Wednesday, August 27, 2008

அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மோடி அரசு............... அம்பலப்படுத்தியது தெஹல்கா

எங்கள் ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிமாக இருப்பது மட்டுமே


முஃப்தி அபுல் பஷர் காசிமியின் தந்தை அபூபக்கர் இஸ்லாஹி




(அஹ்மதாபத்தில் சமீபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர் என்று கூறி குஜராத் காவல்துறையினர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இளம் இஸ்லாமிய அறிஞரை கைது செய்துள்ளார்கள். இவர் சிமி அமைப்பின் முக்கியத் தலைவர்கüன் ஒருவர் என்றும் ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவரது பின்னணி என்னவென்பதை தெஹல்காவின் ஆசிரியர் அஜித் சாஹி புலனாய்வு செய்து தெஹல்கா ஆகஸ்ட் 30 தேதியிட்ட இதழில் எழுதியுள்ளதை நன்றியுடன் இங்கே தமிழாக்கம் செய்து தருகிறோம்)

முஃப்தி அபுல் பஷர் காசிமி குடும்பம்

கடந்த ஆகஸ்ட் 14 அன்று எனது இரண்டாவது மகனுக்கு மணமுடிப்பதற் காக ஒரு அழகான பெண் இருப்பதாகக் கூறி இருவர் தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்ததை நினைவு கூர்ந்தார் மவ்லானா அபூபக்கர் இஸ்லாஹி. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தட்டுத்தடுமாறி இந்த வார்த்தைகளை என்னிடம் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயினால் பாதிக்கப் பட்ட அபூபக்கர் இஸ்லாஹி ஐம்பது வயதைத் தாண்டிய மதரசா ஆசிரியர் ஆவார். வந்தவர்களை ஒரு தள்ளாடும் கட்டிலில் அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து அவரது மூத்த மகன் 23 வயதான முஃப்தி அபுல் பஷர் காசிமி அங்கு வந்து பேச்சு வார்த்தையில் சேர்ந்து கொண்டார்.




ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணமான முஃப்திக்கு மும்பையில் மருந்து கடையில் வேலை செய்யும் தனது தம்பிக் கும் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்ற ஆவல் இருந் தது. ஆனால் சில நிமிடங்கüல் சம்பந்தம் பேசவந்த அந்த இருவர் முஃப்தியை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே அநேகமாக ஓடினார்கள் என்றே சொல்ல வேண்டும். சுமார் 100 மீட்டர் தாண்டி ஒரு ஸ்கார்பியோவும் மாருதியும் அங்கே திடீரென்று வந்தன. காவல்துறையினர் சூழ்ந்துகொள்ள, மாருதி வாகனம் முஃப்தியை ஏற்றிக் கொண்டு நொடிப் பொழுதில் பறந்து சென்றது. பறவை பறப்பது போன்று அவர்கள் பறந்து சென்று விட்டனர் என்கிறார் அபூபக்கர் இஸ்லாஹி. நொண்டி அடித்துக் கொண்டு தொடர்ந்து வந்த அவருக்கு இந்தக் காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின.





முஃப்தி அபுல் பஷர் காசிமி
இரண்டு நாட்கள் கழித்து அஹ்மதா பாதில் 55 நபர்களின் உயிரிழப்புக்கு காரணமான ஜூலை 26 தொடர் குண்டு வெடிப்புகüன் மூளையாக செயல் பட்டவர் முஃப்தி அபுல் பஷர் காசிமி தான் என்று குஜராத் காவல்துறை இயக்குனர் பி.சி.பாண்டே அறிவித்தார். (ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்./வி.ஹெச்.பி/பஜரங்தளம்/பா.ஜ.க தலைமையில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட குஜராத் கலவரத்தில் அந்த அமைப்பு களுக்கு உறுதுணையாக இருந்தார் என்று பலமுறை சுட்டிக்காட்டி குற்றஞ் சாட்டப்பட்டவர் தான் இந்த பி.சி. பாண்டே. இந்தக் கலவரத்தில் பெரும் பகுதி பாண்டேயின் மேற்பார்வையில் அவர் அஹ்மதாபாத் காவல் ஆணை யாளராக இருந்தபோது நடைபெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. காவல் ஆணையாளராக இருந்த போது பலமுறை கடமை தவறிய அவர், முன்னாள் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரியிட மிருந்து, தன்னைக் காப்பாற்ற வருமாறு வந்த அவசரகால அழைப்பையும் புறக்கணித்தவர் இந்த பி.சி.பாண்டே. இதன் காரணமாக ஜாஃப்ரி யும் அவரது வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த 30 நபர்களும் இந்துத்துவ கும்பலால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட னர். பின்னர் பி.சி. பாண்டே விற்கு பதவி உயர்வு அüக்கப்பட்டது.)



