Thursday, November 15, 2007

குஜராத் இனப்படுகொலை கொந்தளிக்கும் கண்டனங்கள்

"இந்துக்கள் இதுவரை இப்படி அறியப்படவில்லை" ரவிசங்கர் (இந்து ஆன்மீகத் தலைவர்)'
வாழும் கலை' என்ற அமைப்பின் குருவாக அழைக்கப்படுபவரும் ஹிந்து சமயத்தின் மரியாதைக்குரிய ஆன்மீக சாமியாராக போற்றப்படுபவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்கு மூலங்கள் குறித்த தெஹல்கா பதிவுகள் தம்மை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியதாகக் குறிப்பிட்டார்.''ஹிந்துக்கள் இத்தகைய கொடும் செயல்களை செய்பவர்களாக இதுவரை அறியப்படவில்லை'' என்ற அவர், கொலை செய்வதும் எரிப்பதும் ஹிந்து சமுதாயத்தின் இயல்பு அல்ல என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் இனப்படுகொலையாளர்களை இந்து மதத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று சர்வதர்ம சன்சாத் அமைப்பு (இந்து மத நாடாளுமன்றம்) வலியுறுத்தி உள்ளது. சமூக சேவகர் சுவாமி அக்னி வேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற முக்கிய மதத் தலைவர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.

'ஹிந்து மதம் ஓர் அபாயம்' என்ற தவறான ஒரு கருத்துருவாக்கத்தை சுயநலத்துடன் செயல்படும் ஹிந்துத்துவ அரசியல் கிரிமினல்கள் உருவாக்கி விட்டதாகவும் நாகரீகம் முன்னேறிய சமூகத்தில் வாழும் நாம் இத்தகை யவர்களை தண்டிப்பதிலும் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது"என்றும் சுவாமி அக்னிவேஷ் கூறினார்.

"பிரதமர் இதற்கு பதில் சொல்லட்டும்" அருந்ததிராய் (பிரபல எழுத்தாளர்)
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படு கொலை என்பது மதவெறியைக் கிளப்பி மக்கள் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடனே நடந்த தாகும். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மோடி அங்கு படுதோல்வி அடைந்திருந்தார்.குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை சில முக்கிய வினாக் களை எழுப்பியுள்ளது. குஜராத் இந்தியாவில் ஒரு அங்கம்தானா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டங்கள் குஜராத் துக்குப் பொருந்தாதா? குஜராத்தில் தற்போது முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர்.முன்பு அங்கிருந்தவர்கள் எல்லாம் எங்கே போய் விட்டார்கள்? எப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள்? இக்கேள்விகளுக்கெல்லம் பிரதமர் பதில் சொல்லியாக வேண்டும்.இந்தியா என்ற உடலின் ஒரு பகுதி அழுகிப் போய் அது இப்போது உடல் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டி ருக்கிறது. பாசிசம் வந்து விட்டால் நான் இந்துவாக இருந்தாலும் அது தனக்கு உதவாது என்று புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்திருக்கிறார்.

தீஸ்தா செடல்வாட் (மனித உரிமை போராளி)
இந்த தெஹல்கா பதிவுகளை ஆதாரமாக வைத்து மோடி உள்ளிட்ட சங்பரிவரத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டம் குஜராத்திற்குப் பொருந்தாதா?நியாய நெறி பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லைலி பிரதமர் மன்மோகன்சிங்குஜராத் இனப்படுகொலை குறித்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்த போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கினார் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி. இத்தகைய சக்திகளுக்கு நீதி நெறிகளைப் பற்றிப் பேச தகுதி கிடையாது.பாஜக ஆட்சியில் நடந்த ஆக்ரா உச்சி மாநாடு குளறுபடிகளுக்கும் அந்நிய தீவிரவாதிகளின் ஊடுருவலின் போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த இவர்களின் மத்திய ஆட்சி தூங்கிக் கொண்டிருந்தது என்றும் சூடாகக் கேட்டார்.

"மனிதத்தன்மையற்ற செயல்":
சோனியா

குஜராத்தில் நடைபெற்றவை மனித குல விரோதமானவை என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக் கிறார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாளர்கள் தங்களது ஒப்புதல் வாக்குமூலங்களை தெஹல்கா பத்திரிகை வெளியிட்டதற்கு பின், முதன்முறையாக சோனியாகாந்தி தெரிவித்துள்ள கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திரா ஒருமைப்பாடு விருது வழங்கும் விழாவில் சோனியா காந்தி பேசினார். இந்திய சமூகமும் அனைத்து காங்கிரஸ்காரர்களும் இந்த தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.நாம் இந்த மதவாத சமூக விரோத சக்திகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பின் அத்தகைய சக்திகள் நமது மதசார்பின்மை கொள்கைக்கும் நாட்டின் மக்களாட்சி கட்டமைப்புக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.இந்திரா காந்தி ஒருமைப்பாட்டுக்கான விருது பந்துக்வாலா மற்றும் ராம்புன்யானி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.

