Saturday, January 8, 2011

"குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். தான்" காவி பயங்கரவாதி வாக்குமூலம்


புதுடெல்லி,ஜன.8: மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆகியவற்றை நடத்தியது நானும், எனது கூட்டாளிகளும்தான் என கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.


ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கட்டளையின்படிதான் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், அதற்கு தேவையான பணத்தை அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எனவும் அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி தீஸ்ஹஸாரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் தீபக் தாபாஸின் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளான் சுவாமி அஸிமானந்தா.

வாக்குமூலம் 42 பக்கங்களைக் கொண்டதாகும். இந்த குற்றத்தின் பெயரில் எனக்கு மரணத்தண்டனை கிடைக்கும் என தெரியும், ஆனாலும் எனக்கு குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும் என அஸிமானந்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எவருடைய மிரட்டலோ, தூண்டுதலோ இல்லாமல் சுயமாகவே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக அஸிமானந்தா தெரிவித்துள்ளான்.

அஸிமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது மாஜிஸ்ட்ரேட்டும், ஸ்டெனோ கிராஃபர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் இருந்தனர்.

சுவாமி அஸிமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்: "இந்திரேஷ்குமாரும், நானும் எனது தாங் சபரிதாம் ஆசிரமத்தில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு சந்தித்தோம்.
ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் அவர் என்னைக் காண வந்திருந்தார். குண்டுவெடிப்புகளை ஒன்றும் நீங்கள் நடத்த தேவையில்லை எனவும், ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடையே நலப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என அவர் என்னிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புகளை நடத்த சுனில் ஜோஷியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சுனில் ஜோஷிக்கு பணமும், ஆட்களையும் அளித்தது இந்திரேஷ்குமார் ஆவார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், மலேகானிலும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தூண்டியது நான் தான். 2002 ஆம் ஆண்டு ஹிந்துக்கோயில் ஒன்றின் மீது முஸ்லிம்கள் நடத்திய தாக்குதல் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனைக் குறித்து பரத் ரிதேஷ்வர், சுனில் ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியவர்களுடன் விவாதித்தேன்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கு மற்றும் சிலரின் உதவியை கோருவதற்காக சுனில் ஜோஷியிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் அளித்தேன்.

பா.ஜ.க எம்.பி ஆதித்தியானந்தை அணுகினார் ஜோஷி. ஆனால், போதிய உதவி ஒன்றும் அவர் செய்யவில்லை என சுனில் ஜோஷி என்னிடம் தெரிவித்தார்.

2005 ஜூன் மாதம் முதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பல்வேறு ரகசிய கூட்டங்களை நடத்தினோம். 80 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்பதால் மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தலாம் என நான் ஆலோசனைக் கூறினேன்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் சேர விருப்பம் தெரிவித்ததால் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த வேண்டுமென தெரிவித்தேன்.

அஜ்மீர் தர்காவில் ஏராளமான ஹிந்துக்களும் வந்து செல்கின்றனர். அதனை முடிவுக்கு கொண்டுவர அங்கேயும், அலிகார் பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டுமென நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால் அந்த ரெயிலில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆலோசனை தெரிவித்தது சுனில் ஜோஷியாவார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைப்பதற்கான பொறுப்பை சுனில் ஜோஷியே ஏற்றுக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு என்னைக் காண வந்தார். அப்பொழுது அவர் நாம்தான் மலேகானில் குண்டுவெடிப்பை
நிகழ்த்தினோம் என தெரிவித்தார்.
அன்றைய பத்திரிகையில் குண்டுவெடிப்புத் தொடர்பாக முஸ்லிம்களை கைதுச் செய்த செய்தி வெளியாகியிருந்தது.

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்த 40 ஆயிரம் ரூபாய் ஜோஷிக்கு அளித்தேன். காலம் தாழ்த்தாமல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது
." இவ்வாறு அஸிமானந்தா தெரிவித்துள்ளார். அவர் தற்பொழுது என்.ஐ.ஏவின் கஸ்டடியில் உள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆதாரம்: http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp

3 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.உதயம்,
நல்ல தகவல். இடுகையை தெளிவாக தந்திருக்கிறீர்கள். ஒப்புதல் வாக்குமூலம் 'செமை வெவரம்'. என்னபன்ன போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதே விஷயமாய் நான் வினவில் படித்தது...
//நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.

இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப் பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை

பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார்.//

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ. உதயம்...

இந்த கலீம் பற்றி தேட ஆரம்பித்தபோது கிடைத்தவை...

//19 May 2007 ஹைதராபாத்தில் நேற்று நடந்த பயங்கர குண்டுவெடிப்புக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பே காரணம் //

//27 Aug 2007 ... ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் தான் காரணம்//

அதேநாள்....

//ஆகஸ்ட் 27, 2007 நேற்று முன் தினம் நடந்த ஹைதாபாத் குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு உதவி செய்ததாக முஸ்தாக் அக்மத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர சைக்கிள் கடைகள் நடத்தி வரும் காஜா மொய்தீன், முபீன், ஷாம் ஆகிய 3 பேரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் முஸ்தாக்கின் நண்பர்கள் ஆவர்.தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்பட்ட பால் பியரிங்குகளை இவர்கள் தான் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது//

//Bangladeshi woman held in connection with Hyd twin blasts
2 Sep 2007//

//2007/09/04 :ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பெண் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி.) மாணவி//

//6 செப்டம்பர் 2007 :ஹைதராபாத் குண்டு வெடிப்பு : 10 பேர் கைது!ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான், '''கலீம்''' என்கின்ற ரஃபீக்கிடம் பெங்களூரில் நேற்று நடத்தப்பட்ட நார்கோ அனாலிசஸ் சோதனையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹைதராபாத் காவல் ஆணையர் பல்விந்தர் சிங் கூறினார்.//

//Hyderabad bomb blast : Terrorist leader arrested in Bangladesh
7 Sep 2007//

//15 Dec 2007 ... ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பெண் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி.) மாணவி அல்ல//

//சனி, 08 நவம்பர் 2008கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று நடந்த ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து காவல்துறை கைது செய்த நான்கு பேரைக் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் அவ்வழக்கிலிருந்து விடுவித்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், """முஹம்மது கலீம்,""" அப்துல் மஜீத் என்ற நால்வரை கூடுதல் பெருநகர அமர்வு நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றத்தை நிறுவுவதில் அரசு தரப்பு வழக்கறிஞர் தோல்வியடைந்து விட்டதாக நீதிமன்றம் கூறியது.//

வெளியே வந்த அப்துல் கலீம் எப்படி மறுபடியும் 'உள்ளே' போனார் என்று எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. எனில், 'வெளியே'யே வரவில்லையா? 'ரிலீஸ்' என்று சொல்லப்பட்டதும் பொய்யா?

ஒன்றுமே புரியவில்லை...

உதயம் said...

இந்துத்துவாவினரின் குண்டு வெடிப்பு கலாச்சாரத்தை ஊடகங்கள் எதிர் தாக்குதல் அல்லது தேசபக்தியின் அதீத வெளிப்பாடு என்று கரிசனம் காட்டி மூடி மறைத்து தலைப்புச்செய்களுக்கு இந்த செய்தி போகாமல் பார்த்துக்கொள்கின்றனர். இன்னொரு பக்கம் எழுத்து தீவிரவாதிகளையும் சங்பரிவாரங்கள் ஊடகதுறையில் ஊடுறுவ விட்டுள்ளதால், இன்னும் கூட இந்துத்துவா பயங்கரவாதம் மக்களிடையே சென்றடையாமல் அவர்கள் தடுத்து வருகின்றனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காவி தீவிரவாத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு தான் வருகிறது. என்றாலும் இன்னும் கூட முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகள் என்ற பட்டத்தை சுமக்க வேண்டி வருகிறது. இதனை வலிமையாக எதிர்க்க முஸ்லிம்கள் எழுத்து ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக சில நல்ல நடுநிலை உள்ளங்களும் பத்திரிகை துறையில் இருப்பது ஒரு ஆறுதல் அளிக்கிறது. தெகல்காவைச் சொல்லலாம். வருகைக்கு நன்றி. ஆஷிக்.