முஃப்தி அபுல் பஷர் மற்றும் அவரது கூட்டுச் சேர்ந்து சதி செய்தவர்கள் என்று அஹ்மதாபாத் மற்றும் வடோதராவில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி கடந்த ஆகஸ்ட் 16 அன்று தான் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் பி.சி. பாண்டே விவரித்தார். அப்போது அவர், ''அஹ்மதாபாத் குண்டுவெடிப்புகள் எங்கு, எப்படி, யாரால் திட்டமிடப்பட்டன என்பது குறித்த முழு விபரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன'' என்று முகமலர்ச்சியுடன் பாண்டே அறிவித்தார்.
கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது முஃப்தி காசிமி யின் கிராமம். இங்கு வாழும் மக்கüடம் அவரைப் பற்றி விசாரித்த போது, அவர் அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடி யவர் என்றும், வெட்க சுபாவம் உடைய வர் என்றும் அவரது கிராமத்தினர் குறிப்பிட்டார்கள். ஆனால் காவல் துறையினர் அவர் சிமியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்றும், குஜராத்தில் 2002ல் நடைபெற்ற படுகொ லைகளுக்கு பழிவாங்கும் உணர்வு கொண்ட ஜிஹாதி என்றும் அவரை வர்ணித்தனர்.




அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு களுக்கு இரண்டு மூன்று தினங்கள் கழித்து சூரத் நகரத்தில் மரங்கüலும், கடைகüன் ஷட்டர்கüலும், விளம்பரப் பலகைகüலும் தொங்கிய 29 குண்டு களையும் வைத்தவர்கள் இவரது கும்பல் தான் என்றும் பாண்டே செய்தியாளர் கüடம் கூறினார். (ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இந்த குண்டுகளில் ஒன்றுகூட வெடிக்கவில்லை. இந்த குண்டுகள் வெடித்து எவருக்கும் காயம் ஏற்படுத்தவில்லை. தனி நபர்கள் இந்த குண்டுகள் அனைத்தையும் எதார்த்தமாக கண்டுபிடித்தார்களாம்.) முஃப்தி காசிமி கைதான பிறகு செய்தி ஊடகங்கள் மிக வேகமாக, பெயர் வெüயிடப்படாத காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அவர் நாடு முழுவதும் பயங்கர வாத இணைப்பை உருவாக்குவதற்காக பயணம் மேற்கொண்டதாகவும், கேரளாவில் ஆட்களுக்கு பயிற்சி அüத்ததாக வும், குஜராத்தில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு குண்டுகளைத் தயாரித்த தாகவும் செய்திகளை வெüயிட்டன.