குஜராத் இனப்படுகொலை ஒட்டுமொத்த நாட்டிற்கே கேவலம் : மாயாவதி
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படு கொலை ஒட்டுமொத்த நாட்டுக்கே மிகப்பெரிய கேவலம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை அனைத்துக்கும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறிய மாயாவதி தெஹல்கா வெளிப்படுத்திய உண்மைகளால் ஒரு மாநில அரசு உள்நோக்கத்துடன் செய்த படுகொலை களும், அதற்கு பாரதீய ஜனதா மற்றும் ஹிந்துத்துவ சக்திகள் ஈடுபடுத்தப்பட்ட விதமும் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் செல்வி மாயாவதி தெரிவித்திருக்கிறார்.

மோடியையும், அத்வானியையும் உடனே கைது செய்ய வேண்டும்!பிரதமரிடம் கொந்தளித்தார் லாலு
"குஜராத் இனப் படுகொலையாளர் பாசிஷ மோடியையும் அவரது செயலுக்கு வக்காலத்து வாங்கிய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக்கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.தெஹல்கா ஊடகத்தின் வாயிலாக வெளியான உண்மைகள் உலுக்கத் தொடங்கிடயுள்ள சூழலில் மதசார்பின் மையை கடைப் பிடிக்கும் நாகரீக அரசியல்வாதியும், நெஞ்சுரமும் மிக்க தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது குமுறலை வெளிப்படுத்திய தோடு தனது கோரிக்கையையும் வலியுறுத்தினார்.தெஹல்கா வெளியிட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் நரேந்திர மோடியை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302ன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 120பி படியும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்வானியையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.குஜராத் படுகொலைகள் குறித்து மோடி மற்றும் சங்பரிவார் சக்திகளை நோக்கி எங்கள் விரல்கள் நீண்டபோது. நாங்கள் பொய்யுரைப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் இன்று பாபு பஜ்ரங்கியும், குஜராத் அரசு வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியாவும் ஒப்புக் கொண்டிருப்பது நாங்கள் ஏற்கெனவே கூறியது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்றார்.ரயில்வே துறை கோத்ரா விபத்து குறித்து பானர்ஜி கமிஷனை அமைத்தது. அது தனது விசாரணை அறிக்கையின் முடிவில் கோத்ரா ரயில் எரிந்தது விபத்து தான் சதிச்செயலை அல்ல என்று தெரிவித்திருந்தது. இதைக் குறிப்பிட்ட லாலு, ''நாம் இதை அன்றே சொன்னோம். தெஹல்கா இரண்டாவது முறையாக நிருபித்துள்ளது'' என்றார்.இந்திய மக்களை பிளவுப்படுத்த பாப்ரி மஸ்ஜிதை நோக்கி ர(த்)த யாத்திரை நடத்திய அத்வானியை தடுத்து நிறுத்தி முதன் முறையாக கைது செய்தவர் லாலு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச் செயல் ஒடுக்கப்பட வேண்டும் : குல்தீப் நய்யார் ( பத்திரிக்கையாளர்)
அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது எப்படி ஒரு அல்ப சந்தோஷத்துக்குரிய விஷய மாக மாறி மோடிக்கு வாக்குகளை அதிகரிக்க உதவுகிறது? இது உண்மை என்றால் இந்த குற்றம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் தெரிவித் துள்ளார்.

அரசியல் கட்சிகள் இதை செய்திருக்க வேண்டும்":நீதியரசர் ராஜேந்திர சச்சார் குஜராத் மாநிலத்தில் மதவெறி பாசிச சக்திகளுக்கு எதிராக உறுதியான வகையில் அங்குள்ள அரசியல் கட்சிகள் போராடாதது வருத்தத்தை அளிக்கிறது. பல்வேறு ஊடகங்களும் குஜராத் முஸ்லிம் மக்கள் மீதான இனப்படு கொலைகளை வெளியுல கிற்கு கொண்டு வந்திருந்த போதிலும் அடிப்படையில் அங்குள் அரசியல் கட்சிகள் தான் அதைச் செய்திருக்க வேண்டும் என சச்சார் கூறியுள்ளார்.

நன்றி: மக்கள் உரிமை

No comments: