Friday, February 19, 2010

புனே குண்டு வெடிப்பு: இந்துத்துவா தீவிரவாதிகள் சதி?


புனே, பிப். 19 கடந்த வாரத்தில் நிகழ்ந்த புனே குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணிக்கு காரணமானவர்கள் இந்துத்துவா தீவிரவாதிகள்தான் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர். அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்து வருவதால் மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட அதேகும்பல்தான் மீண்டும் தனது கோர மதவெறியை காட்டி இருக்கலாம் என்று காவல்-துறையினர் தமது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை
ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர "தீவிரவாதத் தடுப்புப் பிரிவு" காவல்துறையினர் விசாரித்து வந்தனர். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் கர்கரே. மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றவுடன் மாலேகான் வழக்கை துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டினார்.
மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்துத்துவாவாதிகள் என்பதைக் கண்டுபிடித்த கர்கரே கொல்லப்பட்டது ஏன்?
மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான அதே இந்துத்துவா தீவிரவாதிகள்தான் இப்பொழுது நடைபெற்றுள்ள புனே குண்டுவெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பதற்கான தடயங்கள் சிக்கிவிட்டன. வீடியோ கிடைத்திருக்கிறது. நேபாளம் சென்று ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ள இந்துத்துவா தீவிரவாதிகளின் சதியும் அம்பலமாகியுள்ளது. இன்னும் என்னென்ன சதிகளில் எல்லாம் இந்த இந்துத்துவா தீவிரவாதக் கும்பல் ஈடுபட்டுள்ளது என்ற திடுக்கிடும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று தெரிகிறது.
அவரது தீவிரமான, ஆழமான விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பெண்
சாமியார் பிரக்யா சிங் தாக்கூர், சாமியார் பான்டே உள்ளிட்ட பல இந்துக்கள் இதில் கைதாகினர்.

இந்து தீவிரவாதிகள்தான் இந்த செயலுக்குக் காரணம் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினார் கர்கரே. வழக்கு துரித கதியில் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானார் கர்கரே. அவர் கொல்லப்பட்டதில் மர்மம் இருக்கிறது என்ற அலை இன்றுவரை ஓய்ந்துவிடவில்லை. மாலேகான் விசாரணையில் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யசெய்தவர் கர்கரே! இதில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கு நாசிக் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை ஆரம்பமான அடுத்த நாளே கடந்த வாரத்தில் புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 12 பேர் பலியாகினர்.ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் இசு-லாமிய தீவிரவாத அமைப்புகளுக்குத்தான் தொடர்பு இருக்கலாம் என்று முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 10க்கும் மேற்பட்ட இசுலாமிய இளைஞர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தொடர்-விசாரணையில் திடீர் திருப்பமாக இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பிருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்-துள்ளது.அதற்கான் வலுவான ஆதாரங்களும் கிடைத்து வருவதாகத் தெரிகிறது.

ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பும்- இந்துத்துவா தீவிரவாதிகளும்!!
நாசிக் நீதிமன்றத்தில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்கு விசாரணை தொடங்கிய மறுதினமே புனே ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பை நியாயப்-படுத்தும் நோக்கிலும், நீதிமன்ற விசாரணைக்கு தமது எதிர்ப்பைத் தெரி-விக்கும் வகையிலும் இந்த சதி சம்பவத்தில் இந்துத்துவா தீவிரவாதிகள் ஈடுப்பட்டிருக்க முழு வாய்ப்பு இருப்பதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

புனே குண்டுவெடிப்புக்கும் அபிநவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த அமைப்பு ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரசாத் சிறீகாந்த் புரோஹித் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தியாவை இந்து தேசமாக உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.

இதற்காக நாட்டில் பல்வேறு தீவிரவாதச் சதி வேலைகளில் ஈடுபட இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த அமைப்பினர் மாலேகான் குண்டு வெடிப்பை அரங்கேற்றி தங்களின் கோர முகத்தை உலகத்துக்கு காட்டினர். தற்போது அதே கும்பல் மீண்டும் புனேயில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுவரை புனே குண்டு வெடிப்பு தொடர்பாக இந்துத்துவா தீவிரவாதிகள் எவரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை.