ஆதாரங்கள் எங்கே?
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே உள்ளது? இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை (சிமி) சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீது நாடு முழுவதும் காவல்துறையினர் இது வரை போட்டுள்ள பொய் வழக்குகüன் வழியில் வழக்கம் போல் முஃப்தி காசிமி கைது செய்யப்பட்ட ஒருநாள் கழித்து அவர் மீது குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. காவல்துறை யினரிடம் இருக்கும் ஒரே ஆதாரம் கைது செய்யப்பட்ட பிறகு முஃப்தி காசிமி அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே. கடந்த 3 வாரங்களாக சிமி மீதான பொய் வழக்குகள் குறித்து தெஹல்கா அம்பலப் படுத்தி வந்தபோது குறிப்பிட்டது போல் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் துறை அதிகாரி முன்பு ஒருவர் அüக்கும் வாக்குமூலம், நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது தள்ளுபடி செய்யப் படும். ஏனெனில் இந்திய சாட்சியச் சட்டம் காவல்துறை அதிகாரியிடம் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிடுகின் றது. (மராட்டிய மாநிலத்தில் அமலில் இருக்கும் திட்டமிட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (எம்.சி.ஒ.சி.ஏ.) மற்றும் காலாவதியான பொடா சட்டம் போன்றவை கொடூரமான சட்டம் என்பதால் அவை காவல்துறை அதிகாரி யிடம் அüக்கப்படும் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுகின்றன. மராட்டிய சட்டம் போன்ற சட்டம் தனது மாநிலத்திற்கும் வேண்டும் என்று மோடி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இதன் மூலமாக கைது செய்யப்பட்டவர் கள் அüக்கும் ஒப்புதல் வாக்குமூலங் களை வைத்து, அவர்கள் பிறகு இதனை வாபஸ் பெற்றுக் கொண்டாலும் சரியே... அவர்களைத் தண்டிக்க இயலும்)
சிமியைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பிசுபிசுத்தது போல் காவல்துறை பின்வரும் ஆதாரங்களை எடுத்துரைக்காவிட்டால் முஃப்தி காசிமி மீது போடப்பட்ட வழக்குகளும் பிசுபிசுத்து விடும்,


*மார்ச் மாதம் முதல் சிறையில் இருக்கும் சஃப்தர் நாகூரிக்கு இவர் எழுதிய கடிதத்தைப் பற்றிய ஆதாரம்.


*பயங்கரவாத நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்காக நாடு முழுவதும் இவர் பயணம் செய்தார் என்பதை நிரூபிக்கும் பயணச் சீட்டுகள் மற்றும் வாடகை ரசீதுகள்.


*இவரது வீட்டிலிருந்து அல்லது வேறு இடத்திலிருந்து குண்டுகளைத் தயாரிப்பதற்காக இவர் பயன்படுத்திய கருவிகள். இவை இவருடன் தொடர்பு டையது என்பதை காவல்துறை சுயாட்சியான சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனின் நீதிமன்ற விசாரணையின் போது இந்த சாட்சியங் கள் நிராகரிக்கப்படும்.


*கேரளா மற்றும் குஜராத்தில் பயங்கரவாத முகாம்கள் நடைபெற்றன என்பதற்கான ஆதாரங்கள்.


கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது காவல் துறையினரால் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க இயலாது, 14 நாள் விசாரணைக் கைதிகளாக காவல்துறை வசம் இருக்கும் காசிமியும் இன்னும் 9 பேரும் நீதிமன்றத் திற்கு மீண்டும் கொண்டு வரப்படும் போது தாங்கள் ஒப்புதல் வாக்குமூலம் அüத்ததை மறுப்பார்கள் அல்லது வற்புறுத்தி தங்கüடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டதாகச் சொல்வார்கள்.




காசிமி வீட்டில் நகைகளைத் திருடிய காவல்துகறை
காசிமியை பிடித்துச் சென்ற இரு தினங்கள் கழித்து ஆகஸ்ட் 16 அன்று வெறும் செங்கல்களுடன் சிதிலமடைந்த நிலையில், உடைந்த பாத்திரங்கள் உள்ள எவ்வித வருமானத்திற்கும் வழியின்றி இருக்கும் முஃப்தியின் வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர். அப்போது என்ன நடந்தது என்பது குறித்து முஃப்தியின் ஐந்து தம்பிகளில் ஒருவ ரான, மதரசாவில் பயிலும் மாணவர் அபூ ஜைத் தெஹல்காவிடம்: '''30 காவலர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை வெüயேற்றினர்'' என்று தெரிவித்தார்.




சட்டப்படி சாட்சிகளாக உள்ளூர் மக்களை காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையின் போது வைத்திருக்க வேண்டும். ஆனால் துப்பாக்கி முனை யில் யாரையும் அவர்கள் நெருங்க விடவில்லை. முஃப்தியின் தந்தை தனது மருமகüன் தங்க நகைகளைக் காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். தனது வீட்டில் இருந்து பூச்சிக் கொல்லி மருந்தின் ஒரு பாக்கெட்டையும், இரும்பினால் செய்யப்பட்ட சுத்திகரிப்பு கருவியையும் காவல்துறையினர் எடுத்துச் சென்று விட்டதாகக் குறிப்பிட்டார். தனது மகனைக் குற்றவாüயாக ஆக்குவதற் காக இந்தப் பொருட்களெல்லாம் குண்டுகளைத் தயாரிக்க உதவக்கூடி யவை என்று காவல்துறையினர் பிரகடனம் செய்து விடுவார்களோ என்று காசிமியின் தந்தை தனது அச்சத்தைத் தெரிவித்தார்.




