தமிழ் நாட்டில் ஒவ்வொரு தினசரிக்கும் ஒரு கேரக்டர் இருப்பது அதை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியும். ஒரு தினசரி பத்திரிக்கையின் பெயரை சொன்னவுடனே அதன் சார்பு என்ன, அதன் பின்புலம் என்ன, என்பது தமிழ் மக்கள் அறிந்ததே. அதனால் "தினமலர்" என்று சொன்னவுடன் அது உண்மையை நேர்மையுடன் வெளியிடும் நாளிதழ் என்றும் அதற்கு கட்சி சார்போ, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக அல்லது எதிராக எழுதாத பத்திரிகை என்று வக்காலத்து வாங்க மாட்டீர்கள் என்று தெரியும்.
தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் கேட்டால் "தினமலர் எங்கள் சமுதாயத்தை குற்றப்பரம்பரையாக்க திட்டமிட்டே விஷம பிரச்சாரம் செய்து வருகிறது" என்கிறார்கள். இணையத்தில் எழுதும் தமிழ் முஸ்லிம் பதிவர்களின் பதிவுகளில் ஒரு பதிவாவது தினமலரை கண்டித்து இல்லாமல் இருக்காது.
இந்த வருடம் இஸ்லாமியர்களின் புனித மாதமான "ரம்லான்" துவங்கிய நாளில் அவர்கள் பெரிதாக மதிக்கும் இறைத்தூதர் முகம்மது அவர்களின் கார்டூனை வெளியிட்டது. அந்த கார்ட்டூன் ஏற்கனவே டென்மார்க் நாட்டின் ஒரு பத்திரிகையில் வெளிவந்து உலக முஸ்லிம்களின் கண்டனத்திற்குள்ளானது.
இதை மீள்பிரசுரம் செய்தது ஏன்? இவர்களின் உள்னோக்கம் என்ன?
தினமலரின் தரப்பில் இந்த சம்பவத்தை கவனக்குறைவு காரணமாக நடந்ததாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது பச்சை பொய் என்பது கடந்த வருடம் அக்டொபர் மாதம் தினமலரின் இதழ்களை புரட்டினால் தெரிந்து கொள்ளலாம். சம்பந்தமில்லாத ஒரு கட்டுரையில் அந்த கார்டூனை சாமர்த்தியமாக நுழைத்து விட்டது. இதுவும் புனித ரம்லான் மாதம் தான் நடந்தது. ஆனால் அந்த நிகழ்வு யார் கவனத்திற்கும் வராமல் போனது.
ஏற்கனவே "வினாயகர் சதுர்தி" காலங்களில் பதற்றமாக இருந்து வரும் தமிழகத்தில் மேலும் இது போன்ற செயல்கள் மூலம் தினமலர் அமைதியின்மையை ஏற்படுத்தி எதை சாதிக்கப்போகிறது.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நாளேடு அல்ல என்றும் ஒரு மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை சன் டிவி யும் தினகரனும் உலகம் முழுவதும் கொண்டு சென்றது என்றும் இப்போது நீதிமன்றத்தின் படியேறிக்கொண்டுள்ளனர்.
வினை விதைத்தால் அறுத்து தானே ஆக வேண்டும்.
No comments:
Post a Comment