கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் பின்பற்ற வேண்டும் - இல.கணேசன்
Friday, 25 December 2009 13:43
சென்னையில் பிரிட்டிஷாரின் சிலைகளை அகற்றுவதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது போல், பாபர் மNதி இடிப்புக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
சென்னை அண்ணாசாலையில் புதிதாக அமைய உள்ள தலைமைச் செயலகத்துக்கு அருகே உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஆகிய இருவருடைய சிலைகளும் அப்புறப்படுத்தப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளன.
ராஜாஜி முதல்வராக இருந்தபோது இதுபோல இருந்த சிலைகளை அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.நாடு விடுதலைப் பெற்ற சமயத்திலேயே செய்திருக்க வேண்டிய பணியை இப்போதாவது செய்கிறார்களே என மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு சில சின்னங்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் தங்கள் நினைவாக வைத்த நினைவுச் சின்னங்கள் அல்லது அவர்களது வெற்றிச் சின்னங்கள்.நம்மைப் பொருத்தவரை அவை அடிமைச் சின்னங்களே. ராஜாஜி காலத்தில் மட்டுமல்லாது தற்போதும் கூட இத்தகைய சிலைகள் அகற்றப் படுவதற்கு எந்த தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வரவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது.
ஏழாம் எட்வர்டும் ஐந்தாம் ஜார்ஜும் எங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அவற்றை அப்புறப்படுத்தக் கூடாது என எந்த கிறிஸ்தவரும் கருதவில்லை. மாறாகஇ ஏழாம் எட்வர்டும் ஜார்ஜும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் என்ற தேச பக்தி உணர்வுடன் உள்ளார்கள்.
இதைத்தான் இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகளிடமும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாம் எதிர்பார்க்கிறோம்.
400 ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தவர் பாபர். இந்த நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தை இடித்துவிட்டு அதை மசூதியாக மாற்ற ஆணையிட்டார்.ஆணையை நிறைவேற்ற முயன்ற அவரது தளபதி மீர்பாகிஇ அதை முழுமையாக செய்ய இயலவில்லை. எனவே ஸ்ரீ ராமர் ஆலயத்தின் கீழ் பகுதியை ஆலயமாகவே விட்டு விட்டு மேல் பகுதியை மட்டும் மசூதி கோபுரம்போல் மாற்றினார்.
அந்த பிரச்சனைக்குரிய கட்டிடத்தைத்தான் பாபர் மசூதி என்கிறார்கள். அது நம்மை ஆக்கிரமித்து அடிமைப்படுத்த முயன்ற அந்நிய மன்னனின் அடிமைச் சின்னம். அதை அப்புறப்படுத்த முயலும்போது தேசபக்தர்கள் எவரும் எதிர்க்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் கிறிஸ்தவர்களது நல்ல உதாரணத்தை பின்பற்ற வேண்டும்.
நன்றி. நிகழ்வுகள் .
ஒரு இனமோ, ஒரு மதமோ, ஒரு குழுவோ, ஒரு சாதியோ சொந்தம் கொண்டாட முடியாத பன்முகக் கலாச்சாரத்தையும், பன்முகத்தன்மையும் கொண்ட இந்தியா என்ற இந்த தேசம் உலக அரங்கில் தலை நிமிர்ந்த ஜனநாயக தேசமாக ஏன் நிற்கிறது அல்லது எப்படி நிற்கிறது என்றால் அதன் மதசார்பின்மை தான். இந்தளவு வேற்றுமையில் ஒற்றுமை உள்ள ஒரு தேசத்தை எங்கும் காண முடியாது. இந்த ஒற்றுமைக்கு என்ன காரணம் என்று ஆராயும் போது, இந்த தேசத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் உரிமைக்கும், உணர்வுகளுக்கும், அவர்கள் சார்ந்த மத நம்பிக்கைக்கும், அவர்கள் பேசும் தாய் மொழிக்கும் அரசியல் சாசனம் கொடுக்கும் முக்கியதுவமும், அவர்களின் தனித்துவம் காக்கப்பட அது உறுதியளிப்பதுமாகும். "இந்தி இந்தியாவை ஆண்டு விட்டு போகட்டும், ஆனால் என் தாய் மொழி தமிழ் பேச இங்கு தடையில்லை" என்று நான் நினைத்து பெருமை படுவது போலவே ஒவ்வொரு மொழி பேசுபவரும் நினைக்கிறார். மொழி உரிமை காக்கப்படுகிறது. காரணம் அரசியல் சாசனம்.