முஃப்தி காசிமியின் குடும்பத்தினரும் அவரது அண்டை வீட்டார்களும் அவர் சிமியின் உறுப்பினர் என்ற குற்றச் சாட்டை வலிமையாக மறுக்கின்றனர். மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள பிரபல இஸ்லாமிய சர்வ கலாசாலையான தாருல் உலூம் தேவ்பந்தில் கடந்த ஆண்டு 2 ஆண்டு மேற்பட்டபடிப்பான முஃப்தி பட்டத்தை காசிமி பெற்றார். இவர் மீது எந்தவொரு வழக்கும் முன்னெப்போதும் காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் இவர் வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் இவரது குடும்பத்தினர் ஏதோ ஒரு வன்முறைக் கும்பல்தான் இவரைக் கடத்திச் செல்கின்றது என்று எண்ணி யுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். பிறகு முதல்வர் மாயாவதிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் அவர்கள் மனுக்களை அனுப்பியுள்ளனர். ஆனால் இவர்கüடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.




காவல்துறையின் அராஜகப் போக்கு


தெஹல்கா நடத்திய மூன்று மாத புலனாய்வு, ஒரு உண்மையைப் புலப் படுத்தியது. சில வழக்குகளில் குற்றஞ் சாட்டப்பட்ட முஸ்லிம்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய ஒரு முஸ்லிமை அவர் மீது முன்பு வழக்குகள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட அவர் களைக் குற்றவாளியாக்கும் போக்கு அதிகமாக இருப்பதை அறிய முடிந்தது. முஃப்தியின் குடும்ப நண்பரான ஆஜம்கரைச் சேர்ந்த, தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் அப்துல் அலீம் இஸ்லாஹி நடத்தி வரும் மதரசாவில் கடந்த பிப்ரவரி மாதம் முஃப்தி காசிமி பாடம் நடத்தினார். ஹைதரபாத் காவல்துறையினரால் பல பொய் வழக்குகüல் கைது செய்யப்பட்ட முஹ்தசீம் பில்லாஹ்வின் தந்தைதான் அப்துல் அலீம் இஸ்லாஹி ஆவார். இந்த ஹைதராபாத் மதரசாவில் ஒரு மாதம் மட்டுமே முஃப்தி காசிமி பணியில் இருந்தார். பிறகு பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட தனது தந்தை மற்றும் மூட்டு வலியினால் அவதிப்பட்ட தனது தாயாரை கவனிப்பதற்காக அவர் ஊர் திரும்பிவிட்டார்.
முஃப்தியின் அண்டை வீட்டுக்காரர்கள் அவர் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளை நம்புவதற்கு மறுக்கின்றனர். அவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்றும், கடந்த ஏப்ரல் 2006ல் முதன்முறையாக அவர் ஒரு இஸ்லாமியக் கருத்தரங்கில் பங்குகொண்டு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை பலராலும் பாராட்டப்பட்டதையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர். ஹைதரா பாத்தில் இருந்து திரும்பிய பிறகு முஃப்தி காசிமி வேலை தேடியதாகவும், தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாகவும் அவரது தம்பி கூறினார்.
அண்டை வீட்டார் தான் இந்தக் குடும்பத்தினருக்கு உணவüத்து வந்துள் ளனர். ''அல்லாஹ் எங்களுக்கு நீதியை அளிப்பான்'' என்று கோபத்தை தணித்துக் கொண்டு தழுதழுத்த குரலில் சொன்னார் அபூ ஜைத். ''எங்களது ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதுதான்'' என்று முஃப்தியின் தந்தை முடித்துக் கொண்டார்.



Thanks to TMMK.

Wednesday, August 13, 2008

சூரத்தில் குண்டு வைத்தது மோடி! - பூரி சங்கராச்சாரியார்.

புது தில்லி: கடந்தச் சில தினங்களுக்கு முன்னர் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் தொடர் குண்டுகள் வெடித்த அடுத்தத் தினங்களில் சூரத்திலிருந்து வெடிக்காதப் பல குண்டுகளைக் குஜராத் காவல்துறை கண்டுபிடித்து அகற்றியிருந்தது. இந்தக் குண்டுகள் வைக்கப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி செயல்பட்டுள்ளதாக பூரி சங்கராச்சாரியார் குற்றம் சுமத்தியுள்ளார். குவஹாத்தியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைத்து மேற்கண்டக் குற்றச்சாட்டை சங்கராச்சாரியா ஆதோஷ் ஜானந்தேவ் தீர்த் சுமத்தியுள்ளார்.


வெடிகுண்டுச் சதியாலோசனை மூலம் நாட்டில் வர்க்கப்பேதத்தை வளர்த்து அதன் மூலம் இந்து மத மக்களின் ஓட்டுகளைக் கொய்வதே நரேந்திரமோடியின் இலட்சியம் எனவும் சங்கராச்சாரியார் கூறினார். அடுத்து வரும் தேர்தலை மனதில் வைத்து மோடி தனது செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அமைக்கின்றார். ஒருவேளை அகமதாபாத் உட்பட சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஐ.எஸ்.ஐ முதலான சர்வதேச இயக்கங்களுக்குத் தொடர்பிருக்கலாம். ஆனால், சூரத்தில் 24 இடங்களிலிருந்துக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நம்பத்தகுந்ததல்ல. இதன் பின்னணியில் சதியாலோசனை உண்டு.


சுய இலாபத்திற்காக ஹிந்து தர்மத்தை உபயோகிக்க மோடி முயற்சிக்கின்றார். ஹிந்து ஓட்டுக்களின் மீது குறி வைத்துள்ள மோடியில் இத்தகையச் செயல்பாடுகள் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது" என சங்கராச்சாரியார் கருத்து தெரிவித்தார்.


சூரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளின் பின்னணியில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி தலைமையிலான சதி உண்டு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள இச்சந்தர்ப்பத்தில், இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற மாநில அரசு முன்வர வேன்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-கஷ்மீரில் வர்க்கபேதத்தை வளர்க்க பாஜக முயலுகின்றது என கட்சி பிரமுகர் மனீஷ் திவாரி குற்றம் சுமத்தினார்.


"ஹிந்து சன்னியாசிகளில் முக்கியமானவரான சங்கராச்சாரியாரின் இக்குற்றச்சாட்டிற்கான உண்மையான நிலவரத்தை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை வேண்டும். தேர்தல்கள் நெருங்கும் வேளைகளில் பாஜக காண்பிக்கும் ஹிந்துமத ஆதரவு கள்ளத்தனமானதாகும். அதிகாரத்தில் இருந்த வேளையில் ஹிந்துக்களை மறந்த பாஜக ஹிந்து சமுதாயத்தின் மீது உண்மையான நேசம் உண்டு எனில், நைனாதேவி கோவிலில் விபத்து நிகழ்ந்தபொழுது எதுவுமே செய்யாதது ஏன்" என்றும் திவாரி கேள்வி எழுப்பினார்.


"பாஜக பிரச்சனைகளை நேரிடும் பொழுதெல்லாம் நாட்டில் குண்டுகள் வெடித்துள்ளன. தெஹல்காவின் மூலம் பாராளுமன்றம் அமளியில் இருக்கும் பொழுது பாராளுமன்றத்தாக்குதலும் கர்நாடகா தேர்தல் நேரம் ஜய்பூரிலும் தற்பொழுது காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்று பாஜகவின் முகத்தில் கரிபூசப்பட்ட பொழுது அகமதாபாத்திலும் குண்டுகள் வெடித்துள்ளன. வெடிகுண்டு நிர்மாணத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா ஈடுபடுகின்றது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சூரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளுக்குப் பின்னணியிலும் பாஜகவே செயல்பட்டுள்ளது" என இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் பிரமுகர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது



Thanks to.. Satyamargam.com