Tuesday, March 17, 2009

பாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி

சிஸ்டர் ஜெஸ்மி! சில மாதங்களுக்கு முன்பு வரை கேரள மாநிலம் திருச்சூரின் புகழ் பெற்ற விமலா கல்லூரியின் முதல்வராக இருந்தவர். கருணையின் உருவமான கன்னியஸ்திரி... ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற புத்திசாலி. அண்மையில் அவர் எழுதி மலையாளத்தில் வெளியான புத்தகம் "ஆமென்"!

'அப்படியே நடக்கக் கடவது' என்ற அந்தப் புத்தகத்தில் "இப்படியும் நடக்குமா?" என்றளவிற்கு அதிர்ச்சிகள். கடவுளுக்கு ஊழியம் செய்ய தன் வாழ் நாளை அர்ப்பணித்து கன்னியாஸ்திரியானவர் சிஸ்டர் ஜெஸ்மி. தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளையும் பாதிரியார்களின் வக்கிரங்களையும் அதற்கு உடந்தையாக இருந்த மதர் சுப்பீரியர்களின் மவுனத்தையும்,உதிரம் சொட்டும் வார்த்தைகளாய்க் கோர்த்து உலகத்தையே உலுக்கிவிட்டார்.

பிரம்மாண்டமான பங்களாபோல் இருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மொத்தம் மூன்று வீடுகள். அதில் ஒன்றில் தான் வாடகைக்கு வசித்து வருகிறார் சிஸ்டர் ஜெஸ்மி... ஆடம்பரப் பொருட்கள் எதுவுமில்லாத அந்த அழகான வீட்டில் ஏசுவின் படத்திற்கு முன்னால் சில நிமிடம் மவுனமாக இருந்து விட்டு நம்மிடம் பேசத் துவங்கினார்.

"என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த முதல் முத்தம் தான்.. மதிப்பிற்குரிய அந்த பாதிரியார் 'பிரார்த்தனை' என்று கன்னியாஸ்திரிகளை அழைத்து அவர்களில் சிலரை மட்டும் 'சிறப்புப் ப்ரார்த்தனை' என்று தனியே அணைத்து முத்தமிட்டு மகிழ்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

என்னையும் ஒரு நாள் அவர் முத்தமிட முயன்றபோது தான் அதிர்ச்சியில் எதிர்ப்பைக் காட்டிவிட்டு அறைக்குள் ஓடிவந்து அழுதேன். எனக்கு ஆறுதல் சொன்ன பலரும் இந்தக் கொடுமையை நீண்ட நாள் அனுபவித்து வரும் உண்மை அப்பொழுது தான் எனக்குத் தெரிந்தது. மதரிடம் சொன்ன போது, 'பெரிது படுத்தாதே' என்று சொல்லிவிட்டார்.. ஆனால் அந்த பாதிரியாரோ, 'நீங்கள் புனித முத்தங்களால் ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள் என்று வேதகமத்திலேயே சொல்லியிருக்கிறது!' என்று தன் வக்கிரத்துக்கு கர்த்தரை துணைக்கு அழைத்த போது துடித்துப் போனேன்.

இன்று என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி, 'முதன் முதலில் தன் ஆசைக்கு இணங்க வைத்த பாதிரியாரை அப்பொழுதே தோலுரித்துக் காட்டியிருக்கலாமே என்பது தான்'. இங்கே பல விஷயங்கள் வன்முறையாக நடப்பதில்லை.. வழிக்குக் கொண்டுவந்து நடத்தப்படுவதால் எதிர்ப்புக்கு இடமில்லாமல் போகிறது

என்னை முதன்முதலில் திட்டம் போட்டு நாசமாக்க‌ நினைத்த பாதிரியார் அதற்கு தேர்ந்தெடுத்த இடம் பெங்களூர். அங்குள்ள பூங்காக்களில் ஆணும் பெண்ணும் உல்லாசமாக சல்லாபித்துக் கொண்டிருப்பதை அருகில் சென்று என்னைப் பார்க்க வைத்து 'உடலின் தேவைகள் மனதால் கட்டுப்படுத்த முடியாதது!' என தத்துவமாகப் பேசி என்னைத் தடுமாற வைத்தார்.
அசிங்கமான அந்தக் காட்சிகளைப் பார்க்க விரும்பாத நானே சில நிமிடங்களில் அதைப் பார்க்கும் ஆவலுக்கு உள்ளானேன். அப்படியே துணைக்கு யாருமே இல்லாத அறைக்கு என்னை அழைத்து வந்தவர் துன்புறுத்தவில்லை.. ஆதரவாகப் பேசினார். மெல்ல தொட்டார். இன்றாவது ஒரு ஆணை முழுமையாகப் பார் என தன்னை நிர்வாணப்படுத்த, தடுமாறிப்போனேன். நான் எதிர்த்து செய்ய ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அன்று என்னை அவர் ஆக்கிரமிக்க, வழியே இல்லாமல் அடங்கிப்போனவள், இதற்குப் பின் அழுத நாட்கள் பல..

