Saturday, November 15, 2008

'சிமி' யை ஒழித்துக் கட்டவே மாலேகாவ் குண்டு வெடிப்பு

பெங்களூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 11:24 IST )

நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ' சிமி' இயக்கத்தை ஒழித்துக் கட்டவே, மாலேகாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக, கைது செய்யப்பட்ட ராணுவ உயரதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடத்தப்பட்ட 'நார்கோ அனலைஸிஸ் ' ( ஆழ்நிலை மயக்க நிலை விசாரணை ) சோதனையில் இதனை தெரிவித்துள்ள அவர், நாட்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் தமக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் மற்றும் துறவி தயானந்த பாண்டே ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே தாம் இதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாலேகாவ் குண்டுவெடிப்பை எப்படி நிகழ்த்துவது என்பதற்கான சதித்திட்டத்தை தாமும், ( புரோஹித்), பெண் சாமியார் பிரக்யா, தயானந்த் பாண்டே ஆகியோர் தயாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டில் நான்டட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் பாண்டேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புரோஹித் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அஜ்மீர் குண்டுவெடிப்பும் தயானந்த் பாண்டேவால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட சுமார் 500 பேருக்கு அகமதாபாத் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் புரோஹித் தெரிவித்ததாக காவல் துறையை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)


இந்துத்துவ பயங்கரவாதம் என்னும் நச்சு நாட்டின் பல்வேறு துறைகளிலும் ஊடுருவி, தற்போது ராணுவத்திலும் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கக்கூடியாதகவே இருக்கப்போகிறது என்பது கவலை தரும் விஷயம். இந்த மாதிரியான பயங்கரவாத கும்பல்களை பாதுகாத்து அரவணைக்கத் துடிக்கும் பால் தக்கரே போன்ற தீவிரவாதிகளை தடுக்க முனையாமல் வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசு ஒரு கையாலாகாத அரசாகத்தான் தெரிகிறது. 'சுரனையற்ற இந்தியா' என்று கட்டுரை எழுதிய பாசிஷ்டுகள் இப்பொது என்ன செய்கிறார்கள்.? தெகல்கா, குஜராத் இன கலவரத்தைத் தோலுரித்துக் காட்டியும் இந்தியாவில் எவ்வித சலனமுமில்லை, குண்டு வெடித்தவர்கள் இந்துதுவா அமைப்பினர் என்ற போதும் நாட்டில் பெரியளவு எதிர்ப்புமில்லை எனும் போது, நிச்சயமாக தெரிகிறது இது 'சுரனையற்ற இந்தியா'.

"சிமி" அமைப்பினைச் சார்ந்தவர்கள் தான் குண்டு வைக்கிறார்கள் என்றால் அந்த அமைப்பினர் எத்தனைப் பேர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்?

"சிமி" தடைச் செய்யப்பட்ட அமைப்பாக இருக்கும் போது எப்படி செயல்படுகிறது.? இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது,?

மும்பை குண்டுவெடிப்பையும், கோவை குண்டுவெடிப்பையும் தவிர எந்த குண்டு வெடிப்புகளையும் யார் செய்தார்கள்? என்ன விசாரணை எதுவரை நடந்து வருகிறது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கைது செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்களா ? தடா, பொடா சட்டங்கள் இருந்த காலத்திலும் பயங்கரவாத்தை தடுக்க முடியவில்லை எனும் போது குற்றவாளிகள் ஆட்சி,அதிகாரங்களில் தான் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது. இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளையும் அதன் விசாரணை விவரங்களையும் வெள்ளை அறிவிக்கையாக மத்திய அரசு வெளியிட்டால் பல மர்ம முடிச்சுக்கள் அவிழும். இல்லையென்றால் வழக்கம் போல் முஸ்லிம்களை குற்றம் சுமத்தி இந்துத்துவாவையும் அதன் பயங்கரவாத்தையும் வளர்க்கும் வேலையைத்தான் அரசு செய்யும்.

No comments: