இப்போது குஜராத்தில் முஸ்லிம்கள் எப்படி இருக்கிறார்கள்?..
அகதிகள் முகாமில் இன்னமும் இருக்கும் முஸ்லிம்களின் துயரம் தொடர்கிறது. இனப்படுகொலைக்குப் பின் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இன்றி ஒரு வித அச்சமுடன் காலம் தள்ளிக்கொண்டு உள்ளனர். முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகின்றது. ஏதாவது தொழில் செய்யவேண்டுமானாலும் ஒரு இந்துவுடன் கூட்டாகத்தான் செய்யவேண்டுமாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. சொத்துக்கள் சூறையாடப்பட்டதாலும் அபகரிக்கப்பட்டதாலும் வறுமையின் விளிம்பில் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவே அச்சமான சூழ்னிலை நிலவுகிறது. அரசால் கைவிடப்பட்டு அனாதை சமூகமாக வைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளும் வாய் மூடி மவுனமாக இருப்பதால் அரசாங்கம் சொல்லொன்னா கொடுமைகளை அரங்கேற்றி வருகிறது. மற்ற சமூகங்களோடு உறவாட முடியாமல் தனிமைபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.குஜராத் இந்தியாவிற்குள் ஒரு தேசமாக இந்து பயங்கரவாதம் ஆளும் அரசாங்கமாய் இருந்து வருகிறது. இந்துக்களின் மத உணர்வை தூண்டி இஸ்லாமியர்களுக்கெதிராக ஒரு இனப்படுகொலையை செய்து முடித்த மோடி அரசு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. முஸ்லிம்களின் வாக்குகளை இந்து மத பயங்கரவாதிகளே போடவும் பிரகாசமான வாய்ப்புள்ளது. குஜாத்தின் ஊடகங்களில் இந்து பயங்கரவாதிகளின் பங்கு கணிசமாக இருப்பதால் அங்குள்ள செய்திகள் திரிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment