Tuesday, March 2, 2010

அமெரிக்கா ஏற்படுத்தும் செயற்கை பூகம்பங்கள்!


ஹைதியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை ரஷ்யாவின் கடற்படை ஆய்வு நிறுவனம், அமெரிக்காவின் தரப்பிலிருந்து எந்தவொரு நாட்டிலும் செயற்கையாகப் பூகம்பம் உண்டாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட நில நடுக்க ஆயுதம் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விளைவுகள் என்று வருணித்துள்ளது. அமெரிக்காவின் இந்நவீன ஆயுதத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்த முடியும். இத்தகைய ஆயுதத்தின் சோதனைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

நில நடுக்க ஆயுதச் சோதனைப் பயன்பாட்டின் போது கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவாக பக்கத்து நாடான ஹைதியில் பெரும் விளைவுகளை உண்டாக்கிய பூகம்பம் ஏற்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொடுத்த ஹைதியின் தலை நகரை தற்போது அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய ராணுவம் சுற்றி வளைத்திருக்கிறது. ஹைதியின் தலை நகர் போர்ட் அவ்பரன்ஸ் தெருக்களில் ராணுவத்தின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.

ரஷ்ய செய்தி நிறுவனத்தின்படி ரஷ்யாவின் கடற்படை வடக்குப்பிரிவு, பிரதமர் புதினுக்கு கொடுத்த ரகசியத் தகவலில் சில நாட்களுக்கு முன்பு ஹைதியில் ஏற்பட்ட பூகம்பம் அமெரிக்காவின் கடற்படை சோதித்து வந்த ஆயுதம், கட்டுப்பாட்டை மீறியதால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. கேதர் நியூஸ் என்ற நிறுவனம் தொகுத்த ஆய்வறிக்கையில் ரஷ்யக் கடற்படை விஞ்ஞானிகளின் மேற்கோள்காட்டி சொல்லப்பட்டுள்ள செய்தியில் ரஷ்யாவின் வடக்கு கடற்படை பிரிவு 2008 ம் ஆண்டு கரீபியன் கடலில் அமெரிக்கக் கடற்படையின் சந்தேகமான செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளது. அப்போது அமெரிக்கா ஏதோ ஒரு முக்கிய ஆயுதத்தைச் சோதிப்பதற்காக இங்கு முகாமிட்டுள்ளது என்ற எண்ணம் ரஷ்யாவின் விஞ்ஞானிகளுக்கு உறுதியானது.

ரஷ்யாவின் கடற்படை விஞ்ஞானிகள் தொடர்ந்து அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வந்துள்ளனர். 1950 ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட கடற்படை பிரிவை மீண்டும் கடற்படையுடன் சேர்த்துக் கொண்ட அமெரிக்காவின் செயல்பாடுகள் ரஷ்யாவின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன.

கேதர் நியூஸ் தகவலின்படி கடந்த காலத்தில் ஈரானை இதே ஆயுதம் கொண்டு தாக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. திசம்பர் 1978 ல் அமெரிக்க ஆதரவு ஷா மன்னர் ஈரானை ஆண்டுக்கொண்டிருந்தார். அவரை வீழ்த்தவே ரஷ்யா முயன்றது. வல்லரசு நாடுகளின் இவ்வகையான ஆயுதங்களால் சில நாடுகள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வந்துள்ளன.
கடந்த காலத்தில் வல்லரசாக விளங்கிய ரஷ்யா, அமெரிக்க ஆதரவு ஷா அரசை வீழ்த்துவதற்காக ஈரானின் எல்லைப்பகுதியில் பத்து மெகா டன் எடை கொண்ட குண்டை பூமியின் ஆழத்தில் வெடிக்கச்செய்தது. பால்ட் லயின் ஒன்று ஈரானின் பக்கம் போய்க்கொண்டிருந்தது. நவீன தொழில் நுட்பத்தின் மூலம் வெடிப்பின் அதிர்ச்சி திசையினை ஈரானின் பக்கம் திருப்பி விட்டார்கள். இதன் காரணமாக அமுங்கிக்கிடந்த பால்ட் லயின் செயல்பட்டு 7.4 அளவு பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டன.

ரஷ்யாவின் இச்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு ரஷ்ய ஆதரவு யூகோஸ்லாவியாவில் செயற்கை பூகம்பம் ஏற்படுத்தப்பட்டது. 7.2 அளவிற்கு அதிர்வுகள் ஏற்பட்டன. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி ரஷ்யா 1970ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. பூமிக்கு அடியில் அணு ஆயுத வெடிப்பின் மூலமாக செயற்கை பூகம்பத்தை நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக அமெரிக்கா இதனைச் செய்து வருகிறது.

புதிய தகவல்களின்படி அமெரிக்கா இத்தொடரில் "டெஸ்லா எலக்ட்ரோ மேக்னடிக் பல்ஸ்" ,பிளாஸ்மா, சோனிக் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ரஷ்ய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இம்மூன்று தொழில் நுட்பங்களில் ஒன்றின் மூலம் மார்ச் 2002 ஆம் ஆண்டு ஆப்கானிலும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அங்கு 7.2 அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டது.

ஆப்கன் மலைகளில் பதுங்கியிருக்கும் போராளிகளைக் கொல்லுவதற்காகவே அமெரிக்கா இத்தகைய ட்வைஸை பயன்படுத்துகிறது. இதன் விளைவாக இருபதாயிரம் அப்பாவி மக்கள் வீடிழந்தனர். சமீபத்தில் ஹைதியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு காரணம் அமெரிக்காவின் டெஸ்லா டெக்னாலஜியின் மூலம் கரீபியன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தோல்வியின் வெளிப்பாடு தான். இத்தகைய ட்வைஸ் 1995 ஆம் ஆண்டு ஜப்பானிலும் பயன்படுத்தப்பட்டது. அதன் அளவு 6.8 ஆக இருந்தது.

அமெரிக்கா செய்து வரும் இத்தகைய சோதனைகளைப் பற்றி அமெரிக்கர்களுக்கு முன்பே தெரியும்.ஹைதியின் தலை நகரம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் அமெரிக்காவின் ஹை கமான்டர் பூகம்பத்தின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தென்பகுதி கமாண்டரின் டெபுடி கமாண்டர் ஜெனரல் P.K. கீன் என்பவரை தீவின் பகுதியில் பணியமர்த்திவிட்டார். ஆச்சரியமான செய்தி என்னவெனில், ஜெனரல் கீன் அமெரிக்க ராணுவத்தினருடன் மீட்பு பணிகளுக்கான பெரியளவில் சாதனங்களை எடுத்துக் கொண்டு பணியமர்த்தப்பட்ட இடத்தின் அருகில் சென்று விட்டார். இப்படைத் தான் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரத்திற்குப் பின் ஹைதியின் விமானத்தளம் மற்றும் துறைமுகத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இவர்கள் பூகம்பத்தை அளக்கும் கருவிகளையும் எடுத்து சென்று பல பகுதிகளில் பரிசோதித்துப் பார்த்துள்ளார்கள். இதற்கு முன் அமெரிக்க கடற்படை கலிபோர்னியாவின் சுற்றுப்புறத்திலும் இது போன்ற சோதனைகளைச் செய்து பார்த்துள்ளது. இதன் தாக்கம் 6.5 என்ற அளவிற்கு இருந்தது. எனினும் இதில் யாரும் கொல்லப்படவில்லை.
இதைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க ... கலையகம்
நன்றி ; சமரசம்

9 comments:

SUMAN said...

Thanks for your Article

குரங்கில் மனிதன் வந்தானா? குரங்கை மனிதன் பெற்றானா?

SUMAN said...

இது நடந்திருக்கச் சாத்தியமுள்ளது

குரங்கில் மனிதன் வந்தானா?
குரங்கை மனிதன் பெற்றானா?

Santhappanசாந்தப்பன் said...

அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்கள்...

இது ப‌ற்றி எந்த ஊட‌க‌மும் செய்தி வெளியிட‌வில்லை. தாங்க‌ள் எங்கிருந்து இத‌ற்க்கான தக‌வ‌ல்க‌ளை திர‌ட்டினீர்க‌ள்..

ஆதார‌ங்களையும் வெளியிட்டிருக்க‌லாமே!

Unknown said...

nice thanks for sharing







if u can visit my site also

உதயம் said...

சுமன், பிள்ளையாண்டான், சிவசங்கர் உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். இப்பதிவில் உள்ளவைகள் அதிர்ச்சியான உண்மைதான். அமெரிக்காவின் நிஜ முகத்தை உலகம் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. எந்த ஊடகமும் இதைப்பற்றி செய்தி வெளியிடவில்லை என்பது கவனத்திற்கு வராததே காரணம். நமது சக வலைப்பதிவர் கலையரசன் அவர்கள் இதைப் பற்றி அவரது வலைப்பதிவில் எழுதியுள்ளார். அதில் இதை விட விவரமாக விளக்கியிருக்கிறார் விடியோ ஆதாரத்துடன். பாருங்கள் இங்கே... http://kalaiy.blogspot.com/2010/01/blog-post_24.html

Unknown said...

Good imagination, as our politician say Anniya Nattu Sathi. what else Russia can say

bandhu said...

//ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.//
this is what i found in the link. It is absurd to quote and build on உறுதிப்படுத்தாத அறிக்கை. Just a tabloid stuff! no substance.

ராஜ நடராஜன் said...

I still believe America follows human ethics eventhough they should have some hidden agenda in world affairs.How about the cathrina?Does it belongs to US mistakes?

One fact could be true the arms race and tests will have a serious indirect effect and implications on earth and human life.

Appriciate if you could avoid word verification.Thanks.

குடுகுடுப்பை said...

சார்ஸை உருவாக்கியதே அமெரிக்காதான்,இந்தோனோசியா பூகம்பத்தை உருவாக்கியது அமெரிக்கான்னு பல காமடிய நான் கேட்டிருக்கேன் இப்போ இதையும் சேத்துக்கறேன்.