ஆனாலும் உணர்வுகள் தூண்டப்பட்டால் வேறுவிதமான தொந்தரவுகள்.. லெஸ்பியன், சுய இன்பம் என நாம் விரும்பாமலே பல விபரீதங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும்.

முக்கிய‌மாக‌ மூத்த‌ க‌ன்னியாஸ்திரிக‌ள் ஓரின‌ச்சேர்க்கைக்கு உட‌ன்ப‌ட‌ வ‌ற்புறுத்தும் பொழுது புதிய‌வ‌ர்க‌ள் என்ன‌ செய்வ‌து என்று த‌டுமாறும் வேளையில், த‌ங்க‌ளின் வ‌லைக்குள் விழ‌ வைத்து விடுவார்க‌ள். சிஸ்ட‌ர் விமியிட‌ம் என‌க்கேற்ப‌ட்ட‌ உற‌வும் அப்ப‌டித்தான்.

சிஸ்ட‌ர் விமி ச‌பையில் செல்வாக்கான‌வ‌ர். அவ‌ருக்கு ப‌ல‌ருட‌ன் லெஸ்பிய‌ன் உற‌வு உண்டு. அவ‌ரை த‌டுக்க‌வோ த‌விர்க்க‌வோ முடியாம‌ல் அவ‌ருட‌ன் உற‌வை நானும் தொட‌ர‌ வேண்டியிருந்த‌து..
விமிக்கும்கூட‌ குற்ற‌வுண‌ர்வு உண்டு.. 'நான் எந்த‌ ஆண்க‌ளிட‌மும் செக்ஸ் வைத்துக் கொள்வ‌தில்லை. அதைத் த‌விர்க்க‌வே பெண்க‌ளிட‌ம் இப்ப‌டி ந‌ட‌ந்து கொள்கிறேன். இதை வைத்து என்னை த‌ப்பாக‌ நினைக்காதே!' என்று த‌த்துவ‌ம் பேசுவார்.'ச‌ரியான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ர‌ட்டும், இந்த‌ ச‌பையின் ச‌ங்க‌திக‌ளை அம்ப‌ல‌மாக்குவேன்' என்று நானும் ம‌ன‌திற்குள் நினைத்துக் கொள்வேன், ச‌ரியான‌ நேர‌த்தில் தைரிய‌த்தைக் கொடும் க‌ர்த்த‌ரே' என்று வேண்டிக்கொள்வேன்.

ஒருமுறை ம‌த‌ர் ம‌ற்றொரு சிஸ்ட‌ரிட‌ம், 'நீ பாதிரியாரிட‌ம் உற‌வு கொள்வ‌தைப் பற்றி ப‌ய‌ப்ப‌டாதே. ஒன்றும் ஆகாது. க‌ர்ப்ப‌மானாலும் அபார்ஷ‌ன் செய்து கொள்ள‌லாம்!' என்று வ‌ற்புறுத்தி அனுப்பியுள்ளார். இவ‌ரைப் போல‌ அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ருட‌ன் நானும் ச‌த்த‌மில்லாது அழுது எங்க‌ள‌து துன்ப‌த்தைக் குறைத்துக் கொள்வோம்.

தாங்க‌வே முடியாத‌ பொழுது ம‌த‌ர் சுப்பீரிய‌ரிட‌ம் சொல்வோம். அவ‌ரோ எங்க‌ள் க‌ற்பைவிட‌, 'ச‌பையின் க‌ண்ணிய‌ம் தான் முக்கிய‌ம்!' என்று எங்க‌ள் வாயை அடைத்துவிடுவார்.
மீறி சில‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் நான் பேச‌ ஆர‌ம்பித்த‌பொழுது என‌க்கு பைத்திய‌க்காரி ப‌ட்ட‌ம் க‌ட்டி பேச‌விடாம‌ல் செய்யும் முய‌ற்சியும் ந‌ட‌ந்த‌து... என‌க்கு மூன்று அண்ண‌ன்க‌ள் உண்டு. ஒருவ‌ர் வெளி நாட்டில் இருக்கிறார். ஒருவ‌ர் பெரிய‌ பிஸின‌ஸ்மேன், இன்னொருவ‌ர் ந‌ல்ல‌ வேலையில் இருக்கிறார். அவ‌ர்க‌ள் மூல‌மும் என்னை மிர‌ட்டிப் பார்த்த‌ன‌ர்.

