெள்ளைப்படலம், மஞ்சளாக மாறுதல் முதலியன ஏற்படும். ஜான்டிஸ் என்ற இந்த மஞ்சள் காமாலை நோய் மிக விஷத்தன்மை கொண்டது. நோய்க்கிருமி மிகக் கடுமையாக இருந்தால் பிழைப்பது அரிது.

6. அமீபியாசிஸ், சியார்டியாசிஸ் என்ற வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை நோய்கள் :ஓரினச்சேர்க்கையில் அவனது ஆசனவாய் புணர்ச்சி மூலம் அமீபியாசிஸ் சியார்டியாசிஸ் போன்ற வியாதிகள் தோன்றி வயிற்றுக்கடுப்பு, வயிற்றாலை போன்ற நோய்கள் வரும். இதற்காரணமான பார சைட்டுகள் ள்(Parasites) என்ற கிருமிகள் என்டமிபாகிஸ்டோலிகா சியார்டியா லேம்லியா (Entamoeba/ Histolylica/ Giardia/ Lambia) என்பதாகும். இவைகளால் பலவிதமான வயிற்றுக் கோளாறு உண்டாகும் அடிவயிற்று வலி சளி மாதிரி நுரையுடன் கூடிய மலம் வெளி யேறுதல், மலத்துடன் இரத்தம் வருதல் என பலவித கஷ்டங்களைக் கொடுக்கும். அதாவது கழிசல் நோய் கொடுக்கும்.
பெண்கள் :
ஓரினச்சோக்கை மூலம் ஆசனவாய் வழியாக இந்த கழிசல் நோய்கள் குடல்களில் பரவி வயிற்றுவலி, வயிற்றாலை, வயிற்றுக் கடுப்பு என பெண்களும் துன்பப்படுவர்.இவ்விதம் ஓரினச்சேர்க்கை மூலம் வரும் பால்வினை நோய்களைப் பற்றி விரிவாக அறிந்தோம். எல்லா பால்வினை நோய்களும் எய்ட்ஸ் நோய்க்கு வழிகாட்டி நிற்கும் இது .

இல்லறமே நல்லறம் ! ஆபத்தில்லாதது!
மனநிலை தடம்புரள அனுமதிக்காதீர்கள்!வாழ்வு உயர்வானது !

நன்றி : ‘இல்லறம்’

ஓரினச்சேர்க்கையை தற்போது ஆதரித்துப் பேசுவது நாகரிகமான போக்காகவும், அறிவார்ந்த செயலாகவும் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. மன நல மருத்துவர்களும்,பால்வினை மருத்துவர்களும்,சமுதாய ஆர்வலர்களில் சில ஞாநிகளும் இதை பிரச்சாரமே செய்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும், கலாச்சார சீர்கேட்டையும் நாம் மனதில் இருத்தி, இதை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.

எப்படி வேண்டுமானாலும் வாழப்போகிறீர்களா..? இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையரையுடன் வாழப்போகிறீர்களா..?

8 comments:

பாலா said...

nalla alasal
ippothu marivarum suzhnilaikku etravaraana pathivu

Anonymous said...

இது சம்பந்தமாக மேலும் கேள்விகள் கேட்பதாக இருந்தால் எப்படி தொடர்பு கொள்வது ....

pandian said...

nalla news... keep it up.

Subash said...

நல்ல அலசல். நன்றிகள்.

முறையான ஆண் பெண் கலவியினால் வரும் நோய்கள் பாதிப்புகள் பற்றி சொல்வீங்களா?

மற்றும் ஆண் பெண் வாய் வளி புணர்ச்சியாலும் நீங்க சொல்லும் நோய்கள் வருமா ?

நிகழ்காலத்தில்... said...

\\எப்படி வேண்டுமானாலும் வாழப்போகிறீர்களா..? இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையரையுடன் வாழப்போகிறீர்களா..?\\

உபயோகமான பதிவு...

வாழ்த்துக்கள்..

நிகழ்காலத்தில்... said...

kindly remove word verification

Surya said...

Dear brother First post this to Ghiani (Stupid fellow in the media). To become a popular to do all this activities.

viyasan said...

வெறும் முட்டாள் தனமான பதிவு. இந்தப் பதிவின் தலைப்புக்கும் எழுத்துக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. இவர் குறிப்பிடும் பால் வினை நோய்கள் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மட்டும் தான் வரும் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்த முனைந்திருப்பது வெறும் முட்டாள்தனம். உதாரணமாக, இந்தியாவில் AIDS நோயால் பாதிக்கப்பட்டுள்ள்வர்களில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் அல்ல. இவர் குரிப்பிடும் எல்லா நோய்களும் பெண்களிடம் மட்டும் உடலுறவு கொள்பவர்களுக்கும் வரலாம். முன்பின் தெரியாதவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டால் பாலுறவு நோய்கள் வரலாம் என்பதை அறிவுறுத்துவதற்குப் பதிலாக, சமுதாயத்தால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விளிம்பில் நிற்குமொரு சிறுபான்மைக் குழுவினரை மீண்டும், நோய் பரப்பும் காவிகளாகக் காட்டுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.

வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான ஓரினச் சேக்கையாளர்கள் அன்போடும், ஒழுக்கத்தோடும், ஒருவருக்கொருவர் உண்மையாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். அதனால் தான் மேலை நாடுகளில் ஒறினச் சேர்க்கையாளர்கள், சட்டப்படி மணந்து கொள்ளவும், தாம் காதலிப்பவர்களை இந்தியா போன்ற பல நாடுகளிலிருந்து தமது வாழ்க்கைத் துணையாக அழைத்துக் கொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. இந்த மெய்யெழுத்துக் காரரின் இந்தியாவை விட, இப்படியான மேலை நாடுகளில் பாலியல் நோய்கள் மிகவும் குறைவு என்பது தான் வேடிக்கை.