தலைமறைவானார் சாமியார்!
அபிநவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுவாமி ஆசிமனாந்த் ஆதிவாசி மக்கள் வசிக்கும் குஜராத் மலைப்பகுதியில் தலைமறைவாகி உள்ளார். அங்குதான் அபிநவ் பாரத் அமைப்புக்கு ஆயுதப் பயிற்சி, வெடி-குண்டு தயாரிப்பு பயிற்சி போன்றவை அளிக்-கப்பட்டு வருகின்றன. இந்த அமைப்புத்தான் இந்துத்துவா தீவிரவா-தத்தின் மூளையாகச் செயல்பட்டு வருகிறது. இதே அமைப்பினர் கல்வி அறக்கட்டளை ஒன்றையும் 2006 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தலைவராக காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேயின் சகோதரர் மகளான ஹிமாமி சவர்க்கார் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்களுக்கும் குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக மகாராட்டிர அரசு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பினர் பல்வேறு இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்தி-யாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக இங்குள்ள இசுலாமியர்களை படுகொலை செய்ய வேண்டும் என்பதுதான் அபிநவ் பாரத் அமைப்பின் நோக்கமாகும். அதற்காக இந்தியாவில் இந்து மதப்புரட்சி நடத்த ராணுவ அதிகாரியும் இந்து மத வெறியனுமான புரோகித் பல்வேறு சதிகளில் ஈடுபட்டுள்ளார்.

நேபாளத்தில்ஆயுதப் பயிற்சி
இதற்காக நேபாளத்தில் இந்துத்துவா புரட்சி நடத்தவும், அந்நாட்டின் அப்போதைய (2006-_2007) மன்னர் ஞானேந்திராவுக்கு ஆயுதங்கள் மற்றும் கூலிப்படை அனுப்பவும் புரோகித் திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக ஞானேந்திராவுடன் புரோகித் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அபிநவ் பாரத் அமைப்பின் தீவிரவாதிகள் நேபாளம் சென்று முகாமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அபிநவ் பாரத் அமைப்பின் தீவிரவாதிகளுக்கு இசுரேலில் ஆயுதப் பயிற்சி பெறவும், தேவைப்பட்டால் அரசியல் அடைக்கலம் பெறவும் புரோகித் திட்டமிட்டிருந்தார். இந்தியாவில் உள்ள இசுலாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கும் அபிநவ் பாரத் தீவிரவாத அமைப்பே காரணம் என்று பலரும் சந்தேகமடைந்துள்ளனர். அந்த அமைப்பின் பின்னணியை ஆராயும் போது பல்வேறு சதி நடவடிக்கைகளை அரங்கேற்றி இருப்பது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது.

சதிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன
2007 ஆம் ஆண்டு அய்தராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, அதனை தொடர்ந்து இசுலாமியர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான அஜ்மரில் நடந்த வெடிகுண்டுச் சம்பவம் இப்படி பலவற்றிலும் அதன் பங்கு இருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனாலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக அபிநவ் பாரத் அமைப்பிடம் காவல் துறையினரால் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தீவிரவாத அமைப்புகளைப் போல நடத்தப்படும் தீவிரவாதச் செயல்களுக்கு ஒரு போதும் இந்த அமைப்-பினர் பொறுப்பேற்பதில்லை. வெளி உலகத்துக்கு தெரியாமல் சாமியார்கள், பக்திமான்கள், மத சேவகர்கள் என்ற போர்வையில் தங்கள் சதி செயலை மேற்கொள்வதை அபிநவ் பாரத் அமைப்பினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அவர்கள் பக்கம் காவல் துறையின் விசாரணை வளையம் இதுவரை நெருங்காமல் இருந்து வந்தது.

மேலும் குண்டு வெடிப்பு என்ற உடன் அது இசுலாமியத் தீவிரவாதிகளின் கைவரிசை தான் என்ற தவறான மனப் போக்கும் இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு கை கொடுத்து வருவதால் இதுபோன்ற சதிச் செயல்களுக்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லை என்ற போலித் தோற்றம் இருந்து வருகிறது. ஆனால் புனே சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்தி வரும் தீவிர விசாரணையில் இந்துதுத்துவாவின் நிழல் உலக கொடுஞ் செயல்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி உள்ளன.

சிக்கி உள்ளது வீடியோ
இதேபோல் கடந்த ஆண்டின் இறுதியில் கோவாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் இந்துத்துவா தீவிரவாதிகளே ஈடுபட்டனர் என்று கண்டறியப்பட்டது. அதேபாணியில் மீண்டும் புனேயில் குண்டு வைத்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தீவிரமாக நம்புகின்றனர். புனே சம்பவம் தொடர்பாக 3 பேர் நடத்திய சதி ஆலோசனை சம்பந்தமாக தெளிவில்லாத நிலையில் வீடியோ காட்சிப் படம் ஒன்றை ஜெர்மன் பேக்கரியிலிருந்து காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் யார்? அவர்கள் பேசியது என்ன?என்பது எல்லாம் தெரியவரும்போது உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். இதற்கான விசாரணைக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், சதி நடவடிக்கைகள் தெரியாமல் இருக்கப்போவதில்லை என்று விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அப்போது இந்துத்துவா தீவிரவாதிகளின் மதவெறி வெட்ட வெளிச்சமாகும் என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சிலர் கூறு-கின்றனர்.

No comments: