திருவனந்தபுரம். அக்.21
கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் நாஸர் மதானி. 1992-ல் ஜுன் 6 ம் தேதி கொல்லம் அருகே இவர் காரில் சென்ற போது ஒரு கும்பல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்துல் நாஸர் மதானி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் மாதானியின் இரு கால்களும் ஒடிந்தன. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று செயற்கை கால்கள் பொருத்திக் கொண்டார்.
இந்த குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கொல்லம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலிசாரின் விசாரணையில் ஆர்.ஸ்.ஸ். தலைவர் சந்திரபாபு தலைமையில் எட்டு பேர்கள் கொண்ட கும்பல் தான் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதனால் அந்த எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோர்ட்டில் மனு:
இந்நிலையில் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பான வழக்கு கொல்லம் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி வாசன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்துல் நாஸர் மதானி எனது காலை உடைத்த ஆர்.எஸ்.எஸ். காரர்களை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் தனது விருப்பத்தை அவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இவர் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நயவஞ்சகமாக சேர்க்கப்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக் கைதியாகவே சிறையில் இருந்து, குற்றம் நிரூபிக்கப்படாமல் பின்னர் விடுவிக்கப்பட்டார். பெரிய மனுசன்னா இவர் தாங்கோ...
No comments:
Post a Comment