Saturday, November 22, 2008

இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா கண்டனம்

இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா


புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 13:18 IST )

மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.


டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிரவின் சர்மா, மேலும் கூறியதாவது " பா.ஜனதா கட்சி இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு மீண்டும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது.முன்னர் அந்த கட்சி ராம ஜென்ம பூமி பிரச்சனையை கிளப்பி அரசியல் ஆதாயம் அடைந்தது.தற்போது மாலேகாவ் குண்டு வெடிப்பு மற்றும் அது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து தலைவர்களை பற்றிய உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது. பா.ஜனதா மற்றும் சங் பரிவார் ஆகிய அமைப்புகள் இந்துக்களை ஏதாவது ஒரு பிரச்சனையை முன்பவைத்து இந்துக்களை முட்டாளாக்கி வருவது எங்களை சோர்ந்து போகச் செய்துவிட்டது. இப்போது அவர்கள் மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு சட்ட உதவி அளிப்பதாக கூறி மக்களிடமிருந்து நிதி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.மாலேகாவ் குண்டு வெடிப்பையோ அல்லது இதர பயங்கரவாத செயல்களையோ அகில இந்திய இந்து மகாசபா ஆதரிக்கவில்லை.இதுவரை இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும் நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்று பா.ஜனதா, விஎச்பி, பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ் மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை கேளுங்கள்" என்றார்.இதனிடையே இந்து மகாசபாவின் இந்த குற்றச்சாற்று குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேதக்ரிடம் கேட்டபோது, " காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாற்றுகளை கூறியிருந்தால் நாங்கள் அதற்கு பதிலளித்திருப்போம்.இவர்களுக்கு ( இந்து மகா சபா ) பதிலளித்து என்ன பயன் ஏற்படப்போகிறது ? என்ன அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது ? " என பதிலளித்தார்.


இந்துத்துவ பயங்கரவாதிகளை இந்து சமூகமே அடையாளம் கண்டுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பா.ஜ.க வின் ஓட்டுப்பொறுக்கித்தனத்தை இனிமேலும் அனுமதியோம். இந்துக்களை ஒன்றுப்படுத்த இஸ்லாமியர்களை விரோதியாக்கப் பார்க்கும் இந்த கேவலமான அனுகுமுறையையும் நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். இந்து மகா சபை இதை உணர்ந்து அறிக்கை விட்டது மிகவும் பாராட்டுக்குரியது.

உதயன்

No comments: