Tuesday, December 16, 2008

ஆப்கான் தீவிரவாதிகள் பிரான்ஸுக்கு மிரட்டல்




கடந்த நவம்பர் மாதம் தாலிபானின் ராணுவ தளபதி "பிரெஞ்சு துருப்புக்கள் ஆப்கானை விட்டு வெளியேறாவிட்டால் இதன் எதிரொலி பாரிஸில் கேட்கும்" என்று சொன்னதன் தொடர்ச்சியாக பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டது.



"ஆப்கான் புரட்சி முன்னணி" என்ற பெயரில் பிரெஞ்ச் செய்தி ஏஜென்ஸிக்கு அனுப்பப்பட்ட ஒரு மிரட்டல் கடிதத்தில் "ஆப்கானில் இருந்து பிரெஞ்சு ராணுவம் வரும் பிப்ரவரி 2009 க்குள் திரும்ப வேண்டும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிஸில் உள்ள மிகப் பிரமாண்டமான "ப்ரெந்தாம்" என்கிற கடையில் பல இடங்களில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது டிசம்பர் 17,புதன்கிழமை வெடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கவே பரபரப்பானது பாரிஸ் நகரம்.



அது போல் அந்த குறிப்பிட்ட கடையின் ஆண்கள் பிரிவில் உள்ள டாய்லெட் பகுதியில் குண்டு கண்டெடுக்கப்பட்டது. அது இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்ததால் அவர்களின் நோக்கம் மிரட்டல் அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Wednesday, December 10, 2008

பாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன?

யூ ட்யூபில் பாபர் மசூதி பற்றி மேய்ந்துக் கொண்டிருந்த போது கிடைத்த விடியோ தான் இது. கேள்வியும் பதிலும் சுவாரஸ்யமாக இருந்ததால் பதிவிட்டுள்ளேன்.


இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான். தீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது. மதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.

வஞ்சிக்கப்பட்டு, அபகரிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட அந்த நிகழ்வுக்குப் பின் தான் இந்தியாவில் பயங்கரவாதத்தின் துன்பப் பயணம் தொடருகிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படுவதற்கு சமமே. சிறுபான்மை சமூகத்திற்கு அனீதம் இழைப்பது ஒரு ஜன நாயக நாட்டிற்கு அழகல்ல.