ஒரு த‌ங்கைக்கு நேர்ந்த‌ அவ‌மான‌த்தைத் த‌ட்டிக் கேட்க‌ வேண்டிய‌ அண்ண‌னே என்னிட‌ம், 'நீ ஏன் வெளியில் வ‌ந்தாய். இயேசுவிற்கு வ‌ராத‌ க‌ஷ்ட‌ங்க‌ளா? ஒரு க‌ன்னியாஸ்திரியிட‌ம் எவ்வ‌ள‌வு பொறுமை இருக்க‌ வேண்டும்?' என‌ வெட்க‌மில்லாம‌ல் புத்தி சொல்கிறார்.
நான் தின‌மும் பிரார்த்திப்ப‌து ஜான் தி பாப்டிட்ஸின் புனித‌ வார்த்தைக‌ளைத்தான். அவ‌ர், ' நான் ஏசுவின் குர‌லாக‌ உள்ளேன்' என்பார்! அதுபோல் ஏசு என்னையும் அவ‌ர‌து குர‌லாக்கியுள்ளார். இதுவ‌ரை ஊமையாக இருந்த‌ என‌க்கு தைரிய‌த்தைக் கொடுத்த‌து இயேசு தான்.

திருச்ச‌பைக‌ளின் புனித‌த்தைப் பாதுகாக்க‌, போலிப் பாதிரிக‌ளின் வேஷ‌த்தைக் க‌லைக்க‌ இயேசு என்னை ஒரு க‌ருவியாக்கியுள்ளார். அவ‌ரின் துணையுட‌ன் என் போராட்ட‌ம் தொட‌ரும்.." என்ற‌வ‌ர், 'ஆமென்' என‌ த‌ன் புத்த‌க‌த்தைத் த‌ந்து விடைகொடுத்தார்.

இன்று சிஸ்ட‌ர் ஜெஸ்மிக்கு ஆத‌ர‌வாக‌ ப‌ல‌ க‌ன்னியாஸ்திரி அமைப்பின‌ர் ச‌பையை விட்டு ஒட்டுமொத்த‌மாக‌ வெளியேற‌வும் முடிவு செய்துள்ள‌ன‌றாம்... அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் சொல்வ‌தெல்லாம், 'ஒர்ஸ்ஸாவில் க‌ன்னியாஸ்திரியொருவ‌ர் பாலிய‌ல் கொடுமைக்குள்ளான‌த‌ற்கு எவ்வ‌ள‌வோ எதிர்க்குர‌ல்க‌ள் எழுந்த‌ன‌. ஆனால், இன்று ப‌ல‌ நூறு க‌ன்னியாஸ்திரிக‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சோக‌ம் வெளிச்ச‌த்திற்கு வந்தும், இது ஒரு த‌னிப்ப‌ட்ட‌ க‌ன்னியாஸ்திரியின் பிர‌ச்சினையாக‌ ம‌ட்டுமே பார்க்க‌ப்ப‌ட்டு க‌வ‌னிக்க‌ப்ப‌டாம‌ல் இருக்கிற‌து" என்ப‌து தான்!.

Source Kumudam 18.3.2009

2 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இந்த விசயத்தில் சாமியார்களையும் மிஞ்சி விடுகிறார்கள் பாதிரியார்கள். சிஸ்டர்ஸ் என்று சொல்லிக் கொண்டே உறவு கொள்வது கேவலம் இல்லை.ா. கத்தோலிக்க திருசபை இந்த விசயத்தில் மிகவும் மௌனம் காக்கிறது.


http://sagotharan.wordpress.com

Unknown said...

உங்களுடைய சுட்டியை என்னுடைய பதிவில் பயன்படுத்தி இருக்கிறேன்...

http://online-tamil-books.blogspot.com/2011/01/blog-post_22.html

மின்னஞ்சல் இல்லாததால் பின்னூட்டம் மூலம் தெரியப் படுத்துகிறேன்.

நன்றி...