அதே போலவே, ஒவ்வொரு மத நம்பிக்கை கொண்டோரையும் அரசியல் சாசனம் மதிப்பளித்து, அவர்களின் மத உணர்வுகளுக்கு பங்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பையும் வழங்குகிறது. இதையெல்லாம் ஏன் இங்கு சொல்ல நேரிடுகிறது என்றால் ஒரு பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியா போன்ற தேசத்தை மதசார்பின்மை என்ற கொள்கையால் தான் வழி நடத்திச் செல்ல முடியும். மேலும் இந்தியா என்பது ஒரு நாடல்ல; இது ஒரு தேசம். இவ்வளவு வேறுபாடுகள் காணப்படுவதால் தான் இது ஒரு துணைக்கண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
மதசார்பின்மை என்ற கொள்கையை எதிர்த்தும், இந்துத்துவா என்ற இந்திய தேசத்திற்கு ஒவ்வாத கருத்தை முன் வைத்து வரும் ஒரு வெறி பிடித்த அரசியலிலிருந்து வரும் நீங்கள், இவ்வாறு பேசி பகைமைத் தீயை வளர்ப்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும் அது கண்டிக்கப்படவேண்டியதும், கண்டனத்துக்குரியதுமாகும்.
400 வருடம் தொழுகை நடத்தப்பட்ட ஒரு மசூதியை, எந்த ஒரு குற்ற உணர்வின்றி இடித்து தரை மட்டமாக்கிய நாகரிக! அரசியலுக்கு சொந்தக்காரர்களாகிய உங்களிடம் எப்படி உண்மையான வரலாற்றை எதிர்பார்க்கமுடியும்? ராமர் உங்களுக்கு அவதார புருஷர்;பாபர் எங்களுக்கு ஒரு சாதாரண முஸ்லிம் பெயர் தாங்கிய அரசன். பாபரை நாங்கள் புனிதராக கருதவில்லை; மாறாக அவரால் கட்டப்பட்ட மசூதியைத் தான் புனிதமாகப் பார்க்கிறோம், மேலும் எல்லா மசூதிகளும் புனிதமானவைகள் தான்.
ஏழாம் எட்வர்டையும், ஐந்தாம் ஜார்ஜையும் கிறிஸ்தவர்கள் வணக்கத்துக்குரியவர்களாக பார்க்கவில்லை. ஆனால் பாபர் மசூதி என்பது ஒரு வழிபாட்டு தலம். எதை எதோடு ஒப்பிடுவது?.உங்கள் முன்னோர்களால் இடிக்கப்பட்ட புத்த மடாலயங்கள் இன்று கோவில்களாக உருவெடுத்துள்ளது. அதை எப்போது கட்டிக்கொடுத்து விட்டு தேசபக்தர்களாக மாறப்போகிறீர்கள்?
இப்ராஹிம் லோடியை தோற்கடிக்க பாபரை, இந்து மன்னர்கள் தான் வரவேற்றனர் என்பது வரலாறு. ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி இருந்தது என்பது உண்மையாக இருந்தால் அதை நீதி மன்றத்தில் நிரூபியுங்கள். அதை விட்டு விட்டு வழக்கமான கட்டுக்கதைகளை உலவ விடவேண்டாம். ஏன் நீதி மன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படுவோம் என்று சொல்ல மனமில்லை.
பாபர் மசூதி பிரச்சினை என்பது முஸ்லிம்களின் உரிமை பிரச்சினை. அம்மசூதி படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு,அபகரிக்கப்பட்டு,வஞ்சிக்கப்பட்டு,இடிக்கப்பட்டது. ஒரு மசூதி இடிக்கப்படுவது இவ்வளவு பெரிய பிரச்சினையா? எங்கள் சகாக்களால் பல மசூதிகள் குஜராத்தில் இடிக்கப்பட்டதே என்று கூட நீங்கள் கேட்கலாம்? அங்கு நடத்தப்பட்ட முஸ்லிம் இன படுகொலையில் பல மசூதிகள் இந்துத்துவ தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டது தான்; என்றாலும் அதனை அத்தீவிரவாதிகள் அபகரிக்கவில்லை. இடிக்கப்பட்ட மசூதிகள் சிதிலமடைந்து புனரமைப்புக்காகக் காத்திருக்கிறது. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்படும் முன்னரே நயவஞ்சகமாக ஆக்கிரமைக்கப்பட்டது. மேலும் ஆக்கிரமைப்பு செய்யப்பட்ட அம்மசூதிக்கு அநியாயமாக உரிமை கொண்டாடப்படுகிறது. இது தான் இங்கு வேறுபாடு.
ஆகவே இந்தியாவின் இறையான்மையும், மதசார்பின்மையையும் காக்க, இது போன்ற துவேஷ அறிக்கைகளை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இல.கணேசனுக்கு தா.மு.மு.க. கண்டனம்
பாபர் மசூதி இடிப்பும் சூழ்ச்சியும் விடியோ .
வீடியோ இரண்டு
No comments:
Post a Comment