மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று சுஜாதாவும் சில வல்லுனர்களும் உறுதிபட கூறியிருந்தாலும், ஜெயலலிதா போன்றவர்கள் அதனை முழுமையாக நம்ப தயாரில்லை. ஒவ்வொரு முறையும் குற்றச்சாட்டை எழுப்பிக்கொண்டே இருந்தார் ஜெயலலிதா. அவருடைய குற்றச்சாட்டையும் புறந்தள்ள முடியாது என்ற வகையில் இந்த தேர்தலில் பல பித்தலாட்டங்கள் அரங்கேறியுள்ளன . இதை சட்டரீதியாக எதிர்க்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும்.ம.ம.க.வின் மத்திய சென்னை வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பை இழந்த ஹைதர் அலியுடன் ஓர் நேர்முகம். வீடியோ பார்க்கவும்
2 comments:
ஒரு கண்டுபிடிப்புல எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல விஷயம் இருக்கோ, அதே அளவுக்கு கெட்ட விஷயங்களும் அடங்கி இருக்கு. அதை நிவர்த்தி பண்ண வேண்டியது அரசோட கடமை.
இந்த தேர்தலின் போது 2 இடங்களில் வாக்குப்பதிவுக்கு முன்பதாக அதிகாரிகள் ஓட்டு போட்டு சோதனை செய்தனர். அப்போது ஒருவருக்கு போட்ட ஓட்டு மற்றவருக்கு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 இயந்திரங்களையும் உடனே மாற்றிவிட்டனர். மற்ற சில இயந்திரங்களில் சிறிய பிரச்சினைகளே இருந்தன.
Naresh kupata, Election Commisioner of TN (http://thatstamil.oneindia.in/news/2009/05/21/tn-officials-are-responsible-for-viruthunagar-siva.html)
Post a Comment